திரு-விருத்தம்-75-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
கலந்து இருக்கிற தலைமகன் கொண்டாடுகிற படியிலே ஒரு வகை யாதல் –
அன்றிக்கே இயற்கையிலே ஐயமாதல்  –
ஒரு நாள் சம்ச்லேஷித்து -விச்லேஷித்து -பின்னையும் வந்து சம்ச்லேஷித்த நாயகன்
நாயகி உடைய வைபவம் உபய விபூதியிலும் அடங்காது என்று கொண்டாடுகிறான்
என்னுதல் -அன்றிக்கே -யாத்ருசிகமாக பிரதமத்தில் சம்ச்லேஷித்து பரிச்சேதிக்க
மாட்டாதே சம்சயிக்கிறான் என்னுதல்-

மதி யுடம்படுக்கலுற்ற தலைவன் தலைவிப் பற்றி தோழியரை
வினாதல் —

உலாகின்ற கெண்டை  யொளியம்பு எம்மாவியை யூடுருவக்
குலாகின்ற வெஞ்சிலைவாள்   முகத்தீர் குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரி யம்பள்ளி யம்மான் அடியார்
நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே – -75 – –
பாசுரம் -75-உலாகின்ற கெண்டை ஒளி யம்பு -துறையடைவு-தலைவன் தலையின் வூரைப் பற்றி விசாரித்தல் –சன்மம் பல பல -3 -10 –
 வியாக்யானம் –
உலாகின்ற கெண்டை -உலாகின்ற கெண்டை போல் ஆயிற்று மௌக்த்யம் இருக்கிறபடி -ஒளி யம்பு -இவன் பார்த்த போது பாராதே -பாராத போதாகப் பார்க்கையாலே -வரவு தெரியாதபடி-காணா கோலாக வந்து தைக்கிற படி -ஒளிக்கிற அம்பு –ஒளி யம்பு -கண் கொண்டு தப்ப ஒண்ணாது இருக்கிறபடி –
எம்மாவியை ஊடுருவ -இது தான் புறம்பு ஒருவர்மேல் தையாதே -நம் மேல் தைப்பதுமாய் இருந்தது -அது தன்னிலும் தோல் புரையே போமது அன்றிக்கே -பிராணனிலே தைப்பதுமாய் இருந்தது -அது தன்னிலும் -தோற்றம்பு அன்றிக்கே -மறுபாடுருவத்தை தைப்பதுமாய் இரா நின்றது –
குலாகின்ற வெஞ்சிலைவாள்   முகத்தீர் -எப்போதும் ஒக்க வளைந்த படியாய் இருப்பதாய் -ஒரு வியாபாரம் பண்ண வேண்டாதே -கண்ட காட்சியிலே இலக்கானார் அழியும் படியாய் -அல்லா வில் களோபாதி  – கையிலே இருக்கை அன்றிக்கே -முகத்திலே இருக்குமதான வில்-வர்த்தியா நின்றுள்ள முகத்தை உடையீர் -அன்றிக்கே -வாள் என்று ஒளியாய் -வெஞ்சிலையையும்-ஒளியையும் உடைத்தான முகத்தை உடையீர் என்னுதல் -முகம் பழகின வில்லுக்கு -காணும் -இவளை நலிகிறது –
குனிசங்கு இத்யாதி -வலம்புரி தொடக்கமான சங்குகளை இடறி –
புலாகின்ற -புலம்புகின்ற -சப்தியா நின்றுள்ள -திரைக் கிளர்த்தியை உடைய   -கடலாகிற அழகிய-படுக்கையை உடைய சர்வேஸ்வரனுடைய –
-புலாகின்ற -அச் சங்குகளின் உடைய ஒளியாலே எப்போதும் ஒக்க ப்ரபாத சமயமே யாய் இருக்கிற-கடல் என்னவுமாம் –
அம்மான் -இத்யாதி -நித்ய விபூதியிலே போது போக்கி ஓலக்கம் கொடுத்து இருக்கை அன்றிக்கே -தன் சந்நிதானத்தாலே கிளர்ந்து வருகிற திருப்பாற் கடலிலே புகுந்து குடில் கட்டி நோக்கிக் கிடப்பாரைப்-போலே -இஜ் ஜகத் ரஷண அர்த்தமாக வந்து கண் வளர்ந்து அருளுகிற -இந் நீர்மைக்கு-தோற்று இருக்கிற நித்ய சூரிகள் நித்ய வாசம் பண்ணுகிற ஸ்ரீ வைகுண்டாமோ-அன்றிக்கே -மானாவிச் சோலை போலே ஆவது அழிவதாய் -காதாசித்கமாக அவன் வந்து முகம் காட்டிப் போகும்-லீலா விபூதியோ -உங்களுடைய வாஸ ஸ்தானம் –வானவர் நாடு -என்கிறபடியே -அவர்கள்
இட்ட வழக்காய் இருக்கும் இறே அவ் விபூதி -அஹங்கார மமஹாரங்களாலே -ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யம்-நடை யாடாதபடி -பண்ணிக் கொண்டு இருப்பார்கள் இறே இங்கு உள்ளோர் –
பிள்ளை திரு நறையூர் அரையர் -அடியார் நிலாகின்ற வைகுந்தமோ -அன்றிக்கே அவனதான வையமோ -என்று பணிப்பாராம் –
தோற்றம்பு அன்றிக்கே =மேல் எழப் பட்டு போகை அன்றிக்கே-
ஸ்வாபதேசம்
-இத்தால் ஆழ்வார் இருக்கிற இருப்பைக் கண்டாருக்கு -உபய விபூதியிலும் இவர்
படிக்கு ஒப்பு இல்லை -என்று சொல்லும்படி இருக்கிற படியை சொல்லுகிறது -அங்கு உள்ளார் நிரந்தர-பகவத் அனுபவமே யாய் இருப்பார்கள் -இங்குள்ளார் இதர விஷயங்களின் உடைய வ்யாபாரங்களே யாய்-இருப்பார்கள் -இப்படி இவர் உபய வ்யாவ்ருத்தராய் இறே இருப்பது -நிரந்தரமான பகவத் அனுபவமும்
இன்றிக்கே -அன்ன பாநாதிகளால் தரித்து இருக்குமது அன்றிக்கே இறே இருக்கிறது -இரண்டு-விபூதியிலும் கைக்கு அடங்காதபடி யாய் இருக்கிற இருப்பைச் சொல்லிற்று -இங்கன் அன்றாகில்-இரண்டு இடத்திலும் அமையக் கூடாது இறே –
லீலா விபூதியை தானே ஆளுகின்றான் -சம்சாரிகள் கையில் கொடாத படி -அரையர் ஸ்ரீ சூக்தி –
மௌக்த்யம் -அழகு
தன் ஐயம் தீர்க்க அவள் இடமே கேட்கிறானாம் சர்வேஸ்வரன் –
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: