திரு-விருத்தம்-63-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
 முறையோ -என்று கூப்பிட்டால் ஆறி இரான் இறே -வந்து குளிர நோக்கினான்
தலைவனை இயல் பழித்த தோழிக்குத் தலைவி இயல் பட மொழிதல் –
வண்ணம் சிவந்துள வானாடமரும் குளிர் விழிய
தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு
எண்ணம் புகுந்து அடியேனோடு யக்காலம் இருக்கின்றதே – – 63- –
 
பாசுரம் -63-வண்ணம் சிவந்துள வான் நாடு அமரும் -தலைவி தோழியிடம் தலைவன் இயல்பை எடுத்துக் கூறுதல் –இவையும் அவையும் -1-9-
-வியாக்யானம் –
வண்ணம் சிவந்துள -திருக் கண்களுக்கு சிவப்பு பிறப்பே ஸ்வா பாவமாய் இருக்கும் இறே -இப்போது
வண்ணம் சிவந்துள -என்கிற இத்தால் -பூர்வ அவஸ்தையிலும் வைவர்ண்யம் அத்தலையிலே
 என்னும் இடம் தோற்றுகிறது-ந ஜீவேயம் ஷணம் அபி – என்னும் ஆற்றாமையில் ஏற்றம் அத்தலை இறே –
ஆகையால் கண்ணும் -காணாமையால் வந்த சிவப்பில் வைவர்ண்யம் தீர்ந்தது இப்போது என்று-தோற்றும்படி இருக்கை –
வானாடு அமரும் குளிர் விழிய -த்ரிபாத் விபூதியாக -கண்ணில் குமிழி கீழே யாயிற்று
ஜீவித்து கிடப்பது -வானாடு அமரும்படியான -குளிர்ந்த கடாஷங்களை உடைய -அமருகை யாவது -இத்தாலே
உண்டு உடுத்து வர்திக்கை -தாரக போஷாக போக்யமும் -எல்லாம் இவையாய் இருக்கை –
தண் இத்யாதி -குளிர்ந்து மிருதுவாய் இருப்பதொரு -தாமரைப் பொய்கை பரப்பு மாறப் பூத்தால் போலே-யாயிற்று திருக் கண்கள் இருப்பது -தாம் இவையோ -தஸ்ய யத்ர கப்யாசம் புண்டரீக மேவ அஷணீ-என்று
கேட்டார் வாய் கேட்டு இருந்தோமே -அவை தான் இருக்கும்படி இதுவே –
கண்ணன் திருமால் -திருமால் கண்ணன் –
ஸ்ரீ ய பதி யாகையாலே  ஆஸ்ரிதர்க்கு கையாளானவன் -திரு முகம் தன்னோடு காதல் செய்தேற்கு -அழகிய
திரு முகத்தோடு வந்து -குளிர நோக்க நோக்க வேணும் என்று ஆசைப்பட்ட எனக்கு –எண்ணம் புகுந்து -நான் மநோ ரதித்த
படியே -கை புகுந்தது என்னுதல் -அன்றிக்கே எண்ணம் புக்கு என்றாய் -என்னுடைய மநோ ரதத்தை தானே ஏறிட்டு கொண்டு –
அடியேனோடு-ஜிதம் -என்கிறார் -அஹம் அர்த்தத்தின் உடைய ஸ்வரூபம் அடியேன் என்று போலே காணும் இருப்பது –
ஜீவ ஸ்வரூப பரமான வாக்யத்தில் படியே இறே சொல்லுகிறது -அது ஜீவ ஸ்வரூப பரமோ  என்றால் –
ஒமித் யாத்மானம் யுஞ்சித -என்றும் உண்டு -ஓங்காரோ பகவான் விஷ்ணு -என்றும் சொல்லா நின்றது இறே –
இக்காலம் -இப் பேற்றுக்கு வருமாறு முனை நாள் அறிந்திலேன் கிடீர் -இருக்கின்றனவே -நச புன ஆவர்த்ததே –
என்னும் பேற்றைப் பெற்றோம் என்று -தோன்றி இரா நின்றது -ஒரு நாளும் இனி பிரிக்கைக்கு –
சம்பாவனை இல்லை என்று தோற்றும்படி இரா நின்றது -பிரத்யஷ சாமாநகாரம் ஆகிலும் இவருக்கு
சாமானகாரமாக தோற்றாதே
-பிரத்யஷம் என்று இறே தோற்றுவது –
கண் அழகுக்கு தோற்று அடியேன்  என்கிறார் என்னுதல் -ஸ்வா பாவிகமான சேஷத்வத்தை இட்டு சொல்லுகிறார் ஆதல் –
குண க்ருதம் ஆதல் -ஸ்வரூபம் ப்ரயுக்தம்  ஆதல் –
சிறந்த வர்ணத்தை உடையவனாய் -வானாடு அமரும்படியான குளிர்ந்த கடாஷத்தை உடையவனாய் –
தண் மென் கமலத் தடம் போல் பொலிந்து இருப்பவனவான இந்த கண்களானவை -திருமால் கண்ணனுடைய
திருமுகம் தன்னோடும் காதல் செய்த என்னுடைய எண்ணம் புகுந்தபடி -அடியேனோடு -இக்காலம் இருக்கின்றது -என்று அந்வயம் –
ஜீவ ஸ்வரூப -ராஜ புருஷ -சப்த பிரதாந்யத்தாலே ஜீவ பரமும் -ராஜ்ஞா புருஷ  -என்கிற அர்த்த பிரதாந்யத்தாலே-பகவத் பரமுமாய் இருக்கும் என்றபடி -இருக்கின்றதே -அருளிச் செய்கிறார் –
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: