திரு-விருத்தம்-74-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
ஒரு தென்றல் வந்து உலாவிற்றாய் -தென்றல் வந்தது -அவன் வரக் கண்டிலோம் -என்று
தலைமகள் தளர -அத்தைக் கண்ட தோழி யானவள் -இத்தை வெறும் தென்றல் என்று இருந்தாயோ –
மாளிகை சாந்து நாறா நின்றால்-ராஜ புத்திரன் -வரவணித்து – என்று இருக்க வேண்டாவோ –
இது அவன் வரவுக்கு ஸூ சகம் காண் -நீ சோகிக்க வேண்டா -என்று ஆஸ்வசிப்பிக்கிறாள்-ஆக இருக்கிறது –

தலைவனது தார் மணம் கொண்டு வரும் தென்றலைத் தலைவி மகிழ்ந்து உரைத்தல் —

தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில் திரு நெடுங்கண்
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் மால் வரையைக்
கிளர்ந்து  மறிதரக் கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய்
அளைந்து உண் சிறு பசுந்தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே – – -74 –
பாயில் -ஷீராப்தி யாகிற படுக்கையிலே –மறிதர -கீழ் மேலாக-
பாசுரம் -74 -தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப் பாயில்- துறையடைவு–செய்ய தாமரை -3 -6 –
 வியாக்யானம்-
தளர்ந்தும் -இத்யாதி -பெருத்து மலை போலே இருக்கிற திரைகளை எடுத்து -அக்கனத்தாலே தளர்ந்தும் –
காற்றாலே முறிந்தும் வருகிற -திரைகளை உடைத்தான படுக்கையிலே -இவன் சர்வேஸ்வரன் –
என்று ஐஸ்வர்யத்தை கோள் சொல்லிக் கொடுப்பதாய் -அழகுக்கு எல்லை இன்றிக்கே இருக்கிற
கண்களைக் கொண்டு உறங்கியும் -ஜகத் ரஷணத்தை பண்ணிக் கொண்டு கண் வளர்ந்தும் –
அறிவுற்றும் -பிரளயம் வந்து நலியப் புக்கவாறே -இவற்றின் உடைய ரஷண அர்த்தமாக –  நாம்
வந்து கிடக்கச் செய்தே இவற்றை நோவு பட விட்டு இருக்கை யாவது என் -என்று உணர்ந்து அருளியும் –
வையம் விழுங்கியும் -பிரளயத்தில் நோவு படாத படி பூமியை எடுத்து வயிற்றிலே வைத்து நோக்கியும் –
மால் வரை -இத்யாதி -அப்படி ஜகத்துக்காக வருகை அன்றிக்கே -ஒரூராக நோவு படப் புக்கால் வந்து
நோக்கும்படியை சொல்லுகிறது -கோவர்த்தனம் ஆகிற மகா கிரியை நின்ற நிலையிலே நின்று கிளப்பி -கீழது மேலதாம்படி பேர்த்து எடுத்தவனுடைய –

முடி சூடு துழாய் இத்யாதி –தாளிணை மேல் தண் அம் துழாய் -என்று அவள் இருந்தாலும் -க்ருஹ்னாதி சிரஸா ஸ்வயம் -என்று-அவன் இருக்கும்படியாலே இவள் அத்தைச் சொல்லுகிறாள் -இவன் திரு அபிஷேகத்தில் சாத்தின-திருத் துழாயிலே புக்கு உழறி-அதிலே வாசனையைப் பண்ணி -நடுவிலே ஒன்றிலும் தங்காதே-கலப்பற்று வருகிற மந்த மாருதம் அன்றோ வந்து உலாவுகிறது -இனி உனக்கு சோகிக்க அவகாசம் உண்டோ -அவன் முடி சூடு துழாய் என்று அமைந்து இருக்ககீழ்ச் சொன்ன விசேஷணங்களுக்கு கருத்து என் என்னில் -அவன் ஆஸ்ரித அர்த்தமாக வ்யாபரித்த-இடம் எங்கும் புக்கு ஸ்வேத கந்தத்தைக் கொண்டு வாரா நின்றது என்கை -சிறு தென்றல் -மந்த மாருதம்

ஸ்வாபதேசம்
-இத்தால் -அவன் ஆஸ்ரித அர்த்தமாக திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியும் –
பிரளய ஆபத்தில் ஜகத்தை வயற்றில் வைத்து நோக்கின இம் மகா குணமும் -கோவர்த்தனம்-உத்தரணம் பண்ணின படியும் -ஆகிற அக்குணங்களைச் சொல்லி பார்ச்வச்தார் ஆஸ்வசிப்பிக்கிற
படியை சொல்லுகிறது -குண ஜ்ஞானத்தாலே ஜீவித்த படியை சொல்லுகிறது –
 திரு  ஐச்வர்யமாகவும் அழகாகவும்
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: