அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்–91-மருள் சுரந்தா கம வாதியர் கூறும் அவப் பொருளாம் -இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை
தொண்ணூற்றோராம்பாட்டு -அவதாரிகை
இவர்கள் இப்படி இருக்கச் செய்தே இவர்களுடைய உஜ்ஜீவனார்த்தமாக
எம்பெருமானார் செய்தருளின க்ருஷியை யனுசந்தித்து அவரைக் கொண்டாடுகிறார் .
மருள் சுரந்தாகம வாதியர் கூறும் அவப் பொருளாம்
இருள் சுரந்  தெய்தவுலகிருள் நீங்கத்  தான் ஈண்டிய சீர்
அருள் சுரந் தெல்லாவுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
பொருள் சுரந்தான் எம்மிராமானுசன் மிக்க புண்ணியனே – – -91 –
வியாக்யானம் –
அஞ்ஞானம் எல்லாம் ஒருமுகமாகத் திரண்டு -ருத்ர ப்ரோரக்தமான ஆகமத்தை பிரமாணமாக-அவலம்பித்துக் கொண்டு நின்று வாதம் பண்ணா நின்றுள்ள பாசுபாதிகள் ருத்ர பரத்வ- ஸ்தாபன அர்த்தமாக   -அநேக உபபத்திகளை கல்பித்து கொண்டு -சொல்லா நின்றுள்ள -நிஹினதரமான அர்த்தங்களாகிற தமஸு மிக்கு –
அத்தாலே –
அவசன்னமாய் போன லோகத்தினுடைய அந்தகாரமானது போம்படியாக தம்முடைய
ஆஸ்ரித ரஷணங்கள் ஆகிற திரண்ட வைலஷண்யத்தை  உடைய கிருபை ஒரு மடை கொண்டு-சகல ஆத்மாக்களுக்கும் சேஷி பெரிய பெருமாள் என்னும் அர்த்தத்தை உபகரித்தார் –
இவ் அர்த்தத்தை எமக்கு வெளி இட்டு அருளின எம்பெருமானார்  பரம தார்மிகர் -கிடீர் .
அன்றிக்கே –
மிக புண்ணியனான எம் இராமானுசன் பொருள் சுரந்தான் -என்று க்ரியை யாகவுமாம்-
அவப் பொருள் -பொல்லாத பொருள்
ஆகம வாதியர் கூறும் மறப் பொருள் –  என்று பாடமான போது -ஆகமவாதிகள் சொல்லுகிற காதுகமான அர்த்தம் -என்கை-காதுகம் என்கிறது -ஆத்மா நாசகம் ஆகையாலே
அன்றிக்கே –
ஆகம வாதியர் கூறும் மறைப் பொருள் -என்ற பாடமான போது –
தைச் சப்ரசித்த சமூலதாயை க்ராஹ்யா த்ரயீ-ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -2 – என்கிறபடியே -ஆகம முகேன தாங்கள் சொல்லுகிற அர்த்தத்துக்கு மூல பிரமாணமாக-
 த்ரய்யா மபிச சாமான்ய வாதச் சித்த விபெதாக -என்கிற-
பிரசம்சாபரமான வேத வாக்யங்களை பரிக்ரகித்து கொண்டு -வேதமும் இப்படியே சொல்லிற்று என்று -ஆகம வாதிகள் சொல்லுகிற வேதார்த்தம் என்ற படி –
இருள் சுமந்தெய்த்த-என்றும் பாடம் சொல்லுவார்கள் –
அப்போது -இருளை பறித்து அத்தாலே -அவசன்னமான -என்கை –
ஈண்டுதல்-திரளுதல்
சீர் -அழகு
புண்ணியன் -என்று -தார்மிகன் -என்றபடி
இராமானுசன் என்னும் புண்ணியன் -என்றும் பாடம் சொல்லுவார்கள்
அதுவும் இரண்டாம் யோஜனைக்கு சேரும் .
பரதேவதா பாரமார்த்யம் ஸ்தாபித்தார் -முதல் அடி -இதுவே -பின்பு தான் அவனை அடைய உபாயங்களை பற்றி -அரிய வேண்டும் –
வேர் முதல் வித்து -ஊழி முதல்வன் -பத்ம நாபன் –நின்ற ஆதி தேவன் -பூவில் நான் முகனைப் படைத்த தேவன் –
தமஸ் -அஞ்ஞானத்தில் மூட்டுமே-அவப்பொருள்-பசு -பதி -பாசம் -அர்த்த பஞ்சகம் -மூன்றும் பசுபதி ஆகமம் -சொல்லும் -சிவனுக்கு பரத்வம் -சொல்லும் -பசு -அணுக்கள் -/ ஜீவன் /
பாசம் -தடுக்கும் ஐந்து -ஷட் -ஆறு தரித்து விலக்க –/ இத்தை நிரசித்து –
ப்ரத்யக்ஷமாக திருக்கரங்கள் மூலம் நாதன் நானே என்று காட்டி அருளும் அரங்கன் -காட்டி -இதுவே தார்மிகர் புண்ணியன் -எம்மிராமாநுசன் –
மருள் சுரந்த ஆகமம் -ஆகமத்திலியே மருள் -பாசுபதி பவிஷ்யாகார அதிகாரம் -தேசிகர் –
-ச ப்ரஹ்ம சேனேச-இதிலும் ச ஹரி சேர்த்து -சந்தஸ் சேராமல் -சொருகி -காயானே வாசா -நாராயண –ஸ்ரீ மன் சேர்க்க முடியாதே -அருளாலே மருளை நீக்கி -அரங்கன் சேஷி என்று உணர்த்தி இருள் போக்கினார்
————————————————————————–
பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை -கீழ்ப் பாட்டிலே நித்ய சம்சாரிகளாய் இருக்குமவர்களையும் -அல்ப அநு கூலமுடையாரையும் -ஒக்க உத்தரித்த சர்வோத்தமரான எம்பெருமானாரை அநு வர்த்தியாதே -கர்ப்ப நிப்பாக்யராய் போந்தார்கள்-என்று அவர்கள் படியை அடைவே சொல்லி -இதிலே -தமோ குண முஷித சேமுஷீகராய்-ருத்ர ப்ரோக்தமான
ஆகமத்தை உத்தம்பகமாகக் கொண்டு பௌ த்த்யாத்த சாரங்களாய் ருத்ர பஷ பாதிகளான பாசுபதர்-சொல்லுகிற துஸ் தர்க்கங்கள்  ஆகிற  அந்தகாரத்தை பூ லோகத்தில் நின்றும் அகன்று போம்படி-பண்ணி அருளின எம்பெருமானார் -தம்முடைய நிர்ஹேதுக  பரம கிருபையை ஒரு பாட்டம் மழை-பொழிந்தால் போல் லோகத்தில் எங்கும் ஒக்க ப்ரவஹிப்பித்து –சகல ஆத்மாக்களுக்கும் சுலபனாய்
கண்ணுக்கு இலக்காய் இருக்கிற பெரிய பெருமாளே வகுத்த சேஷி என்னும் அர்த்தத்தை நமக்கு எல்லாம்-பூரி தானம் பண்ணினார் –இவர் எத்தனை தார்மிகரோ என்று -அவர் உபகரித்த உபகாரத்தை அனுசந்தித்து-அவர் தம்மை கொண்டாடுகிறார் –
வியாக்யானம்மருள் சுரந்த ஆகம வாதியர் கூறும் -நாராயணா க்ருஷ்ண வாசுதேவா கேசவா ஹ்ருஷிகேசா-அச்யுதா அனந்தாதி திவ்ய நாமங்களுக்கு  வாச்யன் ஆகையாலே   –த்ரிவித சேதன அசேதன வர்க்கத்துக்கும்-தாரகத்வ -வ்யாபகத்வ -நியந்தர்த்வ -த்ரிவித பரிச்சேத ரஹித்வ -அவ் யயத்வாதி தர்மங்களோடு கூடி இருந்தவனே-சர்வ ஸ்மாத் பரன் என்று அறிய மாட்டாதே –பூர்வ பாப சங்காதம் எல்லாம்  படிந்து கடலிலே ஒரு காளகூடம்- விஷம் -உண்டானாப் போலே -அஞ்ஞானம் எல்லாம் ஒரு முகமாக திரண்டு -அத்தாலே வ்யாப்தராய் –சர்வ லோக சாஷிகமான-பிரகலாத கஜேந்திர ரஷண கதைகளையும் -மூன்று ஆபத்து எம்பெருமானுக்கு -என்பர் நஞ்சீயர் -ப்ரஹ்லாதன் -கஜேந்திரன் -திரௌபதி –-யதஸ் சைத ச் சராசரம் -என்கிற மைத்ரேயருடைய சாமான்ய பிரச்னத்துக்கு-விஷ்ணோஸ்  சகாஸா துத்பூதம் -இத்யாதியான பராசுர பகவானுடைய விசேஷோத்தரம் முதலான அர்த்தங்களையும்-அநாதரித்து-
தமஸ் த்வஞா கஜம் வித்தி மோகனம் சர்வே தேஹிநாம் பிரமாதா லஸ்ய    நித்ராபி தன் நிபத்னாதி பாரத -என்கிறபடியே பந்த ஹேதுவான அஞ்ஞானத்தை எல்லாம் தன்னிடத்திலே கண் வைத்த மாத்ரத்திலே-கொடுக்க கடவ –சிவ யோக சாஸ்திரம் –முதலான துராகமங்களிலே நிஷ்டராய் -அத்தை பிரமாணமாக
அவலம்பித்துக் கொண்டு -நின்று துர்வாதங்களை பண்ணா நின்றுள்ள பாசுபதாதிகளை சொல்லுகிறது –
அவப் பொருளாம்  இருள் சுரந்து –  ஜடாகலாப பச்ம ருத்ராஷ லிங்க தாரணம் தொடக்கமான-நிஷித்தார்த்தங்கள் ஆகிற  அந்தகாரமானது வியாபித்து —அவப் பொருள் -பொல்லாத பொருள் –
ஆகம வாதியர் கூறும் மறைப் பொருள் -என்ற பாடமான போது -ருத்ர ஹரத்ர்யம் பக ஸ்த்தாணு விருபாஷாதி-சப்தங்களாலே நிஷித்த தர்ம ப்ரவர்த்தனான ருத்ரனுடைய வ்யாப்யத்வத்தை தெரிய மாட்டாதே வேதத்தில் –
ச ப்ரஹ்மா ச சிவா -இத்யாதிகளாலே -அவனே அவனும் அவனும் அவனும்   – சாமானாதி கரண்யேன உக்த வாக்யங்களினுடைய  தாத்பர்யத்தையும் -உபக்ரமோபா சம்ஹாரத்தையும் பராமர்சியாதே -ப்ரசம சாபரங்களாயும்-அப்ரசித்தார்த்தங்களாயும் இருந்துள்ள-சூத சம்ஹிதாதிகளுக்கு அனுகூலமாக -அதுக்கு சொன்ன அவப் பொருளாகிற அந்த காரத்தை என்னவுமாம் –
அன்றிக்கே –கூறும் அறைப் பொருள் என்று   பதச் சேதமாய் –அவர்கள் சொல்லுகிற காதுகமான அர்த்தவத்தை -என்க-காதுகம் என்கிறது ஆத்மா நாசகம் ஆகையாலே -அங்கனும் அன்றிக்கே அறை என்று த்வநியாய் -கடலோசை யோபாதியான
பொருள் என்னவுமாம் –எய்த்த உலகு இருள் நீங்க -தமஸ் த்வஜ்ஜா நஜம் வித்தி – என்னும்படியான அஞ்ஞானம் ஆகிற-அந்தகாரத்திலே -சத் அசத் விவேகம் அற்று -அவிவிவேகராய் போந்த சேதனருடைய அந்தகாரமானது -நீங்கிப் போகும்படியாக –எய்த்தல் -இளைத்தல் –தன் ஈண்டிய சீர் அருள் சுரந்து -அந்த காரத்தைப் போக்கும் ஆதித்யன்-அநேகம் ஆயிரம் கிரணங்களை ஒருக்காலே லோகத்தில் எல்லாம் பிரசரிப்பிக்குமா போலே -சீரார் செந்நெல் -ஸ்ருஷ்டத்வம் வனவாசம் போலே கைங்கர்யம் செய்யவே –-பொய் இல்லையே பொலிந்து நின்ற பிரான் நிற்க –தம்முடைய-ஆஸ்ரித பாரதந்த்ரியங்களால் திரண்ட வைலஷண்யத்தை உடைய கிருபை எல்லாம் லோகம் எங்கும்-வியாபித்தது -ராமானுஜ திவாகர –ஈண்டுதல்-திரளுதல் சீர் -அழகு -தத்ர சத்வம் நிர்மலத்வாத் பிரகாசகமநாமயம் –ஸூ க சங்கே ந பத்-நா  திஞ்ஞா  நசங்கே நசா ந -என்கிறபடியே இவருடைய விஷயீ காரத்தால் உண்டான சத்வோத்தேரேகத்தாலும்-
அஞ்ஞா நதி மிராந்தச்ய ஜ்ஞானாஜ் ஜன சலாகயா -சஷூருன்மீலிதம்யேன தஸ்மை சத்குரவே நம -என்கிறபடியே இவர் தம்முடைய உபதேசத்தாலும் -அநாதி காலமே பிடித்து தொடர்ந்த அஞ்ஞான அந்தகாரம்-எல்லாம் வாசனையோடு முடிந்து போம் இறே –எல்லா உயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள் சுரந்தான் –
பதிம் விச்வச்ய -உதாம்ர்தத் வச்யேசான -லோக நாதம் புராபூத்வா –முழு எழ உலகுக்கும் நாதன் –என்றும்-சொல்லுகிறபடி சகல ஆத்மாக்களுக்கும் வகுத்த சேஷி -நமக்கு எட்டாத நிலத்தில் அன்றிக்கே -நாம் இருந்த கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் -என்கிற விசேஷ அர்த்தத்தை-லோகம் எல்லாம் உஜ்ஜீவிக்கும்படி உபதேசித்தார் –எம் இராமானுசன் -அஸ்மத் ஸ்வாமியான எம்பெருமானார்-
மிக்க புண்ணியனே -பரம தார்மிகர் கிடீர் –ராமானுசன் என்னும் புண்ணியன் -என்றும் பாடம் சொல்லுவார்கள் –
இப்படி உபகரிக்கையாலே ஆசந்த்ரார்கமாக தார்மிகர் கிடீர் -என்றபடி –மிக்க புண்ணியனான எம் இராமானுசன் -பொருள் சுரந்தான் -என்று அங்கு அன்வயிக்க்கவுமாம் –
————————————————————————–

அமுது விருந்து

அவதாரிகை
இன்னும் பிறப்பில் வருந்தும் மாந்தர் உய்வதற்காக எம்பெருமானார் கைக் கொண்ட முயற்சியை-நினைவு கூர்ந்து அவரைக் கொண்டாடுகிறார் ..
பத உரை –
மருள் சுரந்து -அறியாமை மிகுந்து
ஆகம வாதியர் -ஆகமத்தையே தமக்கு பிரமாணமாக கொண்டு வாதம் புரியும் பாசுபத மதத்தினர்கள்
கூறும் -சொலும்
அவப் பொருளாம் -தவறான பொருள்கள் ஆகிற
இருள் சுரந்து -இருட்டு-தமோ குணம் -மிகுந்து
எய்த்த –அதனால் களைத்துப் போன
உலகு –உலகத்தினுடைய
இருள் -அந்தகாரம்
நீங்க -போகும்படி
தன் -தன்னுடைய
ஈண்டிய சீர் -திரண்ட சிறப்பினை உடைய
அருள் சுரந்து -கிருபை கூர்ந்து
எல்லா உயிர் கட்கும் -எல்லா ஆத்மாக்களுக்கும்
நாதன் -தலைவன்
அரங்கன் -பெரிய பெருமாளே
என்னும் பொருள் -என்கிற பொருளை
சுரந்தான் -உணர்வுறுத்தி உதவினார்
எம் இராமானுசன் -எங்களுடைய எம்பெருமானார்
மிக்க புண்ணியன் -பேரறம் புரிபவர் ஆவர் .
வியாக்யானம் –
மருள் சுரந்துஉலகிருள் நீங்க
ஆகம வாதியர் ருத்ரன் சொன்ன ஆகமத்தை பிரமாணமாகக் கொண்டு –
அவ்வளவிலே நின்று -மறையை முற்றும் ஆராயாது –மறைப் பொருள் கூறுவாரோடு –
வாதம் புரிந்து வரும் பாசுபதர் முதலிய சைவர்கள் -அவர்கள் பலவகைப்பட்டு
ஒருவருக்கு ஒருவர் முரண்பட்ட -நடவடிக்கைகளும் -கொள்கைகளும் உடையவர்களாய்
இருப்பினும் -வேதத்துக்கு விபரீதமாக சிவனையே பரம் பொருளாகவும்
குடத்துக்கு குயவன் போலே உலகினுக்கு இவன் நிமித்த காரணமாக மட்டும்
இருப்பவனாகவும் கொள்ளும் தன்மையில் மாறுபாடு இன்றி இருத்தலின்
எல்லோரையும் சேர்த்து –ஆகம வாதியர் -என்றார் .
மருள் சுரந்தமை அவப் பொருள் கூறுவதற்கு ஹேது என்க –
இனி மருள் சுரந்த +ஆகமம்   என்று பிரித்து -பெயர் எச்சத்தின் ஈறு கெட்டு மருள் சுரந்தாகமம்-என்றாயிற்று என்று உரைத்தலுமாம் ..தான் மேன்மை அடைய வேண்டும் என்னும் கொண்டமையினால் சிவபிரான் –
அன்யம் தேஹி  வரம் தேவ பிரசித்தம் சர்வ ஜந்துஷூ மர்த்யோ பூத்வா பவா நேவா மாமாராதய கேசவ-மாம் வஹஸ்வ ச தேவேச வரம் மத்தோ க்ருஹானச யேநாஹம் சர்வ பூதானாம் பூஜயாத் பூஜ்ய தரோ பாவம் –
தேவ தேவனே -கேசவனே -நீயே மனிதனாகி எல்லாருக்கும் தெரியும்படி என்னை ஆராதிக்க வேண்டும்-தேவர்கட்குத் தலைவனே -என்னை வாகனமாக நின்று சுமக்கவும் வேண்டும்-என்னிடம் இருந்து வரம் வாங்கிக் கொள்ளவும் வேண்டும்
எத்தகைய வரத்தினாலே எல்லாருக்கும் பூசித்தற்கு உரியார் ஆயினும் -மிகவும் பூசித்தற்கு-உரியேன் ஆவேனோ அத்தகைய வரத்தை நீ நல்க வேண்டும் –என்று
எம்பெருமானை நோக்கி வரம் கேட்க -மணி கர்ணன் -கண்டா கர்ணன் தம்பி -என் மேல் த்வேஷம்  -எனக்கு ப்ரீதி உண்டு என்றானே கண்டா கர்ணன் -இருவருக்கும் முக்தி கொடுத்து  அன்றோ வரம் கேட்கப் போனான் –கள்வா என்றானே ருத்ரனும்
-தற் பெருமையில் அவனுக்கு ஆர்வம் இருப்பதைக் கண்டு-எம்பெருமான் -தத்வமச ருத்ர மகா பாஹோ முஹ சாஸ்தராணி காரைய -நீண்ட கை படைத்த ருத்ரனே -நீயும் மோஹ சாஸ்த்ரங்களை செய்விக்க வேண்டும் -என்று கட்டளை இட -அதனை ஒரு-காரணமாக கொண்டு -மோஹ சாஸ்திரமாகிய ஆகமத்தை அவன் சொன்னதாக புராணம் கூறுவதை
அடி யொற்றி –மருள் சுரந்த ஆகமம் –என்றார் -மோஹா சாஸ்திரம் என்றபடி -மருள் -மோஹம்
தெருள் சுரந்த ஆகமம் ஆதலின் பிரமாணமாக கொள்ளப்படும் பாஞ்சராத்திரம் போன்றது அன்று-இம்மருள் சுரந்த ஆகமம் -என்க .-இனி மருள் சுரந்த -என்னும் எச்சம் வாதியர் என்னும் பெயரோடு முடித்தலுமாம் –
அப்பொழுது -கௌதமருடைய சாபத்தாலே வேத நெறிக்கு புறம்பான கொடுங்கோலும்  செயலும் கொண்டு-கண்டபடி மோஹம் அடைந்து திரிபவர்க்காக –அவரது சாபத்தை மெய்ப்பிக்க கருதி –சிவ பிரானால் -அவர்களுக்கு ஏற்பச் செய்யப்பட்டது ஆகமம் என்று வராஹா புராணம் கூறுவதற்கு ஏற்ப-வாதியாரை மருள் சுரந்தவர்களாக கூறினார் -என்க –
இவ் வரலாற்றினை
-கைதவ மொன்று கந்தவரைக் கடிய சாபம்கதுவியதால் அதன் பலத்தை கருதி
பண்டை வேத நெறி யணுகாது விலங்குதாவி வேறாக விரித்துரைத்த விகற்பமெல்லாம் -என்று-பரமதபங்கம் – -41 – வேதாந்த தேசிகன் அருளிச் செய்துள்ளமை காண்க –
அவப்பொருள் –பரம் பொருளைக் கீழ்ப் படுத்தியும்-கீழ்ப் பொருளைப் பரம் பொருளாக்கியும்-உலகினுக்கு உபாதான காரணமாக பிரகிருதி தத்த்வத்தையும்
நிமித்த காரணமாக மட்டும் பரம் பொருளையும் சொல்லுவது -வேதப் பொருள் ஆகாமையின்-அவப் பொருளாம் -நாராயணனே முதல் பெரும் கடவுள்
பிரமன் ருத்ரன் முதலியோர் படைப்புக்கு உள்ளானவர்களே -என்பதும் –
உலகமாக அப் பெரும் கடவுளே மாறுதலின் -உலகினுக்கு உபாதான காரணமும்
நிமித்த காரணமும் அவனே என்பதும் வேத நூல் ஓதும் உண்மைப் பொருள் என்று அறிக -அவப் பொருளாம் இருள் –இருள் எனபது இங்கே தமோ குணத்தை
அது விபரீத உணர்வுக்கு ஹேது ஆதலின் -காரியமாகிய அவப் பொருளை காரணமாகவே-உபசார வழக்காக கூறினார் -சாத்தவ குணத்தை வெளிச்சமாகவும்
தமோ குணத்தை இருளாகவும் கூறுவது மரபு –
கொள்ளென்று தமமூடும் -திரு வாய் மொழி – 4-9 4- – – என்றார் நம் ஆழ்வாரும் .
ஆகமவாதியர் கூறும் மறப் பொருள் -என்றும் ஒரு பாடம் உண்டு .
அப்பொழுது மறம் எனபது அறத்திற்கு எதிர் சொல்லாய் படு நாசத்துக்கு உள்ளாக்கும் கொடிய பொருள்-என்று உரைக்க -இறைவனுக்கே உரிய ஆத்ம வஸ்துவை அங்கன் ஆக ஒட்டாது-அழித்தலின் அப் பொருள் மறப் பொருளாயிற்று என்க
ஆகம வாதியர் கூறும் மறைப் பொருள் -என்று மற்றும் ஓர் பாடம் உண்டு
அப்பொழுது ஆகமத்தில் தாம் கூறும் பொருளுக்கு சான்றாக -சம்பு -சிவன் -முதலிய
வேதத்தில் உள்ள பொதுச் சொற்களையும் புகழுரைகளாய் அமைந்த சில வாக்யங்களையும் கொண்டு-வேதமும் இப்படியே சொல்கின்றது என்று ஆகம வாதியர்கள் சொல்லுகிற வேதார்த்தம்-என்று பொருள் கொள்ள வேண்டும் .
எய்த்த உலகு –
இருள் சுரந்தமையால் நேர் வழியைக் காண மாட்டாது வீணாகக் கரடு முரடான வழியே நடந்து-தடுமாறி -தளர்ச்சி உற்றது இவ் உலகம் -என்க –
மதி இழந்து அரனார் சமயம் புக்குத் தழல் வழி போய்த் தடுமாறி தளர்ந்து வீழ்ந்தீர் -பரமதபங்கம் -42 -என்னும் வேதாந்த தேசிகன் ஸ்ரீ சூக்தியை இங்கே நினைக்க
இருள் சுமந்தெய்த்த -என்றும் பாடமுண்டு .
அப்பொழுது இருள் சுமையை சுமந்து அதனால் எய்த்த -என்றபடி .
இருள் நீங்க
இங்கனம் அல்;வழியே செல்வதனால் தடுமாறி உலகு எய்ததற்கு காரணம் அஞ்ஞானம் .-அதனையே இங்கு –இருள் -என்கிறார் –
இருள் நீங்குவது வெளிச்சத்தாலே -அஞ்ஞான அந்தகாரம் நீங்குவது ஞானப் பிரகாசத்தாலே-அந்த ஞானப் பிரகாசத்தை தமது அருளாலே எம்பெருமானார் உண்டு பண்ணியதை அருளிச் செய்கிறார் .
தன் ஈண்டிய சீர் அருள் சுரந்து –சுரந்தான் –
தன்னை அண்டி வேண்டினவர்களுக்கு மட்டும் ஜ்ஞானப் பிரகாசத்தை வழங்காமல் -அனைவருக்கும் வழங்குவது அருளினால் அன்றோ –
ஏனையோர் அருளை விட இவ்வருள் மிக்க சீர்மை கொண்டது என்று -ஈண்டிய சீர் அருள் -என்று கொண்டாடுகிறார் .
சீர்  –அழகு –அருளுக்கு அழகு தனக்கு இலக்கு ஆகும் அவர்களை காப்பாற்றுதல்
அத்தகைய காப்பாற்றுதல்கள் பலவாய் இருத்தலின் –ஈண்டிய சீர் அருள் –என்கிறார் –ஈண்டிய -திரண்ட-
இனி -சீர் -என்பதற்கு குணங்கள் என்று பொருள் கொண்டு -அருள் உள்ள இடத்தில் பல குணங்களும் அருளுக்கு-இலக்கு ஆயினார் .வேண்டியதை நிறைவேற்றி கொடுத்தற்கு உறுப்பாக திரளுதல் பற்றி-ஈண்டிய சீர் அருள் -என்றதாகவுமாம்-அறிவு முன்னர் வழி காட்ட -ஆற்றல் முதலியன பின்னர் தன் வழியை-பின்  பற்ற அருள் என்னும் அணங்கு நடை போடுவதாக வேதாந்த தேசிகன் அருளிக் செய்து உள்ளமை-தயா சதகம் -14 – இங்கு உணரத் தக்கது .
இனி அருள் சௌசீல்யம் -தாழ்ந்தவரோடு பழகும் இயல்பு -சௌலப்யம் -காண்டதற்கு எளியவனாய் இருத்தல் -முதலிய குணங்களை உண்டு பண்ணித் தனக்கு இலக்கானார் பற்றுதற்கு வாய்ப்பாய் அமைதலினால்-ஈண்டிய சீர் -என்றார் ஆகவுமாம் -இதுவும் வேதாந்த தேசிகனால் -தயா சதகத்தில் – 45-
சீலோபஜ்ஞம் சாரதி பவதீ சீதளம் சத்ருணவ் கம -சீலம் முதலான குளிர்ந்த நற் குண ப்ரவாஹத்தை அருள் என்னும்-கரும் கொண்டலாகிய நீ பொழிகின்றாய் -என்று வருணிக்கப் பட்டுள்ளது .
எல்லா உயிர் –பொருள் சுரந்தான்
பசுபதி உட்பட எல்லாரும் ஜீவாத்மாக்களே .-அனைவருக்கும் தலைவன் -சேஷி ஒருவனே .-அவனே தன் சேஷித்வம் தோற்றச் சேஷ தற்பத்திலேதிருவரங்கத்திலே -பள்ளி கொண்டு இருக்கிறான்-என்னும் மெய்ப் பொருளை எம்பெருமானார் உணர்த்தி யருளினார் -என்றபடி .
தமோ குணம் அடியாக சொன்ன அவப் பொருள்-தூய சத்தவ குணம் அடியாக சொன்ன நற் பொருளாக மாற்றப் பட்டது -என்க .
உலகு  இருளை தன்னுடைய ஞானப் பிரகாசத்தாலே நீக்கி அனைவரும் உணர்ந்து எழச்
செய்தார் ராமானுஜ திவாகரன் -என்கிறார் .
இங்கு நாராயணன் நாதன் -என்னாதது குறிப்பிடத் தக்கது .
மறை நெறிக்கு மாறுபட்டு சைவாகம வழியே போய் எய்த்தவர்களை நோக்கி மெய்ப் பொருள்-சுரக்கும் இடம் இது வாகையாலே -சொந்த மதியை -இழந்து -அவப் பொருளால் மந்த மதியை -உடையீராய்-ஆகம வழியே நடந்துஉழலும் நீங்கள் சந்த-வேத நெறியின் சாரமாய் அமைந்த-நல் ஆகமமான பாஞ்ச ராத்ரத்தின் படி -முடிய இடர் இலா வழியே -களி நடை நடந்து -அரங்கனை வழி பட்டு -அந்தமிலா ஆனந்த கடலில் ஆழ முழுகுங்கள் என்று-பாஞ்ச ராத்ர வழியில் உலகினை நடத்தும் கருத்துடன் அரங்கனை -எல்லா-உயிர் கட்கும் நாதன் -என்கிறார் .வைகுண்டத்தின் கண் உள்ள பரவாசுதேவனான-நாராயணன் அரங்கனே -எனபது எம்பெருமானார் கொள்கை .
வடிவுடை வானோர் தலைவனே – 7- 2- 10- – – என்று நம் ஆழ்வார் குறிப்பிடுவதும் காண்க .
பாஞ்ச ராத்ரம் அர்ச்சா மூர்த்தியின் வழி பாட்டினைப் பேசுவதாதலின்-அர்ச்சா மூர்த்தியான-அரங்கனை நாதனாககுரிப்பிட்டார் -என்க .
பாஞ்ச ராத்ர  பகவான் திருவடிகளையே உபாயமாக புகலுகின்றது-
அரங்கனாம் -பெரிய பெருமாளும் -நீட்டிய திருக் கரத்தாலே -தன் திருவடிகளையே
உபாயமாகப் பற்றும்படி காட்டிய வண்ணமாய் பள்ளி கொண்டு இருப்பதனால் –
பாஞ்ச ராத்ரப் பொருளை விளக்கும் நிலையில் இருப்பதைப் பொறுத்து அரங்கனைப்
குறிப்பட்ட தாகவுமாம்-
எம்மிராமானுசன் மிக்க புண்ணியன்
அரங்கனை நாதனாய் குறிப்பிட்டு காட்டி தமக்கு உபகரித்தமையின் –எம் இராமானுசன் –என்கிறார் .
மிக்க புண்ணியன் -பெரிய தர்மாத்மா
இருள் நீங்கப் பொருள் சுரந்தான் -என்று முடிக்க –
மேலுள்ள சொற்றொடர் தனி வாக்கியம் –
புண்ணியன் -என்பது பெயர்ப் பயனிலை –
இனி மிக்க புண்ணியன் இராமானுசன்-இருள் நீங்கப் பொருள் சுரந்தான் -என்று ஒரே வாக்யமாக முடித்தலுமாம்.
இராமானுசன் என்னும் புண்ணியனே -என்றும் ஒரு பாடம் உண்டு -அப்பொழுது ஒரே வாக்யமாக முடித்தல் வேண்டும் .
————————————————————————–
அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்ப்பித்தது

உஜ்ஜீவன அர்த்தமாக எம்பெருமானார் செய்து அருளின க்ருஷியை அநு சந்தித்தித்து அவரை கொண்டாடுகிறார்–சம்சாரிகள் இருக்கும் நிலை கண்டு ஸ்வாமி பண்ணிய தார்மிக செயல்கள்.-.கெட்டு  அலைய-இவர்கள் இடம் வந்து – படி படியாக மாற்றி அரங்கன் அடி சேர்த்த உபகாரம்/ புண்ணியனே- தர்மம்  ஈந்தார்-.அஞ்ஞானம் எல்லாம் ஒரு முகமாக திரண்டு- உலகு எல்லாம் நல் இருளாய்–மருள் சுரந்து-ஆகம வாதியர் கூறும்-பசு பதி ஆகமம் கூறும்–அவ பொருள்

– இருப்பதை இல்லை என்றும் தாழ்ந்தவனை வுயர்ந்தவன் என்றும் -சொல்லி-இருள் சுரந்து-தன் நெஞ்சில் தோற்றியதை சொல்லி மூர்கர் ஆவார்-ஆஸ்திக நாஸ்திகர்-ஈஸ்வரன்  -நிமித்த காரணம் மட்டும் என்பர்-சங்கல்பம்/பரம அணுக்களே ஜகமாக மாறும் என்பர்//பர மாத்மா  பங்கம்/ பரமாத்மா -சிவன் என்பர்-பசு-அணுக்கள் /பதி- சிவன்-பாகம்- தடுக்குமாம்-சேர்வதை- கைலாசம் சாம்யா பத்தி மோஷம் சாரூப்ய மோஷம் உண்டு என்பர்//ரெங்க ராமானுஷ பாஷ்யம்-உபநிஷத் வியாக்யானம்/விரோதி பரிகாரம்-தேசிகன்/அந்தர்யாமி பிராமண வாக்கியம்/எய்த்த-தளர்ந்து போகும் படி//ஈண்டிய சீர்-தயை போன்ற கல்யாண குணங்கள்/நாதன் அரங்கன் என்னும் பொருள் சுரந்தான் பிரத்யட்ஷமாக காட்டி  கொடுத்தார்–நாராயணன் என்று சொன்னால் வேதம் போல பேச்சு மாற்றி சொல்வார்கள் என்று//புண்ணியன்-தார்மிகன்/மருள் சுரந்த ஆகமம் கண்டித்து அரங்கனை காட்டி கொடுத்தது /

மருள்-அஞ்ஞானம் -பசுபதி ஆகமம்/தெருள்-ஞானம் -பாஞ்சராத்ர ஆகமம்/மருள் சுரந்த ஆகம வாதியர்-ஆகமமே அஞ்ஞானம் –கௌதம சாபத்தை மெய்ப்பிக்க சைவர் என்பர்..–வேதம் அகற்றி நிற்பார்-பஸ்மம் தடவி கொண்டு-பூத பதி- பசு பதி-அடியார் என்று நின்றவன்-மோக சாஸ்திரம் -பாம்பு விஷம் கொடுத்தவன் அவன் தானே முள்ளை எடுத்தார் எம்பார்/பொய் உரை -//சைவ பாசுபத -ஆறு  விதம் -36 தத்வங்கள் என்பர் -நம் 24 எடுத்து கொண்டு-மாயா புருஷ சிவ ஈஸ்வர  சதா சிவ கால நியதி ராக -வித்யை சுத்த  வித்யை-அசுத்த வித்யை-அவர் அவர் தமதமது அறிவகை-மதி விகற்ப்பால்-பதி-சிவன்/ அநு ஜீவாத்மா பகவான் விபு /அர்த்த பஞ்சகம்-பாசங்கள்/ சுத்த பிரமம்-நடாதூர் அம்மாள்-குணங்கள் அற்ற எனபது இல்லை தீய குணங்கள் இல்லை/அப குணங்கள் அற்று என்பதால் நிர் குணம்/காலம் -நியதி – / இரண்டு பக்கம் -காலம் உணர்த்த ஜென்ம -இந்த கர்மம் செய்ய நியமிக்கும் -இரண்டும் ஒன்றே -இவ்வாறு -36-தத்துவங்களும் -24-க்குள்ளே அடங்கும் —

/சூர்யன் பக்தன் பிறந்து-7 ஜன்மங்கள்-பிரசாதத்தால்- ருத்ரன் பக்தன்-7 ஜன்மம் இருந்தால்-சங்கரன்-சம்பு-விஷ்ணு பக்தன்-மாற்றி-கபாலத்வம்-வராக புராணம்-மோக சாஸ்திரம்-ருத்ரன் கொடுத்த -/கௌதமர் ரிஷிகளை ரஷிக்க -பசு மாடி சிருஷ்டித்து நெல் கதிரை சாப்பிட- கௌதமர் தண்ணீர்  தெளித்து விரட்ட -அவை சாக -பசு வதம்- யோக மாயையால் தெரிந்து கொண்டார்-வேத வ்ருதரகளாக ஆவீர் என்று சாபம்-சைவராக பிறந்தார் கள் //ஸ்கந்த புராணம்–இந்த சாபம் பற்றி சொல்லி உஜ்ஜீவிக்க நாராயணனை பற்றினார்கள்//அக்னி- புராணம் போல்வன தாமச குணம் நிரம்பி  உள்ள பொழுது/ரஜோ குணம் பொழுது தம்மை /சத்வ குணம் இருக்கும் பொழுது -பராம் கதி அடைவார்கள்/

/ஓதாதே ஓதுவிக்கும் திருமாலே ஒதுவித்தான்-மாதவனே பரன்  என்று வையம் காண-உடைந்த மழு ஏந்தி -சம்பு -ஜேஷ்ட விஷ்ணு பக்தன்/தம் தம் மதி இழந்து -மயில் போலே ஆடும் படி இருக்க வேண்டி -மாறி-அரனார் சமயம் புக்கி தழல் வழி பொய்-சங்கேதம் தவிர்-பரமத பங்கம் பாடல்கள் //மருளை சுரக்க வந்த ஆகமம்–பேச நின்ற பிரமனுக்கும்//இலிங்கத்து இட்ட -கூறும்-ருத்ர பரதவ ஸ்தாபன அர்த்தமாக அநேக வுப பத்திகளை கல்பித்தி கொண்டு சொல்லும்/காலம் நியதி தத்வம் உண்டு என்பர்/நாமோ எல்லாம் பகவான் ஆணை என்கிறோம்/தாழ்ந்த அர்த்தங்களை -தமஸ் மிகுந்து-அந்த காரம் போகும் படி-ஆஸ்ரித ரஷணங்கள் ஆகிற திரண்ட வைலஷண்யத்தை உடைய கிருபை-ஒரு மடியாக கொண்டு -சகல ஆத்மாக் களும் சேஷி பெரிய பெருமாள் என்னும் அர்த்தத்தை வுபகரித்தார்…பரம தார்மிகர் ஸ்வாமி –அருள் சுரந்தது -பள்ள மடை போல-இயற்க்கை உடன் சேர்ந்து எங்கும் பரவும்//

அவ பொருள்-பொல்லாத  பொருள்//ஆகம வாதியார் கூறும் மற பொருள்-பாட பேதம்–காதுகமான அர்த்தம் /காதுகம்-ஆத்மா நாசம் -நம்மையே முடிக்கும் அறத்துக்கு எதிர் /ஆகம வாதியர் கூறும் மறை பொருள்- -இது தான் மறை என்பர்-வைதிக சரத்தை வர கொண்டாடி சொல்லும் வார்த்தைகளை-பேச நின்ற பியாமனுக்கும் சிவனுக்கும்-சொர்க்கத்தில் பசு மாடுகள் தலை கீழாக நடக்கும்-ஜோதீஸ் ஹோம  பலன் உயர்த்தி சொல்லும்–இருள் சுமந்து சுரந்து எய்த்த-பூமி சுமந்து இருகிராளே–ஈண்டுதல்- திரண்ட/சீர்-அழகு –இது ஒன்றே போதும்/திருமேனி ஒன்றாலே ஞானம் பெறலாம்/அருள் சுரந்து-ஒரு பாட்டம் மழை பொழிந்தால் போல //அரங்கனே  -வகுத்த சேஷி என்று காட்டி கொடுத்தார்/ருக்மிணி கூட சென்று வரம்-கேட்ட கள்வா/கள்வா எம்மையும் ஏழு உலகும் நின்-உள்ளே தோற்றிய இறைவ என்று-வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்-புள்ளூர்த்தி கழல் பணிந்து யேத்துவரே -திரு வாய் மொழி 1 -2 -10 –

/நாராயண, கிருஷ்ண-பூமிக்கு  ஆனந்தம் கொடுப்பவன்-வாசுதேவ கேசவ ரிஷிகேசன்,அச்சுதன்,அநந்தன்-போன்ற பல திரு நாமங்கள்-திரி வித சேதன அசேதன -ஈஸ்வரன்/குறைவற்றவன்-/பிரகலாதன்-உன் செய்கை நைவிக்கும் அது இது உது எதுவானாலும்/கடியன்–கொடியன் –ஆயினும் அவன் பாலே நெஞ்சம் போகும்/பராசரர் மைத்ரேயர்-சாமான்ய கேள்வி/விசேஷித்து பதில்/பீஷ்மர்-யுதிஷ்டிரன்/ஆழ்வார்-மதுரகவி/ கீதாசார்யன்-அர்ஜுனன்/ஆலச்யம்-சோம்பல் -பந்த ஹேது-அஞ்ஞானம் /ஆறு முத்ரைகள்-பஸ்மம் பூசி கொண்டு-ருத்ராட்ஷம் /பூவும் பூசனையும் தகுமே-நிஷித்த தர்ம-ருத்ர-அழுதுண்டே/ஹர-அபகரிகிறான்-தாணு விரூபாஷன்/ச பிரம்மா ச சிவ ச இந்திர பரம ஸ்ராட் -முக்த்தாமா வையும் சொல்லும்/தடங்கல் இல்லாமல் அனுபவிப்பான் என்று/பிரகாரத்தால்-நீராய் சிவனாய் -சரீரம்/ அரியை அரனை அலற்றி சரீரமாக கொண்ட ஹரியை அலற்றி என்ற பொருள்/இன்று ச ஹரி புகுத்தி வேற சேர்ப்பார்-ச பிரம்மா ச சிவா  ச இந்திர ஸ்லோகத்தில்  பஞ்சாதி அஷரம்  சேராது-அவனே அவனும் அவனும் அவனும்-ஆழ்வார்-மறைகளை ஆயிரம் இன் தமிழால் அருளி

-அறம்  பொருள் என்றும் பாட பேதம்-ஆத்மா நாசம்/அரை கூவுதல் தோணியாய்-கடல் ஓசை போல-அர்த்தம் இல்லாத பொருள்/எய்த்த உலகு இருள்-சேதனரின் அஞ்ஞானம் போக்கி//ஆஸ்ரித பரதந்த்ரங்களால் திரண்ட வைஷண்யம் பரவி/பக்தி ரூபாபன்ன ஞானம் என்கிற மை கொண்டு அஞ்ஞானம் போக்கி-நவ ரத்னம் என்கிற அஞ்சனம்/முழு எழ உலகுக்கும் நாதன் /லோக நாதன்-பரன் -/எட்டாத நிலம் இல்லை –அரங்கன் -சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது போகிறோம் என்று கிடக்கிறான்-இவனே நாதன் என்று   காட்டிக் கொடுத்தார் ஸ்வாமி-

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: