திரு-விருத்தம்-87-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
உன்னை பிரிந்த அளவிலே பாதக பதார்த்தங்கள் இவளை நலிந்து ஈடுபட்டது கண்டு –
லோகமாக கூப்பிடும்படி பண்ணுவதே -என்று திருத் தாயார் வார்த்தையாய் இருக்கிறது

அன்றிற்கும் ஆழிக்கும் ஆற்றாத தலைவிக்குத் தோழி இரங்குதல் –

புலம்பும் கனகுரல்  போழ் வாயவன்றிலும் பூம் கழி பாய்ந்து
அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும் ஆங்கவை நின்
வலம்புள்ளது நலம்பாடுமிது குற்றமாக வையம்
சிலம்பும்படி செய்வதே திருமால் இத்திருவினையே – — 87- –
பாசுரம் -87-புலம்பும் கன குரல் போழ் வாய அன்றிலும் -துறையடைவு–தலைவி ஆற்றாமைக்கு தோழி இரங்குதல் –பண்டை நாளாலே -9-2-
போழ்-பிரிந்தாரை இறு துண்டாக விடுவாரை
வியாக்யானம் –
புலம்பும் கனை குரல் -பலவற்றைச் சொல்லிக் கூப்பிடுவதாய் -செறிந்த த்வனியை உடைத்தாய் –
உன்னைக் கூடி பிரிந்து தனி இருப்பாரை -இறு துண்டமாக விடுகிற வாயை வுடைய அன்றிலும் –
பூம் கழி இத்யாதி -அழகிய கழியில் வரப் பாயா நிற்பதாய் -அலை எறியா நிற்பதாய் –
ஊமை கூறனான த்வனியை உடைத்தாய் -பரந்த திரைகளை உடைய கடலும் –
ஆங்கவை -பிரிந்து இருப்பார்க்கு மற்றும் பாதகமான சேக்கள் கழுத்திலே மணி ஓசை என்ன -சந்த்ரோதயம் என்ன -தென்றல் என்ன -இப்படிப் பட்ட பாதகங்களை சொல்லிற்று ஆதல் –
அன்றிக்கே -கீழ் சொன்ன வை தன்னையே சொல்லிற்று ஆதல் –
இவை பாதகமாகா நின்றன -என்ன குற்றம் செய்தாள் என்று பாதகம் ஆகிறது என்ன –

நின் வலம் புள் இத்யாதி -உனக்கு சாதாரணமாய் -பலத்தை உடைத்தாய் -கருடோவாருணம் சத்ரம் ததைவ மணி பர்வதம் -சபார்யஞ்ச ஹ்ருஷீகேசம் லீலயைவ வஹந்யயௌ -என்கிறபடியே தாரண சாமர்த்தியத்தை உடையனான திருவடி உடைய நலமுண்டு –நன்மை-அத்தைப் பாடினது குற்றமாக -த்வதன்க்ரி சம்மர்தகிணாங்க சோபினா  -என்கிறபடியே-அவனுக்கு அடிமை செய்து -அவன் தழும்பு சுமந்தாப் போலே சம்ச்லேஷ சிஹ்னங்களை-தரிக்க வேணும் என்று ஆசைப்பட்டு –அவனைப் பாடின இது குற்றமாகவையம் சிலம்பும்படி செய்வதே -சிறியார் பெரியார் என்ற வாசி இன்றிக்கே -இருந்ததே-குடியாக கை எடுத்து பழி சொல்லும்படி பண்ணுவதே –

திருமால் -நீர் தான் பிரணயிகள் அல்லீராய்  தான் இப்படி செய்கிறீரோ –
இத் திரு வினையே -உம்மை ஆசைபட்டவளில் குறைந்தாளோ
அவளோடு கூடின உம்மை ஆசைப்பட்டவள் –
ராவணாதிகள் பெருமாளைப் பழி சொல்ல -ராஷசிகள் தன்னை நெருக்க இருந்தவளைப்-போலே இருக்க வல்லளோ -இவள் அன்றில் -கடலோசை -தொடக்கமானவை இவளை நலிய-அத்தாலே இவள் நோவு படா நின்றாள் என்று நாட்டார் பழி சொல்ல நீர் விட்டு வைப்பதே –
உம்முடைய மகிஷி நோவு பட பார்த்து இருக்கை உமக்கு குறை யன்றோ -என்றபடி –
ஸ்வா பதேசம் –

இத்தால் -அத்தலையாலே வரக் கண்டார் ஆறி இருக்கை அன்றி -இவர் க்ரம ப்ராப்தி பற்றாமை பதறி மேல் விழ நீர் தாழ்த்தீர்  ஆவது  உமக்கு குறை அன்றோ -என்று இவர் தசையை அனுசந்தித்தவர் பாசுரமாய் இருக்கிறது -நமே பக்த ப்ரணஸ் யதி-இவைமறந்தீரோ -என்கிறார்கள் –

————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: