திரு-விருத்தம்-92-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
பெரும் கிறியானை யல்லால் யடியேன் நெஞ்சம்  பேணலதே -என்றாரே தாம் கீழே –
அளவுடையாராய் அதிகாரி புருஷர்களான தேவர்களுக்கும் இதுவும் அன்றிக்கே  ஒழிவதே -என்கிறார் -என்தான் அவர்களுக்கு வந்த குறை என் என்னில் -நாம் எல்லாவற்றையும் அழிய மாற பெற இருக்கிற வஸ்துவை -அழிவுக்கு இட்டு வேறே சில பிரயோஜனன்களை கொள்ளா நின்றார்களே -என்கிறார் –

வேந்தற்கு உற்று உழிப் பிரிவில் தலைவனைக் குறித்துத் தலைவி இரங்குதல்–

பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய்
நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர்
நாள் நிலந்தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று
காண லுமாங்கொல் என்றே வைகல் மாலையும் காலையுமே – – 92- –
பாசுரம் -92- பேண் நலம் இல்லா அரக்கர் -துறையடைவு—தலைவனைக் குறித்து தலைவி இரங்குதல் –ஆழி எழ -7–4-
 வியாக்யானம் –
பேண லம் இத்யாதிமுந்நீர் பெரும்பதியை பேணலம் இல்லா அரக்கர் –
கடலால் சூழப்பட்டு பல பகுதிகளை உடைத்தான உன் விபூதியை –நீள் நகர் இத்யாதி –
உன் விபூதியில் ஏக தேசத்தை அழித்து தர வேணும் என்று சொல்லா நிற்பர்கள் ஆயிற்று -பரஹிம்சை என்றால் -திரு உள்ளத்துக்கு சென்று இராது என்று – இரங்குகைக்காக  சொல்லிக் கொடு-வரும் வார்த்தை யாயிற்று -அவர்கள் ஜீவிக்கில் உன் விபூதி ஜீவியாது -என்னா நிற்பர்கள் -தேவர்-குணங்களை ஓர் இடத்தில் மனனம் பண்ணி இருக்கிற ருஷிகளையும் -நீர் விரும்பி நோக்குகிற-தேவர்களையும் நலியா நின்றார்கள் என்பர்கள்
பேண லமில்லா   -பிறரைப் பேணுகை யாயிற்று
அவன் நன்மையாய் நினைத்து இருப்பது -பிறரும் ஜீவிக்க -நாமும் ஜீவிக்க கடவோம் என்று இரார்கள் –
பேணலம் இத்யாதி -அவன் விபூதியை பேணுகை யாகிற நன்மை இல்லாத ராஷசர் உடைய –
முந்நீர் பெரும் பதிவாய் நீள் நகர் -அஞ்சினான் புகலிடமாய் -துர்வர்க்கம் அடங்கலும் புக்கு ஒதுங்கும்-இடம் ஆயிற்று -கடலை அகழாக உடைத்து இருக்கையாலே சிலராலே பிரவேசிக்க அரியதாய் இருக்கை-
கடல் சூழ்ந்த மகா த்வீபத்திலே உண்டான –நீள் நகர் -தேவர்கள் உடைய வர பலத்தாலே ஒரு நாளும்-அழியாதபடி -பூண் கட்டின இலங்கையிலே -நீள் எரி வைத்து அருளாய் – தேவதைகள் உடைய வரத்தால் உண்டான-சக்தியையும் அழிக்க வற்றான சராக்நியை பிரவேசிப்பிக்க வேணும் -என்பர்களே
-இலங்கை நகரம் பெரி உய்த்தவர் –என்னக் கடவது இறே -ஒரூரைச்  சுட்டுத் தர வேணும் என்பர்கள் –
நின்னை -ஜகத் ரஷணத்தில் தீஷித்து இருக்கிற உன்னை –
ஒரு விபூதியாக அழியுமாகில் செய்யலாவது இல்லை  இறே -என்று கண்ணும் கண்ண நீருமாய் நின்று இறே-அவர்கள் தன்னையும் அழிய செய்வது -விண்ணோர் -எப்போதும் ஒக்க கண்டு அனுபவிக்கிற  அத் தேசத்திலே-வர்த்திக்கிறவர்களும் அன்றிக்கே -நீ அவதரித்து தாழ நின்ற இடத்தில் -மனிச்சில் உண்டான நீர்மை நடமாடும் இங்கே
வர்த்திக்கிறவர்களும் அன்றிக்கே -பரணிலே இருப்பாரைப் போலே ஸ்வர்க்கத்திலே இருக்கிறவர்கள் இறே –

கால் நிலம் தோய்ந்து -நிலத்தில் கால் தோய கடவர் அன்றிக்கே இருக்கிற நிலை அழிந்து -பூமியிலே வந்து கிட்டி -தொழுவர்-ந நமேயம -என்று ராவணனைப் போலே இருக்கும் நிர்பந்தம்-தவிர்ந்து தொழா நிற்பர்கள் –

நின் இத்யாதி -தொழுதார் பெரும் பிரயோஜனத்துக்கு தான் தொழுகிறார்களோ  –
தொழுதால் கண்டு அனுபவிக்கும் வடிவைக் காண்கைக்காக அன்று இறே -உன்னுடைய
விக்ரஹத்தில் உண்டான அழகிலே -அநேகம் கூற்றிலே -ஏக தேசமான ஒரு நாளைப் புறப்பாடு தான் காண்கைக்காகவா -அன்று இறே –
சத்க்ருத்வ தாகார  விலோக நாச யாத்ரு ணீ க்ருதா நுத்தம புத்தி முக்திபி –
வைகல் மாலையும் காலையுமே -அவ் வடிவைக் காண் கைக்கு  அர்த்திப்பார்  நேரும்
அளவல்ல வாயிற்று இவர்கள் நேருவது –நாள் தோறும் -அது தன்னிலும் -இடைவிடாது தொழுவார்கள் –
வைகல் மாலையும் காலையும் விண்ணோர் கால் நிலம் தோய்ந்து தொழுவர் -நின் மூர்த்தி-பல் கூற்றில் ஒன்றும் காணலும் ஆம் கொலோ என்று இறே -அன்று இறே –
அங்கே நித்ய அஞ்சலி புடா – என்று இருக்கையாலே தொழுதார் தொழுத பிரயோஜனம் –
இத்தால் –
அநந்ய பிரயோஜனருக்கு நேர்த்தி அல்பமாய் -பலம் அதிகமாய்
பிரயோஜனாந்தர பரர்க்கு-நேர்த்தி அதிகமாய் பலம் அல்பமாய் -இருக்கும் என்றபடி
கீழ் அவதார குணங்களை அனுபவித்தார் -இதில் தேவர்கள் பிரார்த்தனையால் அன்றோ
தன் சௌகுமார்யம் பாராமல் இந்த கர்சகமான லோகத்தில் அவதரித்தது என்று அவர்களை வெறுக்கிறார் -அவர்களுடைய பாஹ்ய ஹீனைக்கு நான் என் சொல்வேன் என்கிறார் –
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: