திரு-விருத்தம்-91-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
இங்கே கிடந்தது காலம் நெடுகா நின்றது -குறுகா நின்றது என்னா -ஆழம் கால் படா நில்லாதே-நாங்கள் கண்டீரே -புறம்புள்ள விஷயங்களிலே தரித்து -காலம் குறுகுதல் நெடுகுதல் செய்தாலும்-சுகுத்து திரிகிறோம் -அப்படியே நீரும் பகவத் விஷயத்திலே நின்றும் நெஞ்சை மாற வைக்கப் பாரத்தாலோ என்ன –
ஓம் அப்படி செய்யலாற்றிற்று இறே-அதுக்கு ஈடாய் இருப்பதோர் நெஞ்சு பெற்றோம் ஆகில் -என் நெஞ்சு அவனை ஒழிய வேறு ஒன்றை அறியாது என்கிறார் -இந் நெஞ்சு தன்னையும் வைக்கல்  ஆயிற்றே-அவன் ஸௌர்யம் பண்ணிற்று  இலனாகில் –

தோழிக்கு தலைவி தன் கற்பு உணர்த்தி அறத்தொடு நிற்றல் —

சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை வையமுற்றும்
ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை  மாவலி மாட்டு
இருங்குறளாகி  இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற
பெரும்கிறி யானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே    – – -91 – –
பாசுரம் -91-சுருங்கு உறி வெண்ணெய் தொடு உண்ட -துறையடைவு–தலைவி தோழியிடம் தன் கற்பு உணர்த்தி அறத்தோடு நிற்றல்  –வார் கடா அருவி -8–4-
 வியாக்யானம் –
சுருந்குறி வெண்ணெய்-சுருங்கு உறி வெண்ணெய் -கள்ளக் கயிறு வைத்த உறி யாயிற்றே –
வெண்ணெய் தொடு உண்ட -வைத்த குறி அழியாமே -வெண்ணெயை  களவு கண்டு அமுது செய்தான் –
கள்வனை -களவு தன்னை யாயிற்று களவு கண்டது -ஆகையால் -சிலர் இது களவு கண்டல்ல -தெய்வம்-கொண்டதோ -நாம் வைத்திலோமோ  -என்னும்படி யாயிற்று களவு கண்டது –
வையம் இத்யாதி -இவ் வெண்ணெயாலே வயிறு நிறைய செய்தேயும் -ஜகத்தாக எடுத்து வைத்தால்-அரை வயிறு ஆம்படியாய் இற்று இருப்பது -இத்தால் ஆஸ்ரித ஸ்பர்சமுள்ள -த்ரவ்யத்தாலே தரிக்கையும் –
ஜகத் ரஷணத்திலே பர்யாப்தம் இன்றிக்கே இருக்கும் படியையும் சொல்லிற்று –
மாவலி இத்யாதி -தான் காவலாக இட்டு வைத்த கடல் -இவ் விபூதியை களவு காணும் அன்று-தன் வயிற்றிலே இட்டு வைத்துக் கொண்டு நோக்கும் -நான் என்னது -என்று இருப்பன் ஒருத்தன் இத்தை-அபஹரித்த அன்று அவனோடு இசைய விருந்து சென்று கொள்ளும் –
மாவலி மாட்டு -ஆசூர பிரக்ருதியானவன் பக்கலிலே சென்று கிட்டிற்று -தன்னை ஒழிய வேறு ஒன்றைப் பேணாத-நெஞ்சு உடையவன் பக்கலிலே அன்றோ கிட்ட அடுப்பது –
இரும் குறளாகி -பெரிய குறளாகி -அதாவது லோகத்திலே வாமனர்களுடைய வளர்ந்து அருளின-இடத்துக்கு ஒப்பாம்படி ஆயிற்று -இவனுடைய சிறுமை –
இசைய -இசைவிக்க கிருஷி பண்ணினவன் தானேயாய் -அவன் இசைவும் தன்னதீனமாம் படியாக-உடையனாய் -ஆரேனும் வேண்டா என்னிலும் அவனும் இசைந்து கொடுக்கும் படியும்  ஓர் மூவடி வேண்டிச் சென்ற -இரண்டு அடியை இரந்து -இரண்டு அடியும் அளந்து விடாதே-ஓர் அடிக்கு சிறை இடும்படி மூன்று அடியை இரந்தவனை –
வேண்டிச் சென்ற பெரும் கிறியானை யல்லால் –தான் சர்வ நிரபேஷன் என்று தோற்றாதபடி சென்றவன் -நாம் கொடுக்கிற வித்தால் அல்லது தரியான் – என்று தோற்றும்படியாக யாயிற்று சென்றது –
தன் ஈச்வரத்வத்தை  களவு கண்ட படி -அவாப்த சமஸ்த காமன் ஓர் அபேஷை தோற்ற வந்தான் -என்று இத்தனை தோற்றாமை -இரப்பாளனாய் சென்றபடி – அவன் தயை பிறந்து கொடுக்கும் படியான வடிவைக்கொண்டு –
பெரும் கிறியான் -பெரு விரகன் -அடியேன் -மகா பலியைப் போலே ஓன்று கொடுக்க
இருக்கிறார் அல்லர் -இந்த்ரனைப் போலே ஓன்று பெற இருக்கிறார் அல்லர் -அச் செயலுக்குதோற்று எழுதிக் கொடுக்குமவர் இறே இவர் –
நெஞ்சம் பேணலதே -பரத்வதையும் கொள்ளாது -பாவோன் நான்யத்ர கச்சதி –
ஒருங்கற -பிறிகதிர் படாமே -ஒரு காலே என்றாய் -நிச்சேஷமாக -என்றபடி –
யானே என்தனதே என்று இருந்த என் நெஞ்சையும் நான் அறியாதபடி அபஹரித்தான் –
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: