திரு-விருத்தம்-79-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
பாவியேன் -பகவத் விஷயம் என்றால் தளராதே நின்று அனுபவிக்குமவர்களும்
சிலரே -என்கிறார் –

தலைவனை பிரியாத மகளிரது சிறப்பைக் கூறித் தலைவி இரங்கல் –

வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும்  நாதனை ஞாலந்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும்   சீரியரே – – -79 –
பாசுரம் –79-வேதனை வெண் பூரி நூலனை  -துறையடைவு-தலைவனைப் பிரியாத மகளிரது சிறப்பைக் கூறித் தலைவி இரங்குதல் –மெய்ம்மாம் பூம் பொழில் –3 –5–
 வியாக்யானம் –
வேதனை -புக்க இடமும் புறப்பட்ட இடமும் தாம் பட்டது படும் வேதத்தை நினைக்கிறார் –
வெண் புரி நூலனை-மைவரை போல் பொலியுமுரு -என்று அவ்வடிவை இறே வேதங்களும் பிரதிபாதிக்கிறது –
அவ்வடிவுக்கு பரபாகமான திரு யக்ஜ்ஜோபவீதத்தை உடையவனே
விண்ணோர் பரவ நின்ற நாதனை -நித்ய சூரிகளும் அடைவு கெட்டு கிடந்தது கூப்பிடுவது-அவ்வடிவை இறே –
ஞாலம் விழுங்கும்  நாதனை-குறைவற்றார் சிலர் கொண்டாட இருந்தோம் என்று
மேன்மை பார்த்து இராதே -குறைவாளரான சம்சாரிகளை பிரளயம் நலியாதபடி வயிற்றிலே-எடுத்து வையா நின்றால் -நீ இது  செய்யக் கடவ இல்லை -என்று சிலரால் சொல்ல ஒண்ணாது-இருக்கிறவனை –
ஞாலம் இத்யாதி -புழுக் குறித்த தெழுத் தாமா  போலே -ஒருகால் ரஷித்து விடுகை அன்றிக்கே –
ஜகத்தை அடைய வளைந்து கொண்ட திருவடிகளை உடையவனை –

விண்ணுளாரிலும் சீரியரே -நிரந்தர பகவத் அனுபவமே யாத்ரை யான -அத்தேசத்தில் அன்றியிலே –

அப்படிக்கு விரோதியான சம்சாரத்திலே இருந்தே -அதுவே யாத்ரையாய் இருக்கையாலே -இவர்கள் நித்ய சூரிகளிலும் சீரியர்
அநாதனை -ஆத்மேஸ்வரம் -என்னுமா போலே தனக்கு ஒரு நியந்தா இல்லாதவன் –
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: