திரு-விருத்தம்-90-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
என் ஞான்று தலைப் பெய்வனே -என்று இறே கீழ் நின்றது -என்றாகில் என் -பகவத் ஸ்பர்சம்-பலத்தோடு சந்திப்பித்து விடும் -என்று விஸ்வசித்து இருக்கும் அத்தனை அன்றோ -என்ன –
அப்படி செய்யலாய் இற்று இறே -சம்சாரிகளைப் போலே நிரபேஷன் ஆனேன்  ஆகில்
எனக்கு உன்னை ஒழிய கால ஷேபம் பண்ணுகை அரிதாக நின்றது என்கிறார் –
இப்பாட்டில் சொல்லுகிறது என் என்னில்-
-உன் திருவடிகளை சமாஸ்ரயிக்கைக்கு ஈடாக-இருப்பதொரு சரீரத்தை பெற்ற படியையும் -அது தான் அஸ்த்ரமாய் இருக்கிறபடியையும் -அனுசந்திக்கப் புக்கால் -அத்தாலே வந்த ஆற்றாமையாலே -காலம் நெடுகா நின்றது என்னுதல் –
 அன்றிக்கே
-உன்னைஒழிய வேறு ஒன்றால் தரியாத படியான ஸ்வபாவத்தை பெற்றானபடியையும் -இது தான் பிரகிருதியோடு இருக்கச் செய்தே வந்த ஸ்வபாவம் ஆகையாலே -இது தானே ஏக ரூபம்-அன்றிக்கே -இருக்கிற ஆஸ்ரயத்தை அனுசந்திக்கப் புக்கால் இதுக்கு காலம் போருகிறது இல்லை-என்றது ஆதல் –

தலைவனைப் பிரிந்த தலைவி கால நீட்டிப்புக்கு ஆற்றாது உரைத்தல் —

தலைப்பெய்து யான் உன் திருவடிச் சூடும் தகைமையினால்
நிலைப்பெய்த வாக்கைக்கு நோற்ற விம்மாயமும் மாயம் செவ்வே
நிலைப் பெய்திலாத நிலைமையும் காண் தோறு அசுரர் குழாம்
தொலைப் பெய்த நேமி எந்தாய் தொல்லை யூழி சுருங்கலதே – – – 90- –
பாசுரம் -90-தலைப் பெய்து யான் உன் திருவடி -துறையடைவு–தலைவனைப் பிரிந்த தலைவி ஆற்றாது  உரைத்தல் -குரவை   ஆய்ச்சியர் -6–4
 வியாக்யானம் –
தலைப் பெய்து -உன்னை வந்து கிட்டி –
நான் -அறக்கை கழிந்த நான்
உன் திருவடி இத்யாதி -உன் திருவடிகளை ஆஸ்ரயிக்கை ஆகிற  இஸ் ஸ்வ பாவத்தாலே
தரிப்பதான சரீரத்தைப் பெறும்படி -ஜன்மாந்த்ரத்திலே ஸூ க்ருதத்தை பண்ணின ஆஸ்ரயமும் –
மாயம் செவ்வே நிலைப்பெய்திலாத நிலைமையும் –மாயம் உண்டு –இப் பிரகிருதி –
இது என்றும் ஒக்க ஒரு படிப்பட்டு இராதே இருக்கிற இஸ் ஸ்வா பாவத்தையும் காண்டோறு –
அன்றிக்கே –
தலைப் பெய்து -இத்யாதி -நான் உன்னை வந்து கிட்டி உன் திருவடிகள் ஒழிய வேறு ஒன்றால்-தரியாத படியான இஸ் ஸ்வ பாவத்தை உடையேனாய் கொண்டு -நான் இதிலே நிலை நின்ற ஆஸ்ரயத்தையும்-ஆக்கைக்கு நோன்ற இம் மாயமும் -ஜன்மாந்தர சகஸ்ரேஷூ -என்று நோற்றால் இறே இஸ் ஸ்வ பாவம்-பிறப்பது –
ஒரு சரீர பரிக்ரகம் பண்ணி இருக்கச் செய்தே -இறே இஸ் ஸ்வ பாவம்  தான் உண்டாவது –
ஆகையால் தாத்ருச சரீர பரிக்ரகமும் -அந்த பக்திக்கு உறுப்பாம் இறே -இந்த யோஜனையிலும்-க்ரியாகாரக பாவேன அன்வயிக்கும் இடத்தில் -ஆக்கைக்கு நோற்ற -என்கிற இதுவே விசேஷ்யமாய் கொண்டு-பிரதானமாய் -தோற்றிற்றே யாகிலும் -திருவடி சூடும் தகைமையினால் -நிலைப் பெய்க -என்கிற
இஸ் ஸ்வபாவ பரமான விசே ஷணாம்சத்திலே   வாக்யத்துக்கு தாத்பர்யமாய் -அதுவே பிரதானமாக-கடவது –
மாயம் செவ்வே யித்யாதி -அச்  சரீரம் தான் குண த்ரய உக்தமாய் இருக்கையாலே
ரஜஸ் தமச்சுக்கள் தலை எடுத்த போது -இஸ் ஸ்வ பாவம் இன்றிக்கே -சத்வம் தலையானபோது-உண்டாமது ஆகையாலே -என்றும் ஒக்க ஒருபடிப் பட நிலை இல்லாதே இருக்கிற இஸ் ஆஸ்ரயத்தையும் –
காண்டோறு -அனுசந்திக்கும் தோறு எல்லாம் -இத்தையே முடிய அனுசந்தித்துப் போந்தார் என்று-தோற்றுகிறது –
அசுரர் இத்யாதி -அசுரர் சமூகத்தை தொலையும்படி பண்ணின திரு ஆழியை உடைய
என் ஸ்வாமி யானவனே –
இத்தால் -நீ -அசக்தனாய் ஆதல் –அப்ராப்தனாய் ஆதல் –நாம் செய்தது நாம் பட்டோம் இத்தனை அன்றோ -என்று தான் ஆறி இருக்கிறேனா –
தொல்லை இத்யாதி -பழையதான கல்பம் சுருங்குகிறது இல்லை -நெடிதாக நின்றது –
அன்றிகே இவ் ஆஸ்ர்யத்தை அனுசந்திக்கப் புக்கால் -தொல்லை ஊழி யானது சுருங்கலை-உடைத்தாய் இரா நின்றது -காலம் போருகிறது இல்லை –
இப்படி சமர்த்தனான நீ ஸ்வாமியாக இருக்க எனக்கு இப்படி வீணாக காலம் கழிவது பொறுக்க-போகிறது இல்லை -என்று சர்வேஸ்வரனைக் குறித்து முறை இடுகிறார் –
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: