திரு-விருத்தம்-59-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
எட்டா நிலத்திலே ஸ்ரீ வைகுண்டத்திலே ஓலக்கம் கொடுத்து இருக்கை அன்றிக்கே -அவதரித்து இங்கே வந்து -சுலபனானான் என்றவாறே -தாம் பெற்றால் போலே இருக்க ஹ்ருஷ்டரானார் -அங்கே இருந்து இழக்கை அன்றிக்கே –

இங்கே வந்து கிட்டச் செய்தே -பேரா விட்டவாறே அவசன்னரானார் -அவ்வஸாதம் ஒரு பிராட்டி தசையை விளைவித்து –கலந்து பிரிந்து பிரிவாற்றாத் தலைமகள்-சம்பந்தம் உண்டாய் இருக்க -போக யோக்யமான காலத்தில் -வந்து உதவக் காணாமையாலே-இருள் பாதகமாகா நின்றது என்று சொல்லா நின்றாள் -என்று அவள் பாசுரத்தை திருத் தாயார்-சொல்லுகிறாளாய்   இருக்கிறது –

இரவு நீடுதற்கு ஆறாத தலைவியைப் பற்றி செவிலி இரங்குதல்

அளப்பரும் தன்மைய ஊழி யங்கங்குல் அந் தண் அம் துழாய் க்கு
உளப் பெரும் காதலின் நீளிய வாயுள ஓங்கு முந்நீர்
வளப் பெரு நாடன்   மது சூதன் என்னும் வல்வினையேன்
தளப் பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையே -59 –
பாசுரம் -59-அளப்பரும் தன்மை அவ் ஊழி அம் கங்குல் -இரவு நீடுதற்கு ஆற்றாத தலைவியைப் பற்றிச் செவிலி இரங்குதல் –முந்நீர் ஞாலம் -3-2-
வியாக்யானம் –
அளப்பரும் தன்மை யவ்வூழி யங்கங்குல் -ஊழி ஆகிற ராத்திரி  களானவை -அளக்க அரியத்தை-அளந்த திருவடிகளாலும் அளக்கப் போகிறதில்லை -அளக்கல் ஆகில் வந்து தோற்றானோ -அளக்க அரிதாகையை  ஸ்வபாவமாக உடையவன் —ஊழி யங்கங்குல் -ஊழி ஆகிற ஆகாரமே காணும்-நிரூபகமாய் இருக்கிறது -ஆனால் பரிச்சேதிக்க ஒண்ணாத வற்றையும் ஒரு பாசுரம் இட்டு சொல்ல ஒண்ணாதோ -என்ன –
அம் தண் அம் துழாய் இத்யாதி -அதனில் பெரிய என் அவா விறே–இதில் பெரிது என்னும் இத்தனை -பகவத் தத்துவத்தை விளாக்குலை கொண்டது இறே இவர் அவா –   -பகவத் ஆனந்தத்தை பரிசேதிக்க-புக்க வேதம் பட்டது படும் இத்தனை -இத்தை பரிச்சேதிக்கப் புக்காலும்  -நேதி நேதி -என்கிறபடியே
இதன்று என்னும் இத்தனை போக்கி -இப்படி என்று பாசுரம் இட ஒண்ணாது –
அம் தண் துழாய் உண்டு –
தோளில் இட்ட மாலை -அதுக்கு என் உள்ளத்திலே உண்டாய் -சர்வாதிகத்வத்தையும் விளாக்குலை கொண்ட-காதலினும் பெருத்து இருப்பனவாய் உள்ளது –

ஓங்கு முந்நீர் வளப் பெரு நாடன் மது சூதன் என்னும் –அவன் எல்லைக்கு புறம்பே இருந்து நோவு படுகிறேனோ-அவன் அசக்தியால் நோவு படுகிறேனோ-கடல் சூழ்ந்து இருப்பதாய் -வளப்பத்தை உடைத்தாய் இருந்துள்ள பெரு நாட்டை உடையவன் –மது சூதனன் -ரஷ்ய வர்க்கத்துக்கு களையான மதுவை நிரசித்தவன் -சம்பந்தம் இல்லாமையோ -விரோதி நிரசன சீலன் அல்லாமையாலேயோ -நான் இங்கனம் படுகிறது –

 வல் வினையேன் -இவள் வடிவு அழகைப் பார்த்தால் இப்படி கிலேசப்படுக்கைக்கு
ஓர் அடி இல்லையே –அத்தலை இத்தலையாய் -அவன் படக் கடவத்தை இவள் படா நின்ற-இதுக்கடி -காண்கிற என் பாபம் இறே -மத் பாபம் ஏவ -இவள் படுகிற வியசனத்துக்கடி என் பாபமாக-வேணும் என்கைக்கு ஹேது என் என்னில்
-தனப் பெரு இத்யாதி -இவள் நோவு படுகைக்கு இவள்
வடிவிலே ஏதேனும் குறி உண்டோ -என்கிறாள் –தளப்பு என்றது -தள வென்றாய் -முல்லை-யரும்பு போலே இருப்பதாய் -பெறுதற்கு அரியதாய் -புரவமே சாரு ததீம் -என்கிறபடியே-நாயகன் பெற ப்ரார்த்திக்குமதாய் -நாயகன் புக்க இடம் புக்கு -அவன் நெஞ்சை வடிம்பிடவற்றாய்-இருந்துள்ள முறுவலை உடைய –நீள் முறுவல் -என்றது -நரசிம்ஹத்தினுடைய அட்டகாசத்தை சொன்னது அன்று இறே –
ஒரு ஸ்திரீயினுடைய மந்த ஸ்மிதத்தை இறே சொல்லுகிறது -ஆனால் இப்படி பொருளாக வேணும் இறே –
எப்படி எனில் -அதனுடைய போக்யதையை –நீண்மை -என்கிறது -செய்ய வாய் -இத்யாதி -அம் முறுவலுக்கு-பிரபாகமான சிவந்த அதரத்தை உடையாள் என்னுதல் -அன்றிக்கே –மேல் தட முலை -என்று முலைகளினுடைய சுற்றுடைமையை சொல்லுகிறதாகையாலே-இது செவ்வையை சொல்லி – நேரே வளர்ந்த முலைகளை உடையாள் என்னுதல் –தட முலையே -விரஹத்தாலே தலை சாவி வெட்டின பின்பு காணும் இவ்வளவு சொல்லலாகிறது-
சர்வேஸ்வரன் வைத்த அவகாசம் போராது போலே இரா நின்றது –
தளப் பெரும் நீண் முறுவல்   செய்யவாய் தட முலை யானவள் -அளப்பரும் தன்மை
அவ்வூழி யங்கங்குல் அம் தண் அம் துழாய் குளப்பெரும் காதலில் நீளியவாயுள -என்னும் -அதுக்கு மேலே -ஓங்கு முந்நீர் வளப் பெரு நாடன் மதுசூதன் என்னும் வல்வினையேன் -என்று அன்வயம் –
ஸ்வா பதேசம்
-இத்தால் அனுபவ யோக்யமான சம்பந்தமும் ஸ்வரூப ஞானமும் உண்டாய் இருக்க
போக யோக்யமான காலமும் போகத்துடன் செல்லப் பெறாமையாலே வந்த ஆற்றாமையை-பார்ஸ்வத்தார் சொல்லுகிறார்கள்
மது சூதனன் -என்கையாலே ஸ்வரூப ஞானம் –
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: