திரு-விருத்தம்-67-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
இப்பாட்டும் -கண் அழகு தன்னையே தலைமகன் சொல்லுகிறான் –

தலைவன் பாங்கனுக்குத் தன் வலி யழிவு உரைத்தல்-

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு அசுரைச் செற்ற
மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர்
தூவியம் பேடை யன்னாள் கண்களாய துணை மலரே – – 67-
பாசுரம் -67-காவியும் நீலமும் வேலும் கயலும் பல பல -தலைவன் தன்  வலி யழிவு  உரைத்தல் –உலகமுண்ட பெரு வாயா -6-10-
 வியாக்யானம் –
காவியும் -இத்யாதி -இக் கண்ணுக்கு ஒப்பு தேடப் புக்கால் -விஷ்ணு நா சத்ருசோ வீர்யே -என்கிறபடியே –
ஒரோவாகாரங்களாலே ஒன்றாக பலவற்றையும் பிடித்தால் எல்லாம் கூட ஒப்பாக வற்றோ -மாட்டாதோ –
என்னும்படி இறே இவை தான் இருப்பது – விஷ்ணு நா சத்ருசோ வீர்யே -பரத்வம் வீர்ய குணம்
ஒன்றுக்கே ஒப்பாம் இத்தனை -இப்படி சீலாதி களைக் கண்டு அனுபவிக்க ஒண்ணாது இறே அங்கு –
சிவப்பாலே செங்கழு நீரை வென்று -கருமையாலே நெய்தலை வென்று -ஓர் ஆளும் ஓர் நோக்கும்
நேராய் இருக்கும் படியாலே -வேலை வென்று -மௌ க்த்யத்தாலே கயலை வென்று -மற்றும் ஒப்பாக
சொல்லும் அவற்றை அடைய புக்க விடம் புக்கு என்று -ஆவியின் தன்மை அளவல்ல பாரிப்பு –
 தன்னடையே அழியும் அவற்றை யழிக்கை வெற்றிக்கு உடலோ -வென்று அழியாதான ஆத்மா-வஸ்துவையும் -அழிப்பதாக கோலா நின்றது –ஆவியின் தன்மை அளவல்ல -இவ் வாத்ம வஸ்துவின்-அளவு அன்றிக்கே -இதனுடைய சத்தா ஹேதுவான பதார்த்தத்து அளவும் செல்லுவன போலே-இரா நின்றது -இவளுடைய அவயவங்கள் அவனையும் கூட மலக்கவல்ல போலே காணும் –
அசுரரை இத்யாதி -அசூர வர்க்கத்தை அடைய அழியச் செய்து –மகானாய் -அவன் தன்னோபாதியும்
பெரியனாய் -விச்மயநீயமான வியாபாரங்களை உடையனாய் இருந்துள்ள பெரிய திருவடியை
கருத்து அறிந்து நடத்த வல்லவன் -மாதவன் -கருட வாஹனன் ஏற்றத்துக்கு மேலே   லஷ்மி பதி
என்னும் ஏற்றத்தை உடையவன் –கோவிந்தன் -அவளோட்டை கலவியாலே ஆஸ்ரித சுலபனாய்
அந்த சௌலப்யம் தான் பரத்வம் என்னும்படி திருமலையிலே வந்து சுலபனானவன் –
கோவிந்தன் உடைய வேங்கடத்தில் சேருமதாய் – புறம்பு ஓர் இடத்திலும் பொருந்தாதான
தூவியம் பேடை உண்டு -அழகிய சிறகை உடைய அன்னப்பேடை -அத்தோடு ஒத்து இருந்தவள் –
அன்றிக்கே –தூவியம்பேடை -என்று பெரிய பிராட்டியை சொல்லிற்றாய் -அவளோடு ஒத்து இருந்துள்ளவள்
என்னவுமாம் –கருட வாஹனன் லஷ்மி பதி -என்கிற இவை இப்போது சொல்லுகிறது என் என்னில் –
சௌலப்யம் சொல்ல நினைத்து -அது குணம் ஆகைக்கு அடியான பரத்வத்தை சொல்லி -பின்பு-அந்த சௌலப்யம் எல்லையில் வந்தார் –
கண்களாகிய துணை மலரே -கண்கள் என்ற வ்யபதேசத்தாலே
ஒன்றுக்கு ஓன்று ஒப்பாய் இருப்பன -இரண்டு பூக்கள் ஆயிற்றின -கண்களாய  துணை மலரின் பாரிப்பு-காவியும் நீலமும் வேலும் கயலும் பல பல வென்றாவியின் தன்மை யளவல்ல –
ஸ்வாபதேசம் –இத்தால் -திருமலையிலே வந்து நிற்கிறவனுடைய சீல குணத்திலே
வித்தராய் இருக்கிற ஆழ்வார் படி போக்தாக்கள் அளவல்ல -என்று ஸ்ரீ வைஷ்ணவர்கள்
சொல்லுகிற பாசுரத்தை பார்ஸ்வச்த்தர் பாசுரத்தால் தாம் அனுபவிக்கிறார் –
அவன் தன்னோபாதி பெரியனாய் -வியம -விஸ்மயநீயமான – வியாபாரங்களை உடைய -புள் -பெரிய திருவடியை -அசுரரைச் செற்ற மாவியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன்-வேங்கடம் சேர் தூவியம் பேடை அன்னாள் கண்களாய துணை மலரினுடைய பாரிப்பு -காவியும் நீலமும் வேலும் கயலும் பல பல வென்றாவியின் தன்மை யளவல்ல -என்று அந்வயம் –
காவி –என்கிற நிறத்தாலே -ராகத்தை சொல்லி பக்தி நிஷ்டரையும் –
நீலம் -என்ற   அஞ்ஞனத்தாலே -பிரகாசத்தை சொல்லி -ஞான நிஷ்டரையும் –
வேலும் கயலும் -என்ற சகாரத்தாலே -கர்ம நிஷ்டரையும் –
எல்லாரையும் ஜெயித்து இருக்கும் ஆழ்வார் உடைய ஞானம் என்றபடி –
கடைக் கண் சிகப்பினால் செங்கழு நீரையும்
கரு விழியின் கருமையினால் -கரு நெய்தலையும்
நோக்கின் கூர்மையினால் வேலாயுதத்தையும்
ஆகார சௌந்தர்யம் -கெண்டைகளையும் –
இப்படி மற்று உள்ள குணங்களினால் மற்ற வஸ்துக்களையும் –
அதிசயித்து -என் ஆத்மாவையும் அபகரித்து -எனக்கு ரஷகனான ஸ்ரீ ய பதியையும்
வசீகரிப்பதாய் வியாபிக்கத் தொடங்கிற்று -ஆகையால் நான் இதன் நின்றும் மீள சக்தன் ஆகிறிலேன்-
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: