திரு-விருத்தம்-69-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
அதுக்கு மேல் சந்த்யையும் வந்து நலிய -அநந்தரம்-போகயோக்யமான காலமாய் இருக்க –
அவன் வந்து தோன்றாமையால் தலை மகள் ஆற்றாளாக – இது கண்ட தோழி யானவள் -இது சந்த்யை அல்ல
இரண்டு வ்ருஷபங்கள் தங்களிலே பொருகிறன காண் -என்று காலம் மயக்கி அவளை
தரிப்பிக்கிறாளாய்  -இருக்கிறது –

மாலைக்கு இரங்கிய தலைவியை தோழி ஆற்றுதல்-

காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து வெல்வான்
போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை  புவனி எல்லாம்
நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே
வாரேற்றி இள முலையாய் வருந்தேல் உன்வளைத் திறமே – -69 – –
பாசுரம் -69-கார் ஏற்று இருள் செகில்  ஏற்றின் சுடருக்கு
மாலைப் பொழுது கண்டு மயங்கிய தலைவியைத் தோழி ஆற்றுதல் –கற்பார் இராம பிரானை -7-5-
 வியாக்யானம் –
காரேற் றிருள்--இருளாகிற கார் ஏறானது-கறுத்த வ்ருஷபம்  ஆனது –
செகிலேற்றின சுடருக்கு உளைந்து-ஆதித்யனாகிற சிவந்த ரிஷபத்தினுடைய கிரணங்களுக்கு தோற்றுப் போய்
சுரமடைன்தது -அது -நாம் முடிய இங்கனே தோற்றுக் கிடக்கும் இத்தனையோ –
நாமும் ஒருகால் மேலிட வேணும் -என்று பார்த்து போரிலே வந்தேன் என்று கொண்டு எதிர் இட்டது –
இருள் தான் வெல்ல வேணும் என்று மாலை இட்டுக் கொண்டு வந்தது போலே காணும் –

புன் தலைமாலை -புல்லிதான தலையை உடைத்தான சந்த்யை யானது -நக நிப ஸூ ஞ்சதி யாந்தமோவல்லய-என்கிறாப் போலே சந்த்யை யினுடையஉபக்கிரமம் இத்தனை -சந்த்யை யானது அல்ல காண் இது –

புவனி இத்யாதி –அவன் படியை அறிந்தால் வரும் என்று இருக்க வேண்டாவோ -இந்த்ரன் வ்யாஜ்யமாக எல்லார்-தலையிலும் -நிர்ஹேதுகமாக -அமரர் சென்னிப்பூவாய் இருக்கிற திருவடித்தாமரைகளை-வைக்குமவன் அன்றோ –இப்படி எல்லாருக்கும் உபகாரகனாய் இருக்குமவன் -உன்னை விடுமோ –

தாமஸ பிரகிருதிகள்  ஆனவர் மேலிடப் புக்கால் வந்து உதவுமவன் -தமச்சு தான் வந்து
அனுபவிக்கப் புக்கால் விட்டு இருக்குமோ -தன்னுடைமையை பிறர் -என்னது -என்று இருந்தால் –
தன்னை அரத்தி யாக்கி -அவர்கள் பக்கலிலும் வந்து இரந்து கொள்ளுமவன் -இரக்க வேண்டாதே -தன் உடைமையான உன்னை -விட்டு இருக்குமோ -காடும் மேடுமான பூமியில் ஒன்றும் விடாதவன்-உன்னை இங்கனே அறிவு அழிய விடுமோ -மண்ணுக்கு பதறி இரந்தவன் பெண் ஒரு தலை யானால் ஆறி- இருக்குமோ –
வாரேற்றி இள  முலையாய் -என்னும் அளவுக்கு -காடும் மேடுமான பூமியிலே காலை வைத்தவன்
உன்  முலை மேலே காலை வையாது ஒழியுமோ -அருளா விடுமே -சத்வம் உடையாருக்கு தன்னை
அழிய மாறுமவன் சுத்த சத்வமேயான  உன் விஷயத்தில் கை வாங்கி இருக்குமோ
-புவனி இத்யாதி –
பூமிப் பரப்படைய நீரேற்று அளந்து கொண்டு  -எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைக்கச் செய்தேயும்
பின்னையும் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று இருக்கும் மகா உபகாரன் ஆனவன் –
அருளா விடுமே -பிரண யித்வம் போனால் ஸ்வரூப அநு பந்தியான  அருளும் -உன் பக்கம்-கார்யகரம் இன்றிக்கே ஒழியுமோ –
வாரேற்று இள முலையாய் -வாராலே தாங்க வேண்டும்படியான-
முலையை உடையவளே -வார் தரித்தல்-தான் தரித்தல் செய்ய வேண்டும்படியான முலைகளை
நீ தரிக்க விட்டிட்டு இருக்குமோ -இள முலையாய் -பருவம் நிரம்பாதிருக்கச் செய்தேயும் -வாராலே
தரிக்க வேண்டும்படியாய் காணும் முலைகள் இருப்பது -ஷாம காலத்தில் பிரஜைகள் சோறு சோறு –
என்னுமா போலே -விஷயத்தை காட்டு காட்டு -என்று கிளருகிற இள முலைகள் –
வருந்தேல் உன் வளைத்-திறமே -உன் வளை இடையாட்டமாக நீ வருந்த வேண்டா -வேணுமாகில் அவன் கையில் வளை இடையாட்டமாக
வருந்தில் வருந்து -அப்பாஞ்ச சந்யமும் பல்லாண்டு -என்றது நங்கையிலே அகப்பட்டு இருப்பதொன்று –
அதற்கு மங்களாசாசனம் பண்ணு –
இத்தால் அவனுடைய குண ஞானத்தாலும் -அவன் இத்தலையை அவஹாகித்த படியாலும்
தரிப்பித்த படியை சொல்லிற்றுகீழ் -இதில் அது வேண்டாதே இருவருடையவும் தர்மிஹ்ராக
பிரமாணமே அமையும் தரிக்கைக்கு என்கிறது -அவனாகில் ரஷகனாய் -இத்தலையாகில் ரஷ்யகமாய் –
இருக்கும் இறே -வருந்தேன் உன் வளைத் திறமே -மாசு ச -என்கிறாள் -அஹம் த்வா -என்று இருவருடையவும்
சொல்லி வைத்து இறே -மாசு ச -என்றது –
இருளாகிற காரேறு செகிலேற்றின் சுடருக்கு உளைந்து செல்வான் போரேற்று எதிர்ந்தது -பிரத்யஷ்யமான சந்த்யையை- ருஷபங்கள்  என்று சொல்லுகிறது என் என்ன -புன் தலை மாலை ஆகையாலே -புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே -வாரேற்றின இள முலையாய்-உன் வளைத் திறம் வருந்தேல் -என்று அந்வயம்
செல்வான்-ஜெயிக்கைக்காக -நெடிய பிரான் என்கையாலே ரஷகமும் –வாரேற்ற இள முலை -என்கையாலே ரஷ்யகமும் -தோற்றுகிறது
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: