திரு-விருத்தம்-81-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
இருளும் போய் முடிகி இவளும் மோஹித்து கிடக்க -இவள் தசையையும் காணா நிற்கச்
செய்தே பந்து வர்க்கத்தில் உள்ளார் -க்ரமத்தில் பரிஹரிக்கிறோம் -என்று ஆறி இருக்க
இத்தைக் கண்டு -இவளுடைய அவசாதம் இருந்த படி இது -ஸ்லாக்யதை இருந்தபடி இது -இப்படி இருக்க இவர்கள் ஆறி இருக்கைக்கு இவர்கள் நேர் கொடு நேரே இவளைப் பெற்றவர்கள்-அன்றோ -என்று இங்கனே ஒரு மூதறிவாட்டி சொல்லுகிறாளாய்
இருக்கிறது –

வெறி விலக்குவிக்க நினைந்த தோழி இரங்கல் —

உறுகின்ற கன்மங்கள்  மேலன ஒர்ப்பிலராய் இவளைப்
பெறுகின்ற தாயர்  மெய்ந்நொந்து  பெறார் கொல் துழாய் குழல் வாய்த்
துறு கின்றிலர் தொல்லை வேங்கடமாட்ட வுஞ் சூழ் கின்றிலர்
இறுகின்ற தாலிவாளகம் மெல்லாவி எரி கொள்ளவே – – -81 –
பாசுரம் -81–உருகின்ற கன்மங்கள் மேலன-துறையடைவு-வெறி விலக்குத் தொடங்கிய தோழி இரங்குதல் –வீடுமின் முற்றவும் -1-2-
 வியாக்யானம் –
உறு கின்ற இத்யாதி -இவர்கள் நிரூபித்து செய்ய கடவது ஒரு கார்யம்  இல்லையோ -என்கிறாள் –
உறுகின்ற கன்மங்கள்  மேலன ஒர்ப்பிலராய்-மேலே வரக் கடவனவாய் -அவை தான் வர்த்தமானம் போலே-இருக்க வந்து கிட்டி நிற்கிற கார்யங்களை ஒன்றும் ஓரக் கடவார் இன்றிக்கே –
 இவளைப் பெறுகின்ற தாயர்  -இவளைப் பெற்றவர்களுக்கு எப்போதும் ஒக்க வயிறு எரிந்தபடி-இருக்க வேண்டாவோ -ஒரு லாபாலாபங்கள்  வேணுமோ -இவள் தானாக அமையாதோ –
மெய்ந்நொந்து  பெறார் கொல் -இவளைப் பெற்றவர்கள் உடம்பு நொந்து அன்றோ பெற்றது -வளர்த்துக் கொண்ட இத்தனையோ –
 என்தான் இவள் இப்படி சொல்லுக்கைக்கு இவர்கள் செய்தது என் என்ன –
துழாய் குழல் வாய்த் துறு கின்றிலர் -மண்ணாயினும் கொண்டு வீசுமினே  -என்ற அளவும் போய் –
அது கடக்க நின்று வீசுமளவும் போராதே -அது தன்னையே கொண்டு வந்து குழலிலே -நிரம்ப-துறுக்க வேண்டும்படி யாயிற்று தசை முடிகின படி –
தொல்லை இத்யாதி -இக்குடிக்கு பழையதாக செய்து போரும் பரிஹாரத்தையும் செய்கிறிலர்கள்
வேங்கடமாட்டவும்--கல்லும் காடுமாய் இருக்கிறது அடைய ஒரு தடாகம் போலே காணும் இவளுக்கு-தோற்றுகிறது -ஏஷ பிரம பிரவிஷ்டோச்மி -போலே
 சூழ் கின்றிலர் -அது தான் செய்யவும் வேண்டா -உபக்ரமிப்பதும் செய்கிறிலர்கள் -மந்த்ரிப்பதும் செய்கிறிலர்கள்-பகவத் விஷயம் ஸ்பர்ச வேதி யாகையாலே -அடி இட்டபோதே தொடங்கி பலிக்கும் இறே

நோவையும் அறிந்து -பரிஹாரம் இன்னது என்று அறிந்து -செய்ய வேண்டாவோ என்ன -இறு கின்றது  இவளதாகம் -இத்தனை க்ரமம் பொறுக்குமோ -இவள் பிரகிருதி -இற்றிற்று அழிந்து போகா நின்றது

மெல்லாவி எரி கொள்ளவே -மிருதுவான ஆத்மா விரக அக்னி கொளுத்தி வேவா நிற்க க்ரமம்-பார்த்து இருக்கக் கடவதோ –
ஸ்வா பதேசம்
இப்பாட்டால் தரிப்பார்க்கும் ரஷகனுக்கும் இடமறும்படி இவர் பகவத் விஷயத்திலே
அவஹாகித்த படியாய் சொல்கிறது –
உறுகின்ற இவளை -என்கையால் ஸ்லாக்கியதை
தொல்லை -திருவேங்கடமுடையான் திருவடி சேர்க்கும் பிரபத்தி மார்க்கம்
இவள் அருமை அறியாதவர்களாய் இருக்கிறார்களே –
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: