திரு-விருத்தம்-93-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை
தேவர்கள் தானோ ஓர் அபிமான விசேஷத்தாலே தவிருகிறார்கள் -அல்லாதாரோதான்
பகவத் பஜனம் பண்ணுகிறார்கள் -அவர் இவர் என்று விசேஷிககிறது என் -எல்லார்க்கும்-புறம்பே அன்றோ போது போக்கு என்கிறார் –

இருள் கண்டு அஞ்சுகிற தலைவி தோழி செவிலியரை வெறுத்தல் —

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் வன்மைப்படியே – – -93 –
பாசுரம் –93-காலை வெய்யோற்கு முன் ஒட்டுக் கொடுத்த -துறையடைவு—இருளைக் கண்ட தலைவி -தோழி செவிலி தாயாரை வெறுத்தல் —ஒரு நாயகமாய் -4–1-
வியாக்யானம் –
காலை இத்யாதி -உத்பவ அபிபவ ரூபத்தாலே ஆதித்யன் இருளை மேலிடுவது -ராத்திரி ஆதித்யனை- மேலிடுவதாகிற இத்தைக் கண்டுவைத்தும் –
நந்தத் யுதித ஆதித்யே-விடிந்த வாறே அபிமத விஷயத்தை சாதிக்கைக்கு த்ரவ்யார்ஜன கம்-பண்ணுக்கைக்கு ஈடான காலம் வந்தது என்று உகவா நிற்பர்கள் -நந்தந்த் யஸ்தமிதே ரவவ் -அச்தமித்தவாறே இவற்றைக் கொண்டு பிறர் அறியாதவாறே  அவ் விஷயங்களை புஜிக்க-காலம் வந்தது என்று உகவா நிற்பர்கள் -காலை இத்யாதி -பிரபாத சமயத்திலே -வெய்யோன் உண்டு -ஆதித்யன் -அவனுக்கு முன்னோட்டுக் கொடுப்பர்கள் ஆயிற்று- கங்குல்கள் ஆகிற குறும்பர் -அவன் கிரணங்கள் பட
கைவிட்டு ஓடா நிற்பர்கள் இறே -மாலையில் பெரிய பிரதாபத்தை உடைய ஆதித்யனை அழித்து-அவன் ஆண்ட பரப்பை அடையக் கை கொள்வர்கள் – நித்ரையாலே பூமியாகப் பரவசமாம்படி-பண்ணிக் கொண்டு வரும் இறே –
அன்ன கண்டும் -அப்படியைக் கண்டு வைத்தும் -பகவத் விஷயம் பிரத்யஷத்துக்கு அவிஷயம் ஆகையாலே -தான் அறியாது  ஒழிகிறார்கள்-இதனுடைய அந்தர்யத்தை பிரத்யஷியா நிற்கச் செய்தேயும்-நெஞ்சில் படாது ஒழிவதே -காலை -சத்வோத்தரமான காலையிலே -நல் ஞானம் -ஞானம் ஆகில்-பகவத் விஷயத்தை பற்றி அன்றி இராது இறே –
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -என்னக் கடவது இறே –
தத் ஜ்ஞானம் அஞ்ஞானம் அதோன்யதுக்தம் – என்றும் -வித்யான் யாசில் பகை புணம் –
புறம்பே ஒன்றை அறிந்ததோடு துன்னம்பெய்ய அறிந்ததோடு வாசி இல்லை இறே –
 துறை படிந்தாடி -ஜ்ஞானம் ஆகிற இத் தீர்த்தத்திலே புக்கு அவஹாகித்து –
கண் போது செய்து -போது செய்து என்று மொட்டிக்கைக்கும் பேர் -அலருகைக்கும் பேர் -புறம்புத்தை விஷயங்களில் கண் செம்பளித்து என்னுதல் -பகவத் விஷயத்தில் விழித்து என்னுதல் –
மாலை -இவன் அனுசந்திக்க என்று உபக்ரமிக்கும் அத்தனை வேண்டுவது -மேல் உள்ளது எல்லாம்-தானே செய்து -கொடு வந்து மேல் விழும்படியான வ்யாமோஹத்தை உடையவனை –
நல் நாவில் கொள்ளார்நல் நா என்கிறது புறம்புத்தை ஜல்பங்களைத் தவிர்ந்து -பகவத் விஷயத்தை-பேசுவோம் என்றால் -அதுக்கு பாங்கான நாவைப் படைத்து வைத்து -இவர்கள் புறம்பே போகிறது என்-என்கிறார் -சர்ஜிஹ்வா –நினையார் அவன் மைப்படியே -வ்யாமோஹம் பண்ணாதே -த்வேஷத்தைப் பண்ணினாலும் விட ஒண்ணாத வடிவு அழகை நினைப்பார் இல்லை -தருணவ்–த்வேஷத்துக்கு விஷயமாய்
மூக்கு அறுப்புண்டவள் இறே – இவ்வார்த்தை சொன்னாள் -தான் பரிபூதையாம்படியை போய் சொல்லுகிற-இடத்திலே இது எதுக்கு உறுப்பாக சொன்னாள் தான் –
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: