திரு-விருத்தம்-77-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை
-சந்த்யையில் நோவு படுகிறாள் ஒரு தலை மகள் வார்த்தையாய் இருக்கிறது –

தலைவி மாலைப் பொழுது கண்டு வருந்துதல் –

திங்களம் பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசு பட்ட
செங்களம் பற்றி நின்று எள்கு    புன்மாலை தென் பாலிலங்கை
வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா
நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே –  -77-
பாசுரம் -77–திங்கள் அம் பிள்ளை புலம்ப -துறையடைவு-மாலைப் பொழுதுக்கு ஆற்றாது தொலைவு  இரங்குதல்–தாள தாமரை -10-1-
 வியாக்யானம்
திங்களம் பிள்ளை – சந்தரன் ஆகிய அழகிய பிள்ளை -மகாதா தபஸா -என்கிறபடியே
வருந்திப் பெற்ற பிள்ளை இறே –புலம்ப -வாய் விட்டு கூப்பிட மாட்டாதே -கடலோசை யாதல் -அக்காலத்தில் பஷிகளுடைய ஆரவாரம் ஆதல் இறே யதாவது
தன் செங்கோல் இத்யாதி -தன்னுடைய ஆஜ்ஜா பிரதானனான ராஜாவானவன் -சந்த்யா காலத்துக்கு
ராஜாவான சூர்யன் –ராஜாவானவன் -பட்ட யுத்த பூமியை பற்றி நின்று ஈடுபடுகிற புல்லிய மாலை –
உதிர வெள்ளத்திலே சிவந்த யுத்த பூமி போலே இருக்கும்   இறே -அப்போதைக்கு ஒப்பு –
ராவணன் பட்ட களத்திலே மண்டோதரி கூப்பிட்டாப் போலேயும்
வாலி பட்ட களத்திலே தாரை அங்கத பெருமாளை யும் கொண்டு கூப்பிட்டாப் போலேயும் ஆயிற்று-இவ் ஆதித்யனை  இழந்த சந்த்யையும் அப் பிரதேசத்தை பற்றி நின்று ஈடுபடுகிற படி –
இத்தால் வாயும் திரை யுகிளில் படியே  -கண்டது அடங்க தம்மோடு சம துக்கிகளாய் தோற்றுகிறபடி -பகல் கண்டேன் -என்கிற ஆதித்யனை இழந்து இறே இவள் நோவு படுகிறது –
தென் பால் இத்யாதி -ஆர்யர்கள் இழந்த மிலேச்ச பூமியான தெற்குத் திக்கில் அறிவுடையார் நடை யாடாத
இலங்கையை வெவ்விய களமாம் படி -பண்ணி -இலங்கை ஒள் எரி மண்டி உண்ண -என்னக் கடவது இறே –
நம் விண்ணோர் பிரானார் -ராவண வத அனந்தரமாக -பவான் நாராயணோ தேவ -என்று ப்ரஹ்மாதிகள்-ஸ்துதிக்கும் படி நின்ற உபகாரகர் ஆனவர் –
துழாய் துணையா -அவர் தோளில் மாலையைப் பெற வேணும்-என்ற ஆசைப்பட்ட இதுவே பரிகரமாக கொண்டு –நங்களை இத்யாதி –தன் இழவுக்கு கூப்பிடுகை அன்றிக்கே –
நம்மை நலிக்கைக்கு கூப்பிடுகிறதாய் இருந்தது இறே –நங்களை மாமை கொள்வான் –நிறம் கொள்வாருக்கு
நிறம் தான் வேண்டாவோ -தன் இழவுக்கு கூப்பீடும் கிடக்கச் செய்தே  -பண்டே குறை பட்டு நொந்து
இருக்கிற நம்மை நலிக்கைக்கு பாரிக்கிற பாரிப்பாய் இருந்ததீ –
ஸ்வா பதேசம்
-கீழ் திரு உலகு அளந்து அருளின போது இட்ட மாலையை பெற வேணும் என்று
ஆசைப் பட்டு பெறாமையாலே நோவு பட்ட படி சொல்லிற்று -இதில் ராவண வத அநந்தரம்-இட்ட வெற்றி மாலையை பெற வேணும் என்று ஆசைப் பட்டு வந்து கிடையாமையாலே-நோவு பட்ட படி சொல்லுகிறது –
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: