திரு-விருத்தம்-71-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
களவிலே புணர்ந்து நீங்கின தலைமகன் -இவள் ஆற்றாமையை பரிகரிக்கைக்காக
இவள் வர்த்திக்கிற தேசத்தில் தன் நிறத்தோடு போலியான பழங்களை
சிலர் விற்பர்களாக பண்ணி – இவளும் அத்தைக் கண்டு தரிக்க -அத்தை தாயார்
நிஷேதிக்கிறாள் -தாயார் சொல்லுகிற மிகையை தலைமகள்  தோழி மாருக்கு சொல்லுகிறாள்-

செவிலி  வெறுத்தலைத் தலைவி   தோழியர்க்கு உரைத்தல் —

ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம் பழம் கண்டு
ஆழி களாம்  பழ வண்ணம் என்றேற்கு அக்தே கொண்டு அன்னை
நாழி வளோ வென்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்
தோழிகளோ உரையீர் எம்மை யம்மனை சூழ் கின்றவே  – – -71 – –
பாசுரம் -71-ஊழி களாய்  உலகு ஏழும்  உண்டான் -செவிலித் தாயின் கோபத்தைத் தலைவி தோழியிடம் கூறுதல் –எங்கனேயோ  அன்னைமீர்காள் -5-5
 வியாக்யானம் –
ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு -களாம் பழ வண்ணமானது ஆழி போலே இருந்தது-என்று இத்தனை கிடி கோள் நான் சொல்லிற்று -அவள் ஆழி வண்ணரை அன்றா சொல்லிற்று -என்று கொண்டாள் அவள் -அக்தே கொண்டு -இவ் உக்தி மாதரத்தில் பர்யவசியாதே இதுக்கு-வேறு ஒரு கருத்து உண்டு என்று கொண்டு -அன்னை -இவள் பிறந்த அன்று தொடங்கி தாயாயோ-வளர்ந்தது -ஒரு கால் பெண் பிள்ளையாயும் வளர்ந்திலள் போலே காணும்  -குற்றம் உண்டாகில்
பிராப்தம் இறே -குற்றம் இல்லாத இடத்திலும் நியந்த்ரு நியாம்யபாவம் அமையுமோ நியமிக்கைக்கு –
நாழ் இவளோ என்றும் -நாமும் எல்லாம் பழம் கண்டது சொல்லிப் போருகிறோம் இறே -இவளுக்கும்-நாம் சொல்லுகிற அளவே அமையாதோ -இவளுக்கு ஓர் ஏற்றம் என் செய்ய வென்னா நின்றாள் –
நாழ் -என்று தரம் உடைமை -அத்தாலே ஏற்றத்தை சொல்லுகிறது -அதாகிறது நருவட்டாணித் தனம் –
இவளுடைய ஏற்றம் எது என்னில் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்றும் –
பிரளய ஆபத்திலே ஜகத்தை அடங்க வயற்றிலே வைத்து நோக்கிய அக்குணத்திலே  வித்தையாய்
ஆற்றமாட்டாமை சொன்ன வாரத்தை யன்றோ  இது -என்னா  நின்றாள் –
தோழிகளோ உரையீர் -நீங்கள் முன்னம் என்னோடு சமான சுக துக்ககைகள்   அன்றோ
தாய்மார் அல்லீர்கோள்-
 -எம்மை அம்மனை சூழ் கின்றனவே  -என்னை மனைப்பாம்பு
போலே புக்க விடமும் புறப்பட்ட விடமும் தானே யாய் நலிகிறபடிக்கு நீங்கள் தானே
ஏதேனும் சொல்ல வல்லீ  கோளோ
 சூழ்கின்ற -முத்துலை இட்டுக் கொண்டு இவள் நலியா நின்றாள் -காண்கிறதும் சொல்லுகிறதும் கிடக்க -இதுக்கு வேறே ஒரு கருத்து உண்டு என்று இவள் நலிகிறதற்கு நீங்கள் தான் ஒரு பரிகாரம் சொல்லீ கோளே-
ஸ்வா பதேசம் –
இத்தால் அவனோடு போலியாய் இருப்பது ஓன்று அல்லது தரியாதபடியையும் –
பகவத் விஷயத்தில் உண்டான பிராவண்யா அதிசயம் ஒருவராலும் மீட்க ஒண்ணாதபடி
இருக்கிறதையும் சொல்லுகிறது –
மனைப்பாம்பு -கிரகத்தில் வர்த்திக்கிறபாம்பு
முத்துலை இட்டு -நீர் ஏற்ற ஒரு குழி கல்லி ஏற்றம் இட்டு அதிலே ஏற்றி மீண்டும் ஒரு குழி கல்லி
ஏற்றம் இட்டு ஏற்றுவாரை போலே -ஒன்றை சொல்லி அதுக்கு மேலே ஒன்றை கற்ப்பிக்கிறாள்  –
பழம் என்கிறது காண்கிறது ஆழி –ஆழி வண்ணன் -என்கிறது சொல்கிறது —
உரையீர் -நான் சொல்வதில் குற்றம் உண்டோ என்னுதல்
இவள்சொல்லுக்கு பரிகாரம் சொல்லுங்கோள்  என்னுதல்-
ஊழி களாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம் பழம் கண்டு களாம் பழ வண்ணம்
ஆழி என்றேற்கு அக்தே கொண்டு அன்னை நாழி களோ வென்றும் ஞாலம் உண்டான்
வண்ணம் சொல்லிற்று என்றும் எம்மை அம்மனை சூழ்கின்ற வற்றை தோழிகளே உரையீர்-என்று அந்வயம் –
என்றேற்கு -என்று சொன்னேன் என்றபடி
வட்டாணி -சமத்காரம் -சாமர்த்தியமாக சொல்லுதல் -நறு வட்டாணி -நல்ல சமர்த்து
மனைப்பாம்பு கடியா விட்டாலும் பயங்கரமாய் இருக்குமா போலே இவள் சொன்னது செய்யா விட்டாலும்-பயங்கரமாய் இருக்கும் என்றபடி
முத்துலை ஒன்றுக்கு மூன்று சொல்லுகை
கடியன் கொடியன் -அப்படிப்பட்டவன் பிரளய காலத்திலேயே வந்து உதவினான் -என்று
வ்ருத்த கீர்த்தன முகேன உபகாரத்தை ஸ்த்ரீகரிக்கைக்காக-
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: