திரு-விருத்தம்-62-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
கீழ் கிருஷ்ண அவதார சௌலப்யம் இறே  அனுசந்தித்தது -அந்த அவதார சம காலத்திலேயே-தாம் உளராக பெறாமையாலே வந்த ஆற்றாமையாலே -கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி தசையை –
பிராப்தரானார் -அவள் பிறிவாற்றாமைக்கே மேலே கடலோசையும் பாதகமாக நின்றது
என்று திருத் தாயார் சொல்லுகிறாளாய்  இருக்கிறது-

தலைவியின் ஆற்றாமையைத் தோழி தலைவனுக்கு கூறுதல் –

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல்  ஈங்கிவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணைமேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே – – – 62-
பாசுரம் -62-இறையோ இரக்கினும் ஈங்கு ஓர் பெண் பால் -தலைவியின் ஆற்றாமையைத் தோழி தலைவனுக்குக் கூறுதல் –தேவிமார் ஆவார் -8-1-
 வியாக்யானம் –
இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இறையோ இரங்காது-
காலிலே விழுந்து சரணம் புகச் செய்தேயும் -சரணம் புக்கை தான் மிகையாம்படிக்கு ஈடே இறே இவள் தசை -என்று தசையை காட்டச் செய்தேயும் –
புறம்பொரு புகல் இல்லாதாள் ஒரு அபலை கிடாய் -என்னச் செய்தேயும் -ஏக தேசமும்  இரங்க்குகிறது  இல்லை -பாதகர்க்கு இத் தலைவி எளிமையை அறிவித்த அளவாய் விட்டதே -இத்தனை எளிதாகில் நமக்கு-நினைத்தபடி பாதிக்கலாம்  ஆகாதே என்று அதிலேயும் முறைக்கைக்கு உடலாயிற்று  –இது தான் சரணம் என்றால்

இரங்கும் அதும்  அன்றிக்கே -அம்புக்கு முகம் காட்டுமது இறே -அது ஆர்த்திக்கு இரங்கும் அது அல்லவே -அம்புக்கு இரங்கும் அது இறே -தனக்கு சரணம் என்றால்-இரங்கும் அது   அன்றே -மரணமானால்  இரங்கும் அது இறே –

அறையோ என நின்றதிரும்  கருங்கடல் –
இங்கனே வெளியிலே புறப்பட்டாயோ -அறையோ அறை என்று கூறுவாரைப் போலே இரா நின்றது –
கருங்கடல் -அகவாயில் சீற்றம் உடம்பிலே நிழல் இட்டால் போலே இருக்கை -சிவப்பும்கருப்பும் சினம் -என்னக் கடவது இறே –
ஈங்கு இத்யாதி -இவ் அவஸ்தா பந்னையான இவளுடைய அடக்கமானது –
உன் திருவருளால் அன்றி காப்பது அரிதால் -உம்முடைய பிரணயித்வத்தால் நோக்கும் எல்லை கழிந்தது இறே -ஸ்வரூப பிரயுக்தமான கிருபையாலே -அல்லது நோக்க ஒண்ணா தாய்  – வந்து விழுந்தது -ஊரார் சொல்லும் பழிக்கு
 அஞ்சி மீளும் எல்லையும் கழிந்தது
-முறையோ -தத் தஸ்ய சத்ரு சம்பவேத் -என்று இருக்கும் நிலை கழிந்து –
கூப்பிட்டு பெற வேண்டும் தசையை வந்து விழுந்தது –
அரவணை -இத்யாதி -செங்கற்கீரை கட்டி கூப்பிட்டாகிலும்
பெற வேண்டும் படி யாயிற்று வடிவு அழகும் படுக்கையும் –அரவணை மேல் -இவள் கடின ஸ்த்தலத்திலே கிடக்க-நீர் மெல்லிய படுக்கையை தேடிக் கிடக்கிறீரே –
முகில் வண்ணனேஇத்தை எம்பார் அருளிச் செய்கிற போது -இயலை
சொல்லுகிறவரைப் பார்த்து -இவ்வளவிலே முகம் காட்டாதே செங்கற்கீரை கட்ட இருக்கிறவர் -முதலிகளாய்  இருப்பார் –
தலையிலே பிரம்புகள் விழிலும்-முகில் வண்ணரே -என்னீர் -என்று அருளிச் செய்தார் -இருவருமான வன்று சேர நிற்கவும்-பிரிந்த வன்று தாய்க்கூற்றிலே நிற்குமவர் இறே இவர் –முகில் வண்ணன் -என்று ஏக வசனமாக சொன்னால் -நம்மை ஏக வசனமாக உதாசீனமாக சொல்லுகிறது -என் -என்றபடி –
ஆகையால் முகில் வண்ணர் -என்று பூஜ்யமாக சொல்லீர் என்று அருளிச் செய்தார் -என்றபடி -மிதுனமே உத்தேச்யமாய் இருக்க –
எம்பார் பிராட்டி பஷமாய் இருந்து ஈஸ்வரனை வெறுக்கிறது என் என்ன என்று அருளிச் செய்கிறார்
ஸ்வாபதேசம் –
இப்பாட்டால் ஸ்வரூபத்தாலே பெற இருக்கை அன்றிக்கே -ஸ்வரூபத்தை அழித்தாகிலும்
பெற வேண்டும்படி -ஆற்றாமை கரை புரண்டபடி சொல்லுகிறது –
கருங்கடல் இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இறையோ  இரங்காது  -அறையோ என நின்று அதிரும்-இனி ஈங்கிவள் தன் நிறையோ உன் திருவருளால் அன்றி காப்பது அரிது -அரவணை மேல் பள்ளி கொண்ட-முகில் வண்ணனே -முறையோ -என்று அந்வயம்
ஒ ஸ்வாமி  -இப்போது நீ இவள் இடம் அருள் செய்து -உன் வடிவு அழகை காட்டினால் அல்லது-இவள் ஜீவிக்க உபாயம் இல்லை -ஆகையால் ஒருகால் நீ வந்து தோற்ற வேணும் என்கிறார்கள் –
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: