திரு-விருத்தம்-86-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
எத்தனை ஏனும்  இருள் வந்து மேலிட்டு பாதகம் ஆனாலும் -அத்தலையில் ஒரு குறை
சொல்ல ஒண்ணாத படி இறே அவன் ஸ்வரூபத்தை நிரூபித்தால் இருக்கும்படி –

தலைவனைப் பிரிந்த தலைவி இரங்கல் —

அடைக்கலத் தோங்கு கமலத்தல ரயன் சென்னி என்னும்
முடைக்கலத்து  ஊண் முன் அரனுக்கு நீக்கியை ஆழி சங்கம்
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால்
புடைக் கலந்தானை எம்மானை என் சொல்லிப் புலம்புவனே – – 86- –
பாசுரம் -86-அடைக்கலத்து ஓங்கு கமலத்து அலர் -துறையடைவு-தலைவனைப் பிரிந்த தலைவி வருந்துதல் -வள வேழ்வுலகு -1-5-
 வியாக்யானம் –
அடைக்கலத் தோங்கு-சர்வேஸ்வரன் பக்கலிலே நிஷேபம் போலே யாயிற்று ப்ரஹ்மா வளருவது
கமலத்தல ரயன் -நிஷேபம் போலே என்ற இடம் -ஒரு  குறை பிறவாதபடி உணர்ந்து –
நோக்குகிற படியை சொன்ன இத்தனை -அவ்வளவு அன்றிக்கே -நேரே சர்வேஸ்வரன்
பக்கலிலே பிறந்த ஜன்மத்தால் வந்த ப்ராப்தியை உடையவன் –
சென்னி -இத்யாதி -லோக குருவுமாய் -பிதாவுமானவன் தலையை அறுத்துப்
பாதகியாய் நின்றான் -ஒருவன் -தலை அறுப்புண்டு எளிவரவு பட்டு நின்றான் ஒருவன் -இவருடைய துக்கத்தையும் போக்கினான் ஆயிற்று இவன் –
அவன் சென்னி என்னும் முடைக்கலம் -பிரம்மசிரஸ் என்றொரு நாமம் மாத்ரமேயாய் –
தான் முடைக்கலமாயிற்று -பூதிகந்த பஹூளம் ஆகையாலே கழுகும் பருந்துமாய்
தொடர்ந்து திரியும்படி யாயிற்று சஞ்சரிப்பது –
முடைக்கலத்து  ஊண் முன் அரனுக்கு நீக்கியை -அதிலே உண்டு திரிகிற இத்தை முன் அரனுக்கு-நீக்கினவனை -சம்ஹர்த்தாவாய் தன் அதிகாரத்தோடு இருக்கச் செய்தே -இவ் எளிவரவு வர-நாம் ஒருவன் ஆக்கிக் கார்யம் கொள்வான் ஒருவன் -நோவு பட விட்டு இருக்க ஒண்ணாது -என்று அவனுடைய துக்கத்தைப் போக்கினவனை –
இத்தால் -ஸ்ருஜ்யத்வ கர்மவச்ய த்வேஷத்ரஞ்சச த்வங்கள் இருவருக்கும் அவிசிஷ்டம்
என்றபடி -ஒருவன் தலை அறுப்புண்டு நின்றான் -ஒருவன் பாதகியாய் நின்றான் -இவன்-அவர்கள் இருவருக்கும் வந்த துக்கத்தைப் போக்கிக் கொண்டு நின்றான் –
ஆழி சங்கம் படைக்கலம் ஏந்தியை – இவர்கள் இப்படி அலைந்து கொண்டு கிடந்தால் –
ரஷிக்க வேண்டும் போதாக கருவி எடுக்க பார்த்து இருக்க ஒண்ணாது -என்று
திவ்ய ஆயுதங்களை எப்போதும் கையிலே தரித்துக் கொண்டு நிற்கிறவனை –
திருவாழி உள்ளிட்ட திவ்ய ஆயுதங்கள் ஆகிற திவ்ய ஆபரணங்களை ரஷிக்க வேண்டும்படியாக-தரித்து கொண்டு இருக்கும் ஸ்வபாவன் ஆனவனை –
வெண்ணெய் இத்யாதி -பிரம்மா ருத்ராதிகளுக்கும் கூட துக்க நிவர்த்தகனாய் -அதுக்கு
ஈடான பரிகரத்தையும்  உடையவனாய் -இருக்கச் செய்தே -ஆஸ்ரிதரால் தனக்கு வந்த கிலேசத்தை-பரிஹரித்து கொள்ள மாட்டாதே இருக்குமவன் -ப்ரஹ்மாதிகளுக்கும் கூட நிர்வாஹனாய் –
சர்வ ஸ்மாத் பரனாய் இருக்கிறவன் தன்னுடைய விபூதி யில் ஏக தேசத்தில் -சில
அனுகூல ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லாது செல்லாத -அவாப்த சமஸ்த காமனாய்

இருக்கிறவனுக்கு -ஓன்று குறையாய்  அது தான் நேர் கொடு நேர் கிடையாதே களவு காணப் புக்கு-வாயது கையாக அகப்பட்டு -அதுக்கு பிரதி கிரியை பண்ண மாட்டாதே நிற்கிறவனை –

அன்று -அவன் வந்து கட்டுண்டு எளியனாவது ஒரு நாள் உண்டே -அதுவும் ஒரு நாளே –
தானே வந்து கட்டுண்டு எளியனாய் இருக்கிற அன்று கிட்டப் பெறாதே –இன்று
பெறுகைக்கு பிரார்த்தித்து இருப்பதே -நான்
ஆய்ச்சி -ஓர் இடைச்சியால் வந்த நலிவு பரிஹரிக்க மாட்டாதே இருப்பதே –
வன் தாம்புகளால் -உரவியவை எல்லாம் அற்றுப் போக மேலே மேலே சிலவற்றை
எடுத்து அடித்தாள் ஆயிற்று –   ச்நேஹம் எவ்வளவு உண்டு -அவ்வளவு நிலை நிற்கும் இறே-சீற்றமும் -இடைச்சி குமைத் திறங்கள் -என்னக் கடவது இறே –
புடைக்கலந்தானை -அலந்து இருக்கும் இதுக்கு மேற்பட இதுக்கு ஒரு பிரதி கிரியை இல்லை
பண்ணலாவது – அலந்தானை -அலவென்று மலர்வாய் -இவள் அடிக்க அடிக்க முகம் மலர்ந்து-இருந்த படியாகவும் -கண்ணியால் -குறும் கயிற்றால் கட்ட எட்ட -என்று இருந்தவன் இறே
எம்மானை -கட்டுண்டு அடியுண்டு கண்ணும் கண்ண நீருமாய் உடம்பு வெளுத்து இருந்த
இருப்பைக் காட்டி என்னை அனந்யார்ஹமாக எழுதிக் கொண்டவனை –
பையவே நிலை இறே ஈடு அழிப்பது –
என் சொல்லிப் புலம்புவனே -இப்போது ஆசைப் பட்டு பெறாமையாலே புலம்ப வேண்டா நின்றது-
முன்பு செய்து வைத்த  தொரு குறை -இல்லாதபடி யாலே சொல்லுகைக்கு ஒரு பாசுரம்
காண்கிறிலேன் -நாம் இப்போது பெறாது ஒழிகிறது நம்முடைய க்ரம ப்ராப்தி பற்றாமை
என்று இத்தலையிலே வாங்கலாய் இருந்தது -அங்கனம் சொல்லலாவது ஓன்று இல்லை இறே-அத்தலைக்கு -மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித்
அயன் -அஜன் -யோனி ஜன்மாவான் அன்று –
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: