திரு-விருத்தம்-56-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை
கலந்து பிரிந்த தலைமகன் வரவு தாழ்க்க -பிரிவாற்றா தலை மகளைக் கண்ட தோழி –
இவளுடைய ஆற்றாமை இருந்தபடி இதுவாய் இருந்தது -நாயகனையோ வரக் காண்கிறிலோம் -இனி இவள் ஜீவிக்கை என்று ஒரு பொருள் இல்லை -இவளை இழந்தோம் ஆகாதே -என்று-நோவுபட –
இத்தைக் கண்ட தலைமகள் -இவள் சன்னதியிலே யாத்ருச்சிகமாக ஒரு சம்ச்லேஷம் வ்ருத்தம்  ஆயிற்றாய்-அத்தை இவளை நோக்கி -நீயும் அறியாதபடி இங்கனே ஒரு சம்ச்லேஷம் வ்ருத்தம் ஆயிற்று காண் -நீ அஞ்ச வேண்டா காண் – என்று தலைமகள் தான் தோழிக்கு வ்ருத்தமான   சம்ச்லேஷத்தை சொல்லுகிறாள் .
தலைவன் இரவிடை கலந்தமையைத் தலைவி தோழிக்கு உரைத்தல்-
வியலிடம் உண்ட பிரானார் விடுத்த திரு அருளால்
உயலிடம் பெற்று உய்ந்தும் அஞ்சலம் தோழி ஓர் தண் தென்றல் வந்து
அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூம் துழாயின் இன் தேன்
புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன் கலனே -56 –
பாசுரம் -56-வியலிடம் உண்ட பிரானார் விடுத்த -தலைவன் இரவில் கலந்ததைத் தோழியிடம் தலைவி கூறுதல் –கண்கள் சிவந்து -8-8-
வியாக்யானம்
தோழி வார்த்தை -இது உண்டான போது நமக்கு ஒரு கை முதல் வேணும் -அது
இன்னது என்று அறிந்திலோமே -என்ன
வியலிடம் உண்ட –
அவன் அருள் சக்காரி நிர பேஷமாய் இருக்கும் என்னும்
பிரளயத்தில் பூமிக்கு உள்ள கைம்முதல் இறே நமக்கு உள்ளது என்கிறாள் –
ஆபத்தை காண வேண்டுவது அவர்க்கு –
பிரளய ஆபத்தில் தன் வயற்றில்  வைத்து நோக்குகிற போது பூமிக்காகா ஏதேனும் ஒரு
கைமுதல் உண்டோ -அப்போது அப்பூமிக்காகா  உண்டான ஆற்றாமை இவள்
ஒருத்திக்கும் உண்டு போலே காணும் -அவ்வாராகரமே. அவர் பக்கல் உள்ளது –
அவர் பண்ணும் கிருபைக்கு பாத்ரமாம் இத்தனையே இத்தலைக்கு வேண்டுவது –
அவர் பண்ணும் அருள் ஒரு சககாரியை அபேஷித்து இரா இறே
எம்பெருமானார் எழுந்து அருளி இருக்க செய்தே -ஸ்ரீ பாதத்தில் சேவித்து இருக்கிறவர்கள் -நமக்கு தஞ்சமாக நினைத்து இருக்க அடுப்பது என் -என்ன
வங்கி புரத்து நம்பி இருந்தவர் -மூடோயமல்பமதி -என்ற ஷத்ர பந்துவினுடைய வாக்கியம் அன்றோ -அது ஒண்ணாது  காண் -பிரணதி -என்று ஓன்று உண்டு –
அதிலே ஒரு சர்வஞ்ஞன் அறிய நிர் மமனாய் விழ வேணும் இறே –
நம் தலையிலே ஏதேனும் ஒரு அந்வயம் ஒதுங்கில் அது செய்து தலை கட்டுகையில் உள்
அருமையாலே அது இழவோடே தலைக் கட்டும்படி இருக்கும் காண் –
இத் தலையில் ஏதேனும் ஒரு அம்சம் உண்டாகில் அது அப்ரதிஷேத்திலே புகும்
இத்தனை அல்லது -உபாய சக காரம் ஆகாது –
நீ உபாயம் ஆக வேணும் -என்கிற ஸ்வீகாரம் அவஸ்ய அபேஷிதமாய் இருக்க செய்தேயும்-அத் தலையிலே உபாய பாவமாம் படி இறே இருப்பது
இவன் பக்கலிலே பரம பக்தி பர்யந்தமாக விளைந்தாலும் -அது ஸ்வரூப பிரயுக்தமான ருசியிலே-அந்வயிக்கும் இத்தனை போக்கி -ஸ்வ தந்தரமாக  நின்று பல பிரதமாக மாட்டாதே இறே இருப்பது-ஆனால் பின்னை நினைத்து இருக்க அடுப்பதென் -என்ன காளியனுடைய வார்த்தையை-நினைத்து இருக்க அடுக்கும் -என்று அருளி செய்து அருளினார் –
சோஹம் -திரு மேனியிலே என்னுடலை இட்டு சுற்றின பிராதி கூல்யத்தில் நின்று
நிவ்ருதனாகா நான் -தேவ தேவச -பிராதி கூல்ய நிவ்ருத்தியே -பரிகாரமாக
போரும்படியாய் அன்றோ -உன்னுடைய நைர பேஷ்யம் இருப்பது –
கிருபை பண்ண வேணும் என்கிற உக்தி மாத்ரத்தை இறே-இப்போது
பிரதிகூல்ய நிவ்ருத்தி யாக நினைக்கிறது –
நஞ்சு சோர்வதோர் வெஞ்சின அரவம் வெருவி வந்து நின் சரண் என   –
கையில் உள்ளது பிரதி கூல்யத்துக்கு பரிகரமாய் இருக்க -சரணம் -என்ற
உக்தி மாதரம் இறே அதின் பக்கல் உள்ளது
வெருவி வந்து-
அந்த உக்தி தானும் போழ்கன் இறே -யார்த்தி இல்லாமையாலே சத்ரு பயத்தாலே வந்த
இத்தனை இறே -நார்ச்சா நாதவ் ஸ்துதவ் நச சாமர்த்யவான் –
எனக்கு என்றால் வெல்லாம் செய்ய வல்லேன்
உனக்கு என்றால் ஒரு துரும்பு நறுக்குகைக்கு சக்தி இல்லை
ஒன்றும் செய்ய வேண்டாதபடி நிர பேஷனாய் இருந்தாய்
ஒன்றும் செய்கைக்கு சக்தி அன்றே இருந்தேன் நான்
உனக்கு என்றால் எல்லாம் செய்ய வல்லை ஆகில் -எனக்கு என்றால் ஒன்றும் செய்ய
மாட்டாய் ஆகில் -ஆனால் இனி நம்மை செய்ய சொல்லுகிறது  என் என்னில் –
க்ருபா மாத்ர மநோ வ்ருத்தி -இனி கிருபை பண்ண வேண்டி இருந்தது –
அதுக்கு அனுதாபம் வேணும் -கிருபைக்கு பரிகரமான அனுதாபம் என் பக்கல் இல்லாமல்
இருந்தது -இனி இவ் அனுதாபத்தால் கொள்ளும் கார்யதையும் கிருபையையே கொண்டு

கொள்ள பார்த்து அருள வேணும் அப்படி அனுதாபம் இன்றிக்கே இருந்தவர்களையும் ரஷிக்குமோ என்ன

பலி புஜி சிசுபால இத்யாதி
காகம் ஆனால் -சதம் நிபதிதம் -என்று ஆர்தியோடே பூமியிலே வந்து விழுந்ததமை உண்டு
சிசுபாலானால் திரு நாமங்களை சொல்லி த்வங்கரித்தமை உண்டு
இப்படி அவர்கள் பக்கல் அல்ப குணம் அரோபிக்கையாலே அவர்கள் பக்கல் உன் கிருபை
முடங்கப் பட்டது -என் பக்கல் அங்கன்பழி இடலாவது  ஓன்று இல்லாமையாலே
உன் கிருபைக்கு தான் நினைத்த படி அழகு செண்டேற லாம் இறே என் பக்கல் –
விடுத்த திருவருளால் –
அவர் தந்த அருளாலே -இத் தலையில் உள்ளது ஒன்றும் பாராதே -தம் பேறாக-அவர்
பண்ணின அருளாலே –விடுத்த -வர விட்ட -தந்த
உயலிடம் பெற்று உய்ந்தோம்   –
இவளுக்கு வ்யாஜீவிக்கைக்கு ஓர் அவகாசம் இல்லை –
இவள் உஜ்ஜீவித்தாளாக காண பட்டோம் -என்று இறே தோழி இருந்தது –
உஜ்ஜீவிகைக்கு ஓர் அவகாசம் உண்டாயிற்று -அது தான் மேல் வர கடவது என்று
பார்த்து இருக்கை அன்றிக்கே -பெற்று உய்வதும் செய்தோம் –
அவன் ஸ்வபாவத்தை  தோழி அறிந்து இருக்கையாலே -அவனையும் இழந்தோம் இவளையும் இழந்தோம் –
என்று இறே இருந்தாள் -எல்லோரும் உஜ்ஜீவித்தோம் காண் –
அஞ்சல்
அஞ்சாதே கொள்
அம் தோழி –
என்னுடைய பேறே உனக்கு பேறாக இருக்கும் அவள் இறே நீ –
ஏகம்து கம்சூ கஞ்சனவ் -என்கிறபடியே -தோழி என்ற போதே -இவ்வளவு இல்லையோ -அம் தோழி என்றதால் பெற்றது என் என்னில் –
தம் தம் பிரயோஜனமும் இத்தலையில் பிரயோஜனமும் வேண்டி இருப்பாரும் உண்டு –
ஸ்வ பிரயோஜனத்தை பாராதே -இத்தலையிலே பிரயோஜனமே பிரயோஜனமாய் இருக்கை –
அம் -என்கிற விசேஷணத்தாலே-சூக்ருதோ வாபவத்விதா -என்னக் கடவது இறே –
சுக்ரீவனை பார்த்து பெருமாள் அருளிய வார்த்தை இது –
நம்மைக் கண்ட காட்சியிலே ஜ்யேஷ்டனை எதிரி யாக்கி -அவனிலும் நம்மை அந்தரங்கர்
ஆக்கிக் கார்யம் கொள்ளும் தனை ஸௌ ஹார்த்தம் உள்ளது உமக்கே காணும் என்கிறார் –
என்னுடைய பேறே உன்னுடைய பேறாய்
என்னுடைய இழவே உனக்கு    இழவு என்று இருக்கையாலே
என்னுடைய இழவை நினைத்து அஞ்சுதி இறே  -இனி அஞ்சாதே கொள் —
ஓர் தென்றல் வந்து –
தென்றல் எல்லாம் பாதகமாய் இறே இதுக்கு முன்பு போந்தது –
இப்போது குளிர்ந்தததொரு தென்றல் வந்தது என்கிறாள் –
தென்றல் குளிருவது சம்ச்லேஷம் வ்ருத்தம் ஆனவாறே
சம்ச்லேஷம் வ்ருத்தம் என்னும் இடத்தை அக்ராம்யமாக சொல்லுகிறாள்  –
அவளும் அத்தை சங்கேத பிரக்ரியையால் அறிந்து -அயல் அறிய செய்வது என் என்று –
துணுக்கு என –
அயலிடை யாரும் அறிந்திலர்

அயலிடை ஒருவரும் அறிந்தார் இல்லை -என்கிறாள்–மேல் செய்தது என் என்று கேட்க -அம் பூம் துழாயின் இன் தேன் –அழகிய பூம் தாரை உடைய திருத் துழாயின் இனிய தேன் துளிகளை –புயலுடை நீர்மையினால் –குளிர்ந்த மேகத்தின் உடைய ஸ்வபாவத்தாலே-ஒருவர் அபேஷிதாய் இருக்க  வந்து உபகரித்த படிக்கு சொல்லுகிறது

தடவிற்று என் புலன்கலனே
புலன்களையும் கலங்களையும் –
எல்லா வித இந்திரியங்களையும் எல்லா ஆபரணங்களையும் –
இந்திரியங்கள் விடாய் தீரவும் -ஆபரணங்கள் கழலாத படியும் -தடவிற்றுப் போலே காணும்-இத்தால் சம்ச்லேஷம் வ்ருத்தமான படியை தோழிக்கு சொன்னபடி இறே –
ஸ்வாபதேசம்
குண ஞானத்தாலே தரித்த படி சொன்ன படி
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குதச்ச ந
எம்மின் முன்னுக்கு அவனுக்கு மாய்வர் -என்று மோகித்து கிடக்கிற தோழி போலே –
தாமோதரன் உண்டும் உமிழ்ந்தும் கடாய மன்னேர் அன்ன என்ற பாசுரத்தை
உள் கொண்டு அந்த ஆபத்து இவளுக்கு உண்டு என்று அவதாரிகை
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: