திரு-விருத்தம்-68-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
கலந்து பிரிந்த தலைமகன் -கொன்றை பூக்கும் காலத்திலே வருகிறேன் -என்று காலம் குறித்துப்
போனானாய் -அக்காலம் வந்து அவையும் பூக்கச் செய்தே -அவன் வாராமையாலே தலை மகள்
தளர -அத்தைக் கண்ட தோழியானவள் -அக்காலம் அல்ல என்ன ஒண்ணாதபடி அது முடிகிக் கொடு
 நிற்கையாலே  -இவை பூக்க உத்யோகிக்கிறன  இத்தனை -பூத்துச்சமைந்தன வில்லை காண் –
ஆனபின்பு அவனும் வந்தானத்தனை –நீ அஞ்சாதே கொள் -என்று அவளை யாஸ்வசிப்பிக்கிறாள்-

கால மயக்கு-

மலர்ந்தே யொழிந்தில   மாலையும் மாலைப் பொன் வாசிகையும்
புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி பொரு கடல் சூழ்
நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய்
கலந்தார் வர வெதிர்கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே – – 68-
பாசுரம் -68-மலர்ந்தே ஒழிந்தில மாலையும் -கால மயக்கு காலம் இளையது என்றல் –கொண்ட பெண்டிர் -9-1-
 வியாக்யானம் –
மலர்ந்தே ஒழிந்தில -அக்காலம் அல்ல காண் -என்னாமே தோழி –  கெடுவாய்
இவை இங்கனே மலரா நிற்க அல்ல காண் -என்னும்படி எங்கனே -என்ன -மலர உபக்ரமித்த-இத்தனை காண் -மலர்ந்து சமைந்தது இல்லை காண் –
மாலை இத்யாதி -மாலைகளாகவும் -அம்மாலைகளாலே சமைந்த பொன் வாசிகை போலே -சுருளவும் இறே யவை தான் பூப்பது –
கண்டாருடைய ஹ்ருதயங்கள் அபஹ்ருததாம்படி -என்னுதல் -தழைப் பந்தல் தண்டுற நாற்றி
மலர்ந்தே ஒழிந்தில -என்னுதல் -தண்டுற நாற்றிக் கார்த்தன -என்னுதல் –
தழைப் பந்தலாக பணைகள் தோறும்
கண்கள் தோறும் –நாற்றி -புலந்தோய் –புலம் -இந்திரியங்களாய்-தோய்கை-அபஹரிக்கையாய் –
புலம் -பூமியாய் –தோய்கை-ஸ்பர்சிக்கையாய் -தரையிலே வந்து தோயும்படி -என்னுதல்
பொரு கடல் இத்யாதி -அவனுடைய அழியாத நித்ய விபூதியோடு ஒத்து உள்ளவள் அல்லையோ நீ –
அவன் உன்னை அழிய விட்டு இருக்குமோ -ஆவது அழிவது ஒரு விபூதியும் -அழியக் கூடாததொரு
விபூதியுமாய் இறே இருப்பது -அழிய விட்டு மீட்டிக் கொள்ளும் லீலா விபூதியை -முதலிலே அழிகைக்கு
சம்பாவனை இல்லாதபடி நோக்கும் நித்ய விபூதியை –பொரா நின்றுள்ள கடலாலே சூழப்பட்ட
பூமியை தாவி அளந்து கொண்டு -அச் செய லாலே ஆஸ்ரித வர்க்கத்துக்கு அடங்க நாதனானவன் –
தனது வைகுந்த மன்னாய் -உனக்கு ஸ்வரூப ஞானம் இன்றிக்கே ஒழியுமோ –
அவனதான நித்ய விபூதியோடு  ஒத்து இருந்துள்ளவள் அன்றோ நீ -அவ் விபூதியை விடில்
அன்றோ உன்னை விடுவது -உன்னை தளர விட்டு இருக்குமோ
-கலந்தார் -உன் ஸ்வ ரூபத்தை அழியாது
ஒழிந்தால் -அவன் தன் ஸ்வ ரூபத்தையும் அறியாது ஒழியுமோ -உன்னோடு கலந்து சுவடி அறிந்தவன் –
உன்னை விட்டு இருக்குமோ -கலந்தார் -என்றே காணும் அவனுக்கு நிரூபகம் –
வா வெதிர் கொண்டு –
வாசி யறியாத ச்த்தாவரங்களும் கூட -அகால பலி நோ வ்ருஷா -என்று அவன் வர உத்யோக்கிகிற   படியைக் கண்டு
அலராமல் நிற்க -நீ தளரும் இத்தனையோ -வன் கொன்றைகள் -அவன் வரில்  அலரக் கடவதாய் -இல்லையாகில்
தவிருமதாய் -இப்படி அவன் வரவோடு தப்பாதான கொன்றைகள் -கார்த்தன -சினைத்தன –கருவடைந்தால்-ஒரு நிறம் உண்டு இறே இடுவது -அத்தை சொல்லிற்றாதல் -அன்றியே கார்காலத்தை காட்டி நின்றன -என்றது ஆதல் –
பொருகடல் சூழ் நிலம் தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய் -வன்கொன்றைகள்
கலந்தார் வர வெதிர் கொண்டு கார்த்தன -மாலையும் மாலைப் பொன் வாசிகையும் புலந்தோய்
தழைப் பந்தல் தண்டுற நாற்றி மலர்ந்தே ஒழிந்தில -அன்றிக்கே கார்த்து மலர்ந்தே ஒழிந்தில  -என்னுதல் –
ஸ்வா பதேசம் –
இத்தால் அவனுடைய குண ஜ்ஞானத்தாலும் -இத்தலையை அவன் அவஹாகித்த படியாலும்-போக யோக்யமான காலத்தில் வாராது ஒழியான் என்று பார்ஸ்வச்தர் ஆஸ்வசிக்கிறபடியை   சொல்லுகிறது –
தழைப் பந்தல் தண்டுற நாற்றி -தழை -செறிந்த  -பந்தல் -பந்தலாக -தண்டு -சாகைகளிலே -உற -சிக்கென -நாற்றி -நாலா நின்று கொண்டு -என்று சப்தார்த்தம் –
சினைத்தல் -கர்ப்பமாதல்- மொட்டாதல்
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: