திரு-விருத்தம்-85-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
இருளினுடைய தோற்றரவுக்கு நொந்தாள் ஒரு தலைமகள் வார்த்தை யாதல் –
அன்றிக்கே -இவள் தசையை அனுசந்தித்த திருத் தாயார் வார்த்தை யாதல் –

மாலைப் பொழுது கண்டு தலைவி இரங்குதல் –

மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி
ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை உலகு அளந்த
மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா
ஆணிப் பொன்னே அடியேன் அடி யாவி யடைக்கலமே  – – -85- –
பாசுரம் -85-மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து -துறையடைவு-மழைப் பொழுது கண்டு தலைவி வருந்துதல் –எம்மா வீடு -2-9-
 வியாக்யானம் –
மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து -குரங்கானது மாணிக்கத்தைக் கொண்டு
எறியுமா போலே –பெரு விலயனான மாணிக்கத்தை குரங்கானது -அதன் சீர்மையை
அறியாதே எடுத்து -கார்யம் கொள்ள ஒண்ணாதார் இடத்தே மங்கிப் போம்படி எறியுமா போலே -என்னுதல் -அன்றிக்கே -குரங்கு என்று விலங்குதலாய் -அத்தாலும் எடுத்து விநியோகம் கொள்ள-ஒண்ணாதார் இடத்தே மங்கிப் போம்படி எறியுமா போலே என்னுதல் -அப்போது எறிவாரை அழைத்து கொள்ளும் இத்தனை –
இருளோடு -இத்யாதி -இருளோடு வந்து -சந்தித்து -மாற்றற்ற செம்பொன் போலே
ஸ்லாக்யமான ஆதித்யனை ஆயிற்று முடித்துக் கொண்டு மாலை வந்து தோற்றிற்று –
குரங்கு கையில் புக்கு மாணிக்கம் நசித்தால் போல் ஆயிற்று -ராத்ரிக்கு அவயவமான
இருளின் கையிலே புக்கு ஆதித்யன் மாய்ந்தபடி –
இனி வெறும் மாலையே யாய்ச் சொல்லும் இத்தனை ஆகாதே என்று கை வாங்கி இருக்க-ஒண்ணாதபடி -ஆயிற்று அவன் படி –
உலகு அளந்த மாணிக்கமே -ரஷகரான இந்த்ராதிகளும் தங்களால் முடியாமை கை வாங்கின-வன்றும் -தான் வந்து கை கொண்டு -தாமச பிரக்ருதிகளை தள்ளி நோக்குமவன் இறே –
காடும் மலையுமான ஒரு விபூதியை அளந்து கொண்டது ஒரு மாணிக்கத்தை
இட்டு காணும் –மாணிக்கமே -பெரு விலையனாய் இருக்கை -தன்னைப் பாராதே
அழிய மாறின படி –
-என் மரகதமே -உடம்பிலே அணைத்தால் ஸ்ரமஹரமாய் இருக்கை
மற்று ஒப்பாரை இல்லா ஆணிப் பொன்னே -முதலிலே ஸ்லாக்யமாய்-உபமான ராஹித்யத்வத்துக்கு-மாற்று அற்ற பொன் போலே இருக்கிறவனே –
அடியேன்-போக்யதையில் தோற்று அடியேன் -என்கிறார் –
அடியாவி -தலை மகள் வார்த்தை யானபோது -உனக்கு சேஷ பூதமான என்னுடைய ஆத்மா வஸ்து -என்கை –
ஆத்மா சமர்ப்பணம் பண்ணுகையும்  மிகையாம்படி இறே -இவனுக்கு அத்யந்த சேஷமாய் இருக்கிறபடி –
பிரமித்த போது இறே சமர்ப்பிக்கலாவது -சமர்ப்பித்த வநந்தர ஷணம்  -என்னத்தை
எவனுக்கு கொடுத்தேன் -என்று நினைக்க ஒண்ணாதபடி தன்னோடு  தான் தொற்று அற்று இறே-இருப்பது -அதவா
கிந்து சமர்ப்பயாமிதே –
உற்று எண்ணில் அதுவும் மற்று ஆங்கு அவன் தன்னது -என்னக் கடவது இறே –
ஆழ்வான்-திருக்கோட்டியூர் நம்பி பாடு நின்றும் வந்த அனந்தரத்தில்-பிள்ளைப் பிள்ளாய் -என்னுள்ளான் என்ன – வேண்டும் ஸத்தாநே -ஆழ்வார் -அடியேன் உள்ளான் -என்றபடி-கண்டாயே -என்று பணித்தார் –
பிள்ளைப் பிள்ளாய் -என்று ஆழ்வானைக் குறித்து நம்பி அருளிச் செய்தார் என்னவுமாம் -அன்றிக்கே ஆழ்வான் தம்முடைய சிஷ்யரான பிள்ளை பிள்ளையைக் குறித்து அருளிச்
செய்தார் -என்னவுமாம் –
அடியேன் அடி யாவி -பெண்பிள்ளை ஆவி என்னவுமாம் தாயார் வார்த்தையாக –
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: