திரு-விருத்தம்-80-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
ஆதித்யனும் போய் அஸ்தமித்து -இருளும் வந்து பாதகமாக நோவு படுகிறாள்
ஒரு பிராட்டி வார்த்தையாய் இருக்கிறது –

பிரிவாற்றாத தலைவி மாலைப் பொழுது கண்டு இரங்கல்-

சீரரசாண்டு  தன் செங்கோல் சில நாள் செலீ இ க்கழிந்த
பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு பாரளந்த
பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த
ஓரரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே    – -80 – –
பாசுரம் –80-சீர் அரசு ஆண்டு தன் செங்கோல் சில நாள் -துறையடைவு-பிரிவு ஆற்றாத தலைவி மாலைப் பொழுதுக்கு  இரங்குதல் –முடிச் சோதியாய் -3–1-
 வியாக்யானம் –
சீரரசாண்டு -குணமாக ஆண்டு -தர்ம புத்ரம் ராஜ்ஜியம் பண்ணாவிடில் நாங்களும் இங்கு இரோம்-
என்று அக்னி ஹோத்ரங்களையும் கொண்டு அவன் இருந்த காடேறப் புறப்பட்டு போனார்கள் இறே -அப்படி சீரியதாக ராஜ்யத்தை நடத்தி –
தன் செங்கோல் சில நாள் செலீ இ–இது தான் அல்ப காலத்தோடு பர்யவசிக்கை அன்றியே -தன்னுடைய-ஆஜ்ஜையை நெடு நாள் நடத்தி
கழிந்த  பாரர சொத்து -இப்படி நெடுநாள் லோகத்தை நடத்திப் போந்த மாந்தாத்ரு பிரமுகரான-ராஜாக்களைப் போலே-பார் அரசு ஒத்து-மறைந்தது நாயிறு-ஆதித்ய சன்னதியிலே -காயக சன்னதியில் போல ஆஸ்வசித்து இருக்க கடவதாய்-
ராத்ரியில் வந்தால் கரணங்களுக்கு எல்லாம்   பிரிந்த விஷயம் ஒன்றுமே இலக்காகையாலே –
ராத்திரி என்றால் வெருவ கடவதாய் இறே இருப்பது -பகலில் இந்திரியங்கள் ஸ்வ  விஷயங்களிலே-பாவிபாய்கையாலே வியசனம் அரையாறு பட்டு இருக்கும் இறே –
மறைந்தது -ஆதித்யன் எல்லாருக்கும் கண்ணாய்  இருக்க ஆகாரம் கிடக்கச் செய்தே
விசேஷித்து இவளுக்கு கண்ணாய் இருக்கையாலே -நாயகனை போக விட்டு வழி பார்த்து -நின்றாப் போலே -கண் மறைய பார்த்து நின்றால் போலே காணும் -கண்ணாஞ்சுழலை இட்டு பார்த்தாள் –
பார் அளந்த பேர் அரசே -இருளின் கையில் அகப்பட்ட ஆதித்யனை மீட்கும் போது -மகா பலி-கையிலே அகப்பட்ட பூமியை மீட்டவனே வேணும் போலே காணும் –
அளந்த -பூமிப் பரப்படைய அளந்த திருவடிகளைக் கொண்டு இவ்விருளையும் அளந்தால் ஆகாதோ -இருளார் வினை கெட இறே செங்கோல் நடத்துகிறது –
பேரரசே -எளிய செயல்கள் செய்யுமவன் அல்லனே -செய்யுமவை அடங்க பெருத்தாயிற்று இருப்பது –
எம் விசும்பரசே -பகவத் விஷயத்தில் ஜ்ஞானம் பிறந்த பின் சம்சாரத்தில் காட்டில்
பரம பதம் அணித்தாய் காணும் இவருக்கு இருப்பது –பொன் உலகு ஆளீரோ -என்று முதல்-அதுவே இறே கொடுத்தது –
எம்மை நீத்து வஞ்சித்து ஓரரசே -உபய விபூதிக்கும் தனித் தனியே கடவனோபாதி-என்னை அகற்றி-முடிக்கைக்கும் தனி முடி சூடி இருக்கிறவனே -என்று பிள்ளான் –
என்னை அகற்றி -அது செய்கிற போது பிரியேன்  என்று வைத்து பிரித்து -இஸ் ஸ்வபாவதுக்கு புறம்பு-என்னோடு ஒப்பார் யார் -என்று இருக்கிறவன் ஆயிற்று –என்னால் அல்லது செல்லாதவரை பொகட-வல்லார் யார் – என்னோபாதி  இல்லையே -என்று இதுக்கும் தனி முடி சூடி இருக்கிறவன் ஆயிற்று-என்று பட்டர்
அருளாய் -அருளுக்கு விஷயமறக் கிடாய் புகுகிறது –
சத்தை போனால் அருளுக்கு விஷயம் இல்லையாம் இறே –
பரம பதத்தில் உள்ளார் நித்ய அனுபவத்தாலே நிரபேஷராய் இருப்பார்கள் –
சம்சாரிகள் அன்ன பாநாதிகளாலே தரித்து இருப்பார்கள்
இங்கே இருந்தே அவ்விபூதியில் உள்ளார் படியாய் இருப்பார்க்கு அருளல் ஆகாதோ –
குண அனுபவத்தால் அங்குள்ளார் அநந்ய பரராய் இருப்பார்கள்
இங்குள்ளார் சப்தாதி விஷயங்களிலே அநந்ய பரராய் இருப்பார்கள் –
குண ஜ்ஞானமே யாய் அனுபவம் இன்றிக்கே இருக்கிற இவர் பக்கலிலே இறே அவனுக்கு-தான் அருளின் படி காட்டலாவது -அருள வேண்டும்படி இப்போது இங்கு வந்தது என் என்ன –
 இருளாய் வந்து உறுகின்றதே-

 இருளாய் வந்து கோமுக வ்யாக்ரமாகை தவிர்ந்து -வ்யாக்ரமாயே வரா நின்றது -ஊழி என்கிற பேராய் தலைக் காட்டுகை தவிர்ந்து -இருளாயே பாதகமாய் நின்றது -மத்யச்தர்க்கு இறே ஊழி பாதகமாவது –பிரிந்தார்க்கு இராத்திரி இறே பாதகமாவது -ஜகதுப சம்ஹாரத்துக்கு ஹேதுவாகையாலே நாட்டார்க்கு  இறே ஊழி பாதகமாவது –உறுகின்றதே   -இருள் வந்து ஸ்பர்சிக்க புகா நின்றது -அதுக்கு முன்னே -இருளன்ன மா மேனியை-கொண்டு வந்து இடை இட்டுக்கலக்க வேணும் என்கிறாள் –

ஸ்வாபதேசம் –
இத்தால் சம்சாரத்தில் இருப்பு அஞ்ஞானம் வந்து மேலிடும்படியாய்
இருக்கையாலே கடுக இவ்விருப்பை கழித்து தர வேணும் என்று   அருளிச் செய்கிறார் –
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: