திரு-விருத்தம்-95-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
பக்தி பாரவச்யத்தாலே யாதல் -அயோக்யா அனுசந்தானத்திலே யாதல் -ஏதேனும் ஒரு படி-கண் அழிவு சொல்லிக் கை வாங்காதே -தன் பக்கலிலே பிராவண்யா அதிசயத்தை உடையேனாய் -இதர விஷயங்களிலே அருசியையும் உடையேனாய் -பண்ணின மகோ உபகாரத்தை அனுசந்தித்து -அவன் திருவடிகளிலே விழுகிறேன் என்கிறார் –
இவ்விடத்தில் ஜீயர் குறியாக அருளிச் செய்த ஒரு வார்த்தை உண்டு –
திருக் கோட்டியூரிலே பட்டர் எழுந்து அருளி இருக்கச் செய்தே -அங்கே ராமானுஜ தாசர் என்கிற ஸ்ரீ வைஷ்ணவர் -அடியேனுக்கு திரு விருத்தம் அருளிச் செய்ய வேணும் என்ன -பெருமாளைப் பிரிந்த சோகத்தாலே நான்-ஒன்றுக்கும் ஷமண் அல்ல -ஜீயரே நீரே அருளிச் செய்யும் என்ன -ஜீயரும் அருளிச் செய்து கொடு போக்கு நிற்கச்-செய்தே -வளவன் பல்லவதரையர் -என்று திருக் கோட்டியூர் நம்பி-ஸ்ரீ பாதத்தை உடையார் ஒருவர் அனுசந்தித்து கொடு போந்தராய் -அவர் இப்பாட்டு-அளவிலே வந்தவாறே -கண்ணும் கண்ணநீருமாய் -புளகித காத்ரராய் -இருக்க -இத்தைக் கண்டு –பாட்டுகளில் வார்த்தை சொல்லுவது -இனி பிரசங்கித்த மாத்ரத்திலே
 வித்தர் ஆனீரே என்ன -நம்பி எனக்கு ஹிதம் அருளிச் செய்த அனந்தரத்திலே-எம்பெருமான்-திரு முன்பே இப்பாட்டை நாள் தோறும் விண்ணப்பம் செய் -என்று அருளிச் செய்தார் -அத்தை-இப்போது ஸ்மரித்தேன் என்ன -அவர் இதிலே அருளிச் செய்யும் வார்த்தைகளை நினைத்து-இருப்பது உண்டோ -என்ன -அது எனக்கு போகாது -இப்பாசுர மாத்ரத்தை   நினைத்து இருப்பேன் -என்றாராம் –நம்பி ஆதரித்த பாட்டாகாதே என்று ஐந்தாறு நாழிகை போது இத்தையே
கொண்டாடி அருளிச் செய்தார் –

தலைவி அறத்தொடு நிற்கத் துணிதல் –

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே  -அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே – -95 – –
பாசுரம் –95-யாதானும் ஒரு ஆக்கையில் புக்கு –துறையடைவு–தலைவி அறத்தோடு நிற்கத் துணிதல் –திருமாலிருஞ்சோலை   -10-8-
 வியாக்யானம் –
யாதேனும் ஓர் ஆக்கையில் புக்கு –ஏதேனும் ஒரு சரீரத்தில் பிரவேசித்து -அது தண்ணிய சூத்திர-ஜன்மாவில் ஜனித்தாலும் -மமாயம் தேக -என்று அதிலேயே அபிமானித்து -அங்கே-உண்டானவத்றோடு சில சம்பந்த விசேஷங்களும் -அவை தன்னை விட மாட்டாமையாலே யாய்-போரா நிற்கும் ஆயிற்று -ஆகி -என்கையால உபசயாத்மகம் என்று தோற்றுகிறது-
புக்கு -சேதனனுக்கு அசித் சம்சர்க்கம்  ஸ்வதா உள்ளது ஓன்று அன்று -கர்ம நிபந்தனம் என்கை –
அங்கு ஆப்புண்டும் -கர்ம வாசனையாய் ருசி வாசனையாய் அதிலே பத்தனாய் இருக்கும் -இது தண்ணிது என்று ஆசார்ய உபதேசாதிகளாலும் -சாஸ்திர வாசனையாலும் -பிரத்யஷத்தாலும்-அறியா நிற்கச் செய்தே -இத்தை விடில் செய்வது என் என்று துணுக் துணுக் என்னா நிற்கும் –
ஆப்புண்டும் -சிநேகத்தை பண்ணியும் –
ஆப்பு அவிழ்ந்தும் -கர்மம் அடியாக வந்தது என்று அறியாதே -அவன் தான் இதிலே இலை அகலப்படுத்தா-நிற்கும் -கர்ம ஷயம்   வந்தவாறே அது தான் குலைந்து கொடு நிற்கும் இறே –
மூதாவியில் -இத்தால் பழைமையை நினைக்கிறது

-ஆவி -என்று பிராணனாய் -அசித் விசேஷமா பிராணனாய் இருக்கையாலே இப்போது சூஷ்மசரீரத்தை ஆவி என்கிறது -இது தன்னை பிரகிருதி கார்யம் என்பாரும் உண்டு -பிரகிருதி அம்சம் என்பாரும் உண்டு -இது தான் மோஷ தசை அளவும் அனுவர்த்திக்குமது –சேதனனுடைய கமநாசமநாதிகளுக்கும் உடலாய் இருக்கும் –தடுமாறும் -பஞ்சாக்னி வித்தையில் சொல்லுகிறபடியே மேகங்களில் புக்கு -வர்ஷ முகத்தாலே-பூமியிலே பதித்து -அந்த முகத்தாலே புருஷன் பக்கலிலே அந்வயித்து -சுக்ல சோணித ரூபத்தாலே -ஸ்த்ரி பக்கலிலே-சங்க்ரமித்து –  இப்படி தடுமாற்றமாய் இருப்பது -இச் சேதனனுக்கு புக்க புக்க இடம் எங்கும் தடு மாற்றமே உள்ளது -அத்தை தான் அறிந்த இடமும் அறியாத இடமுமாய் இருக்கும் –உயிர் -ஜ்ஞான ஆனந்த லஷணமாய்-நித்தியமான வஸ்து கிடீர் இப்படி படுகிறது -இப்படி தடுமாறி சம்ச்சரிக்கிறது என்று தொடங்கி என்றால் –

முன்னமே -அநாதியாய் போருகிறது ஆயிற்று -அதனால் -அந்த வாசனையே உபாத்யாயராக –முன்னமே யாகையாலே –
யாதானும் பற்றி -பகவத் வ்யதிரிக்த விஷயம் ஆகையே வேண்டுவது -பற்றுவது ஏதேனும் ஒன்றாக-அமையும் -அவற்றில் குண தோஷங்கள் நிரூபிக்க வேண்டா –
நீங்கும் -பகவத் விஷயம் இத்தனையே வேண்டுவது விடுக்கைக்கு
விரதத்தை -நீ பற்றுகிற விஷயங்கள் அடைய தோஷமாய் இருக்கும் -பகவத் விஷயமே கிடாய்
நல்லது -என்று சிலர் உபதேசித்தாலும் -அது நன்றே ஆகிலும் -நான் அத்தை விடுகையிலே-சங்கல்பித்தேன் என்னும் –
ர்வேஸ்வரன்-ஏதத் வ்ரதம் மம -என்று ரஷிக்கைக்கு வ்ரதம் கொண்டு இருக்குமா போலே யாயிற்று-இவன் அவனை விடுகைக்கு வ்ரதம் கொண்டு இருக்கும் படி –
த்விதா பஜ்யேய மப்யேவம் ந ந மேயம்   -என்கிறபடியே இரண்டாக பிளக்கிலும் தலை சாயேன்-என்று ஆயிற்று இருப்பது –
நல் வீடு செய்யும் -இப்போது அந்நிலை தவிர்ந்து –இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று
கால் கட்டிஇத்தை விடுவித்து தர வேணும் -என்ன பண்ணின –மம மாயா துரத்யயா மாமேவ யே ப்ரபத்யந்தே  –
என்கிறபடியே -நீ பிணைத்த பிணையை நீயே அவிழ்க்க வேணும் என்று அபேஷிக்க பண்ணின -தன் பக்கல் ருசி-முன்னாக இத்தை விடுவிக்க வேணும் என்னப் பண்ணின – மாதாவினைப்  பிதுவை -சரீரத்துக்கு பாதகராய் -சம்சார வர்த்தகராய் இறே யல்லாத மாதா பிதாக்கள் இருப்பது –
இவன் அதில் நின்றும் விடுவித்து ரஷிக்குமவன் ஆயிற்று -இங்கன் இரண்டு ஆகாரமாய் சொல்ல வேண்டுவான்
என் என்னில் –திருமாலை -ஸ்ரீ ய பதி யாகையாலே -பிதாமாதா சமாதவ -என்னுமா போலே –
வணங்குவனே -இதர விஷயங்களில் அருசியைப் பிறப்பித்து -தன் பக்கலில் பிராவண்யத்தைப் பிறப்பித்த -இவ் உபகாரத்துக்கு  சத்ருசமாய் இருப்பதொரு பிரத்யு  உபகாரம் நம்மால் பண்ண ஒண்ணாது இறே – அவனதான வஸ்துவை அவன் பக்கலில் சமர்ப்பிக்கும் அத்தனை இறே –
————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: