திரு-விருத்தம்-84-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
இவள் மோஹித்த அநந்தரம் -அரத்தியாய் ஓர் இடத்தில் தரியாதே -பகவத் அலாபத்தாலே-அங்கே இங்கே தடுமாறி கூப்பிட்டு கொண்டு திரிகிறபடியை சொல்கிறது –
க்வசிதுத் பரமதேவகாத்க்வசித் விப்ரமதேபலாத் ச்வசின்மத்தஇவாபாதி காந்தான் வேஷணதத்பர –

தலைவி தலைவனைக் காண விரைதல் —

தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
ஐய நல்லார்கள் குழிய விழவினும் அங்கங்கெல்லாம்
கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்
மைய வண்ணா மணியே முத்தமே என் தன் மாணிக்கமே – – – 84-
பாசுரம் -84-தையல் நல்லோர்கள் குழாங்கள் குழிய-துறையடைவு-தலைவி தலைவனைக் காண  விரைதல்--மையார் கருங்கண்ணி -9–4-
காண்பானவாவுவன் நான்-காண்பான் அவாவுவன் நான்
 வியாக்யானம் –
தையல் நல்லார் இத்யாதி -தையல் நல்லார் உண்டு -ஸ்திரீ ரத்னங்கள் –அவர்கள் குழாம் உண்டு -திரள்-அத் திரள்கள் திரண்ட திரளினுள்ளும்     -பெண்கள் திரள்களைக் கண்டவாறே -திருக் குரவை-என்று இருப்பாராய் -ஆயிற்று இவர் –
ஐய நல்லார் இத்யாதி –-அறவோர் அரும் தவத்தோரையர்-என்று பண்டித வாசகங்கள் –

ஐய நல்லார் உண்டு -பண்டிதரில் நல்லாராய் இருக்குமவர்கள் -அவர்கள் குழிய விழவிலும் -தீர்க்க சத்ரங்கள் -மற்றையில் -அவற்றுக்காக திரள இருப்பர்கள் இறே -அவற்றிலும்-ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ருஷிகள் திரள் போலே இருக்கிறவற்றிலும் -சமா ஜேஷூ மஹத்  ஸூச -என்னுமா போலே –

அங்கு அங்கு எல்லாம் -அவற்றோடு போலியான விடங்கள் எல்லாவற்றிலும் –
கைய இத்யாதி -திரு ஆழி இன்றிக்கே -மனிச்சேயான அவதாரத்தோடு-
அவற்றை மறைத்த அவதாரத்தோடு வாசி யற திவ்ய ஆயுதங்களோடு காண ஆசை பட்டாய்-இற்றே இருப்பது –  ஆசூர பிரக்ரதிகளுக்கு அன்றோ மறைத்தது -எனக்கு காணத் தட்டு என் என்று-இருப்பாராயிற்று -ஜாநாது மாவதாரம் தே கம்சோயம் திதி ஜன்மஜ -சத்ப்ரக்ருதி யானவன் -தேனைவ ரூபேண சதுர்புஜேன-என்றான் இறே –
அவாவுவன் நான் -ஆசைக்கு கண் உண்டோ -காண வேணும் -என்று ஆசைப்படும்
இத்தனை போக்கி -காண அரிது -என்று அறிய மாட்டேன் -காண அரிதாகில்
காண வேணும் என்று ஆசையைப் பிறப்பித்து உம்மை சிஷித்து விட்டாரா என்ன –
மைய வண்ணா -இத்யாதி -விஷய தோஷம் இறே இதுக்கு அடி என்கிறார் –
தீர்க்க சத்திரம் -என்றது யாகாதிகளை-நல் சரக்கை இழந்து ஆறி இருப்பார்களோ –
மைய வண்ணா -கண்டார் கண்ணிலே அஞ்சனம் எளிதினால் போல் குளிர்ந்து இருக்கும்படி –
மணியே -அப்படியே இருக்கச் செய்தே -முடிந்து ஆளலாய் இருக்கிறபடி –
முத்தமே –உடம்பிலே ஏறிட்டுக் கொண்டால் விடாய் எல்லாம் தீரும்படி இருக்கை –
என் தான் மாணிக்கமே -பெரு விலையனாய் இருக்கை –
இவ் வாழ்வாருக்கு மோஹம் ஆவது  -எத்திறம் -என்ற இடத்தில் சௌலப்யம் குணம் மாத்ரம் அனுபவம்-முகில் வண்ணன் விஷயத்தில் அழுந்தின அனுபவம் மாத்ரமே -அது இருந்த இடத்தில் இருக்க ஒட்டாதே-கிளப்பி விட -தேடிக் கூப்பிடுகிறார் –
அபரிச்சின்ன வைபாவனாய் இருக்கச் செய்தேயும் -ஆஸ்ரிதர்க்கு அத்யந்த சுலபனாய்
கண்டார் கண் குளிரும்படி -சம்சார தாபம் ஆறும்படி -அஞ்சன கிரி போன திரு மேனி உடைய-சௌலப்யம் அனுபவித்து -அவனை காண வேணும் த்வரையில் அருளிச் செய்கிறார் –
சௌலப்யம் அழகையும் காட்டி -கோபிமார் திரளில் ராசக் கிரீடை பண்ணின படியையும்
தண்ட காரண்யத்தில்  ருஷிகள் கோஷ்டியில் வீற்று இருந்த படியையும் -சகல திவ்ய ஆயுத சோபை உடன் -காண ஆசை கொண்டு அருளுகிறார் .
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: