திரு-விருத்தம்-64-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை
 திருக் கண்களால் குளிர கடாஷித்தான் என்று இறே கீழ் நின்றது -அல்லாதார் மேல் வையாதே-தம்மேல் விசேஷ கடாஷம் பண்ணுகைக்கு நிபந்தனம் என் -என்று ஆராய்ந்தார் -அஹ்ருதயமாக-திரு நாமத்தை சொன்னேனே என்ன -அத்தாலே ஆகாதே -என்கிறார் –
தலைவன் பேர் கூறித் தரித்து இருத்தலைத் தலைவி தோழிக்கு கூறி இரங்கல்
இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் யாமுமவா
ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே – -64 – –
பாசுரம் -64-இருக்கு ஆர் மொழியால் நெறி இழுக்காமை -தலைவன் பேர் கூறி தரித்து இருத்தலைத் தலைவி தோழிக்குக் கூறி இரங்கல் –பாமுரு மூவுலகும் -7-6-
வியாக்யானம் –
இருக்கார் மொழியால் -இருக்கில் ஆர்ந்த மொழியாலே -பிரதிபத்தாக்களுடைய புத்தி விசே ஷங்களாலே-அறை வயிறாகவும் பதறாகவும் பார்க்கலாயிருக்கும் இடங்கள் உண்டாய் இருக்கும் ஆயிற்று –
வேதங்களிலே அவன் விபூதியை பரக்க சொல்லா நின்றால்-அதிலே ஏக தேச பூதரானவர்கள்
பக்கலிலே பரத்வ பிரதி பத்தியை பண்ணியும் –  ப்ரசம்சாபரம் என்றும் சொல்லா நிற்பார்கள் –
அவன் ஸ்வரூப ரூப குண விபூதிகளை பேசுகிற இடத்தில் -ஸ்வரூப ரூப குண விபூதிகளில்
பிரமிப்பார்க்கும் பிரமிக்க அவகாசம் இல்லாதபடி பேசுகிற அநந்ய பரமான நாராயண அநு வாகாதிகளை
ஆயிற்று -அதில் ஆர்ந்த மொழியாக சொல்லுகிறது -சர்வே வேதாய த்ரைகம்பவந்தி -என்ற வாக்யங்களுக்கும்
ஒருவனே வாச்யன் ஆகை இறே உக்தம் –உத்க்ருஷ்ட பதார்த்தங்களுக்கு வாசகமான சப்தங்களை
இவ் அநு வகத்தில் நின்றவன் பக்கலிலே பிரயோக்கிகை யாலே எல்லாம் அவனையே சொல்லுகிறதாக-வேணும் இறே –
நெறி இழுக்காமை -பகவத் சமாராதனம் ஆகிற வைதிக மரியாதையை தப்பாமே –
உலகு அளந்த திருத் தாளிணை -இவை அறியுமாம் -அறியாது ஒழியுமாம்  -என் உடம்பை நான் விடேன் -என்று ச்வீ கரிக்கும் ஸ்வா பாவனாய்  உள்ளவனை -இவை அறியாது இருக்கச் செய்தே -தானே எல்லை நடந்து-மீட்டுக் கொண்டான் இறே –
நிலத் தேவர் வணங்கும் -சம்சாரத்தில் வர்த்தியா நிற்கச் செய்தே -விண்ணுளாரிலும்
சீரியர் -என்னும்படியான பூஸூரர்  ஆனவர்கள் -உலகு அளந்த திருத் தாளினை நெறி இழுக்காமை வணங்குவர் –
யாமும் -அவர்கள் உடைய பரிகரம் இன்றிக்கே இருக்கிற நானும் –அவா ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து –
சப்தாதி விஷயங்களில் உண்டான அவாவை -பகவத் விஷயத்தில் ஒருங்க பண்ண ஒட்டாத பாபத்தோடும்-அத்தை
அனுஷ்டித்த என்னோடும் கூட நொந்து -இப்படி இருப்பதொரு பாபம் உண்டாவதே – இத்தை அனுஷ்டிக்கைக்கு-நான் ஒருவன் உண்டாவதே -என்று நொந்து
-கனி இன்மையில் கருக்காய் கடிப்பவர் போல் -நெறி இழுக்காமை
வணங்கும் படி அவர்கள் தம் பாவம் எனக்கு இல்லை யாகிலும் -கனி இல்லாமையாலே கருக்காய்-மெல்லுவாரைப் போலே –பழம் இல்லாமையாலே பசும் காயைக் கடிப்பாரைப் போலே –
திரு நாமம் சொல் கற்றனமே -இதில் அர்த்த அனுசந்தானம் எனக்கு இல்லை –

 -இதில் நான் உட்புகாத நிலை பார்க்கிறிலேன் -நிர்ஹேதுகமாக கடாஷித்தான் இத்தனை -அன்றிக்கே -அவா -இத்யாதி –பகவத் விஷயத்தில் அபிநிவேசத்தை அங்கு நின்றும் மீட்டு இதர-விஷயங்களிலே மடை மாற ஒட்டாத வினை உண்டு -பக்தி -அத்தோடும் -இப்போது பகவத்-அலாபத்தாலே படுகிற கிலேசத்துக்கு ஹேதுவாகையாலே பக்தி யை வினை என்னலாம் இறே –

அநிஷ்டாவஹம் பாபம் இத்தனை இறே -இது இல்லாதார் உண்டு உடுத்து சுகமே திரியா நின்றார்கள் இறே
கனி இன்மையால் கருக்காய் கடிப்பார் போல் -கனி இல்லாமையால் கருக்காய் கடிப்பார் போல் ஆயிற்று
இவருடைய அபிநிவேசத்துக்கு திரு நாமம் -அவனைக் கண்ணாலே கண்டு கையாலே அணைக்க-ஆசைப்பட்டாருக்கு  அவன் பேரைக் கொண்டு என் செய்வார்
-அன்றிக்கே

-கனி இன்மைக்கு இங்கனே பொருள் ஆகவுமாம் –

மேல் கனி இன்றிக்கே ஒழியும்படி முன்பே கருக்காய் கடிப்பாரைப் போலே -நித்ய சூரிகளுக்கு போக்கியம்
அன்றிக்கே ஒழியும்படி இவ்வஸ்துவை  நான் பேசி அழித்தேன் என்று ஆகவுமாம் –
பரமே வணங்கும்படி -அவர்களைப் போல் -சதுர்த்த வர்ணத்வாத் -அதிகாரம் இல்லை யாகிலும்
-திரு நாமம் மாத்ரம் சொன்னேன் -இத்தை வ்யாஜ்யமாக்கி நிர்ஹேதுகமாக கடாஷித்தான் என்றபடி –
அவர்களைப் போல் பக்தி பரவசனாய் அனுபவிக்க பெறாமை இழந்தேன் என்றும் -அவர்கள் அனுபவிக்கும்
விஷயத்தை கிட்டி அவத்யத்தை விளைத்தேன் என்றும் விஷாதத்திலே தாத்பர்யம்  –
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: