திரு-விருத்தம்-57-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
சம்ச்லேஷித்து விச்லேஷமும் வ்ருத்தம் ஆயிற்று-
ஒரு கார்ய புத்யா பிரிந்தான் ஆகிலும் -ந ஜீவேயம் ஷணம் அபி -என்னும்படி இறே  தலை மகன்-ஆற்றாமை இருப்பது -அவனுடைய ஆற்றாமையால் வந்த தளர்தியை கண்ட பாங்கானவன் –
லோக யாத்ரையில் ஒன்றுக்கு ஈடுபடாத நீ ஒரு விஷயத்துக்காக இப்பாடு படும் அது
தலைமைக்கு போராது காண் -என்று திருத்தப் பார்க்க –
அவளுடைய நோக்குக்கு இலக்கானார் படுமது அறியாமை காண் நீ இப்படி சொல்லுகிறது –
நீயும் அவள் நோக்குக்கு இலக்கு ஆனாய் ஆகில் -இப்படி சொல்லாய் காண் -என்று அவன்-கழறினததை  மறுத்து வார்த்தை சொல்லுகிறான்
கழற்றெதிர் மறுத்தல் என்று கிளவி-

தலைவன் பாங்கனுக்கு கழற்று எதிர் மறுத்தல்

புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை வல்லி யொன்றால்
விலக்குண்டுலாகின்று வேல் விழிக்கின்றன கண்ணன் கையால்
மலக்குண்டமுதம் சுரந்த மறி கடல் போன்றவற்றால்
கலக்குண்ட நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே     – -57-
பாசுரம் -57-புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை -தலைவன் தோழனிடம் எதிர்வார்த்தை பேசுதல் –முடியானே மூவுலகும் -3-8-
புலம்-காணப்படுகிற -விளங்கா நின்ற-/ கழறலரே -நிர்பந்தியார்களே
வியாக்யானம் –

பாங்கன் -தோழன் –

புலக்குண்டல —  இத்யாதி-இவன் செய்வது என் என்று அவன் புத்தியிலே படுகைக்காக அவை தன்னை பேசுகிறான்-சர்வ இந்திரிய அபஹார ஷமமான குண்டம் உண்டு -கர்ண பூஷணம்-அத்தை உடைத்தாய் இருப்பதொரு தாமரைப் பூ போலே ஆயிற்று முகம் இருப்பது-குண்டலம் என்று வட்டணிப்பை சொல்லவுமாம்-புல என்றத்தை பொல என்றாக்கி  பொன்னாலே செய்த குண்டலம் என்றும் சொல்வார்கள்

புண்டரீகத்த போர் கெண்டை –
அத் தாமரைப் பூ மேலே சிலை கெண்டைகள் பொருகிறார் போலே ஆயிற்று கண்கள்
அல்லாத அவயவங்களில் காட்டில் கால் கட்ட வற்றாய் இறே முகம் இருப்பது –
அதில் பிரதானமாய் இறே கண்கள் இருப்பது
வல்லி ஒன்றால் விலக்குண்டு –
இரண்டு மத்த கஜம் தன்னிலே பொரா நின்றால் நடுவே ஒரு கணயத்தை பொகட்டால் போலே-ஆயிற்று மூக்கு இருப்பது
உலாகின்றது
நடுவே இது கிடைக்கையாலே  இரண்டும் தன்னிலே வந்து கிட்டப் பெறாதே –
அவ்வாசியையும் இங்கே ஏற வைத்துக் கொண்டு -கர்ண பர்யந்தம் -உலாவா நின்றது –
ஈஸ்வரன் வைத்த மர்யாதையில் செவ்விதாக நிற்க மாட்டாது போலே இரா நின்றன –
வேல் விழிகின்றன
வேலை இட்டு மறுபாடு உருவக்  குத்தினால் போலே ஆயிற்று நோக்குகள் இருப்பது
கண்ணன் இத்யாதி –
ஒரு மகா பாஹுவான கிருஷ்ணன் கையாலே கடல் கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும் படி-மறுகக் கடை யுண்டு -தன் நல் ஜீவனான அம்ருதத்தை காட்டிக் கொடுத்த கிளர்ந்த-கடல் போலே ஆயிற்று -இவன் காம்பீர்யம் அடைய விழுந்து நின்ற படி –
மறி கடல் போன்று -என்னுதல்
மறி கடல் போன்றவற்றால் -என்று கண்களுக்கு விசேஷம் ஆதல்
அவள் நோக்கினவாறே இவனும் எதிரே நோக்கும் இறே
அந்நோக்கிலே தான் ஈடுபட்டு தன் அகவாயில் ஈடுபாடு எல்லாம் தன் கண்ணுக்குளே
தோற்றும்படி நின்றாளாய்  -அவற்றை நினைக்கிறான் –
அவற்றால்
அவை தான் இப்போதும் வடிம்பி இடுகிறபடி
கலக்குண்ட நான்று கண்டார் –

நான் கலங்கின அன்று கண்டார்

எம்மை யாரும் கழறலேரே
என் பிரகிருதி அறியும் நீயே அன்றிக்கே -இத்தனை பாவ பந்தம் இல்லாத புறம்பு உள்ளாறும்-இப்படி கழறி வார்த்தை சொல்லுவார்கள்-
ச்வாபதேசம் –
இத்தால் ஆழ்வாருடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யில் அகப்பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களை –
பகவத் விஷயத்தை காட்டியும் மீட்க ஒண்ணாத படியை சொல்லிற்று –
அவர்கள் -தேவு மற்று அறியேன் -என்று இருப்பவர்கள் காணும் –
பவத பரமோ மத -என்கிறபடி அவர் உகந்தது என்று இறே பின்னை பகவத் விஷயத்தை விரும்புவது –
அரும் பதம்
குண்டலப் புண்டரீகம் -வட்டணித்த தாமரை ஆகவுமாம்
அவளுடைய கண்களாலே கடல் போலே அவன் கலங்கின அன்று -என்று நாயகனுக்கு விசேஷணம் ஆதல்
கடல் போல் கலங்கி இரங்கி இருக்கிற கண்கள் என்று கண்களுக்கு விசேஷம் ஆதல்
சம்ச்லேஷித்து -பாகவதர் ஆகிற நாயகன் சம்ச்லேஷித்து
கார்யா புத்தி -அவர் உகந்த  விஷயம் அன்றோ என்று பகவத் விஷயத்தில் கைங்கர்யம் ஆகிற
புத்யா -என்றபடி
புண்டரீகத்த -என்று முற்று உவமையால் -முகத்தை சொல்லும்
செவ்விதாக -சாடு -செவ்வையாக கோணாமல் என்றும் செவி அளவாக என்றும்
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ -ஞான வைபவம்-
—————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: