திரு-விருத்தம்-60-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
தளப் பெரும் நீண் முறுவல் செய்யவாய் தட முலை வளப் பெரும் நாடன் மது சூதன்
என்னும் -என்றாளே -ப்ராப்த யௌ வநையாய்-பருவம் நிரம்பின இன்று இவள் சொல்லுக்கு கேட்க-வேணுமோ -பால்யமே பிடித்து இவளுக்கு இது அன்றோ யாத்ரை என்கிறாள் –

தலைமகள் இளமைக்கு செவிலி இரங்கல்

முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60- –
பாசுரம் -60-முலையோ முழு முற்றும் போந்தில -தலைவியின் இளமைக்குச் செவிலி இரங்குதல் –அறுக்கும் வினையாயின -9-8-
வியாக்யானம் –
முலையோ இத்யாதி -இவை எல்லாம் நிரம்பினால் சொல்லுகை பிராப்தம் -இறே –
முலையோ முழு முற்றும் போந்தில -முலைகள் சமைய வளர்ந்தன வில்லை என்று சொல்லும் அளவல்ல -முலை எழும் எல்லை இன்னது என்று கொண்டிக் கோல் நாடிற்றும் இல்லை –
மொய் பூம் குழல் குறிய -செறிந்து அழகியதாய் இருந்துள்ள குழல்கள் ஆனவை –குறிய -நாயகன்-பேணி சூழி யஞ்சுற்றினால்-கொண்டை முடிந்தால் –இவள் வினைகேட்டாலே குலைத்தால் அதுக்கு அவன் கால் பிடிக்கும்
அளவு அல்ல –  கொண்டை முடிக்க நீளம் போராது என்னுதல்
     கலையோ அரை இல்லை -உடுக்கும் இடம் அறியாள் –
நாவோ குழறும் -தாய் மாருக்கு சொல்லி
அவ்யக்தமானவற்றை அவள் பக்கலிலே கேட்கும் இத்தனை -ஐயர் ஆச்சி என்று சிலவற்றை கற்பிப்பர்கள் இறே
அவர்களுடைய தெளிந்த சொற்களில் காட்டில் இவளுடைய கலங்கின சொல்லே நன்றாய் இருக்கும்
கடல் இத்யாதி -இவ்விடத்தை பட்டர் அருளிச் செய்யா நிற்க -அல்லாத அவயவங்களினுடைய-நிரம்பாமையை சொல்லி வைத்து இதனுடைய பெருமையை சொன்னால் விரூபமாகாதோ -என்று ஜீயர் கேட்க -இதிலும் சிறுமையே காணும் சொல்கிறது -இங்கனே சொல்லலாவது தானும்     இன்று –
நாளை இது தானும் சொல்லப் போகாது -என்று அருளிச் செய்தார் — இப்படி விசதமாக பார்க்கிறது இந்த பால்யத்தில்-இத்தனை -யௌவனம் குடி புகுந்தால் ஒறுக்கிப் பார்க்குமது ஒழிய இப்படி நன்றாகப் பாராள் –ஆகையால்
இதுவும் பால்யத்துக்கு சூசகம் என்றபடி- கடல் சூழ்ந்த பூமிப் பரப்பு அடங்கலும் விலையாகப் போகும் என்னும் படிக்கு-ஈடாக வாயிற்று கண்கள் மிளிருகிறபடி –மிளிரும் -திரை மோதிக்கரையாலும்-வழிப் போக ஒண்ணாதபடி இரா நின்றது -களவு கலந்து -யௌவனம் குடிபுகுந்து -என்றபடி –
 நாயகனை ஒதுக்கிப் பார்க்குமது அன்றியிலே சர்வ சாதாரணமாக ஜனனியோடு காந்தனோடு-வாசியற பார்க்கிறவள் ஆயிற்று
இவள் பரமே -இவள் பருவத்துக்கு தகுதியோ -இது இவள் பரம் அல்ல –
இணக்கத்தின் பொல்லாங்கு -சஹவாசத்தாலே வந்தது -என்றபடி -சாய்விலாத குறுந்தலை –
பெருமான் மலையோ திருவேங்கடம் என்று -பர வ்யூஹாதிகளை விட்டு -திரு வேங்கடமுடையான்-பக்கலிலேயாய்-அவன் தன் அளவில் அன்றிக்கே   திருமலையே உத்தேச்யம் என்று சொல்லுகிற-பாசுரம் இவள் பருவத்துக்கு தகுதியோ –
 ஆனந்த குணத்தை பேசப்புக்கவாறே வேதங்கள் நிலம் அல்ல
என்று மீண்டது -இங்குத்தை சீல பிரசுர்யம்  நிலமல்ல என்கைக்கு நிலம் இல்லை இறே-அபரிச் சின்ன-வஸ்துவை -அர்ச்சாவதாரத்தில் சௌலப்யம் -பேசப் புக்கவாறே -அவை நிலம் அல்ல என்று கை வாங்கிற்று –
கற்கின்ற வாசகம் -சொல்லுகிற பாசுரம் என்னுதல் -அன்றிக்கே இவள் வாயாலே சொல்லும்படி-கேட்கைக்காகவே -தாங்கள் இவை தன்னை கற்பியா நிற்பர்கள் இறே -இவள் வாயனகள் திருந்த -என்னக் கடவது இறே – பெருமான் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம் இவள் பரமே -என்னுதல் –
அன்றிக்கே பெருமான் மலையான திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம் –ஒ  இவள் பரமே -என்னுதல் –
-இது என்ன ஆச்சர்யம் –
ஸ்வாபதேசம்
-பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்த-என்றும் -அறியா காலத்துள்ளே -என்றும் -சொல்லுகிறபடியே-
-அரும்பதம்
-இவருக்கு பகவத் விஷயத்தில் உண்டான ப்ராவண்யம் சத்தா பிரயுக்தமான படி -சொல்லுகிறது
முலையோ முழு முற்றும் –மீ மிசை யாலே ஒன்றும் இல்லை என்கிறது
இவள் இப்படி கூப்பிடுவது பால்யம் தொடங்கி உள்ளதாகையால் இது ஸ்வத ஸித்தம்-என்கிறார் —
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: