திரு-விருத்தம்-58-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
கீழ் பிறந்த அவசாதம் எல்லாம் நீங்கும் படிக்கு ஈடாக -ஆஸ்ரித நாஸ்ரித விபாகம் இன்றி
எல்லார் தலையிலும் பொருந்தும்படியான திருவடிகளைக் காட்டி -ஆன பின்பு நமக்கு
ஆகாதவர் இல்லை காணும் -என்று ஆஸ்வசிப்பித்து-இப்படி எல்லாம் செய்ய செய்தேயும் -ஒன்றும் செய்யாதானாய் -அவன் நிற்கிறபடியை கண்டு  அத்தை பேசுகிறார் –

தோழி தலைவன் பெருமையை யுரைத்து தலைவியை ஆற்றுதல் –

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட வண்டத்து
உழறலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா
அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்களக்கின்றதே – 58-
பாசுரம் -58-கழல் தலம் ஒன்றே நிலம் முழுது ஆயிற்று -தோழி தலைவன் பெருமையை கூறி தலைவியை ஆற்றுதல் -திண்ணன் வீடு -2-2-
  
 வியாக்யானம் –

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று

மகாபலி பக்கலில் நின்றும் திருக் கையிலே நீர் விழுந்த போதே ஒரு திருவடிகளே பூமிப் பரப்பு அடங்கலும் -போய் விளாக்குலை கொண்டது –கழல் தலம் -பாத தலம்
ஒன்றே -அவன் வினைவும் வேண்டாதே திருவடிகள் தானே எங்கும் ஒக்க பரந்தது –
ஒரு கழல் போய் –
மற்றை ஒரு திருவடிகளும் போய்-நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது –
அவதரித்து மீண்டும் போய் -தன்னுடை சோதியில் புக்காலும் -அவன் ஒருவன் உளன் என்று-விஸ்ரம்பித்து அவன் நிழலில் ஒதுங்கலாம் படி -யாகாசாவகாசம் உள்ளிட எங்கும் போய் பரம்பிற்று –
நிழல் தர –
பள்ளம் உள்ள இடம் எங்கும் வெள்ளம் பாயுமா போலே -வெளி உள்ள இடம் எங்கும்
போய் வியாபித்தது -வாசுதேவ தருச்சாயா —
எங்கும் ஒக்க வ்யாப்தமாய் இருப்பதொரு வ்ருஷத்தின் உடைய நிழல் ஆயிற்று –
நாதி சீதா -இத்யாதி -மிக வெப்பதும் செய்யாதே -மிக வவ்வ விடுவதும் செய்யாதே –
நரகம் ஆகிற பெரு நெருப்பையும் விலக்கவற்று
சாகிமர்த்தம் ந சேவ்யதே – -இந் நிழலுக்கு புறம்பாய் இருப்பதொரு நிழல் உண்டாய் அங்கே ஒதுங்கவோ –
இது நன்று அல்ல என்னவோ -இதின் உள்ளே இருந்த அநிச்சையை சொல்லும் இத்தனை –
திருமால் இரும் சோலை எந்தாய் -உன் பாத நிழல் அல்லால்  மற்றோர் இருப்பிடம்
நான் எங்கும் காண்கின்றிலேன் –ஆஸ்ரித ரஷகனுமாய் -ஆஸ்ரித விரோதி நிரசகனுமாய் இருக்கையாலே –
உன் திருவடிகளின் நிழல் ஒழிய வேறு எனக்கு ஒதுங்கலாவது  ஒரு நிழல்  கண்டிலேன் –
நிவாச வ்ருஷ ஸாதூநாம்-வாலிக்கு சுக்ரீவனோடு நீ விரோதிக்கை கார்யம் அல்ல காண்-அங்கத பெருமாள் காட்டிலே விளையாட போன இடத்தில் அவனுக்கு ஓர் அபாஸ்ர்யம் உண்டாக-கேட்டு வந்து சொன்னான் காண் -என்ன
அபாஸ்ர்யம் ஆகிறவர் தாம் யார் -என்ன -பெருமாள்-என்றாள் –
ஆனால் அவர் பின்னை நமக்கு ஆபாசயம் ஆக மாட்டாரோ-என்ன -சொல்லுகிறாள்
நிவாச வ்ருஷ ஸாதூநாம் -இந் நிழலிலே ஒதுங்குவோம் என்பாருக்கு நிழலாய் காண் இருப்பது –
பூவாயும் பழமாயும் நிழலாயும்-தான் வெய்யிலை சுமந்தும் -பிறர்க்கு இடம் கொடுத்தும்
தன் கீழே இருந்து தன்னை அழிய    செய்ய நினைப்பார்க்கு பல பிரதமாயும் -இவை எல்லாம் உண்டு இறே-அதுக்கு -நான் தான் அவர்க்கும் ஏதேனும் அநிஷ்டம் உண்டோ -செய்தது நமக்கு நிழலாக ஒதுங்க
தட்டு என் -என்ன -ஆபன்நாநாம் -ஒதுந்கோம் என்னாமை போராது காண் –  ஆபன் நராகவும் வேணும் காண் –
நான் தானா பன்னன் அன்றோ – உடன் பிறந்தான் சத்ருவாம்படி அன்றோ நம்முடைய நிலை -என்ன –
ஆர்த்தா நாம் -ஆபன் நராக இருக்கவே அமையாது காண் -ஆபத்தை இசையவும் வேணும் காண் –
நமக்கு ஒரு ரஷகன்  வேணும் என்று இருக்க வேணும் காண் என்ன -இவர் அவனுக்கே புகவாய்
நின்றாகில் நமக்கு இப்படி இருப்பான் ஒரு அபாஸ்ரயத்தை தேடிக் கொள்கிறோம் -என்ன
யச சச்சைக பாஜனம்-இனி இங்கன் இருப்பதொரு நிழல் இல்லை காண் ஒதுங்க –

நாலுவகையாலே மூன்று அதிகாரிகளை ஸ்ரீ கீதையிலே சொல்லிற்று இறே

அவர்களை சொல்லுகிற  இதில்  ஒரு ஸ்திரீ வசனமாய் இருக்க இதுக்கு இத்தனை கருத்து-உண்டாக வற்றோ என்னில் -வேத உப ப்ருஹ்மண அர்த்தமாக பிரவ்ருதமான ப்ரபந்தம்-ஆகையாலே -கோல் விழுக்காடாலே அவையும் சம்பவிக்கும் இறே -கபக்திர் விசிஷ்யதே -என்கிற ஞானியை சொல்கிறதாய்-முந்துற சம்சாரத்தில் நொந்து –    பிரகிருதி-சம்பந்தத்தை அறுத்து கொள்ள வேணும் என்று இருக்கிற ஆத்ம ப்ராப்தி காமனையாய்-அநந்தரம் பிரஷ்ட ஐஸ்வர்ய காமனையாய்    -இது பிரதமமாக ஐஸ்வர்யத்தை பெற இருக்கும்-அவனுக்கும் உள்ள  லஷணமாய் இருக்கிறது –
நீண்ட வந்ததது உழறலர் ஞான சுடர் விளக்காய் –
பரப்பை உடைத்தான அண்டத்தை அடைய புக்குழருகையாலே விகசிதமாய் இருந்துள்ள ஞானம்
ஆகிற பிரகாசம் ரூபம் ஆகிய தீபத்தை உடையவனாய் -எல்லார் தலை மேலேயும் திருவடிகளை
வைத்து -தன் பேறாய்-அத்தால் வந்த அலப்ய லாபத்தாலே  சஹஜ சார்வஜ்ஞமும் விகசிதம் ஆயிற்று –
உயர்ந்தோரை இல்லா –
ப்ரஹ்மாதிகளும் திருவடிகளின் கீழே அகப்படுகையாலே -பரன் -என்பார் இல்லை யாயிற்று –
அழறலர் தாமரைக் கண்ணன்-
அழற்றிலே  நின்று அலர்ந்த தாமரைப் பூ போலே இருந்த உள்ள திருக் கண்களை உடையவன் –
தச்யதாகப்யாசம் புண்டரீகம் மேவ அஷணீ -என்னக் கடவது இறே
 என்னோ விங்களக்கின்றதே –
அளந்தால் வரும் விகாசம் காணா நின்றோம் இறே
அளக்கைக்கு ஓர் அவகாசம் காண்கிறிலோம்
நின்ற நிலையிலே நின்றாரை -அளந்தார் -என்ன ஒண்ணாது இறே
அடிமாறி இடில் இறே அளந்தது ஆவது –
இவன் இங்கு அளந்தானாக ஒன்றும் காண்கிறிலோம்  என்னுதல்  –
அன்றிக்கே –
நிர்ஹேது கமாக எல்லார் தலையிலும் திருவடிகளை வைக்க செய்தே ஒன்றும் செய்யாதால் போல்
இன்னமும் பாரியா நின்றான் -என் செய்யாதானாய் திரு உள்ளத்தால் இங்கன் பாரிக்கிறது –
என்னோ விங்களக்கின்றதே –
கால் பெருத்து போலி சிறுத்தாலும் அளப்பார் உண்டோ-
மரக்கால் பெருத்து நெல் அல்பமானால் அளப்பார் உண்டோ-
ரஷ்ய வர்க்கம் சுருங்கி ரஷகன் பாரிப்பே விஞ்சி இருக்கிறது என்றபடி-
அரும் பதம் –
ஸாதூநாம் ஞானியை சொல்லுகிறது-ஆபன் நானம் கேவலரை
ஆர்த்தானாம் த்ரிவித ஐ ச்வர்யார்த்திகளை  சொல்லுகிறது
ஆழ்வாரை கண்ட ப்ரீதி அளந்த அன்றையில் ப்ரீதி போலே இருந்தது என்றபடி
அன்றிக்கே
என்னை விஷயீகரித்த பின்பும் வேறு ஒரு விஷயம் உண்டோ  –
வேறு ஒரு அரும் பதம் -வியலிடம் என்கிற பாட்டில் -குண ஞானத்தினாலே தரிக்கை யாகிற-சம்ச்லேஷம் ப்ரவ்ருத்தம் ஆகையாலே -தானான தன்மை பிறந்து -அந்த குணம் தானும் சௌசீல்யம் ஆகையாலே-அத்தை இப்பாட்டில் அருளிச் செய்கிறார் என்று சங்கதி உட் கொண்டு அருளிச் செய்கிறார் –
கீழ் -இத்யாதி -அவசாதம் எல்லாம் என்றது -இனி இதுக்கு அவ்வருகு இல்லை என்னும்படி –
  1- பண்டும் பல பல வில் பட்ட வியசனம் என்ன

2-மலை கொண்டு என்றதில் கார்ச்யம் என்ன

3-வர்ஷா காலத்தில் வந்த கிலேசம் என்ன
4-வாராயின முலையாளில் மோஹம் என்ன –
5-வீசும் சிறகாலில் தூஷ ப்ரேஷ்ணம் என்ன -இவை எல்லாம் என்றபடி –
விளாக்குலை கொண்டது -வியாபித்தது
பூவாயும் இத்யாதி -பூ -போக்கியம் -பழம்- தாரகம் -நிழல் -போஷகம்
தாத்பர்யம் -கீழ் பகவத் குண அனுசந்தானம் ஆகிற பகவத் சம்ச்லேஷத்தை பெற்று -ஆற்றாமை-நீங்கி -தாமான நிலையில் இருந்து -அவனுடைய சீலாதி குணங்களைப் பேசுகிறார் இப்பாட்டில்-த்ரி விக்கிரம அவதாரத்தில் ஆஸ்ரிதர் அநாஸ்ரிதர் என்றும் பாராமல் சகல பிராணிகள் உஜ்ஜீவிப்பைக்காகாக
அவர்கள் தலையில் திருவடி படும் படி -ஓர் திருவடியினால் பூமியை அளந்தான் –
இத் திருவடி சேஷி என்றும் -நாம் சேஷ பூதர் என்றும் எல்லாரும் அறிக்கைக்காக வும் –
தன் திருவடி கீழே  சம்சார ஆபத்தரான இவர்களை அகப்படுத்தி -ஆஸ்வசிப்பைக்காகாவும்
மற்று ஒரு திருவடியை ஆகாசத்திலே தூக்கி -அவ் ஆகாசத்தை அளந்தான் –
இப்படி சர்வஞ்ஞனாய் -பராத்பரனான புண்டரீ காஷன் -இவ் விபூதியிலே சேர்ந்த என்னையும்-முன்னமே அளந்து இருக்க இப்போது அத் திரிவிக்கிரம அவதாரத்தை எனக்கு பிரகாசிப்பத்தது -மறுபடியும் எதை அளைக்கைக்காவோ தெரிய வில்லை –
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: