திரு-விருத்தம்-78-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
இதில் கிருஷ்ண அவதாரத்தில் பரிமாற்றத்தை பெற வேண்டும் என்று ஆசைப் பட்டாள்
ஒரு பிராட்டி வார்த்தையாய் இருக்கிறது

பிரிவாற்றாத தலைவி தலைவன் ஆற்றலைக் கருதி நெஞ்சு அழிந்து இரங்கல் —

நலியும் நரகனை வீட்டிற்றும்  வாணனை திண் தோள் துணித்த
வலியும் பெருமையும் யான் சொல்லும் நீர்த்தல்ல  மைவரை போல்
பொலியும் உருவில் பிரானார் புனை பூம் துழாய் மலர்க்கே
மெலியும் மட நெஞ்சினார் தந்து போயின வேதனையே – – 78- –
பாசுரம் –78-நலியும் நரகனை வீட்டிற்றும் -துறையடைவு-பிரிவாற்றாத தலைவி தலைவன் ஆற்றலை எண்ணி நெஞ்சு அழிந்து இரங்கல் -துறையடைவு-இன்பம் பயக்க-7-10-
வியாக்யானம் –

நலியும் நரகனை -சர்வேஸ்வரன் பரிகிரகைக்கு யோக்யதைகளாய் இருக்குமவர்களை கொண்டு வந்து-சிறை செய்தான் இறே –நலியும் -அந் நலிவு  தம்மதாம் படி இருத்த படி –வீட்டிற்றும் -வீழ்த்ததும் முடித்ததும் –

வாணன் இத்யாதி -உஷையும் அநித்ருதனையும் சேர ஒட்டாதே சிறை வைத்த வாணனுடைய
திண் தோள் -தேவதாந்திர சமாஸ்ரயணம்  பண்ணி திண்ணிய தோள் உடையனாக நினைத்து இருந்தான் –
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் -ப்ரஹ்மத்தினுடைய ஆனந்தத்தை அறிந்தவன் –
நபிபேதி குதஸ் சன -என்றும் -ஏஷஹ்யே வாசந்த -இத்யாதி -இறே -அத்தால் வந்த தைரியத்தாலே
தான் புத்தி    பூர்வம் பண்ணினவற்றையும் மதியாது இருக்கும் இறே -அவன் திண்ணிய தோளை துணித்த வலியும்
பெருமையும் -என்னுதல்-வலியின் பெருமை என்னுதல் -மிடுக்கும் மென்மையும் —
அன்றிக்கே வலியினுடைய பெருமையும் –
யான் சொல்லும் நீர்த்தல்ல -நாம் இப்போது சொல்லும் அளவோ –
நீர்த்தல்ல -தன்மை உடைத்ததல்ல -ஸ்வபாவத்தை உடைத்ததல்ல –
அவனுடைய விரோதி நிரசன சீலத்தையும்    -ஆண் பிள்ளைத்தனத்தையும் -மேன்மையையும் –
நாம் இன்று இருந்து சொல்லும் அளவோ -அவன் வாராமையால் படுகிற நலிவால் வந்த குறை
அத்தலையில் இட ஒண்ணாத படி இறே அவன் ஸ்வரூபத்தை நிரூபித்தால் இருப்பது -ஆனால் பின்னை இதரராலே  வந்தது ஆகாதோ என்ன –
மைவரை -இத்யாதி -நமக்கு சாத்மிக்கும் விஷயம் சாத்மியாத விஷயம் என்று ஆராயாதே
ஆசைப்பட்ட நம் நெஞ்சு தந்து போன ஐஸ்வர்யம் இறே இது எல்லாம் என்கிறார் –
மை வரை போல் -அஞ்சன கிரி போலே யாயிற்று திருமேனி இருப்பது –
பொலியுமுரு -ஒரு த்ருஷ்டாந்தத்தை சொல்லிற்று என்ன -அவ்வளவாய் இராதே –
சர்வதா சத்ருசா வஸ்து இல்லாமையால்-உள்ளத்தில் உரு செய்த ஒன்றை போலியாக
சொல்லப் புக்கு -பின்னையும் அது தானும் போராதே இறே இருப்பது –
பிரானார் -பக்தாநாம் -என்று இறே இவர் படி –
புனை இத்யாதி -அவர் சாத்தின அழகிய திருத் துழாய் மலர்க்கே –
மெலியும் மட நெஞ்சினார் – சாத்மிக்கும் விஷயத்தில் ஆசைப்பட்டு கிடையா விட்டால் படும்-அதைப்பட்டு கிடையாது என்று இருந்தாலும் -பற்றிற்று விடாதே நிற்கிற நம் நெஞ்சு தந்து  போன-கிலேசம் இறே இது எல்லாம் –
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: