திரு-விருத்தம்-65-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
 தலை மகள் நோக்கி வீடுபட்ட தலைமகன் -அக் கண்கள்  தனக்கு பாதகமானபடியை
பாங்கனுக்கு சொல்லுகிறான் –

தலைவி நோக்கின் வாசி கண்டு தலைவன் குறிப்பறிந்து உரைத்தல் –

கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று ஒரோகரும
முற்றுப் பயின்று செவியொடு உசாவி உலகமெல்லாம்
முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணா யெம்மை உண்கின்றவே – – -65 –
பாசுரம் -65-கற்றுப் பிணை மலர்க் கண்ணின் குல ம் வென்று -தலைவியின் கண்கள் கவர்ந்ததைத் தலைவன் கூறல் –நோற்ற நோன்பு -5-7
வியாக்யானம் –
கற்றுப் பிணை மலர் -கன்றான மான் -முக்தமான மானுடைய கண் –
மலர்க்கண் -மலர் போல் இருக்கிற கண் என்னுதல் -விகசிதமான கண் என்னுதல் –
குலம் வென்று -அஜ்ஜாதியாக வென்று
ஒரோகருமம் இத்யாதி -ஒரோ கார்யத்திலே உற்று -அதிலே நெருங்கி –
அதை செவியொடு உசாவி -சர்வ விஷயமாக ஓர் இடத்திலும் பற்று இன்றிக்கே இராமே -ஒன்றிலே துணிந்து -அதிலே நெருக்கி அத்தை தேசிகரோடே-போத யந்த பரஸ்பரம் -பண்ணுவாரைப் போலே-இவனையே ச விஷயமாக கடாஷிப்பது -இவன் பார்த்தவாறே கண்ணை மாற வைப்பதா-இருந்தபடி -யான் நோக்கும் காலை நிலை நோக்கு நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும் -என்கிறபடியே –
உலகம் எல்லாம் இத்யாதி -சர்வ ரஷகனாவன் திருவடிகளில் இருந்து -அவன் எல்லைக்குள்ளே-இருந்ததாயிற்று பாதகம் ஆகிறது –
உற்றாம் உறாது மிளிர்ந்த -மாறுபாடுருவும்படி இவனை நோக்குவது –
அந் நோக்கிலே பரவசனாய் -இவன் பார்த்தவாறே அந் நோக்கை மாற வைப்பதாக கொண்டு-மிளிரா நின்றுள்ள –
கண்ணா யெம்மை உண்கின்றவே -கண் என்கிற வ்யபதேசத்தாலே -ஒரு பாதக
பதார்த்தம் என்னை நலியா நின்றது –
ஸ்வா பதேசம்
-இத்தால் ஆழ்வார் படியை கண்டவர்கள் இருக்கிற படி இறே இது –
கற்றுப் பிணை மலர்க்கண்ணின்-குலம் வென்று -என்கிற இத்தால் கார்ய புத்தி இல்லாத மௌக்த்யத்தை -நினைக்கிறது
-ஒரோ கருமம்-உற்ற பயின்று -என்ற இத்தால் பிரபத்தியை சொன்னபடி இறே
-இது பின்னை ஜ்ஞான கார்யம் அன்றோ –
கீழ் சொன்ன மௌக்த்யத்துக்கு சேர்ந்த படி எங்கனே என்னில் -அதில் கர்த்தவ்யாத புத்தி இன்றிக்கே-இருக்கையை நினைக்கிறது -இது தன்னை செய்யா நிற்கச் செய்தே -சாதனத்தில் அன்வயியாதே-ஸ்வரூபத்தில் அந்தர்பவித்து இருக்கும் இறே
-கண்ணா இத்யாதி -சொன்ன படியை உடையராய் இருக்கிற
இருப்பு தான் கண்டவரை ஈடுபடுத்துகிற படியை சொல்லுகிறது –
கற்றுப் பிணை மலர்க்கண்ணின் குலம் வென்று இருப்பதாய் -ஒரோ கருமமும் உற்றுப் பயின்று –
செவியொடு உசாவினால் போல் இருப்பதாய் -உலகம் எல்லாம் முற்றும் விழுங்கி உமிழ்ந்த
பிரானார் திருவடிக் கீழ் இருந்து -உற்றும் உறாத மிளிர்ந்த கண்ணா யெம்மை உண்கின்ற -என்று அந்வயம் –
—————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: