திரு-விருத்தம்-100-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
நீர் பகவத் பிரசாத லப்த ஜ்ஞானத்தை உடையீருமாய் -இப்படி அறுதி இட்டு காண்கைக்கு ஈடான-நன்மையை உடையீருமாய் இருக்கையாலே நீர் இப் பேறு பெற்றீர் -உம்மைப் போலே ஜ்ஞானம்-இன்றிக்கே பாக்ய ஹீனருமாய் பிற்பாடருமான சம்சாரிகள் செய்வது என் என்ன –
அவர்களுக்கு என் தன்னை ஜ்ஞானமில்லையே யாகிலும் -நான் சொன்ன இப் பாசுர மாத்ரத்தையே- சொல்ல -அவர்களும் எல்லாம் நான் பெற்ற பேறு பெறுவார்கள் -என்கிறார் –

நூல் பயன்

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக்கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே – – 100-
பாசுரம் -100-நல்லார் நவில குருகூர் நகரான் –துறையடைவு–முனியே நான்முகன் -10-10-
 வியாக்யானம் –
நல்லார் நவில் -லோகத்தில் சத்துக்கள் அடைய -ஆழ்வார் ஆழ்வார் -என்னா நிற்கும் இத்தனை -ராமோ ராமோ ராம -இதிவத் -சர்வதாபி கதஸ் சத்பி -பெருமாள் சிரமம் செய்து விட்டு ஒரு-நிழலிலே இருந்த அளவிலே -பர சம்ருத்யை  ஏக பிரயோஜனாந்தர  வர்கள் அதுக்கு உறுப்பான-கற்கைக்காக படு காடு கிடப்பர்கள் -சமுத்திர இவ சிந்துபி -இப்படி கிடக்கிறது -இவர் குறை-நிரம்புக்கைக்கோ என்னில் -பண்டே நிரம்பி நிற்கிற கடலை நிரப்புக்கைக்கு அன்றிக்கே
ஆறுகள் வந்து புகுருகிறது -நடுவு தரிப்பு இல்லாமை இத்தனை இறே –
திரு மால் இத்யாதி -அவர்கள் அடைய ஆழ்வார் என்னா நிற்க செய்தே -இவர் தாம் –
பயிலும் திரு உடையார் எவரேலும் அவர் கண்டீர் —என்னை யாளும் பரமரே –என்கிறார் –
திருமால் திருப்பேர் வல்லார் அடிக்  கண்ணி சூடிய –தை பற்றி -பெரும் பேறு பெற்றீர் -என்கிறார் –
ஸ்ரீ ய பதி உடைய திரு நாமங்களைச் சொல்லுக்கைக்கு அதிகாரம் உடையவர்கள் உடைய-திருவடிகள் ஆகிற மாலையை சூடுகையே நிரூபகமாக உடைய ஆழ்வார் –
விண்ணப்பம் செய்த -அடியேன் செய்யும் விண்ணப்பமே -என்று தொடங்கி -விண்ணப்பம் செய்து-தலைக் கட்டின வார்த்தை யாயிற்று –
சொல்லார் தொடையல் -ஆப்த வாக்கியம் என்று ஆதரிக்க வேண்டா -பாட்யேகேயேசமதுரம் -என்கிறபடியே இதில் சாரச்யத்துக்கும்  ஆக ஆதரிக்க வேணும் –
இந்நூறும் -மகா பாரதம் போலே பரந்து இருத்தல் -பிரணவம் போலே சுருங்கி இருத்தல் -செய்யாதே -நூறு பாட்டாய் -ஜ்ஞாதவ்யாம்சம் அடைய உண்டாய் இருக்கை –
வல்லார் அழுந்தார் -பலத்தை முற்பட சொல்லுகிறார் -எதில் அழுந்தார் என்கிறது என்னில் –
பிறப்பாம் பொல்லா -ஜன்மமாகிற பொல்லா -ஜ்ஞாநானந்த லஷணமாய் -ஈஸ்வர சேஷமாய் இருக்கிற-ஆத்ம வஸ்து -அதுக்கு அநு ரூபம் அன்று இறே -அசித் சம்சர்க்கம் –
அருவினை –கர்ம பரம்பரையாலே மேன்மேல் என அது தன்னை வர்த்திப்பித்து
பூண் கட்டுமதாய் இருக்கை –
மாய -ருசி வாசனைகளை பிறப்பிப்பதாய்
வன் சேறு -தோய்ந்தார் பின்பு கரை கழுவ வேண்டும்படியாய் இருக்கை
அள்ளல் -கால் இட்டால் கீழே கரிக்கும்படியாய் இருக்கை
பொய் நிலம் -அது தான் கீழ் தரை இன்றிக்கே இருக்கை –
இப்படி இருக்கிற சம்சாரத்தில் அழுந்தார்கள் –
பொல்லாததுமாய்-அருவினையாய் –  மாயமுமாய் -பொய் நிலமுமாய் இருக்கிற
பிறப்பாகிற வன் சேற்று அள்ளலில் அழுந்தார் -என்று அந்வயம்
ஞான பிரானை அல்லால்  இல்லை நான் கண்ட நல்லதுவே -என்று அருளிய
ஞான தேசிகர் -ஆழ்வாரை அல்லால் தொழா மதுரகவி பிரக்ருதிகள்  -அனந்தன் மேல் கிடந்த புண்ணியனை பாகவத பர்யந்தமாக பற்றுகை –ஆழ்வார் ஸ்ரீ சூக்தியாலே இத்தை அருளி -ஆவிர்பூத ஸ்வ ஸ்வரூபராய் வாழும் பலன் சொல்லி தலைக் கட்டுகிறார்
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: