திரு-விருத்தம்-76-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
சந்த்ரோதயத்தில் நோவு படுகிறாள் ஒரு பிராட்டி தன் நெஞ்சைக் குறித்து -சந்த்ரனுக்கு இங்கனே
 எளிய செயல்கள் செய்கை ஸ்வ பாவம் காண்-நீ இதுக்கு சோகியாதே கொள் -என்று
ஆஸ்வசிப்பிக்கிறாள் –

மாலை பெறாது வருந்தும் தலைவி மதிக்கு வருந்தி நெஞ்சோடு கூறுதல் —

இடம் போய் விரிந்து இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய்
வடம் போதினையும் மட நெஞ்சமே நங்கள் வெள் வளைக்கே
விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின்
தடம் போதொடுங்க மெல்லாம் பலலர்விக்கும் வெண் திங்களே – -76 – –
பாசுரம் -76 – இடம் போய் விரிந்து இவ்வுலகு அளந்தான் -துறையடைவு-தலைவனது மாலை பெறாது வருந்தும் தலைவி சந்த்ரனைக் கண்டு வருந்துதல் —ஓராயிரமாய் -9 -3-
 வியாக்யானம் –
இடம் போய் விரிந்து-பள்ளம் உள்ள இடம் எங்கும் வெள்ளம் பரக்குமா போலே -அவகாசம் உள்ள
இடம் எங்கும் போய் வளர்ந்து -இந்த லோகத்தை அளந்து கொண்டவனுடைய –எழிலார் தண் துழாய்
உண்டு –இதுக்கு எல்லாமாக முதலியாராக  இட்ட மாலை -அவன் திரு மேனியிலே ஸ்பர்சத்தாலே
அழகியதாய் குளிர்ந்து இருந்துள்ள திருத் துழாய் மாலையிலே செவ்வியைப் பெற வேணும் என்று
ஆசைப்பட்டு பெறாமையால் தளரா நிற்பதாய் -அதன் அருமை -சொன்னால் கேளாதே -பற்றினத்தை விடாதே –
மட நெஞ்சமே-கிடக்கிற நெஞ்சே –
வடம் என்று மாலையாய் போது என்று புஷ்பமாய் -இத்தாலே செவ்வியை சொல்லிஅதற்க்கு ஆசைப் படுகிறாள் என்றது ஆயத்து –
நங்கள் இத்யாதி -நம்முடைய சங்கு வளையின் மேலே விஷம் போலே பரக்கும் இது ஒரு விஸ்மயமோ –
வெள் வளைக்கே -தம்தாமுக்கு பிராப்தியாய் உள்ள இடங்களிலே நலிகை முறை இறே –
தானும் வெண் திங்களாய் -இதுவும் வெள் வளை யாகையாலே -நிறத்திலே சாம்யம் கொண்டு -நலியலாம் இறே –
வியன் தாமரை இத்யாதி -வாசி அறியாதார் என் செய்யார்கள் -விஸ்மயநீயமான தாமரையினுடைய
பெருத்த பூவானது ஒடுங்கவும் -ஷூத்ரமுமாய் புல்லிதமுமான ஆம்பல் அலரும்படியாகவும்
பண்ணுமதான வெண் திங்கள் -நங்கள் வெள் வளைக்கே விடம் போலே விரிதவிது வியப்பே –
ஸ்வா பதேசம்
இத்தால் -திரு உலகு அளந்து அருளின போது -சாத்தின அச் செவ்வி மாலையை இப்போது
பெற வேணும் என்று ஆசைப்பட்டு பெறாமையாலே அனுகூல பதார்த்தங்கள் அடைய
பாதகமாய் இருக்கிறபடியை சொல்லுகிறது –
முதலியாராக -ஸ்வாமி ஆகைக்காக-
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ..

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: