திரு-விருத்தம்-70-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
ஸ்ரீ வைகுண்ட நாதன் சாத்தின மாலையை பெற வேணும் என்னும் அபேஷையால் உண்டான-த்வரையாலே -காலம் செலுத்த உள்ள அருமை -சொல்லுகிறது –

தலைவி இரவின் நெடுமைக்கு இரங்கல் —

வளைவாய்த்  திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல்
தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை
விளைவான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை
உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே — 70- –
பாசுரம் -70-வளை வாய்த் திருச் சக்கரத்து எங்கள் -தலைவி இரவின் நெடுமைக்கு இரங்குதல் –பிறவித் துயரற -1-7-
 வியாக்யானம் –
வளைவாய் திருச் சக்கரத்து -வளைத்த வாயை உடைய திருச் சக்கரம் -என்னுதல்
அன்றிக்கே -வளை -ஸ்ரீ பாஞ்ச   ஜன்யமாய் -வாயை உடைய திரு ஆழியை உடையவன் என்னுதல்-தமஸ பரமோ தாதா சங்கு சக்ர கதாதர -என்னக் கடவது -இறே
எங்கள் வானவனார் முடிமேல் -த்ரிபாத் விபூதி யடைய திவ்ய ஆயுதங்களும் -சாத்தின மாலைகளும் –
ஆன இவ் அழகே யாம்படி  இருக்கிற ஸ்ரீ வைகுண்ட நாதனுடைய -திரு அபிஷேகத்தில்  உண்டான
தொடை வாய்ப்புள்ள -அநந்த வைநதேயாதிகள் தொடுக்கிறது இறே –
தளை என்று தொடையாய் –வாய் -வாய்ப்பை உடைய -தொடை வாய்ப்புள்ள திருத் துழாய்

நறுங்கண்ணி தண் அம் துழாய்க்கு -செவ்வியை உடைய மாலையான திருத் துழாய்க்கு வண்ணம் இத்யாதி -அம் மாலையை ஆசைப்பட்டு -பெறாமையாலே நிறமானது பயலை யாம்படி-விவர்ணமாம் படியாக

 மிக வந்து இத்யாதி -முந்துற ஒரு ராத்திரி -ஒரு நாளாய் பெருகிற்று -அது போய் ஒரு மாசமாய் –
அது போய் ஒரு வத்சரமாய் -அது போய் ஒரு கல்பமாய் -பெருகும் படி ஒழிய என்னை நலிகைக்காக
வந்து புகுந்து ஒரு ராத்திரி அநேகம் ஊழிகளாக நின்றது -மிக வந்து -ஒன்றுக்கு ஓன்று மிகும் படி
வந்து என்னுதல் -அநேகம் ராத்திரி எல்லாம் வந்தது இறே -இது ஒரு ராத்திரி இருந்தபடி என்-
ஸ்வாபதேசம் –

இத்தால் பதி சம்மா நிதா சீதா -என்று அவதாரத்தில் பிராட்டி பெற்ற பேற்றை-ஸ்ரீ வைகுண்ட நாதன் பக்கலிலே -பெற வேணும் என்று ஆசைப்பட்டு -பெறாமையாலே காலம்- செல்ல அரிதான படி சொல்லிற்று –

ஒரு கங்குல் -வளைவாய் திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடி மேல் தளைவாய்
தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை விளைவான் மிக வந்து-நாளாய் திங்களாய் ஆண்டாய்
ஊழியாய் வர்த்திக்கிற மாத்ரம் அன்றிக்கே -எம்மை உளைவான் புகுந்து ஊழி கள் ஆயிரமாகா-நின்றது -என்று அந்வயம் –
தளை –கட்டாய் —வாய் -வாய்ப்பாய் –தொடை வாய்த்து இருக்கை
என்னை உபேஷித்து என் உடம்பை விவர்ணமாம் படி செய்து -தான் தன திருக்கையில்
இற்று இருக்கிற திரு ஆழியினால் தன்னுடைய பரம பதத்தை விளங்கச் செய்து -அவ் விபூதி எங்கும்-தான் சூடிய திருத் துழாய் பரிமளம்  கமழும் படி  தூரமாக வீற்று இருந்தான் -என் எளிமை அறிந்து-இந்த இரவானது இப்படி நீண்டு அநந்த கல்பங்களாக பரிணமிக்க தொடங்கிற்று -இதைக் கடந்து-நாம் ஜீவிக்க வழி என் -என்று சோகிக்கிறாள்  –
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: