அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்–88-கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமாள்-இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை –
எண்பத்து எட்டாம் பாட்டு -அவதாரிகை
எம்பெருமானார் உபகரித்த ஜ்ஞானத்தில் அந்வயம் இல்லாதாரை
கலி தோஷம் நலியும் என்றார் கீழே .
அந்த ஜ்ஞானத்தை வுபகரிக்கைக்காக அவர் வந்து அவதரித்த படியை யனுசந்தித்து –
எம்பெருமானார் ஆகிற சிம்ஹம் குத்ருஷ்டிகள் ஆகிற புலிகளை
நிரசிப்பதாக-லோகத்திலே வந்த பிரகாரத்தை சொல்லி
ஸ்தோத்ரம் பண்ணக் கடவேன் -என்கிறார் -இதில் –
கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமாள்
ஒலி மிக்க பாடலைக் வுண்டு  தன்னுள்ளம் தடித்து அதனால்
வலி மிக்க சீயம் இராமானுசன் மறைவாதியராம்
புலி மிக்கதென்று இப்புவனத்தில் வந்தமை போற்றுவனே – – 88-
வியாக்யானம்
உழுவது -நடுவது -அறுப்பதாக செல்லுகிற ஆரவாரத்தால் மிக்க செந்நெற்கள் விளையா நின்றுள்ள
வயல்களை உடைய -திருக் குறையலூருக்கு நிர்வாஹகராய் –
இரும் தமிழ் நூல் புலவராகையாலே -பெரிய திரு மொழி -1- 7-10 -சாஸ்திர ரூபமான
பிரபந்தங்களை செய்து அருளின வைபவத்தை வுடையரான -திரு மங்கை ஆழ்வார் உடைய –
ஒலி கெழு பாடல்-பெரிய திரு மொழி -11-4 10- -என்னும்படி மிக்க த்வனியை உடைத்தான
திருமொழியை தாரகமாகவும் -போக்யமாகவும் -அனுபவித்து –
தம்முடைய திரு உள்ளம் பூரித்து -அத்தாலே
பிரதி பஷ தர்சநத்தை சஹியாதபடி – – அதி பிரபலமான சிம்ஹம் போலே இருக்கிற எம்பெருமானார் –
பாஹ்யரைப் போல் அன்றிக்கே -வேதங்களை அங்கீகரித்துக் கொண்டு நின்று –
வாதங்களைப் பண்ணி -லோகத்தை நசிப்பிக்கிற குத்ருஷ்டிகள் ஆகிற புலிகள்
மிக்கதென்று -சாது மிருகங்களை நலியா நின்றுள்ள –துஷ்ட மிருகமான புலி மிக்க
காட்டிலே அவை தன்னை நிரசிக்க வற்றான தொரு சிம்ஹம் வந்து தலைப் படுமாலே
சன்மத தூஷகரான குத்ருஷ்டிகள் வர்த்திக்கிற இந்த பூமியிலே
தன்மத தூஷகராய் வந்து அவதரித்த பிரகாரத்தை ஸ்துதிக்க கடவேன்
கலி -ஆரவாரம் -மிடுக்குமாம்-
அப்போது பூ சரத்தை சொல்லுகிறது
கழனி -வயல்
சீயம் -சிம்ஹம்
போற்றுதல் -புகழ்தல்–
ஒலி மிக்க பாடல் கலியன் -கலி மிக்க -புலிகளை ஓட்ட ராமானுஜ சிம்மம் –
கலை -சாஸ்திரம் –நாலு கவி பெருமாள் –
வேழம்-நம்மாழ்வார் ஸ்ரீ ஸூக்திகளால் -/ கஜ சிம்ம கதி விசாரம் –
மாறன் பசும் தமிழ் எம்பெருமானாரை மத வேழம் ஆக்கியது என்றார் கீழே –
இங்கே கலைப் பெருமாள் பாடல் அவரை வலி மிக்க சீயம் ஆக்கியதாக அருளிச் செய்கிறார் –
அடையார் சீயத்தின் பாடல் ஸ்வாமியை வலி மிக சீயம் ஆகிற்று /
மறை வாதியர்களை மறையும் படி -மறையை கொண்டே-மறைத்தார் ஸ்வாமி-
/நர சிம்ஹம் ராகவா சிம்ஹம் யாதவ சிம்ஹம் ஸ்ரீரங்கேச சிம்ஹம் போல- பராந்குச சிம்ஹம் பரகால சிம்ஹம் யதிராஜ சிம்ஹம் -/குறையல் பிரான் அடி கீழ் இன்றும் ஸ்வாமி சேவை திருவாலி திருநகரி /திருவடி வந்ததை கண்டே மகிழ்ந்த முதலிகள் போலே -இந்த சிம்மம் வந்தமை கண்டு போற்றுவோம் -/மாறன் கலை உணவாகப் பெற்றோம் -மா முனிகள் /பசும் தோல் போர்த்திய புலிகள் குத்ருஷ்டிகள் -ஆம்னாய சர்ச்சா கவசம்-கோ முகம் -சங்கல்ப சூரியோதயம் -தேசிகன் -மறை -மறைத்து சொல்வதால் -தப்பாக -அருளிச் செயல்கள் இப்படி இல்லையே /பிரசன்ன புத்தன் வேஷத்தை கொண்டு –சர்வ சூன்யத்தில் -சின் மாத்ர ப்ரஹ்மம் மட்டும் சொல்லும் அத்வைதிகள் போல்வார் /உபய வேதாந்த ஐக கண்டம் -இது கொண்டே ஸூத்ரங்களை ஒருங்க விடுவார் –

 ————————————————————————–
பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை -கீழ்ப் பாட்டில் எம்பெருமானார் உபதேசித்த ஞானத்தில் அந்வயம் இல்லாதவரை கலி
பிரயுக்தமான தோஷம் ஆக்கிரமித்து நலியும் என்று சொல்லி -இதில் -அந்த ஞானத்தை லோகத்தார் எல்லாருக்கும்
உபதேசிக்கைக்காக –அவர் விண்ணின் தலை நின்றும் -மண்ணின் தலத்து உதித்தபடியை அனுசந்தித்து –செந்நெல்
விளையா நின்றுள்ள வயல்களை உடைய  திருக் குறையலூருக்கு ஸ்வாமியான திரு மங்கை ஆழ்வாருடைய
திவ்ய பிரபந்தமாகிற பெரிய திரு மொழியை அனுபவித்து களித்து – பிரதி பஷிகளுடைய கந்தத்தையும் சகிக்க மாட்டாதே –
பிரபலமான சிம்ஹம் போலே இருக்கிற எம்பெருமானார் –வேத பாஹ்யர் போல் அன்றிக்கே -வேதத்தை பிரமாணமாக
இசைந்து -அதுக்கு விபரீத அர்த்தங்களை சொல்லி –லோகத்தை நசிப்பித்த குத்ருஷ்டிகள் ஆகிய புலிகள்
தன்னரசு நாடாக கொண்டு  தடையற நடமாடா நின்ற -அவர்களுடைய மதங்களை நிரசிக்கைக்காக அவர்கள்
நடையாடும் இந்த பூமியிலே வந்து அவதரித்த பிரகாரத்தை ஸ்துதிக்க கடவேன் என்கிறார் –
வியாக்யானம்கலி மிக்க செந்நெல் கழனி -உழுவது நடுவது அறுப்பதாய் கொண்டு சர்வ காலத்திலும் செல்லுகிற
ஆரவாரத்தாலே மிக்க செந்நெல்லை உடைத்தான கழனி களுடைய –கலிஆரவாரம் -அன்றிக்கே –கலி   -என்று மிடுக்காய்
சாரவத்தானே பூமியிலே விளைந்த செந்நெல் என்னுதல் –கழனி -வயல் -குறையல் கலை பெருமான் -இப்படிப் பட்ட
செந்நெல் களோடு கூடின  வயல்களை உடைத்தாய் ஆகையாலே -மன்னிய சீர் தேங்கும் குறையலூர் –
என்கிறபடியே சகல சம்பத்துக்களையும் உடைத்தான திருக் குறையலூருக்கு நிர்வாஹராய் –இரும் தமிழ் நூல்
புலவன் –என்கிறபடியே சாஸ்திர ரூபங்களான திவ்ய பிரபந்தங்களை செய்து அருளி -உபகரித்த
மகா உபகாரரான திரு மங்கை ஆழ்வார் உடைய
-குறையல் பிரான் அடிக் கீழ் -என்று இப் பிரபந்தத்திலேயும் இவருடைய உபகாரத்தை அனுசந்தித்தார் இறே –
செய் தவம்சத்தில் கிருதஜ்ஜராய் போருகிறவர் இவரும் அவருமே (அமுதனாரும் ராமானுஜரும்-/ராமானுஜரும் கலியனும்  / கலியனும் நம்மாழ்வாரும் ) காணும்
ஒலி மிக்க பாடல் -இம்மாகா உபகாரத்தால் அருளிச் செய்யப்பட திரு மொழி -திரு குறும் தாண்டகம்
திரு நெடும் தாண்டகம் -தொடக்கமான திவ்ய பிரபந்தங்களை -இன்பப் பாடல் -என்கிறபடியே அனுசந்திக்கப்
புக்கவர்களுக்கு -அர்த்த ரசத்தாலும் போக்யதையாலும் ஆனந்தம் மிகுதியாய் கரைபுரண்டு இருக்கையாலே
மிகுந்து –கலியனது ஒலி மாலை -என்கிற படியே பெரு மிடறு செய்து அனுசந்திக்க வேண்டுகையாலே

மிக்க த்வனி யை உடைத்தான திவ்ய பிரபந்தங்கள்

மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர்கோன் ஆறங்கம் கூறுவதாக பண்ணி
அருளின திவ்ய பிரபந்தங்கள் என்றபடி –ஒலி த்வனி -அந்த பிரபந்தங்களை தாரகமாகவும்
போஷகமாகவும் போக்யமாகவும்   நினைத்துக் கொண்டு முற்றூட்டாக அனுபவித்து –தன்னுள்ளம் தடித்து –
அந்த அனுபவ ஜனித ப்ரீதியாலே தம்முடைய திரு உள்ளம் பூரித்து -இவ் வனுபவத்தாலே காணும் பிரதி பஷ
நிரசனத்துக்கு தகுதியான மிடுக்கு அவருக்கு உண்டானது –தடித்தல் -பூரிக்கை-அதனால் வலி மிக்க சீயம் – அந்த
பரி பூர்ண ஞானம் ஆகிற மிக்க பலத்தை உடையராய் -சிம்ஹம் போலே இருக்கிற இராமானுசன் -எம்பெருமானார் –
பிரதி பஷ தர்சனத்தை சகியாதே அவர்களை பக்னராய் பண்ணுமவர் ஆகையாலே –வலி மிக்க சீயம் –என்கிறார்
வலி -பலம் -சீயம் -சிம்ஹம் -மறை வாதியராம் -வேத  அப்ராமான்ய வாதிகளான பௌத்தாதிகளை போல்
அன்றிக்கே -வேதத்தை பிரமாண மாக அங்கீ கரித்து வைத்து -அதுக்கு அபார்த்தங்களை சொல்லி -இவற்றைக் கொண்டு
துர்வாதம் பண்ணி லோகத்தார் எல்லாரையும் பிரமிக்க பண்ணி நசிப்பித்து கொண்டு போகிற குத்ர்ஷ்டிகள்
ஆகிற -புலிமிக்கதென்று -புலி கள் மிக்கது என்று -நிவாரகர் இல்லாமையாலே அவை தனிக்கோல் செலுத்தா நின்றன என்று –
இப்புவனத்தில் வந்தமை-சாது ம்ர்கங்ககளை நலியா நின்றுள்ள துஷ்ட ம்ர்கமான புலி மிக்க காட்டிலே
அவை தன்னை நிரசிக்க வற்றான தொரு சிம்ஹம்  வந்து தலைப்படுமா போலே -சந்மத தூஷிகரான குத்ர்ஷ்டிகள்
வர்த்தித்து தனிக்கோல் செலுத்துக்கிற இந்த பூமியிலே தன்மத தூஷகராய் கொண்டு –விண்ணின் தலை நின்று –
வந்து அவதரித்த பிரகாரத்தை போற்றுவனே -ஸ்துதிக்க கடவேன் –போற்றுதல் -புகழ்தல் -குரும்  பிரகாச எத்தீ மான் –
என்கிறபடியே அவர் தம்முடைய குண
கலை -சாஸ்திரம் –நாலு கவி பெருமாள் –சேஷ்டிதங்களை புகழக் கடவேன் என்று அருளிச் செய்தார் ஆய்த்து –
————————————————————————–

அமுது விருந்து

அவதாரிகை .
எம்பெருமானார் மறை தேர்ந்து அளிக்கும் நல் ஞானத்தில்  சேராதாரைக் கலி
நலியும் என்றார் கீழ் ..யாவரும் சேர்ந்து கலியை விலக்கலாம் படியான –
அத்தகைய நல் ஞானத்தை உபகரிப்பதற்காக-அவர் இவ் உலகில் வந்து அவதரித்த படியை
அனுசந்தித்து -அதனால் இத்தகைய வைதிக ஞானம் உலகினருக்கு கிடைக்க ஒண்ணாதபடி
வேதத்திற்கு -அவப் பொருள் கூறும் குத்ருஷ்டிகள் தொலைந்தமை கண்டு –
எம்பெருமானார் ஆகிற சிம்மம்-குத்ருஷ்டிகள் ஆகிற புலிகளைத் தொலைப்பதற்காக
இவ் உலகில் வந்ததாக உருவகம் செய்து -அவரது அவதாரத்தை
ஸ்தோத்ரம் பண்ணுவேன் -என்கிறார் –
பத உரை –
கலி மிக்க -ஆரவாரம் மிகுந்த
செந்நெல் -செந்நெற்கள் விளையும்
கழனி -வயல்களை உடைய
குறையல் -திருக் குறையலூருக்கு தலைவரும்
கலைப் பெருமாள் -சாஸ்திர நூல்களாய்-அமைந்ததிவ்ய பிரபந்தங்களை அருளி செய்யும்
பெருமை வாய்ந்த வருமான திரு மங்கை ஆழ்வாருடைய
மிக்க -மிகுந்த
ஒலி -ஓசையை உடைய
பாடலை -பாசுரங்களை
உண்டு -அனுபவித்து
தன் உள்ளம் -தனது திரு உள்ளம்
தடித்து -பூரித்து
அதனால்-அந்தக் காரணத்தினால்
வலி மிக்க -பலம் மிகுந்த
சீயம் -சிம்மமாக ஆன
இராமானுசன் -எம்பெருமானார்
மறை -வேதத்தில் கூறும் பொருள்களில்
வாதியராம் -அவப் பொருள் சொல்லி வாதம் செய்கிற குத்ருஷ்டிகள் ஆகிற
புலி மிக்கது என்று -புலிகள் நிறைந்து விட்டன என்று
இப்புவனத்தில் -இந்த உலகத்தில்
வந்தமை -அவதரித்த படியை
போற்றுவன் -புகழுவேன் .
வியாக்யானம் –
கலிமிக்க —வலி மிக்க சீயம்
திருக் குறையலூர் திரு மங்கை ஆழ்வார் அவதரித்த ஸ்தலம் .
அங்குள்ள வயல்களில் கலி மிகுந்து உள்ளதாம் –
கலி-ஆரவாரம்
உழுவதாலும்-நடுவதாலும் -அறுப்பதாலும்-உண்டாகும் ஆரவாரங்களில் ஏதேனும் ஓன்று
அவ் வயல்களில் மிகுந்து உள்ளது -என்க –கலி -பலமாகவுமாம்-வயல்களுக்கு பலம் பூமியின் சாரம் -என்க –
செந்நெல் கழனி -செந்நெற்கள்  பயிராகி விளைகின்ற வயல் .
பூமியின் சாரத்தினால் செந்நெற்பயிர்கள் நன்கு விளைவது போலே –
சர்வேஸ்வரனுக்கு நிலத்தின் மாண்பினால் திரு மங்கை யாழ்வார் ஆகிற பயிர் நன்றாக
விளைந்த இடம் திருக் குறையலூர் -என்க .
கலைப் பெருமான் –
கலைகளை வழங்கிய பெருமை உடையவர் என்றபடி -கலை -சாஸ்திரம்
இரும் தமிழ் நூல் புலவன் -பெரிய திருமொழி – 1-7 10- -என்றபடி இரும் தமிழ் நூலாகிய
திருவாய் மொழி -முதலிய திவ்ய சாஸ்த்ரங்களில் புலவர் ஆகையாலே அவற்றை
விளக்குமவையான சாஸ்த்ரங்களாய் அமைந்த பெரிய திருமொழி முதலிய திவ்யப் பிரபந்தங்களை
அருளிச் செய்த பெருமை வாய்ந்தவர் -திருமங்கை ஆழ்வார் -என்க –
இரும் தமிழ் நூல் புலவர் ஆகையாலே -அவர் அருளிச் செய்த சாஸ்திரங்களும் தமிழாய்
அமைந்தன -.இரும் தமிழ் நூல் என்பது-திருவாய் மொழி முதலிய நாம் ஆழ்வார் உடைய
திவ்ய பிரபந்தங்களையே -.இதனை
என் நெஞ்சத்துள் இருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து –திருவாய் மொழி – 10- 6-4 –
என்னும் நாம் ஆழ்வார் திருவாக்கினால் அறியலாம் –
அறியவே -நாம் ஆழ்வாருடைய திவ்ய பிரபந்தங்கள் ஆகிய சாஸ்த்ரங்களில்
புலமை பெற்றவரான திரு மங்கை ஆழ்வார் -அவற்றை விளக்கும் வகையில்
தமிழ் சாஸ்த்ரங்களான  திவ்ய பிரபந்தங்களை அருளிச் செய்த பெருமை உடையராய்
இருப்பது புலனாம் .தமிழ் மறை நாம் ஆழ்வார் திவ்ய பிரபந்தங்கள் –
திருமங்கை ஆழ்வார் அவற்றை விளக்குமவைகளாக அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்கள்
அவற்றுக்கு அங்கமான சாச்த்ரங்களாக அமைந்தன –
வேதங்கள் நான்கு -அங்கங்கள் ஆறு –
தமிழ் மறைகளும் நான்கு -திரு விருத்தம் -திருவாசிரியம் -பெரிய திருவந்தாதி -திருவாய் மொழி -என்பவை அவை .
அவற்றின் அங்கங்களும் -பெரிய திருமொழி தொடங்கி-திரு நெடும் தாண்டகம் ஈறாக ஆறு .
அவை ஆறும் கலைகள் –
அவற்றை அருளிச் செய்த பெருமை தோற்ற –கலைப் பெருமாள்-என்கிறார் .
வட மொழி மறையின் அங்கங்களை –கலை -என்னும் சொல்லாலே வழங்கி உள்ளார் திரு மங்கை ஆழ்வார் –
பன்னு கலை நூல் வேதப் பொருள் எல்லாம் -பெரிய திருமொழி -7 8-2 என்பதையும் –பரம்பின கலைகளை உடைத்தான நால் வகைப் பட்ட வேதங்கள்-என்னும் அதன் வியாக்யான ஸ்ரீ சூக்தி யையும் காண்க – –
பரம்பின கலைகளை உடைத்தான -என்பது விரிவான சாஸ்திர ரூபங்களான அங்கங்களை உடைத்தான -என்றபடி .
அமுதனார் அதனை அடி ஒற்றி -அங்கங்களான திவ்ய பிரபந்தங்களை –கலை –என்னும் சொல்லாலே
குறிப்பிடுகிறார் .
ஒலி மிக்க பாடல் -மிகுந்த ஒலியை உடைய பாடல் -என்றபடி -ஒலி -ஓசை
துள்ளலோசை முதலியவை இவருடைய பாடலில் மிகுந்து இருப்பதைக் காணலாம் .நிலையிடமெங்குமின்றி – 11-4 – -என்னும் திரு மொழியில் இவ்வோசை மிகுந்து இருப்பதனால்
ஒலி கெழு பாடல் -11 4-10 – – – என்று அவரே குறிப்பிட்டு இருப்பது கவனிக்கத் தக்கது .
உண்டு தன் உள்ளம் தடித்து –
பாடலை உணவாக கூறினமையின் -அதுவே எம்பெருமானாருக்கு தாரகம் -என்றது ஆயிற்று-
மாறன் கலை உணவாகப் பெற்றோம் -என்றார் மணவாள மா முனிகள் –
உண்டு உள்ளம் தடித்ததாக -மகிழ்ச்சியினால் மனம் பூரித்ததாக -கூறினமையின்
அதன் இனிமை தொற்றுவதால் பாடல் போக்யமாய் இருத்தலும் புலனாகின்றது –
அதனால் வலி மிக்க சீயம் இராமானுசன் –
பீம சேனன் துர்யோதனனால் கங்கையில் போடப் பட்டு -பாதாள லோகம் சென்று –
கலசம் கலசமாக அம்ருத பானம் பண்ணினதன் பயனாக பதினாயிரம் யானையின் வலுவைப் பெற்றது போலே
எம்பெருமானாரும் -நல்ல அமுதமான ஒலி மிக்க பாடல்களை ஆயிரக் கணக்கில் உண்டு -அதன் பயனாக வலு மிகுந்த சீயமாய் விளங்குகின்றார் -என்க .-
மறை வாதியராம் புலி –போற்றுவன் –
இயல்பினில் மிகவும் கொடியவைகளான புலிகள் மிகுந்து சாதுவான ஏனைய மிருகங்கள் நலிந்து
திரியா நிற்க –வலி மிக்க சீயம் வந்து வனத்தை காக்க முற்படுவது போலே -மிகவும்
கொடியவர்களான மறைவாதியர் என்னும் புலிகள் மிகுந்து -சாதுக்களான உலகினரை
நலிந்து திரியா நிற்க அப் புலிகளை தொலைக்க வல்ல -வலி மிக்க சீயமாய் வந்து புவனத்தை
காக்க முற்படுகின்றார் எம்பெருமானார் -என்க –
மறையைப் பிரமாணமாக மதிக்காத புறச் சமயிகள் போல் அல்லாமல் –
அதனை பிரமாணமாக ஏற்று இருந்தும் -அம்மறை கூறும் நேரிய பொருளை ஏற்காமல் –
அவப் பொருள் சொல்லி வாதம் புரிந்து -சாதுக்களான உலகினரை கலங்கச் செய்து -மறை நெறிக்கண்
நடந்து உய்ய விடாது நலிகின்றமையின் மறை வாதியார் கொடியவர்கள் ஆயினர் -என்க –
மறை வழி ஒழுகும் மாந்தர் புறச் சமயிகளின் நின்றும் எளிதில் தப்பலாம் –
மறை வாதியரின் மாற்றம் ஏமாற்றம் விளைவிப்பதாய் இருத்தலின் பசுத்தோல் போர்த்த புலி
போன்ற அவர்கள் இடம் இருந்து தப்ப வழி இன்றிப் படு நாசத்திற்கு உள்ளாக நேரிடுகின்றது .
இங்கனம் தப்ப வழி இன்றி மறை முகமாக பாய்ந்து மாய்ந்து போகும்படி
செய்தலினால் -மறைவாதியர் -புலி யாயினர் -என்க .
இங்கு சங்கல்ப சூர்யோதயத்தில் –2 36- –
அந்யைராம் நாயா சர்ச்சா கவசத்ருதி கனத் கோமுகைர் த்வீபிபிச்ச -என்று
வேதத்தை பற்றிய ஆராய்ச்சி என்னும் கவசம் அணிந்தமையினால் விளங்குகின்ற பசுவின்
முகம் கொண்ட மற்றவர்கள் ஆகிற -மறை வாதியர்களாகிற – புலிகளினாலும் -என்று
வேதாந்த தேசிகன் வருணித்து இருப்பது நினைத்தற்கு உரியது .பசு முகமாய் இருப்பதில்
ஏனைய பசுக்கள் தம்மில்  ஒன்றாக கருதி -அவற்றைக் கிட்டுகின்றன –
அவை அவற்றை உண்மையில் புலி யாதலின் நலிகின்றன ,இங்கனமே மறையும் ஆராயும்
மாண்புடையோர் என்று மயங்கி தம்மிடம் வந்த உலகினரை கலங்க வடித்து -நலிகின்ற்றனர்
மறை வாதப் புலிகள் -என்க –
மறை வாதியர் -சங்கர பாஸ்கர யாதவ பாட்டப் பிரபாகரர் -மதத்தை சார்ந்தவர்கள் –
புலிகள் மிக்கு இருப்பினும் –வலி மிக்க ஒரு சீயம் அவற்றை தொலைத்து விடுவது போலே –
எம்பெருமானார் என்றும் ஒரு சீயம் -மறை வாதியராம் புலிகள் மிக்கு இருப்பினும்
அவற்றைத் தொலைப்பதாயிற்று -.மறை வாதியர்கள் மீண்டும் தலை எடுக்க ஒண்ணாதபடி –
அவர்கள் மதங்களைக் கண்டித்து -ஒழித்து அருளுவாராய் -இவ் உலகத்தில் அவதரித்தமை யை
அனுசந்தித்தபடி –
இவ்வாறு மறை வாதியரைவெல்லும் வலி -கலை பெருமான் பாடல்களினால் மிகுந்ததாம் .
எம்பெருமானாருக்கு –ஆரண சாரம் அல்லவோ அப்பாடல்கள்-அடையார் சீயம் –பெரிய திரு மொழி – 3-4 10- –
பாடல் வலி மிக்க சீயமாக்கிற்று–இப்பாடல்களினால் மறைப் பொருள் இது தான் என்னும் முடிவுக்கு
வந்து மறை வாதியரையும்-அம்முடிவுக்கு வரச் செய்து -அவர்களை வென்று அருளினார் -என்பது கருத்து .
மாறன் பசும் தமிழ் எம்பெருமானாரை மத வேழம் ஆக்கியது என்றார் கீழே –
இங்கே கலைப் பெருமாள் பாடல் அவரை வலி மிக்க சீயம் ஆக்கியதாக அருளிச் செய்கிறார் –
தமிழ் மறையும் ஆறு அங்கங்களும் -வட மொழி மறையின் பொருளை தெளிவுற உணர்த்துவன வாய்
அமைந்துள்ளன –
இங்கனம் மறை வாதியரை மறைந்து ஒழிய செய்து மறைப் பொருளை நிலை நிறுத்துமாறு –
எம்பெருமானார் அவதரித்த விதத்தை போற்றுவேன் -என்கிறார் ..
————————————————————————–
அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது –

ஞானத்தை உபகரிக்கைகாக ஸ்வாமி வந்து அவதரித்த படியை அனுசந்தித்து-எம்பெருமானார் ஆகிய சிம்ஹம் குத்ருஷ்டிகள் ஆகிய புலிகளை நிரசிப்பதாக-லோகத்தில் வந்த பிரகாரத்தை சொல்லி ஸ்தோத்ரம் பண்ண கடவேன் என்கிறார்-நல் ஞானம் பெற- ஆழ்வார்கள்- அருளி செயல்/

சல்லடை-தேவை உள்ளதை வெளியில் தள்ளும்/ முறம்- தேவை அற்றதை வெளியில் தள்ளும்/சார தமம் இவை/வேதம் கடைந்து எடுத்த ரகஸ்ய த்ரயம் காட்டிய பிர பத்தி -அருள அவதரித்தார்/அம்ர்ததுக்கு -பாராசரரின் -வாக்கு அமிர்தம்-வியாக்யானம் ஸ்ரீ பாஷ்யம்/-உபநிஷத் பாற்கடல் மத்தியில்- ஆழ கடலில் இருந்து எடுத்த தெளிந்த பொருள்–அங்கு அமரர்களாக போக வழி காட்டும்  அமிர்தம்/சம்சார ஆர்ணவ–ஆத்ம சந்ஜீவிநியாக கொடுத்த பிரம சூத்திரம்-நழுவி போனது நடுவில்

-கண்டவர் -புல் அறிவால் மூலையில் அர்த்தம் வைக்க-பூர்வாசார்யர் -போதாயனர்- அருளிய அர்த்தங்களை பிர காச படுத்த அருளினார்-நிலா தேவர்கள் குடிக்கட்டும்/ வேதாந்தமே அமிர்தம்..-எய்தற்கு அறிய மறைகளை அருளிய அருளி செயல்களை கொண்டு ஒருங்கே விட்டார் ஸ்வாமி/-பக்தி ஈரத்தால் நனைத்த ஞானமே கை விளக்காக கொண்டு/கோதிலவாம்  ஆழ்வார்கள் -மா முனிகள்-/பிரமாண ஸ்ரீ –கைங்கர்ய ஸ்ரீ –அனைத்தையும் கொண்ட ஸ்ரீ பாஷ்யம்/-அங்கங்கங்கள் ஆறு பிர பந்தம் அருளிய கலியன் –மூன்று முக்ய உத்சவங்கள்/

தாம் உகந்த உத்சவம் -மங்களாசாசன -கருட சேவை-உத்சவம்

தமர் உகந்த உத்சவம் -வேடு பரி உத்சவம்

தானான உத்சவம் -திருக் கார்த்திகை உத்சவம்

பர சமய பஞ்சுகனலின்  பொறி பர காலன் பனுவல்களே //அஞ்சுக்கு இலக்கியம் ஆரண சாரம் -அமிர்தம் உண்டு ஸ்ரீ பாஷ்யம் அமிர்திலும் அமர்த்தம் /வாள் கொண்டு எதிர்த்து /நஞ்சுக்கு நல்ல அமிர்தம் கொடுத்தார்

/நர சிம்ஹம் ராகவா சிம்ஹம் யாதவ சிம்ஹம்   ஸ்ரீரங்கேச சிம்ஹம் போல- பராந்குச சிம்ஹம் பரகால சிம்ஹம் யதிராஜ சிம்ஹம் –

கோபம் கொந்தளிக்கும் புலி இடம் –தேஜஸ் சிம்ஹம்  இடம்–களித்தார் கலியன் பாடல் உண்டு -புலிகளை ஓட விரட்டினார்–வைதிக மறை அழிக்கும்  குதிர்ஷ்டிகள் -புலி போல இருக்க-/சிங்கம்-வந்தமை //வலி மிக்க சீயம்

/உழுவது,நடுவது அருப்பத்தாய் செல்லுகிற ஆரவாரம் மிக்க செந் நெல் விளையும் வயல்கள் -நாளும் விழவின் ஒலி ஓவா திரு நறையூர் போல-

//குறையல் பிரான் அடி கீழ் இன்றும் ஸ்வாமி சேவை திருவாலி திருநகரி /கலை பெருமாள்- சாஸ்திரம் அறிந்த கலியன்/கலியன தமிழ் ஒலி சொன்னாலும்  துயர் போகும்-/ஒலி மிக்க பாடல்– தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்ப பாபம் நில்லாதே-பாடலை உண்டு உள்ளம் தடித்து அதனால் வலி மிக்கு –/முனி வேழம் முன்புஆழ்வார் பாசுரத்தால் – //அமரிக்கை -யானை /வாள் வழியால் மந்த்ரம் கொண்டார் இவர்/கலி -ஆரவாரம் மிடுக்கு /பூ சாரத்தை சொல்லுகிறது-கலி மிக்க செந்நெல் /ஒலி-துவனி-தெம்பை கொடுக்கும்-இயற்க்கை உடன் ஒன்றிய ஒலி /ஸ்ரமத்துக்கு போக்கு வீடாக /செழிப்பு  உடைய வயல்கள் /இரும் தமிழ் நூல் இவை மொழிந்து – புலவ

/அப்பன் கோவில் திரு அவதாரம் ஆழ்வார் .எழுந்து அருளி இருக்கும் இடம் ஆழ்வார் திரு நகரி/திரு குறையலூரில் அவதரித்து திருவாலி திரு நகரி.எழுந்து அருளி-கலியன்//நாவினுள்உளானே- -காவி நன் மேனி கமல கண்ணன் நெஞ்சினில் உளானே-இரும் தமிழ் நூலை மொழிந்தான்/கலியனும் தம்மை இரும் தமிழ் நூல் புலவன் என்று சொல்லி கொள்கிறார்../கலை பெருமாள்-பன்னு கலை நூல் வேத பொருளை எல்லாம்-ஆழ்வார்/பரம்பின கலைகளை உடைத்தாய் விகசித்து ஆறு அங்கங்கள் உடைய -அதனால் கலை பெருமான் இவர்/ஒலி கெழு பாடல்-ஒலி மிக்க பாடல்–மிக்க துவனி உடைய திரு மொழியை உண்டு-தாரக போஷாக போக்யமாக கொண்டு–அனுபவித்து/மாறன் கலை உணவாக பெற்றோம்-மா முனிகள்-போல–தம் உள்ளம் பூரித்து -பிரதி பஷ  தர்சனம் -சகியாமல்அதி பிரபலமான சிம்ஹம் போல இருக்கிற எம்பெருமானார்.

.பாஹ்யர் போல அன்றிக்கே வேதங்களை அங்கீகரித்து கொண்டு நின்று வாதங்களை பண்ணி லோகத்தை நசிக்கும்-பசும் தோல் போர்த்த புலி போல –சங்கல்ப சூர்யோதயம்-தேசிகன்-கோ முகம் கவசம் இது போல /-ஒரே நாடகம் இவர் அருளியது/ மறை வாதியர்-குழப்ப சரியாக மறைத்து சொல்லும் வேதம்- அருளி செயல் இதற்க்கு இடம் கொடுக்காது  /சாது மிருகங்களை நலிய நின்று உள்ள-சன்மத தூஷகரான குத்ருஷ்டிகளை வர்த்திக்கிற இந்த பூமியிலே/அவர்கள் மத தூஷகராய் வந்து அவதரித்த பிரகாரத்தை ஸ்துதிக்க கடவன்/விண்ணின் தலயில் இருந்து மண்ணின் தளத்துக்கு அவதரித்தார்

/பிரதி பஷ கந்தம் சகிக்காமல் /தன் அரசு நாடாக கொண்டு திரியும் புலியை  விரட்ட //சீர்காழி- தாடாளன்- சேவிக்க வரும் பொழுதும் கலி மிக்க ஆரவாரம் துவனி உண்டு/மன்னிய சீர் தேங்கும் திரு குறையலூர்/குறையல் பிரான் அடி கீழ் விள்ளாத அன்பு உடையவர்//இவரும் அவருமாய்-அமுதனார் ராமானுஜர்/

கலியன் ஆழ்வார் /இன்ப பாடல்/தொண்டர்க்கு அமுது உண்ண–இன்ப மாரி அருள் மாரி/அர்த்த ரசம் பொருள் செறிவு போக்யதை எல்லாம் கொண்டு-பெரும் இடறு செய்து அனுசந்திக்கும் வேண்டும்  படி-ஒலி மிக்க பாடல்/இரும் தமிழ் நூல் புலவன் பனுவல் ஆறும்-மற்றை எண்மர்  நன் மாலைகள் -அங்க உபாகங்கள் பதினாலும் போல

//உண்டு- முற்றூட்டாக கொண்டு-அனுபவ ஜனித ப்ரீதியாலே–சாமான அதிகரண்யம் -நீலம் வயிறு பெருத்து வாய் சிருத்து அலங்காரத்துடன்  தண்ணீர் தூக்க குடம்/பல விசேஷணங்கள் ஒன்றையே குறிப்படுவது போலே-நீராய் நிலனாய்–அயனாய்  விரியும் எம்பெருமான்-சரீர ஆத்ம பாவம் தான் அடிப்படி/

மின் உருவாய்  முன் உரு பொன் உரு -வேதம் நான்காய் -தத்வ த்ரயங்களையும் காட்டினார் இத்தால்-/நந்தா விளக்கே   அளத்தற்கு அரியாய் சத்யம் ஞானம் ஆனந்தம் பிரம்மா -/பரி பூர்ண ஞானம்-மிக பலம் உள்ள சீயம் /பிரமித்து நசிக்க வைக்கும்-பிரமத்துக்கு  பிரமம் என்பர் -மறை வாதியர் -தனி கோல் சென்று நின்றன -அவற்றை தகர்த்த சீயம் இவர் /குண சே ஷ்டிதங்களை  புகழ கடவேன்

அடையார் சீயத்தின் பாடல் ஸ்வாமி யை  வலி மிக சீயம் ஆகிற்று /மறை வாதியர்களை  மறையும் படி -மறையை கொண்டே-மறைத்தார் ஸ்வாமி

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: