திரு-விருத்தம்-83-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
உரு வெளிப்பாட்டாவே நோவு படா நிற்கச் செய்தே -அதுக்கு மேலே -முற்றத்திலே ஒரு பனையாய் –
அப்பனையில் தொங்கிற்று ஒரு அன்றில் -தான் வாய் அலகை பேடையோடு கோத்து கொண்டு இருக்கிற
இத்தை நெகிழ்ந்தவாறே  கூப்பிட கடவதாய் -அதனுடைய ஆர்த்த த்வனியில் இவள் மோஹித்து கிடக்க –
இத்தைக் கண்டு -இதன் த்வனி இருக்கிற படி இது -இவளுடைய ஆற்றாமை இருந்தபடி இது –
இவளுடைய மார்த்வம் இருக்கிறபடி இது -இவை எல்லாம் இருந்தபடியாலே இவள் உளளாக அபிமதங்கை
புகுந்து -இவள் ப்ரீதையாய் இருக்க காண மாட்டோம் ஆகாதே -என்று இங்கனே தாயார் உடைய வார்த்தையாய்
இருக்கிறது -பட்டர் -இவ்விடத்தை அருளிச் செய்யா நிற்க -நஞ்சீயர் -ஸ்ரீ ராமாயணத்தில் இவ்விடத்துக்கு  போலியாக
சொல்லலாம் இடம் உண்டோ -என்று கேட்க -இளைய பெருமாள் காட்டிலே கொண்டு போய் பிராட்டியை
விட்டுப் போந்த அநந்தரம்-அவளுடைய ஆர்த்த த்வனி கேட்ட ஸ்ரீ வால்மீகி பகவானுக்கு திருத் தாயார் படி
உண்டாக சொல்லலாம் -என்று அருளிச் செய்தார் –

அன்றிலின் குரலுக்கு ஆற்றாத தலைவியின் தளர்ச்சி கண்டு தோழி இரங்கல் —

விளரிக் குரலன்றில் மென்பெடைமேகின்ற முன்றிற் பெண்ணை
முளரிக் குரம்பையிதுயிதுவாக முகில் வண்ணன் பேர்
கிளறிக் கிளறிப் பிதற்றும் மெல்லாவியும் நைவும் எல்லாம்
தளரிற் கொலோ அறியேன் உய்யலாவது  இத் தையலுக்கே – – -83 –
பாசுரம் -83-விளரிக் குரல் அன்றில் மென் பெடை-துறையடைவு-அன்றிலின்  குரலுக்கு தலைவி தளர்வதைக் கண்டு தோழி இரங்குதல் –உண்ணிலாய ஐவரால் -7–1-
 முன்றில்  பெண்ணை -முற்றத்தில் உண்டான பனை மரம்
முளரி குரும்பை -தாமரை பூவினால் செய்யப்பட கூடு
வியாக்யானம் –

விளரிக் குரல் அன்றில்விளரி என்று உச்சமான த்வனிக்கு பெயர் – உயர்ந்த த்வனியை  உடைத்தாம் படி கார்யப்பாட்டால் கூப்பிடுகிற அன்றிலினுடைய

மென்பெடை-கலக்கும் போதும் பூ தொடுமா போலே தீண்டும்படி யாயிற்று மார்த்வம் –
இம் மார்த்வத்திலே விரஹமுமானால் பாடாற்றப் போகாது இறே
மேகின்ற -மேவா நிற்கிற -நித்ய சம்ச்லேஷமாய் செல்லா நிற்கும் இறே –
அநபாயினிக்கு ஸ்மாரகமாய் இருக்கிறபடி –
முன்றில் பெண்ணை -முன்றில் என்று முற்றத்துக்கும் வாசலுக்கும் பெயர்
முற்றதுப்பனை கடவாமோ என்று இவ்விடத்துக்கு நிர்வஹியா நிற்கச் செய்தே
வங்கிபுரத்து நம்பியை சிலர் கேட்க –  அதுவோ இவள் கார்யம்  தளிரும் முறியுமாய் செல்லுகிறது-என்று பணித்தாராம் -முன்றில் தனி நின்ற பெண்ணை மேல் கிடந்தீர் கின்ற வன்றிலின் கூட்டை-பிரிக்க கிற்பவர் யார் கொலோ -பெரிய திரு மொழி – 11- 2- 1- -அவனை கொடு வருவர் யாரோ -என்கிறபடி இறே –
அல்லது பிரிப்பன பிரித்து கூட்டுவன கூடி  திரிகிறாள் அன்றே  இவள்
முளரிக் குரம்பை -இதனுடைய சௌகுமார்யத்துக்கு ஈடாக -தாமரை இலைகளையும் பூக்களையும்-கொடு வந்து -கூடாக பண்ணிவிக்கும் இறே -அன்றிக்கே -முளரி -என்று முள்ளாய் -முள்ளாலே செய்த-கூடு என்னவுமாம் –
இது இதுவாக -இக் கூடு கூடாக -இது இப்படி குடில் கட்டி கொண்டு போந்து -பாதகமாய் அற்ற பின்பு-மென்பெடையோடே மேவா நின்றுள்ள விளரிகுரல் அன்றிலினுடைய முன்றில் பெண்ணை-முளரிக் குரம்பை இது இதுவாக –
முகில் வண்ணன் பேர் கிளறிக் கிளறிப் பிதற்றும் -முகில் வண்ணன் திரு நாமத்தை கிளர்ந்து கிளர்ந்து-ஜல்ப்பிக்கிற ஜல்பமும்
மெல்லாவியும் -சிறுது போதும் இஜ் ஜல்பத்துடன் தான் செல்லுகிறதோ என்று இருக்க -அதுவும் இல்லாதபடி-ஹிருதயத்தில் உண்டான தளர்த்தியும் –
நைவும் -அதுக்கு மேலே இவளுடைய சைதில்யமும்
எல்லாம் -இவை எல்லாம் மிகுந்தபடியால் –
தளர்வு இத்யாதி- இத்தைய லுக்கு  உய்யலாவது -இப் பெண் பிள்ளைக்கு ஜீவிக்கலாவது -தளரிற் கொலோ -இஜ் ஜல்பம் இன்றிக்கே ஒழியும்படி வரும் தளர்த்தி யாவது -முடிகை இறே -முடியிலாகாதே -இவளுக்கு   பிழைக்கல்  ஆவது -அறிகிறிலேன்-
ஸ்வா பதேசம் –
இத்தால் ஆழ்வார் படியை கண்டவர்களுக்கு யாதநா சரீரம் போலே  க்லேசமே யாகாதே –
இவர்க்கு உள்ளது -இச் சரீரத்தோடு பகவல் லாபம் உண்டாய் இவர் தரித்து இருக்க காண மாட்டோம் ஆகாதே-இஸ் சரீர விச்லேஷத்துக்கு பின்பு ஆகாதே இவர்க்கு ஆஸ்வாசம் உள்ளது -என்று தோற்ற-இருக்கிறபடியை சொல்கிறது –

விளரிக் குரல் -இது வேதார்த்த அர்த்தம் என்பதால் ஸ்ரீ இராமாயண போலி கேட்டாராம் ஜீயர் -தூ நிலா முற்றத்தில் ஒரு பனை இருக்க பிரசக்தி உண்டோ -என்பதற்கு ஐதிகம் –தளிரும் முறிவும் -நாயகன் அடிக்கடி வருகையும் முற்றத்தில் படுக்கையும் நிலவுமாய் போகம் நடக்கிறதோ-இரவும் பகலும் பாதகமாய் செல்ல -அனைவரும் கிலேசித்து இருக்க — பனையை வெட்டி முற்றத்தை-அழகாய் பேணுவாரும் உண்டோ-

————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: