திரு-விருத்தம்-73-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
நிலவு போய் முடிய நின்று பாதகமாய் —போய் என்றது மிகுதியாய் –
அத்தாலே இவளும் நோவு பட்டு -மோஹித்து கிடக்க –
இத்தைக் கண்ட திருத் தாயார் -தர்ம ஹானி கிடீர் -என்று கூப்பிடுகிறாள் –

பிறை யுடை மாலைக்கு ஆற்றாத தலைவியின் தளர்ச்சிக்குப் பாங்கி இரங்கல்-

வால் வெண்ணிலா வுலகாரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும்
பால் விண் சுரவி சுர முதிர்மாலை பரிதி வட்டம்
போலும் சுடர் ஆழிப் பிரான் பொழில் ஏழும் அளிக்கும்
சால்பின் தகைமை கொலாம் தமியாட்டி தளர்ந்ததுவே – 73- – –
 பாசுரம்  -73 வால் வெண் நிலவு உலகு ஆரச் சுரக்கும்  – துறையடைவு-தலைவி இளம் பிறை கண்டு தளர்தலைக் கண்டு தோழி இரங்கல் –-வேய் மரு தோள் இணை -10 -3 –
 வியாக்யானம் –
வால் வெண் நிலா -இத்யாதி -இவள் நலிவைக் கண்டு -அவன் ரஷகத்வத்திலேயும் அதி சங்கை
பண்ணுகிறாள் -வலியதாய் -வெளுத்த நிறத்தை உடையதாய் -நிலவாகிற பாலை -லோகமடைய
நிரம்பும்படி -சுரக்கிற வெளுத்த நிறத்தை உடைய சந்தரன் ஆகிற ஆகாசத்தில் உண்டான ஸூ ரபி யானது –
சுரக்கிற சுரப்பு போய் -முதிர்ந்த ராத்திரி -வெண் -திங்கள் என்னும் வெண் சுரவியானது வால் வெண் நிலா வாகிற
பாலை உலகாகிற தாழி நிறையும் படி -சுரக்கிற சுரப்பு முதிர்ந்த மாலையிலே –
விண் சுரவி -இப் பிரளயம் தன் பக்கல் தட்டாதபடி உயரத்திலே நிற்கை –
பரிதி வட்டம் இத்யாதி -இந்நிலவுக்கு பகை உண்டு கிடீர் இங்கே -என்கிறாள் –
ஆதித்ய மண்டலம் போல் இருக்கிற சுடரை உடைத்தாய் -எப்போதும் உத்தோன்முகமாய் -ஆஸ்ரித விரோதிகளைப் போக்கும் திரு ஆழியை கையிலே உடைய மகோ உபகாரகன் -பொழில் ஏழும் அளிக்கும் சால்பின் தகைமை கொலாம்-பூமி அடைய ரஷித்து போருகிறவனுடைய
ரஷகத்வ ஸ்வ பாவமோ   இது -பொழில் ஏழையும் அளிக்கிற சால்புண்டு -மகா புருஷத்வ
மரியாதை -அதின் ஸ்வ பாவம் இருந்த படியோ -இது -அவன் ரஷகனாக -அவன் கை பார்த்து இருப்பார்க்கு
அழகிதாக ஜீவிக்கலாய் இருந்தது -பிரளய ஆபத்து வந்தாலும் அவன் உளன் என்று அழகிதாக
விஸ்வசிக்கலாய் இருந்தது -கையும் திரு ஆழியுமாய் இருந்து -ரஷித்து போந்தபடி இதுவோ –
முன்பு பண்ணிப் போந்த ரஷகத்வத்துக்கு நமஸ்காரம் –
தமியாட்டி தளர்ந்ததுவே -அசாதாராண பரிகரம் –
படுகிறபடி கண்டால் -விபூதி மாத்ரமாய் -ரஷ்ய கோடியிலே அந்வயித்து இருப்பார்க்கு
அழகிதாக ஜீவிக்கலாய் இருந்தது -தமியாட்டி என்கிறாள் இறே -தாயாரான தானும் கூட
இருக்கச் செய்தே அவள் கருத்தை அநுவர்த்தித்து -அவனை ஒழிந்தார் அடங்கலும் கழுத்துக் கட்டி
அவன் ஒருவனுமே துணை என்று இறே இவள் இருப்பது -அந்தி சமயத்தில் யம படர் சூழ
நின்றார்கள் என்னா அவர்கள் துணை ஆகார்கள் இறே -க்ரம ப்ராப்தி அமையும் என்று ஹிதம்-சொல்லுவார் பாதகராம் இத்தனை இறே –
வால் வெண்ணிலவு  வுலகார்ச் சுரக்கும் வெண் திங்கள் என்னும் பால் விண் சுரவி
சுர முதிர் மாலையிலே -தமியாட்டி தளர்ந்தது -பரிதி வட்டம் போலும் சுடர் அடல் ஆழி பிரான்-பொழில் ஏழு  அளிக்கும் சால்பின் தகைமை கொலாம் –
 ஸ்வா பதேசம்
இத்தால் இவருடைய தசா விபாகத்தை கண்டார்க்கு அவனுடைய
ரஷகத்வத்தையும் அதி சங்கை பண்ண வேண்டும்படியான  நிலையை சொல்லுகிறது-
தமியாட்டி -தமி -தனியாய் -அத்வதீயை —தனி -யாய் ஒருத்தி என்னுதல்
இப் பிரளயம் -இவளுடைய விரகம்-
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: