திரு-விருத்தம்-72-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை  –
போலி கண்டு தரிக்க வேண்டும்படி ஆற்றாமை மிக்கு இருக்கிற சமயத்திலே -ராத்திரி வந்து இருளாலே நலிய –
இத்தால் வந்த நலிவைப் போக்கி நம்மை ரஷிப்பார் யாரோ -என்று இருக்கிற அளவில் சந்தரன் வந்து தோன்றினான் –
இவ்விடத்தே பிள்ளை அமுதனார் -ஒரு கதை சொல்லுவார் -ஒரு சாது பிராமணர் காட்டிலே தனி வழியே
போனானாய்-ஒரு பசு தொடர்ந்து வந்ததாய் – இத்தால் வந்த நலிவை போக்கி நம்மை ரஷிப்பார் யார் -என்று
இருக்கிற சமயத்தில் ஒரு புலி வந்து தோன்றி அப்பசுவையும் கொன்று -அதனுடைய ரத்த பானத்தை பண்ணி –
இவன் முன்னே வந்து தண்டையை முறுக்கி இட்டு இருந்ததாய் -அந்த பசுவையாகில் ஒருபடி பிராண ரணம் பண்ணி
போகல் ஆயிற்று -இனி இத்தைத்  தப்பி நம் சத்தையை நோக்குகை  என்று ஒரு பொருள் இல்லை ஆகாதே -என்று
அது போலே இறே இதுக்கும் –

இருளுக்கு ஆற்றாத தலைவி இளம் பிறை கண்டு தளர்ந்து உரைத்தல் –

சூழ்கின்ற கங்குல் சுருங்காவிருளின்  கருந்திணிம்பை
போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க துழாய் மலர்க்கே
தாழ்கின்ற நெஞ்சத்தொரு தமியாட்டியேன் மாமைக்கின்று
வாழ்கின்றவாறு இதுவோ வந்து தோன்றிற்று வாலியதே – – – 72 –
பாசுரம் -72-சூழ்கின்ற கங்குல் சுருங்கா இருளின்
இருளுக்கு ஆற்றாத தலைவி இளம்பிறை கண்டு தளர்ந்து உரைத்தல் -சீலமில்லாச் சிறியன் -4-7-
 வியாக்யானம் –

சூழ்கின்ற -பிரளயம் கோக்குமா போலே எங்கும் ஒக்க தானே வந்து சூழ்ந்தது -இது ஓர் இடத்திலேயாய்-மற்றொரு இடத்தில் ஒதுங்க நிழலாம் படி இருக்கை அன்றிக்கே-கங்குல் சுருங்கா  இருளின் -இன்னதினை போதை-இருள் செறிந்து வரக் கடவது – இன்னதினை போதை அதாக கடவது -என்று ஓர் மரியாதை உண்டு இறே -அது இன்றிக்கே இரா நின்றது –கரும் திணும்பை -கறுத்த நிறத்தை உடைய –திணும்பை என்ற ஒரே சொல்லாய்-அத்தால் திண்மையை சொல்லுகிறது -இருளினுடைய புற இதழைக் கழித்து -அகவாயில் திண்மையான-வயிரத்தை சேர பிடித்தால் போல் இருக்கிறது

 போழ்கின்ற இத்யாதி -இவ்விருளை போழ்ந்து கொடு
கீண்டு கொண்டு தோற்றுகிற சந்திரனும் -தனக்கு புறம்பு பாத்யம் இல்லாத படியாலே நம்மையே பாதித்திடுக –
தண்டையை  முறுக்கி இட்டு -தண்டு வாலாய் வாலை முறுக்கிக் கொண்டு என்றபடி  –
போழ்கின்ற -சஹஜ சாத்ரவத்தாலே -இத்தால் அவன் சன்னதியிலே இது போழ்கின்றது  அன்றியிலே –
கை தொட்டு அழிக்கிறாப் போலே ஆயிற்று -இதனுடைய திண்மையும் சந்தரனுடைய பருவம் நிரம்பாமையும் –
திங்களம் பிள்ளை -சந்திரன் ஆகிற அழகிய பிள்ளை -முந்துற அநு கூலரைப் போலே தோற்றி பின்னை இறே
இவன் பாதகன் ஆவது -இருளைப் போக்குகிற ஆகாரத்திலே அநு கூலனாய் -பின்பு இறே தான நின்று பாதகனாவது –
பத்ம கோச -இத்யாதி -பத்ம கோச பலாசா நி த்ருஷ்டாத்ர்ஷ்டிர் ஹி மந்யதே -ஸீதாயா நேத்ர கோசாப்யாம்

சத்ருசா நீதி லஷ்மணா -இதனுடைய விபாகம் அறிகிறதில்லை-ரசனை என்னா நஞ்சைத் திண்ண ஒண்ணாது இறே –

பஸ்ய லஷ்மண -இத்யாதி -தர்சி ஸௌமித்ரி -என்னுமிவ் வாகாரத்தை பார்க்கிற இத்தனை போக்கி
பின்பு அது பாதகம் என்னும் இடத்தை பார்க்கிறது இல்லை –
துழாய் மலர்க்கே இத்யாதி -அவன் தோளில் இட்ட திருத் துழாய் மாலையை பெற வேணும் என்று
ஆசைப்பட்டு -அதிலே கால் தாழ்ந்து கிடக்கிற நெஞ்சை உடைய -துழாய் மலர்க்கே தாழ்கின்ற -அதில்
அருமை ஒன்றையும் புத்தி பண்ணாதே
-ஒரு தமியாட்டியேன் -ஸ்ரீ ஜனக ராஜனின் திரு மகளும் ஒப்பன்று
காணும் இவளுடைய தனிமைக்கு -இருளுக்கும் நிலவுக்கும் நொந்து தனிமைப் பட்டாள்     இவள் இறே –
ஒரு -என்கிற இத்தால் உபமான ராஹித்யம் சொல்லுகிறது –
மாமைக்கு இன்று வாழ்கின்றவாறு இதுவோ -இருளால் வந்த நலிவைப் போக்கி நம் நிறத்தைத் தருகைக்கு சந்தரன் வந்துதோன்றினான் என்று
நாம் பாரித்து இருந்தது எல்லாம் இதுவோ –
வந்து தோன்றிற்று வாலியதே -இருளைப் போக்குகைக்கு சந்தரன் வந்து தோன்றினால் போலே-இச் சந்தரனைப் போக்குகைக்கு ஒரு ஆதித்யன் இல்லையே -என்கிறாள் -இதுவே நிலை நின்று-நலியும் என்று இருக்கிறாள் -வாலியது -வலியது –
திங்களம் பிள்ளையும் போழ்க  -அதுவும் நம்மை வந்து நலிந்திடுக -வந்து தோன்றிற்று வாலியதே -அவ்விருளுக்கு  மேலே இத் திங்களும் வந்து பாதகமாய் தோற்றிற்று -மாமைக்கு இன்று வாழ்கின்றவாறு இதுவோ -என்று அந்வயம் –
ஸ்வா பதேசம் –
இத்தால் -இருளன்ன மா மேனி -என்கிறபடியே -திரு நிறத்துக்கு
போலியான இருள் -அதுக்கு ஸ்மாரகமாய் நலிகிற படியையும் –
அதுக்கு மேலே சந்திரனும்  -திரு முகத்துக்கு ஆதல்-திருக் கையில் திரு பாஞ்ச ஜன்யத்துக்கு ஆதல் –
நாள் இளம் திங்களைக் கோள் விடுத்து -என்கிறபடியே திரு முகத்துக்கு ஸ்மாரகமாய்
நலிகிற படியால் இவற்றைச் சொல்லுகிறது  –

பால சந்தரன் ஆகையாலே இருளானது சந்திரனையும் கை தொட்டு நலியா நின்று-கொண்டு தன்னையும் நலிகிறது என்றபடி -புலிக்கு பசுவும் பிராமணனும் எதிரி போல் –

இவள் ஹிருதயம் பத்ம கோசம் -போன்றது ஆகையாலே ஆதித்யனுக்கே அலரக் கடவது
ஆகையாலே -பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் –இருளுக்கும் சந்த்ரனுக்கும் மலராமையாலே
சாத்ரவம் சஹஜம் என்றபடி –
மாயா மிருகத்தில் பிராட்டி ஆசைப்பட்டாள் -ரசனை உள்ளோருக்கு  நஞ்சு இடுவாரோ –
இது மேல் எழுந்த ஆகாரம் -என்றபடி -பஸ்ய லஷ்மண வைதேஹ்யாஸ் ஸ்ப்ருஹாம்
ம்ருக கதாமிமாம் ரூபஸ் ஸ்ரேஷ்ட தயாஹ்யேஷ ம்ருகோத்யந  பவிஷ்யதி -இத்யாதி
கண்டு கொள்வது -அது போல் பிரதமத்தில் அழகிய சந்தரன் என்றாள் –
ஊர்த்வம் மாசான்ன ஜீவிஷ்யதே -பிரிந்த பத்து மாசங்களிலே ராத்ரியும் உண்டு இறே –
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: