திரு-விருத்தம்-82-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
ஜீயர் –இப்பாட்டு சொல்ல வநபிமதமாய் இருக்கும் -என்று அருளிச் செய்வர் –
உரு வெளிப்பாட்டிலே சர்வேஸ்வரன் உடைய திருக் கண்கள் பாதகமாம் படியை
சொல்லுகிறது இது இறே -இவருடைய ஆற்றாமை உண்டாகில் இறே இப்பாசுரம்
சொன்னால் நமக்கு சாத்மிப்பது -தாயாய் அளிக்கின்ற தண் தாமரை கண்ணன் அன்றோ –

உரு வெளிப்பாடு கண்ட தலைவி தலைவன் கண் அழகுக்கு இரங்கல் —

எரி கொள் செந்நாயிறு இரண்டுடனே உதயமலைவாய்
விரிகின்ற வண்ணத்த எம்பெருமான் கண்கள் மீண்டவற்றுள்
எரி கொள் செந்தீ வீழ் அசுரரைப் போலே    எம்போலியர்க்கும்
விரிவ சொல்லீர் இதுவோ வையமுற்றும் விளரியதே – – – 82- –
பாசுரம் -82–எரி கொள் செந்நாயிரு இரண்டுடனே-துறையடைவு–தலைவி  தலைவனின்  கண் அழகைப் பாராட்டி இரங்குதல் —உருகுமால் நெஞ்சு -9–6-
 எம்போலியர்க்கும்-பகவத் விஷயத்தில் பிரேம உக்தரான எம் போல்வாருக்கும்
 வியாக்யானம் –
எரி இத்யாதி -நெருப்பை உமிழா நிற்பனவாய் -சிவந்து இருந்துள்ள நாயிறு இரண்டு உதய கிரியிலே
உடனே விரிக்கின்ற -எரி போலே உதய காலத்திலே -பரம்புகிற அவற்றின் படியை உடைத்தாய்
இரா நின்றன சர்வேஸ்வரன் உடைய இரண்டு திருக் கண்கள் –
மீண்டு இத்யாதி -ஆதித்யன் உதிக்கும் அளவிலே -மந்தேகர் என்பார்  -சில அசுரர்கள்
ஆதித்ய ரதத்தை பற்றிக் கொண்டு போக ஒட்டாதே நிரோதிப்பார்களாய் -பிராமணர்
நீர் பொகடுகிற இத்தாலே -ஆதித்யனுக்கு ஒரு தேஜஸ் பிறந்து -அதிலே அவர்கள் புக்கு முடிந்து-போகையாய் இருப்பது உண்டு இறே -அப்படியே புறம்பு போக்கற்று திரியட்டும்
அவ் ஆதித்யர்களுடைய அந்த நெருப்பிலே விழுந்து முடிந்து போகிற அசுரர்களைப் போலே
எம்போலியர்க்கும் விரிவ –என்னைப் போலே ஆசைப் பட்டு நோவு படுகிற அவர்களுக்கு-எல்லாம் அசுரர்களை போலே இவை பாதகமாய் கொண்டு பிரகாசமாகா நின்றது –
சொல்லீர் இதுவோ வையமுற்றும் விளரியதே –லோகமாக கை எடுத்து கூப்பிடுகிற வதுக்குமடி இதுவோ சொல்லி கோள்-இவை பாதகமாயோ லோகமாக கூப்பிடுகிறது என்கிறாள் -வாயும் திரை உகளும் படியே -அன்றிக்கே -மீண்டவற்று –
எரி கொள் செந்தீ வீழ் அசுரரைப் போலே    எம்போலியர்க்கும்-அவ் ஆதித்யர்கள் உடைய
தேஜஸ்சிலே விழுந்து முடிந்து போகிற ஆசூரப் பிரக்ருதிகளைப் போலே ஆயிற்று என்
 போல்வார்களுக்கும்  இக்கண்கள் பாதகமாம் ஆகிறபடி –
விரிவ சொல்லீர் -இவ்வளவில் எனக்கு ஒரு புகலிடம் சொல்லீர் –
விரிகையாவது -பரம்புகையாய் -அத்தாலே போய் புகுககையாய் -புகலிடம் என்று வருகிறது –
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: