திரு-விருத்தம்-88-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை
இப்படி நாடு பழி சொல்லா நிற்கச் செய்தே -இத்தை சொல்லி பழி சொல்லும்படியாக
பெற்ற நமக்கு இனி ஒரு குறை உண்டோ -என்கிறாள் –
இப்பாட்டில் சொல்லுகிறது என் என்னில் –
சர்வதா சத்ருசமாய் இருப்பதொரு வஸ்து -இல்லாதபடி இருக்கிற சர்வேஸ்வரன் -திரு மேனிக்கு-சேர்ந்து இருப்பதொரு ரூபமானதைக் கண்டால் -உபமான ரஹீதமாய் இருப்பதொரு வஸ்துவுக்கு-கதிர் பொறுக்கி யாகிலும் இங்கனேயோ ஒரு ரூபமாக உண்டாக பெற்றோம் -என்று -இது ஆஸுவாச-ஹேது  வாகை யன்றிக்கே -அவ் உபமேயம் தன்னையே காண வேணும் என்னும்படியான-விடாயை உடைய – நமக்கு இனி ஒரு குறை உண்டோ -என்றது -ஆதல் –
அன்றிக்கே
அவனுடைய ஜகதாகார தையை அனுசந்தித்தால் -அவ்வளவிலே பர்யசியாதே -அவனுடைய-அசாதாரண விக்ரகத்தை காண வேணும் -என்னும் அபேஷை பிறக்கும்படியான -எனக்கு-ஒரு குறை உண்டோ -என்னுதல் –

போலி கண்டு அழிகிற தலைவி ஆற்றாமைக்கு இரங்குதல் —

திருமாலுரு வொக்கும் மேரு அம்மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக்கைத் திருச் சக்கர மொக்கும் அன்ன கண்டும்
திருமாலுருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர்
திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே – – -88- –
பாசுரம் -88-திருமால் உரு ஒக்கும் மேரு -துறையடைவு–போலி கண்டு அழிகிற தலைவி ஆற்றாமைக்கு இரங்குதல் –புகழும் நல் ஒருவன் -3-4-
 வியாக்யானம் –
திருமால் உரு ஒக்கும் மேரு -ஸ்ரீ ய பதி உடைய வடிவோடு ஒத்திரா நின்றது மேரு வானது -வடிவாலும் -புகாராலும் –

அம் மேரு இத்யாதி -அம் மேருவிலே சஞ்சரியா நிற்கிற ஆதித்யன் ஆனவன் –திருமால் திருக்கை திருச் சக்கரம் ஒக்கும் -வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் -என்கிறபடியே -அவன் கையிலே திரு வாழியைப் போலே இருக்கும் –

அன்ன கண்டும் -இப்படியே அவனுக்கு போலியானவற்றைக் கண்டு வைத்தும் –
திருமால் -இத்யாதி -ஸ்ரீயபதி உடைய -அந்த மேருவோடே ஒத்த திரு மேனியையும் –
வலக்கை ஆழி இடக்கை சங்கம் -என்கிறபடியே -அசாதாராண சிஹ்னத்தையும் காண வேண்டும்-என்று ஆசைப்பட்டு பிதற்றா நின்றுள்ள –
அன்றிக்கே –
திருமால் உரு ஒக்கும் இத்யாதி -சர்வேஸ்வரன் திரு மேனியோடு ஒத்து இருந்தது மேரு –
அதிலே சஞ்சரிக்கிற ஆதித்யன் அவன் கையில் திரு ஆழியோடு ஒத்து இருந்தான் –
இவை இரண்டும் ஜகத் ஆகாரதைக்கு பல ஷணமாய் இருந்தது –
அன்ன கண்டும் -ப்ருதக் ஸ்திதித்ய அநர்ஹா ஆதார  தேய பாவ நியந்தரு நியாம்யபாவ
சேஷ சேஷி பாவாதிகளாலே -இவை அவனுக்கு சரீரமாய் இருக்கிறபடியை கண்டு வைத்தும் –
திருமால் இத்யாதி -இப்படி ஜகதா காரனாய் இருக்கிற அளவில் பர்யவசியாதே –
அவனுடைய அசாதாராணமான ரூபத்தையும் -அசாதாராணமான சிஹ்னங்களையும் –
காண வேணும் என்று ஆசைப்பட்டு கூப்பிடும்படி -திருமால் -அடிக் கழஞ்சு பெற்ற பிச்சு -நிதித்யா ஸி தவ்ய-என்றுவிதேயமானது தான் இவருக்கு பிரகிருதி ஆயிற்று –
தலைக்கொண்ட -தலைக் கொள்கையாவது -சிலர் பழி சொன்னார்கள் -என்று மீளாதபடி-
முறுகு  –   கொளுந்தகை –நங்கட்கு இத்யாதி -இப்படி பகவத் விஷயத்தில் அவகாஹித்த நம்மை-அவஸ்யம் அநு போக்யத்வம்  -என்கிற வசனத்தைக் கொண்டு நம் கர்மம் நம்மை வடிம்பிட வற்றோ -என்கிறார் –
முறுகு  –   கொளுந்தகை -வயிரம் பற்றினது என்றபடி –முறுகு -வயிரம் -நெருப்பானது வயிரத்தில் பற்றினால்-அவிக்கப் போகாதது போல் -ஒருத்தராலும் மீட்க்கப் போகாது என்றபடி -த்ருடமாகை -என்றது ஆயிற்று –
அவனை காண வேண்டும் என்ற உறுதிப்பட்டு நின்ற இவ் அபிநிவேசம் நமக்கு பிறந்த பின்பு-பல ப்ராப்தியில் எவ்விதமான குறையும் நேரிடாது என்று நிச்சயித்து ஹ்ருஷ்டரானார் –
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: