திரு-விருத்தம்-61-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
பெருமான் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம் -என்று இவள் சொன்ன அநந்தரம்-திருத் தாயார் அத்தை அநுபாஷிக்கையாலே  -அத்தைக் கேட்டு -பிராட்டியான தசை போய் -தாமான தசையாம் படியாய் தரித்தார் -இவர் தம்மை தாம் உணர்ந்தால் இவர்க்குப் பாழி கிருஷ்ணாவதாரம்  இறே –
அங்கே  புக்கு -எத்திறம் -என்கிறார் –

தோழி தலைவனது நீர்மையைத் தலைவிக்கு கூறல் —

வாசகம் செய்வது நம் பரமே தொல்லை வானவர் தம்
நாயகன் நாயகர் எல்லாம் தொழுமவன் ஞால முற்றும்
வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால்
தாயவன் ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம்மிறையே – -61 – –
பாசுரம் -61-வாசகம் செய்வது நம் பரமே -தோழி தலைவன் நீர்மையைத் தலைவிக்கு கூறுதல் –பிறந்தவாறும் -5-10-
 வியாக்யானம் –
வாசகம் செய்வது நம்பரமே
எத்திறம் -என்று மோஹித்து கிடக்கும் இதுக்கு மேற்ப்பட பாசுரம் இட்டு சொல்லுமது
நம்மால் செய்யவாவது ஒன்றோ -என்றால் -பாசுரம் இட்டு சொல்ல ஒண்ணாது ஒழிகிறது என் என்னில் –
தொல்லை வானவர் உண்டு -யத்ர ருஷய ப்ரத்மஜாயே புராண -என்கிறவர்கள்-அவர்களுக்கு நிர்வாஹனானவன் –
ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று வாசகம் செய்வது நம் பரமே -என்கிறார் -வேதங்களோடு வைதிக-புருஷர்களோடு வாசி இல்லை ஆயிற்று பாசுரம் இட்டு சொல்ல மாட்டாமைக்கு –வேதங்களும் ஆநந்த குணத்தை சொல்ல
புக்க மாத்ரத்திலே இறே -யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீண்டது -தச்யதீ பரிஜானந்தி யோநீம் -தஸ்ய யோநீம் –
அகர்ம வச்யனாய் இருக்கிறவன் -பிறக்கைக்கு ஹேதுவான கர்மம் இன்றிக்கே இருக்க -வந்து பிறந்த-நீர்மையை -தீமதாமக்ரேசராய் அது தன்னில் இழிந்து அறியப்
போகாமையாலே -அத்தை சுற்றும் வந்து
ஆழம்கால் படா நிற்ப்பார்கள் –
-சர்வஞ்ஞனான தான் சொல்லிலும் -ஜன்ம கர்ம ச மே திவ்யம் -என்றும் -பரம்பாவம் –
என்றும் -சொல்லும் இத்தனை – இவருக்குத் தானே எத்திறம் என்று மோஹித்து கிடக்கை பிரகிருதி இறே –
தொல்லை வானவர் தம் நாயகன் -நித்ய சூரிகளுக்கும் அவ்வருகு ஆனவன் -நாயகர் எல்லாம் தொழுமவன் –
இவ்வருகிலாக்கரான  ப்ரஹ்மாதிகளும்-சதுர் தச புவனத்துக்கும் கடவோம் – என்று இருக்கும் அபிமானத்தை
பொகட்டு வந்து தொழா நிற்பர்கள் -பிறவாதவராய் இருக்கிறவர்கள் இறே -பிறக்கிற ஈஸ்வரனை வந்து
ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள் -மனுஷ்யர் கண்ணுக்கும் கூட தோற்றாதவர்கள் -ராவண வத அனந்தரத்திலே-வந்து ஸ்தோத்ரம் பண்ணினார்கள் –

 ஞாலம் இத்யாதி -பூமிப் பரப்பை அடைய ஓர் கோல் குத்தும் விடாதே -இரண்டடியால்-அளந்து கொண்டவன் -துரியோத நாதிகள் பாண்டவர்களுக்கு ஒரு கோல் குத்து நிலமும் விடோம் -என்று அபிமானித்ததால் போல் ஆயிற்று -இவனும் இந்த்ரனுக்காக மகா பலி இடம் ஒரு கோல் குத்து-நிலமும் விடேன் என்றபடி -இரண்டே அடியால் தாயவன் -மூவடியை இரந்து ஓர் அடியால் அவனை சிறை-இட்டு வைக்கைக்காக இரண்டு அடியால் அளந்து கொண்டவன் –ஆய்க் குலமாக வந்து தோன்றிற்று -பூமிப்-பரப்படைய தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டவன் -தன் காலின் கீழே துகை உண்ட ஒரு-பதார்த்தத்துக்கு தான் புத்ரனான இது -நம்மால் பாசுரம் இட்டு சொல்லலாவது ஓன்று  அன்று இறே  –

ஆய்க்குலமாய் -சம்சாரிகளில் ஒருவனுக்கு அல்பம் விவேகம் உண்டானால் -பால்யேன திஷ்ட்டா  சேத் –
என்று அபிஜன வித்யா வ்ருத்தாதிகளாய் வந்த அபிமானத்தை பொகடா நின்றான் இறே -அல்பம் விவேகம் உண்டாய்
இருக்கிற இவன் அகப்பட இத்தை பொகடா நிற்க -சர்வஞ்ஞனான தான் பரத்வத்தையும் கால்கடைக் கொண்டு
இக்குல அபிமானத்துக்கு அவ்வருகு ஓன்று அறியாதனாய் வந்து பிறந்தான் -ஜஜ்ஞ்ஞே விஷ்ணு சநாதன-
என்கிறபடியே -தன்னைப் பற்றினாரும் பழையருமாய்    பிறவாதருமாய் இருக்க அவன் வந்து பிறந்த
இதுக்கு பாசுரம் இடப்போமோ -வந்து தோன்றிற்று -ஆவிர்பூதம் -என்னக் கடவது இறே -இரண்டே அடியால் தாயவனாய்-நம் இறையாய் -ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று வாசகம் செய்வது-நம் பரமே -என்று அந்வயம் –
அரும் பதம்
வேயகமாயினும் –வேய் -என்று மூங்கில் கோலை சொல்லுகிறது –அகம் -உட்பட்ட அளவாய் -கோல் குத்தும் -என்றது-தாயாரும் அநு பாஷித்து -இவள் திறத்து என் நினைந்து இருந்தாய் -என் சிந்தித்தாய் -அவனை கேட்டு
கூட்டுகிறான் என்று தேறி இருந்து தானான தன்மை பிறந்து வேங்கடத்தாயன் படியில் ஈடுபடுகிறார் –
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: