திரு-விருத்தம்-89-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
சம்சாரிகளில் காட்டில் வ்யாவ்ருத்தராகப்      பெற்றோம் -இனி அவனைப் பெற்று
அனுபவிக்கிற வர்களோடு  நாம் சஜாதீயராக -பெறுவது என்றோ -என்கிறார் –

தலைவன் கலவிக்கு விரைகிற தலைவி இரங்குதல்–

தீ வினைக்கரு நஞ்சை நல் வினைக்கின்ன முதத்தினை
பூவினை மேவிய தேவி மணாளனை புன்மை எள்காது
ஆவினை மேய்க்கும் வல்லாயனை அன்றுலகீரடியால்
தாவின வேற்றை எம்மானை எஞ்ஜான்று   தலைப் பெய்வனே – – 89- – –
பாசுரம் –89–தீ வினைக்கு அரு நஞ்சை -துறையடைவு-தலைவனது  கலவிக்கு விரைகிற தலைவி இரங்குதல் –அங்கும் இங்கும் -8-3
 வியாக்யானம் –
தீ வினைக்கரு நஞ்சே -பகவத் பிராப்திக்கு பிரதி பந்தகமான துஷ் கர்மங்களுக்கு ஆற்ற ஒண்ணாத-நஞ்சாய் உள்ளவனை –
நல் வினைக்கு -பலாபிசந்தி ரஹீதமான கர்மத்தை பரிகாரமாக உடைய பக்திக்கு –
இன்னமுதினை -நிரதிசய போக்யனாய் -பரம ப்ராப்யனாய் உள்ளவனை –
இப்படி பாபங்களை போக்குகைக்கும் -தன் பக்கல் ருசி ஜநகன் ஆகைக்கும் அடி என் -என்ன –
பூவினை மேவிய இத்யாதி -பிராட்டியோடு சேர்த்தியாலே–பெரிய பிராட்டியாருக்கு வல்லபன்-ஆகைக்குமேற்பட இல்லை இறே மேன்மைக்கு
 புன்மை இத்யாதி -அம மேன்மை  உடையனாய் இருக்கச் செய்தே -அவளோட்டை சேர்த்தியாலே-ஆஸ்ரிதர்க்கு சுலபனாய் உள்ளவனை –
புன்மை எள்காது ஆவினை மேய்க்கும் -ஸ்ரீயபதி யான தன் மேன்மைக்கு இது போருமோ -இது புல்லிது என்று இகழாது -பசுக்களை மேய்க்கும் ஆயிற்று –
வல்லாயினை -மற்றும் பசு மேய்ப்பார் உடம்பில் துளி நீர்  ஏறிட்டு கொள்ளிலும் அதுக்கும் அவசரம் இல்லாதபடி இருக்குமவனை –
அன்று உலகு இத்யாதி -ஒரூரை ரஷித்தால் போலே இப் பூமியாக ரஷிக்குமவனை –
ஏற்றை -லோகத்தை அடைய தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொள்ள பெற்ற  படியால்
 மேணானித்து இருக்கிறவனை -இத்தால் வந்த பலமும் தன்னதாய் இருக்கும் படி
எம்மானை -அவன் வெற்றியாலே மேணானித்து இருக்க வல்லன் ஆனால் போல் ஆயிற்று-இவர் அவன் செயலுக்கு தோற்க வல்லபடி –
எஞ்சான்று தலைப் பெய்வனே -அவன் படிகள் இவை யான பின்பு-நான்  இழவல்லது பொருள் இழவு இல்லை இறே -அப் பேறு பெரும் நாள் என்றோ என்கிறார் –
அபீதா நீம் சகாலஸ் ஸ்யாத்-பதினாலு ஆண்டு கழிக்கால் வரக் கடவது இறே –
அந்நாள் இன்றாகப் பெறுவது -காண் -என்றாப் போலே –
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: