திரு-விருத்தம்-66-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை
தலைமகள் கண் அழகில் ஈடுபட்ட தலைமகன் வார்த்தை இதுவும்

தலைவன் பாங்கனுக்கு கழற்றெதிர் மறுத்தல்-

உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்வினவாம் எரி நீர் வளி வான்
மண்ணாகிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாள்
கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே – -66 – –
பாசுரம் -66-உண்ணாது உறங்காது உணர்வுறும் எத்தனை -தலைவன் தோழன் பேச்சை மறுத்தல் –ஆராவமுதே -5-8-
வியாக்யானம் –
உண்ணாது இத்யாதி -பிராக்ருத போகங்களால் தரியாதாராய் -பிரக்ருதி-ப்ராக்ருதங்கள்-த்யாஜ்யம் -என்னும் புத்தியை உடையராய் -அவ் வாத்மா வஸ்து தான் ஸ்வ தந்த்ரம் -என்று
இருக்கை யன்றிக்கே -ஆத்மா யாதாம்ய ஜ்ஞான பூர்வகமாக -ஈஸ்வர ஜ்ஞானத்தை உடையராய் –
இது அவனுக்கு பிரகாரம் -என்று இருக்கும்படி -பரம யோகம் கை வந்துள்ள அவர்களுக்கும் –
எண்ணாய் மிளிரும் இயல்வினவாம் -அவர்களும் இக்கண்ணுக்கு இலக்கானாராகில்
அவர்களுக்கும் ஆஸ்ரயமான பரத்வம் தன்னையும் காற்கடை கொண்டு – இத்தையே
அது அது -என்று எண்ணும்படி பிரகாசிக்கையே ஸ்வ பாவமாய் உள்ளன –
எரி இத்யாதி -காரணமான பூத பஞ்சகங்களும் கார்ய ஜாதத்துக்கு எல்லாம்  உப லஷணம்-
அக்நி-நீர் -காற்று -ஆகாசம் -பூமி -இவை அடைய தனக்கு விபூதியாக உடையவன் –
எம்பெருமான் -அவனுடைய விபூதி யோகம் தமக்கு பேறாய் இருக்கிறபடி –  அவனுடைய
குணங்களோபாதி   விபூதி யோகமும் தமக்கு உத்தேயமாய் இருக்கிறபடி –
தனது வைகுந்த மன்னாள் -மானாதி போல் ஆவது அழிவதாம் விபூதி போல் அன்றிக்கே -ஒரு நாளும் அழியாததாய் -அவனுக்கு அசாதாரணமாய் -அந்தரங்கமாய் இருக்கும்
நித்ய விபூதி உடன் ஒத்து இருக்கிறவள் –
கண்ணா இத்யாதி -அப்படிப் பட்டவள் பக்கலிலே வந்தவாறே –
பிரதான அவயவகமாய் -என் பக்கலிலே வந்தவாறே -அசேத்யமாய் -அதாஹ்யமாய் -அழியாதாய்
இருந்துள்ள ஆத்மா வஸ்துவாய் -பாதகமாம் இடத்தில் ஸ்வதந்த்ரமாய் -கண்ணுக்கு விஷயமாய் நின்று
பாதகம் ஆகா நின்றன –
அரு வினையேன் -ரஷகம் ஆனவை வே பாதகமாம் படி பாபத்தை பண்ணினேன் –
உயிரான காவிகளே -அவள் பக்கலிலே வந்தவாறே கண்ணாய் -என் பக்கலிலே வந்தவாறே உயிராய் –
இவை தான் நிரூபித்த வாறே வடிவு சில காவிகளாய் இரா நின்றன –உயிரான காவிகளே  -உயிர் தான்-கொண்டு நின்று பாதகம் ஆகுமா –
ஸ்வா பதேசம்
இத்தால் ஆழ்வார் உடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை கண்டு அனுபவிக்கும்
பாகவதர்களுக்கு -தேவு மற்று அறியேன் -என்னும் படி இறே இருப்பது -அவர்கள் அதை ஆதரிக்கிறது-பகவத் சம்பந்தத்தால் இறே -அதுக்கு அடியான பகவத் விஷயத்தை அநாதரித்து -இவரை ஆதரிக்க-வேண்டும்படி இவருக்கு ஸ்ரீ வைஷ்ணத்வம்  தலை நிரம்பின படியை சொல்கிறது -சரம அவதியை-கண்டு அனுபவித்தவர்கள் பிரதம அவதியில் நில்லார்கள் இறே –
எரி நீர் வளி வான் மண்ணாகிய எம்பெருமான் தனது வைகுந்த மன்னாள் கண்ணா
அருவினையேன் உயிரான காவிகளே -உண்ணாது உறங்காது உணர்வுறும் எத்தனை
யோகியர்க்கும் எண்ணாய் மிளிரும் இயல்வினவாம்-என்று அந்வயம் —
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: