திரு-விருத்தம்-94-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
துர்மானத்தாலே இழப்பாரும் அறிவு கேட்டாலே இழப்பாருமாகா நிற்பர்கள் -என்றார்
உமக்கு குறை இல்லையே -என்ன – எனக்கும் ஒரு குறை உண்டாக்கி வைத்தாயே –
முன்னாடி தோற்றாதபடி -மயர்வற மதி நலம் அருளினாயே -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானத்தை-இறே அருளிற்று -அந்த பக்தி பாராவச்யத்தாலே சொல்ல மாட்டுகிறிலேன் என்னுதல் –
வள வேழ் உலகின் படியே அயோக்யா அனுசந்தானத்தாலே என்றும் சொல்ல மாட்டுகிறிலேன் என்னுதல் –

தலைவியைக் கண்ட பாங்கன் தலைவனைக் யடுத்து வியந்து கூறல் —

மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் வைதிகரே
மெய்ப்படியால் உன் திருவடிச் சூடும் தகைமையினார்
எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும்
அப்படி யானும் சொன்னேன் அடியேன் மற்று யாது என்பனே — – 94- –
பாசுரம் –94-மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் -துறையடைவு–தலைவியைப் பார்த்த தோழன் தலைவனிடம் வியந்து பேசுதல் –இருத்தும் வியந்து -8-7
 வியாக்யானம் –
மைப்படி மேனியும் -அஞ்சனத்தின் படியான திரு மேனியும் -கண்டார்கள் கண் குளிரும்படியான-வடிவும் -பட்டர் ஒருகால் இவ்விடத்தை அருளிச் செய்யா நிற்க -பிள்ளை விழுப்பர் அரையரும் -அப்பான் திருவழுந்தூர் அரையரும் -இருந்தார்களாய் –அனுசந்தித்தார் நெஞ்சில் இருள் படியும் படியான-திரு மேனியும் -என்று அருளிச் செய்ய -நஞ்சீயர் -இன்னார் என்று அறியப் பண்ணுகை யாகாதே -என்று அருளிச் செய்து அருள -இவ்வார்த்தை சொன்னார் யார் -என்ன -ஜீயர் -என்று அவர்கள் சொல்ல -நூற்றுப் பதின்காதத்து அவ்வருகே பிறந்து -இவ்வளவும் வந்து -இன்று நமக்கு இத்தை உபகரிப்பதே -என்று கொண்டாடி அருளினாராம் –
மைப்படி -காதல் மையலை உண்டாக்கும் படியான திரு மேனி –
பொன்னார் சார்ங்கம் உடைய யடிகளை இன்னார் என்று அறியேன் –
 செந்தாமரை கண்ணும் -அகவாயில் குண பிரகாசமான திருக் கண்களும் –
வைதிகர் இத்யாதி -இப்போது -வைதிகர் என்கிறது -வேதத்தில் பூர்வபாக நிஷ்டர் -கேவலம் கிரியா லாபம்-கொண்டு பெற இருக்குமவர்கள் -பிரம்மத்தின் உடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளுக்கு பிரதிபாதகமான-உபரிதன பாக நிஷ்டர் அன்றிக்கே -கர்ம பாகத்தையே பற்றி நிற்குமவர்கள் –
அங்கனன்றிக்கே -நிதித்யாசிதவ்ய -என்று விதேயமாய் வரும் நூல் பிடித்த பக்தியை உடையவர்களைச்சொல்லிற்றாகவுமாம் –
அவனுடைய குண அனுசந்தானத்தாலே கலங்கி அடைவுகெடும் அது அன்றிக்கே –
இருக்குமவர்கள் –இப்படி இருக்குமவர்களே மெய்யான பிரகாரத்தாலே உன் திருவடியை-ஆஸ்ரயிக்கும் ஸ்வபாவத்தை உடையவர் –
ஆனால் பின்னை நீர் சொன்னபடி எங்கனே -என்ன -எப்படி இத்யாதி -ஊரில்  பசுக்கள் வந்து-புகுரப் புக்கால் எப்படி சம்ப்ரமிக்கும் அந்த சம்ப்ரம ஹேது இன்னது என்று அறியாதே -குருட்டுப்-பசுவும் சம்ப்ரமியா நிற்கும் இறே -அப்படி யானும் சொன்னேன் -அளவுடையார் சொல்லும்-விஷயம் அன்றோ -நாம் என் -என்று பாராதே -நானும் பாசுரத்தை சொன்னேன் –
அடியேன் மற்று யாது என்பனே -இதுக்கு மேற்பட பர தந்த்ரனுமாய் -பக்திபரவசுமான நான்-அடைவு பட ஒன்றைச் சொல்லி தலைக்கட்ட வல்லேனோ –
அன்றிக்கே அயோக்யா அனுசந்தானம் பண்ணி அகலுகிற நான் அங்குத்தைக்கு
சத்ருசமாக ஒன்றைச் சொல்லித் தலைக் கட்ட வல்லேனோ –
நெஞ்சு பிச்சேரும்படியான விக்ரக வை லஷண்யம்
அயோக்யா அனுசந்தானமே ஸ்வ ரசமான தாத்பர்யம்
ஊருக்கு வரும் பசு கன்றைநினைத்து கத்துமா போலே குருட்டு பசுவும் கத்துவது போலே
நீ அளித்த பக்தியால் உன் ஸ்வரூபாதிகளில் விழித்து மதி மயங்கி கிடக்கிற நான்
உன்னை ஸ்மரித்து ஸ்வ தந்த்ரித்து ஒன்றைச்சொல்ல வல்லேன் -என்கிறார் –
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: