அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்–87-பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும்-இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை
எண்பத்து ஏழாம் பாட்டு -அவதாரிகை
சேதனருடைய ஜ்ஞான வ்யவசாயங்கள் கலங்கும்படி ஆக்ரமியா நின்றுள்ள
கலி காலத்திலே – உமக்கு இந்த வ்யவசாயம் ஒருபடிப் பட நில்லாது இறே-என்ன –
அது ஆக்கிரமிப்பது எம்பெருமானாராலே உபக்ருதமான ஜ்ஞானத்திலே அனந்விதராய்
இருந்துள்ளவர்களை -என்கிறார் .
பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன் குணம் கட்கு
உரிய சொல்லென்றும் உடையவன் என்று என்றென்று உணர்வில் மிக்கோர்
தெரியும் வண்   கீர்த்தி யிராமானுசன் மறை தேர்ந்து உலகில்
புரியு நன் ஞானம் பொருந்தாதவரைப் பொரும் கலியே – – 87- –
வியாக்யானம்-
பேசுகைக்கு ஈடான ஜ்ஞான சக்திகளை உடையராய் இருக்கும் பேரளவுடையார் சொல்லிலும் –
அஞ்ஞான சக்திகளுக்குஎல்லையாய் இருக்கும் அளவிலிகளானவர்கள் சொல்லிலும் –
அவர்களுடைய ஜ்ஞான சக்திகளால் எல்லை காண ஒண்ணாத படியாய் –
இவர்களுடைய அஜ்ஞான சக்திகளால் நமக்கு பூமி யன்று என்று மேலே வேண்டாத படியாய் –
இப்படி தங்கள் குணங்களுக்கு ஈடாக பேசலாம்படி  இருக்கிற  தம்முடைய
ஸ்வரூபாதிகளுக்கு வாசகமான சப்தங்களை -சர்வ காலத்திலும் உடையவராய் -இருக்குமவர் என்று-
ஜ்ஞாநாதிகரானவர்கள் பல காலும் விவேகித்து -அனுசந்தியா நின்றுள்ள
திவ்ய கீர்த்தியை உடையரான எம்பெருமானார் –
வேதத்தை ஆராய்ந்து லோகத்திலே உபகரித்து அருளின விலஷணமான ஜ்ஞானத்தில்
சேராதவர்களை கலி வந்து மேலிட்டு நலியும் –
அந்த ஜ்ஞானத்தில் சேர்ந்தவர்களை நலிய மாட்டாது -என்று கருத்து .
குணம் கட்கு உரிய சொல் ஒன்றும் உடையவன் -என்ற படமான போது-
தங்களுடைய ஜ்ஞான சக்திகளும் அஜ்ஞான அசக்திகளும் ஆகிற குணங்களுக்கு ஈடாக
பேசும் சப்தம் இத்தனை எல்லாம் மிகை என்றாதல் .
இது போராது என்றாதல் -சேராச் சேர்த்தியாய் இராதே -அபரிசேத்யமஹிமாவாலும்
அளவிறந்த சௌசீல்ய த்தாலும் -சேரும்படியாய் இருக்கும் -ஸ்வாமி -என்று பொருளாக கடவது .
ஒன்றுதல்-கூடுதலாய் -சேர்த்திக்கு வாசகமாகிறது .-
தம் குணம் கட்கு -என்றும் பாடம் சொல்லுவார்கள் .
அப்போது பெரியவர்  பேசிலுமாம்,பேதையர் பேசிலுமாம்- அவரவர் அளவுக்கு ஈடாக பேசலாம்படி
தம்முடைய குணம்களுக்கு ப்ராப்தமான சொல்லை என்றும் உடையராய் இருக்குமவர்
என்று பொருளாக கடவது .
உரிய -என்றது -தக்க என்றபடி
தெரிதல் -விவேகித்தல்
வண்மை -அழ்கு
தேர்தல்-ஆராய்தல்
புரிதல்-கொடுத்தல்
பொருந்துதல் -சேருதல்
தம் தம் குணங்களுக்கு ஏற்ப –பரத்வ ஸுலப்யாதிகள் கொண்டவர் -ஊமைக்கும்-கருணைக் கடல் காரேய் கருணை ராமானுசா -கொண்டல் -யதிராஜா தயாம்புராசே/தம் குணம் / தன் குணம் –பாட பேதம்
உரிய சொல் என்றும் உடையவன் -ஓன்று உடையவன் -பாட பேதம் -/ ஒன்றுதல் இசைத்தல் ஒருங்க  விடுவது -சேரா சேர்க்கை -திரு நரசிம்மர் போலே ஸ்வாமி எளிமை பெருமை சேர்ந்தே –
சொல் ஒன்றும் உடையவர் -பாட பேதம் -சொல் என்றும் உடையவர்
ராமானுஜ ஒரே சொல்லில் வேத மார்க்கப் பிரதிஷ்டாச்சார்யார் -எம்பெருமானுக்கு அப்பால் -எமக்கும் கூட பெருமான் -ஒரே சொல் இருவருக்கும்
பத்தர் பித்தர் பேதையர்-கம்பர் -விஷய ஏற்றத்துடன் ஒப்பிட்டால் நாம் எல்லாரும் பேதையர் தானே –
யானைக்கு குதிரை வைப்பாறு போலே அன்றோ தம்மை அமைத்து -ஆர்ஜவம்
உணர்வில் மிக்கோர் -மதி நலம் அருள பெற்றவர் -தெரியும் வண் கீர்த்தி -கலியும் கெடும் கண்டு கொண்மின் –
ராமானுஜர் சிஷ்யர் உய்யக் கொண்டார் -வித்வான் -ஆனால் பகவத் அனுக்ரஹம் இல்லாமல் அடியார்கள் பிரபாவம் இல்லையே -பொருந்தாதவர்கள் உண்டே-பொருந்தி விட்ட படியால் என்றும் என்னை ஆளும் பெரியவர் என்றபடி /-சல்லடை  போலே இல்லாமல் -முறம் -தேவையானவற்றை கொண்டு வேண்டாதவற்றை தள்ளும் -அது போலே சார தமமான–ரஹஸ்ய த்ரயம் காட்டிக் கொடுக்கும் ஞானம் -நல் ஞானம் -பிரபத்தி –
————————————————————————–
பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை -அவர் எம்மை நின்று ஆளும் என்று ததீயர் விஷயமாக உமக்கு உண்டான ப்ராவண்யத்தை சொன்னீர்
ஆனால் சேதனருடைய ஜ்ஞான வ்யவஸாய  பிரேமங்கள் கலங்கும்படி ஆக்ரமியா நின்றுள்ள இந்த கலி காலத்திலேயே
உமக்கு இப்படிப்பட்ட அத்யாவசியம் என்றும் ஒக்க ஒருபடி பட்டு இருக்கக் கூடுமோ என்று அருகே இருப்பார் சிலர் கேட்க –
பரத்வ சொவ்லப்யாதி குண பரிபூர்ணர் ஆகையாலே -அளவுடையாராயும் அறிவிலிகளாயும் இருக்கிற அதிகாரிகள்
ஸ்தோத்ரம் பண்ணப் புக்கால் -அவர்களுடைய அதிகாரத்துக்கு தகுதியானபேச்சுக்களாலே பேசுகைக்கு ஈடான
ஸ்வரூப ரூப குண   விபூதிகளை உடையரான எம்பெருமானாராலே உபகரிக்கப்பட்ட விலஷண
ஞானத்தை பெறா இருந்தவர்களை அந்த கலி காலம் ஆக்கிரமித்து ஞான பிரசாதத்தை பண்ணும் இத்தனை ஒழிய
அந்த ஞானத்தை பெற்ற என்னை ஆக்ரமிக்க மாட்டாது -ஆகையாலே எனக்கு இந்த வ்யவசாயம் யாதாத்மா பாவியாக
நடக்கத் தட்டில்லை என்று திரு உள்ளமாக அருளிச் செய்கிறார் –
வியாக்யானம்பெரியவர் பேசிலும் -ஸ்தோத்ரம் பண்ணுகைக்கு ஈடான ஞான சக்திகளை  உடையராய் இருக்கும்
பேரளவுடையார் ஸ்தோத்ரம் பண்ணினாலும் –பேதையர் பேசிலும் -ஸ்தோத்ரம் பண்ணாதே கை வாங்கி இருக்கைக்கு
ஈடான அஞ்ஞான அசக்திகளுக்கு ஈடாக நிற்கும் அறிவிலிகள் ஸ்தோத்ரம் பண்ணினாலும் -ஞானாதிகாரானவர்கள்
தம் தாமுடைய ஞான சக்தியாதிகளாலே எல்லை காண ஒண்ணாத வைபவத்தை உடையார் என்று -ஸ்தோத்ரத்தில்
நின்று மீள வேண்டும்படி யையும் அஞ்ஞரானவர்கள்  தங்களுடைய அஞ்ஞான அசக்திகளை அனுசந்தித்திக் கொண்டு
அவருடைய வைபவம் எங்கே -அஞ்ஞா ரான நாங்கள் எங்கே -அவர் வைபவத்தை நாங்கள் ஸ்துதிக்கை வசிஷ்டரை

சண்டாளன் ஸ்தோத்ரம் பண்ணுகிற படி என்றுஸ்தோத்ரத்தில் நின்றும் மீள வேண்டி இராத படி தன் குணங்கட்கு உரிய சொல் என்றும் உடையவன் -அவ்விருவருடைய ஞான சக்தியாதிகளுக்கும்

அஞ்ஞான அசக்தியாதிகளுக்கும் தகும்படி தம்மை அமைத்து வைத்து –அவற்றுக்கு தகுதியாக அவ்விருவரும்
ஸ்துதிக்கலாம் படி இருக்கிற தம் உடைய    ஸ்வரூப ரூப குண விபூதிகளுக்கு தனித் தனியாக வாசக சப்தங்களை
சர்வ காலமும் உடையவர் -சஹச்ர முகமாக சர்வ வித்யைகளையும் சிஷித்து கொண்டு போந்த
மகாத்ம்யத்தை உடையவர் ஆகையாலே -எத்தனையேனும் ஞான சக்திகள் உடையாரும்  அவருடைய
வைபவத்துக்கு ஈடாக பாசுரமிட்டு சொல்ல மாட்டார்கள் -இப்படியான பின்பு அஞ்ஞான அசக்திகள் உடையாருக்கு
சொல்ல வேண்டா இறே -ஆனாலும் அவர்கள் தம் தாமுடைய பக்தி பலாத்காரத்தாலே ஸ்துதிக்கப் புக்கால்
அவர்கள் ஸ்துதிக்கு தக்கபடி தம்மை அமைத்து விஷயம் ஆக்கின சௌசீல்ய குண நிதி -என்ற படி-
என்று -என்றது -இப்படி சொல்ல என்றபடி –தம்  குணங்கட்கு உரிய சொல் ஓன்று  என்ற பாடமானது -தம்  தாமுடைய ஞான சக்திகளுக்கும்
அஞ்ஞான அசக்திகளுக்கும்  ஆகிற குணங்களுக்கு ஈடாக பேசும் சப்தம் இத்தனை –மிகை என்றாதல் -இது பொறாது
என்றாதல் -சேராச் சேர்த்தியாய் இராதே -அபரிசேத்ய மகிமாவாலும் அளவிறந்த சௌசீல்யத்தாலும் சேரும்படி
இருக்கும் ஸ்வாமி என்று பொருளாக கடவது –ஒன்றுதல்-கூடுதலாய் -சேர்த்திக்கு வாசகமாகிறது -இதுவே யதார்த்தம்
விஸதர்சமாக சொன்னார்கள் அல்லர் என்று அவர்கள் பண்ணும் ஸ்தோத்ரங்கள் உடைய சமீசீன் யதையை
ஸ்தாபிக்கை என்றபடி – உரிய என்றது தக்கஎன்றபடி –உடையவர் என்றது ஸ்வாமி என்றபடி –தம் குணங்கட்கு  என்றும்
பாடம் சொல்லுவர் -அப்போது பெரியவர் பேசிலுமாம் பேதையர் பேசிலுமாம்-அவர்கள் தம் தாமுடைய அளவுக்கு ஈடாக
பேசலாம்படி தம்முடைய குணங்கட்கு ப்ராப்தமான சொல்லை என்றும் உடையவர் என்று பொருளாக கடவது –
உணர்வில் மிக்கோர் -ஞான சக்திகளில் வந்தால் இவர்களே சர்வஞ்ஞர்கள் இவர்களே சர்வாதிதர்கள்
என்னும்படி மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர்கள் –தெரியும் வண் கீர்த்தி -தெளிந்து கொண்டு -கலியும் கெடும்
கண்டு கொண்மின் -என்னும்படி பவிஷ்யதாசார்யா  விக்ரகத்தை கொடுக்கும்படியாய் இருக்கிற அழகிய கீர்த்தியை
உடையரான –தெரிதல்-விவேகித்தல்-வண்மை -அழகு –இராமானுசன் -எம்பெருமானார் –மறை தேர்ந்து உலகில் –
கம்பீராணா மக்ர்தககிராம் -என்கிறபடி தன்னுடைய உட் பொருளை தெரிய புக்கார்க்க் தான் அதி கஹநமாய் இருக்கையாலே

வேதத்துக்கு மறை என்று பேர் ஆய்த்து -இப்படிப்பட்ட வேதத்தை

இதிஹாச புராணாப்யாம்  வேதம் சமுப பிரமயேத் -என்கிற படியே உப பிரமத்தை கொண்டு
அர்த்த விரோதிகள் ஒன்றும் வாராதபடி பராமர்சித்து -வேதார்த்த ஸந்க்ரஹ கீதா பாஷ்யாதிகளை
பண்ணி யருளின என்றபடி –தேர்த்தல் -ஆராய்தல் –உலகில் புரியும் நன்ஞானம் -இந்த அஞ்ஞான
பிரசுரமான லோகத்திலே அவற்றை வியாக்யானம் பண்ணி -ஆசேது ஹிமாசல மாக எல்லாருக்கும்
உபகரித்த விலஷணமான ஞானத்திலே –புரிதல்-கொடுத்தல் –பொருந்தாதவரை -இப்படி சர்வருக்கும்
 உபதேசித்து போந்தாலும்-உய்யக் கொண்டாரைப் போலே விசுவாச மாந்தையாலும் கர்ப்ப நிர்பாக்யதையாலும்
அன்வயியாதவர்களை  – உபதேசத்துக்கு உட்படாதவர்களை என்றபடி –பொருந்துதல்-சேர்த்தல் –பொரும் கலியே –
கலி தோஷம் வந்து ஆக்ரமிக்கும் -கலி வந்து மேலிட்டு நலியத் தொடங்கும் என்றபடி -ஆகையால்
எம்பெருமானார் உடைய விஷயீ காரத்தாலே அந்த விலஷண ஞானத்தை பெற்று இருக்குமவர்கள்
எவர்களே யாகிலும் அவர்களை கலி நலிய மாட்டாது என்றது ஆய்த்து –காவலில் புலனை வைத்து
கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து –நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே -என்று
இவ்வர்த்தத்தை தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும் அருளிச் செய்தார் இறே -ந கலு பாகவதாய மவிஷ்யம்
கச்சந்தி -என்று ஸ்ருதியும் -பரிஹர மது சூதன ந பிரபன்னான் பிரபு ரஹ மன்ய நிர்னாம்ந வைஷ்ணவானாம் -என்றும்
த்யஜ பட தூரத ரேனதா  ந பாபான் –  என்றும் நமனும் தன் தூதுவரைக் குறித்து சொன்னான் இறே –
————————————————————————–

அமுது விருந்து

அவதாரிகை
யாவரையும் கலக்குறும் இக் கலி காலத்திலே-குல கோத்ரம் பாராது -இராமானுசனை கருதும்
உள்ளம் பெற்றவரை -ஆளும் பெரியவராக ஏற்கும் துணிபு நிலை நில்லாதே -என்பாரை நோக்கி –
எம்பெருமானார் -உபதேசித்த ஞானம் வாய்க்காதவர்களுக்குத் தான் கலியினால் கேடு
உண்டாகும் என்கிறார் –
பத உரை
பெரியவர் -பேர் அறிஞர்கள்
பேசிலும் -துதித்தாலும்
பேதையர் -மிக்க அறிவிலிகள்
பேசிலும் -துதித்தாலும்
தம் குணம் கட்கு -அவரவர்கள் உடைய அறிவுடைமை -அறிவின்மை எனபது போன்ற குணங்களுக்கு
உரிய -ஏற்ற
சொல் -ஸ்வரூபம் -வடிவம் -பண்பு முதலியதை கூறும் சொற்களை
என்றும் -எப்பொழுதும்
உடையவன் -உடையவராய் இருப்பவர்
என்று என்று -என்று பல காலும் அனுசந்தித்து
உணர்வில் மிக்கோர் -அறிவில் சிறந்தவர்கள்
தெரியும் -பகுத்துப் பார்க்கும்
வண் கீர்த்தி -அழிகிய புகழ் வாய்ந்த
இராமானுசன் -எம்பெருமானார்
மறை-வேதத்தை
தேர்ந்து -ஆராய்ந்து
உலகில் -உலகத்திலே
புரியும் -உபதேச வடிவில் வழங்கும்
நன் ஞானத்தில் -நல்ல ஞானத்திலே
பொருந்தாதவரை -சேராதவர்களை
கலி -கலி காலம்
பொரும் -பாதிக்கும்
வியாக்யானம்
பெரியவர்–சொல்லுடையவன்
பெரியவர் எனபது பேதையருக்கு எதிர் சொல்லாய் –அமைதலின்
பேசுதலில் அறிவும் ஆற்றலும் உடையோரைக் கூறுகிறது .ஆசார்யனைப் பற்றியது ஆதலின் –
இங்கே பேசுதல்-துதித்தல்
-பேசிற்றே பேசலல்லால் -திரு மாலை – 22- என்றும்
பேசினார் பிறவி நீத்தார் -திருக் குறும் தாண்டகம் –17 – என்னும் பிரயோகம் காண்க .துதிப்பவர் பெரியவராய் இருப்பின் -அவர்களுடைய அறிவாற்றல் களாலே -எல்லை காண ஒண்ணாமையாலே –
முழுதும் துதிப்பது எப்படி -என்று மீள வேண்டாதபடி -தம் தம் குணங்களாகிய அறிவாற்றல்களுக்கு ஏற்ப –
பேசலாம் படியான -ஸ்வரூபம் வடிவம் முதலியவற்றை கூறும் சொற்களை உடையவராய்
இருக்கிறார் எம்பெருமானார் -என்றபடி -கடலை எல்லை அளவும் கடந்து செல்ல முடியாவிடினும் –
தன் திறமைக்கு ஏற்ப -இயன்ற அளவும் -செல்வது போல் -எம்பெருமானார் பெருமையை
முழுதும் வழுத்துவது இயலாத செயல் ஆயினும் -தம் தகுதிக்கு ஏற்ப -பெரியவர்கள்
ஸ்வரூபம் முதலியவைகளை -வருணிக்கும் சொற்களை கொண்டு துதிப்பதற்கு
தக்கவராய் அமைந்துள்ளார் அவர் எனபது இதன் கருத்து ..
இங்கனம் துதிப்பவர் பேதையராய் இருப்பின் -அவர்களுடைய அறியாமை இயலாமை
என்னும் குணங்களினாலே -அறிவாற்றல் வாய்ந்தவர் செய்ய வேண்டிய துதித்தல் இயலாத செயல்
என்று மீள வேண்டாதபடி -தமது குணங்களாகிய -அறியாமை இயலாமை கட்கு ஏற்ப –
உலக நடையில் வழங்கும்படியான-ஸ்வரூபம் முதலியவற்றைக் கூறும் -சொற்களை
உடையவர்   -என்க .-கடலில் செல்ல இயலாவிடினும் -தன் சுத்திக்காக கரை ஓரத்தில்
மூழ்கி எழுவாரைப் போலே -அறிவாற்றல் கொண்டு பேச முடியாவிடினும் -தன் சத்தை க்காக
தான் இருப்பது சபலம் ஆவதற்காக -சொல்லும் துதிச் சொற்களுக்கு தக்கவராக
அமைந்துள்ளார் -எம்பெருமானார் எனபது -இதன் கருத்து .
இவற்றால் பெரியவர் பேசும்படியான அறிவாற்றல் முதலிய வற்றால் வந்த மேன்மையும் -பேதையர் பேசும்படியான ஏற்றத் தாழ்வு நெஞ்சில் படாதபடி -அவர்களுடன் பழகும்
எளிமையும் எம்பெருமானார் இடம் உள்ளமை காட்டப் பட்டது .

இவை ஏதோ ஒரு வேளையில்-உள்ளன வல்ல –இயல்பாய் எப்பொழுதும் அமைந்தன என்னும் கருத்துடன் -என்றும் உடையவன் -என்கிறார் .

இனி பெரியவர் பேச்சிலும் பேதையர் பேச்சிலும் எல்லை இல்லாத மகிமை வாய்ந்தவர்
அவரவர் தகுதிக்கு ஏற்ப -பேசலாம்படி -அவர்கள் சொல்லுக்கு விஷயமாக தம்மை அமைத்து கொண்டு
இருத்தலின் -இரண்டினாலும் தாழ்ந்தாரோடு பழகும் சீல குணமே – சொல்லப்
பட்டதாகவுமாம்-
தன் குணம் கட்கு -என்றும் ஒரு பாடம் உண்டு –
அப்பொழுது பெரியவர் பேசும் போது அவர்களுடைய அறிவாற்றல்களின் அளவிற்கு ஏற்ப -எம்பெருமானார் இடம் அமைந்த மேன்மைக் குணங்களும் .
பேதையர் பேசும் போது அவர்களுடைய அறியாமை இயலாமை களின் அளவிற்கு ஏற்ப
எம்பெருமானார் இடம் அமைந்த எளிமை குணங்களும் பொருளாகின்றன .
இங்கு -பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே வடிவு -வடிவு -என்னும் பேய் ஆழ்வார்
ஸ்ரீ சூக்தி – 21- யும் –செலக் காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் -திருவாய் மொழி -5 7-3 – –என்னும்  ஸ்ரீ சூக்தியும் ஒப்பு நோக்கத் தக்கன .
எம்பெருமானார் மகிமை எல்லை காண ஒண்ணாமல் இருப்பதற்கு காரணம்
சீரிய விஞ்ஞானம் பலம் இவைகட்கு உறைவிடமாய்
கண்தர்வாப்ச ரசஸ் ஸித்தா சகிந்நர   மகோரகா
நாந்தம் குணாநாம் கச்சந்தி தேனா நந்தோய  முச்யதே -என்று
கிந்நரர் பெரிய நாகர்கள் இவர்களோடு கூடியவர்களான கந்தர்வர்களும் -அப்சரச்சுக்களும் –
சித்தர்களும் -குணங்களின் எல்லையை கண்டவர்கள் இல்லை -அதனால் இவன் அநந்தன்
என்று சொல்லப்படுகிறான் -என்றபடி -அளவில்லாக் குணங்கள் வாய்ந்தமையால்
அநந்தன் எனப்படுமவனான ஆதி சேஷனுடைய அவதாரமாய் இருத்தல் -என்று அறிக .
தம் குணங்கட்கு உரிய சொல் ஓன்று முடையவன் –என்றும் பாடம் ஓதுதல் உண்டு .
அப்பொழுது தங்கள் குணங்களுக்கு ஏற்பப் பேசும் சொற்கள் பொருந்தும் ஸ்வாமி என்று பொருள்
கொள்ளல் வேண்டும் ..
பெரியவர் பேசில் -இது மிகை பட கூறலாய் இருக்கிறது என்ன ஒண்ணாதபடி அளவிடற்கு அரிய
மகிமை உடையவராய் இருத்தலால் -அவர்-பெரியவர் -சொன்ன சொற்கள் பொருந்துவன
ஆகின்றன ..
இங்கனம் பேதையர் பேசில் இது எம்பெருமானார் பெருமைக்கு போதாது -என்ன ஒண்ணாதபடி –
அளவிடற்கு அரிய சீல குணம் -எளியவரோடு ஏற்றத் தாழ்வு தோன்றாத படி பழகும் இயல்பு –
உடையவராய் இருத்தலால் அவர் -பேதையர் -சொன்ன சொற்கள் -பொருந்துவன ஆகின்றன –
ஆக எவர் பேசினாலும் சேராச் சேர்த்தி யாய் இல்லாமல் -சேரும்படியாய் இருக்கும் ஸ்வாமி
என்றது ஆயிற்று .
ஒன்றும் -சேரும் -பொருந்தும்
உடையவன்-ஸ்வாமி
உரிய -தகுந்த .
என்றென்று –வண் கீர்த்தி  இராமானுசன்
என்று என்பதை இரு கால்  கூறியது -உணர்வில் மிக்கோர் -இந்நிலையை மீண்டும் மீண்டும்
அனுசந்திப்பதை உணர்த்திற்று –
தெரிதல்-விவேகித்துப் பார்த்தல்
உணர்வில் மிக்கோர் மீண்டும் மீண்டும் அனுசந்தித்து -இதன் தனி சிறப்பை -பகுத்துப் பார்த்தலின் –
இந்நிலை உண்மையானது என்றும் -மிகவும் இனிதானது என்றும் -தோன்றுகிறது .
பேசும் பெரியவர் திறத்தும் பேதையர் திறத்தும் அவர்கள் திறமைக்கு ஏற்ப சொல்லும் சொல்லுக்கு
உடையவரான எம்பெருமானாருக்கு -இயல்பாக உண்டாகும் உணர்ச்சியினை –பாம்பின் கால்
பாம்புக்கு தெரியும் -என்னும் முறையிலே உணர்வின் மிக்கோரே தெரிந்து கொள்ள வல்லவர் -என்க .-(ஆதி சேஷன் மகிமையை விஷ்வக்சேனர் உணர்வார் -எம்பெருமானார் மஹிமையை நம்மாழ்வார் அறிவார் என்றவாறு )
தெரியும் வண் கீர்த்தி
உணர்வில் மிக்கோர் பலகாலும் ஆராய்ந்து -இதன் வீறுடைமையை விவேகித்து காண்டலின் –
வண் கீர்த்தி –எனப்பட்டது -வண்மை -சீர்மை -அழகுமாம் .
மறை தேர்ந்து உலகில் புரியும் நன் ஞானம் –
தேர்தல் -ஆராய்தல்
புரிதல்-கொடுத்தல்
வேதத்தை ஆராய்ந்து -வைதிகமான நல்ல ஞானத்தை கொடுத்து அருளினார் எம்பெருமானார் –
புரியும் நன் ஞானத்தின் அருமையினைக் காட்டற்கு –மறை தேர்ந்து -என்றார் .
வேதம் எளிதினில் தான் கருதியதைக் காட்டாமல் -மறைப்பது பற்றி -மறை-எனப்படுகிறது .
அது கருதியதைக் கண்டு கொள்வதற்கு முன்னும் பின்னும் உள்ள வாக்கியங்களை
கொண்டும்பல யுக்திகளைக் கொண்டும் -ஆராய வேண்டி இருத்தலின் -மறை தேர்ந்து -என்றார் .
எல்லாம் அறிந்தவரான எம்பெருமானார் -ஆராய்ந்து எடுத்து ஞானத்தைக் கொடுக்க வேண்டுமா –
கொடுத்தது ஞானமாய் இராதோ –
வேத சாஸ்திரம் என்னும் தேரில் ஏறினவர்களும்-
ஞானம் என்னும் கத்தி ஏந்தியவருமான-அந்தணர் விளையாட்டுக்காயினும் ஏதேனும் சொல்வது
பரம தர்மமே கருதப் படுகிறது .-என்னும் பொருள் கொண்ட –
வேத சாஸ்திர ரதா ரூடா -ஞான கட்கதரா த்விஜா
க்ரீடார்த்த மபியத் ப்ரூயு சதர்ம பரமோ மத -என்னும்
ஸ்லோகத்தின் படி -வாய் திறந்து -சொல்வது எல்லாம் ஞானம் ஆகாதோ –
மறையை ஆராய வேண்டுவான் என் —எனில் -கூறுதும் .
உண்மை தான் -சொல்வது நன் ஞானமே
ஆயினும் அறியாதார் -ஆராயாது வாயில் வந்தபடி -சொன்னார் என்று
இகழக் கூடும் -இழக்கவும் கூடும் –
அது செய்யாமைக்காக –மறை தேர்ந்து -நன் ஞானம் புரிந்தார் -என்க –
எல்லாம் அறிந்த பகவானும் -கீதையை -நெறி உள்ளி -உரைத்தது போலே இதனையும் கொள்க –
எம்பெருமானார் மறை தேர்ந்து அளிக்கும் ஞானம் ஆதலின் -அது நல் ஞானம் -எனப்பட்டது .
நல் ஞானம் என்கிறது – வைதிக  ஞானம் என்றபடி –
இனி
பகவானே உபாயம் உபேயமும் அவனே – என்னும் ஞானமும் ஆகவுமாம்-
நாம் ஆழ்வார் -காலை நன் ஞானத் துறை படிந்தாடி -திரு விருத்தம் – 93- என்று
இந்த நல் ஞானம் ஆகிற தீர்த்தத்தின் துறையில் காலையில் நீராடுவதாக
அருளிச் செய்து உள்ளார் -ஞான தீர்த்தத்துக்கு அவர் துறையாக சொன்னது ஆசார்யனை –
காலை என்றது -சத்துவ குணம் தலை தூக்கி நிற்கும் வேளையை –
ஆக -சத்துவ குணம் உள்ளவனால் ஆசார்யன் வாயிலாக பேரும் விதிக்க ஞானத்தில்
ஒருவன் நிற்றலை ஞானஸ்தானம் -என்றார் ஆயிற்று ..
எம்பெருமானார் என்னும் ஆசார்யன் ஆகிற துறையிலே -சத்துவ குணம் தலையெடுத்து -ஞானஸ்தானம் செய்தவர்கள் மிகத் தூயராய் இருப்பதனால் -கலி அவர்களை நலிய இயலாது ..
அசுத்தி சிறிதேனும் காணப்படில் அன்றோ -கலியினால் ஆக்ரமிக்க முடியும் –
நள மகா ராஜனை தூய நிலையில் தொடர மாட்டாத கலி புருஷன் –
கால் அலம்பும் போது -சிறிது விட்டுப் போனமையால் -வந்த அசுத்தியைக் கண்டு –
அவனை நலிய முற்பட்டதாக கூறும் இதிகாசம் இதனை வழி வுறுத்தும்
ஆக எம்பெருமானார் கொடுக்கும் ஞானத்திலே சேர்ந்து -அதன்படி நில்லாதவர்களையே
கலி நலியும் -அதனையே அமுதனார் மேலே கூறுகிறார் .
பொருந்தாதவரைப் பொரும் கலியே
பொருந்துதல் -சேர்ந்து இருத்தல்
பண்டைய இராமானுசன்-கண்ணன் -தன் திருவடி ஸ்பர்சம் உள்ள அளவும் கலிக்கு-சில இடங்களை தங்குவதற்கு-ஒதுக்கிக் கொடுத்தது போலே –
இந்த இராமானுசனும் -தன் உபசரிக்கும் ஞானத்தில் சேராதவர்கள் உள்ள இடத்தை
ஒதுக்கிக் கொடுத்தார் -என்க –
இது தன்னையே -நாம் ஆழ்வார் –கலியும் கெடும் -என்று குறிப்பால் உணர்த்தினார் -என்று உணர்க –
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே -தன்னடியார்க்கு அருள் செய்கை -இரண்டு இராமானுசர்க்கும் ஒத்த
தன்மை -என்க .
எம்பெருமானார் பேதையர் பேசும்படி தம்மை அமைத்து உள்ளமையின் அவர் உலகில்
புரியும் நன் ஞானம் பெரியவர் போல -பேதையனாகிய அடியேனும் சேரும்படி பயன் படுவது
ஆயிற்று ..படவே -அந்த நல் ஞானத்தில் சேர்ந்து இருப்பவர்களைக் கலி நலியாதாதலின் அவர்கள்
கோஷ்டியில் சேர்ந்த எனக்கு –இராமானுசனைக் கருதும் உள்ளம் பெற்றார் எவராயினும் -அவர் எம்மை ஆளும் பரமர் -என்னும் துணிபு கலியினால் குலைவு பெறாது –எனபது கருத்து .
————————————————————————–
அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது –
 

கலி புருஷன்-பரிஷித் பேச்சு ஸ்ரீ பாகவதம்– 10-இடம் ஒதுக்கி கொடுத்தான்-ரஷை- ஸ்வாமி தெரிந்து உரைத்த விஷயங்களில் நம்பிக்கை இருந்தால்-கலி தோஷம் கிட்டாது..,,புரியு நல் ஞானம்..இவ் உலகில்-மறைகளை ஆராய்ந்து-ஞானம்-உபாயாந்தர நிஷ்ட்டை/நல் ஞானம்-பிரபத்தி../உணர்வில் மிக்கோர்–ஆழ்வார் போன்றோர் அறிவர்-வண்  கீர்த்தி -அழகு ,வள்ளல் தன்மை-உணர்வில் மிக்கோர் என்று என்று-மீண்டும் மீண்டும் ஆராய்ந்து பார்த்து-இந்த வண் கீர்த்தி யாருக்கும் இல்லை -சத்யம் சத்யம் எதிராஜோ ஜகத் குரு-ஆழ்வான் காவேரி நீரில் இறங்கி சொல்ல  வேண்டி இருந்ததே/உரிய சொல் என்றும் உடையவர் -என்று என்று -ஞான சக்தி அளவுக்கு-பேச முடியும் அளவும்-என்றும்–பெரியோர்-அழகன்/அரங்கன்/வரதன் நம்பி  .ஆழ்வார் ஆழ்வான்- அப்படி என்றால் பேதையர் பேசாமல் போனால் ஸ்வாமி அகல விட மாட்டார்-

சேரா சேர்க்கை /உரிய சொல் என்றும் -என்றைக்குமே உடையவன்../பெருமை எளியவன் இரண்டும் உண்டு///பரத்வம்  சௌலப்யம் இரண்டையும் சொல்லும் சொல் பொருந்தும்/தன் குணம் தம் குணம்-பெரியவர் எளியவர் குணங்களுக்கும் ஸ்வாமி குணங்களுக்கும்  ஏற்ற அளவு குணம் உண்டு/ஓன்று உடையவன்-சிறு மா மனிச ராய் -போலே பெரிய கீர்த்திசிறிய  மூர்த்தி போல-ஒன்றுதல்-சேர்த்தல்-அகடிதகடா சாமர்த்தியம் ஸ்வாமி இடமும் உண்டு/சேராத -நர சிங்கம் போல-

கடக சுருதி கொண்டு -அனைத்து  சூத்தரங்களை ஸ்வாமி ஒருங்க விட்டார்–அது  போல தம் இடம் பரத்வமும் ஸௌலப்யமும்  ஒருங்க விட்டார் -சேர்த்து விடுகிறார்-ஏற்கும் பெரும் புகழ்  வானவர் ஈசன் கண்ணன் தனக்கு-…ஏற்கும் பெரும் புகழ்-வண் குருகூர் சடகோபன்-பேசுகைக்கு ஈடான ஞான சக்திகளை உடையயராய் இருக்கும் பேர் அளவுடையார் சொல்லிலும்-தம் தாம் குணங்களுக்கு ஏற்ற படி பெரியவர்களும் பேதையர்களும் தம் தம் சொல்லால் சொல்லும் படி- ஸ்வ ரூப ரூப குண விபவம்-ஒவ் ஒன்றிலும் பரத்வம் சௌலப்யம்-பேசி முடிக்க முடியாது

 பேசாமல் அகலவும் முடியாது/ சப்தங்களும் பொருந்தும்/ சொல்லால் சொல்ல படும் குணங்களும் உண்டு– இவை என்றும்-சர்வ காலங்களிலும் உண்டு/சேராதவற்றை சேர்த்தாரே,–அஞ்ஞான சக்தி களுக்கு எல்லையாய் இருக்கும் அறிவிலிகளான வர்கள்  சொல்லிலும்

அவர்கள் உடைய ஞான சக்தி களால் எல்லை காண ஒண்ணாத படியாய்

–இவர்கள் உடைய அஞ்ஞான சக்திகளால் நமக்கு பூமி அன்று என்று மீள வேண்டாத படியாய்–இப்படி தங்கள் குணங்களுக்கு ஈடாக பேசலாம் படி இருக்கிற-தம் உடைய ஸ்வரூப ஆதிகளுக்கு வாசகமான சப்தங்களை-சர்வ காலத்திலும்  உடையவராய் இருக்கும் அவர் என்று ஞானாதிகர் ஆனவர்கள்-பலகாலும் விவேகித்து அனுசந்தியா நின்று உள்ள திவ்ய கீர்த்தி உடையரான எம்பெருமானார்-,வேதத்தை ஆராய்ந்து லோகத்திலே உபகரித்து அருளின விலஷணமான ஞானத்திலே-சேராதவர்களை கலி வந்து மேல் இட்டு நலியும்..அந்த ஞானத்திலே சேர்ந்தவர்களை நலிய மாட்டாது என்று கருத்து

படிகிறது அழிகிறது காக்கிறது மூன்று வித லஷணங்களும்-விரோதம்-
முழு கொம்பு அரை கொம்பு கொம்பே இல்லாமல் -போல வேவேற/ காலங்களில் என்று சமன் வய படுத்தி காட்டினாரே/
தேர்ந்து -ஆராய்ந்து –புரிந்து-உபகரித்தார்
/நல ஞானம்-பிர பத்தி ../ஓன்று உடையவன்-தங்கள் ஞான சக்தி/ அஞான அசக்திகளை
-ஒருங்கே-/மிகை என்றால் போறாது என்றாதல்-பெரியவர்/ சொல்களே போராது
-பேதையர் –சேரா சேர்க்கையாக -மகிமை அளவிட முடியாது
ஸௌவ்சீல்யமும் அளவற்றது-சேரும் படியாய் இருக்கிறார்
/பேசிற்றே பேசல் அல்லால்பெருமை ஓன்று உணரல் ஆகாது  /
பேசினார் பிறவி நீக்கார்
/பேசினார் எவ்வளவும் பேசுவர் அவ்வளவே வடிவு
/செல காண்பிப்பார் காணும்  அளவும் செல்லும் கீர்த்தியாய்
 உலப்பிலானே /ஆனைக்கு குதிரை வைப்பாரை போல நித்யர் கூட அனுபவிக்க முடியாது அவன் சீர்மையை-
 சுவாமி பொருந்தியவரை -ஞானம் பெற்றவரை கலி  ஆக்கிரமிக்காது
//வந்தாய் போலே வாராதே வாராதே போல வருவானே /ஆனை காத்தது ஆனை கொன்று –போல ஸ்வாமி-பெரியவர்-ஸ்தோத்தரங்களில் மீளும் படியும்
/ பேதையர் -மீள வேண்டி இராத படி -குணங்கள் உடைய
/கந்தர்வர் அப்சரஸ் – தம் குணம் சொல்ல முடியாத அனந்தன்
 யாரும் ஒரு நிலைமை என அறிவரிய எம்பெருமான்
 யாரும் ஒரு நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான்
/ஐச்வயார்த்தியும்  கைவல்யார்தியும் பகவத் லாபார்தியும் என்னை நினைந்தே உபாசனம் பண்ணுகிறான்-கீதை.
. அவ் அவர்களுக்கு வேண்டியவற்றை நினைந்து கொண்டே
-மாம்- வேறு படும் இவர்களுக்கு
-அது போல ஸ்வாமி யும்/உணர்வில் மிக்கோர்-மயர்வற மதிநலம் அருள பெற்ற ஆழ்வார்கள்-
 தெரியும்-அறிந்து கொண்டு அருளிய -அவர்களால் கலியும் கெடும் கண்டு கொண்மின்- பவிஷ்யத் ஆச்சர்ய- வண்  கீர்த்தி-
 அழகு -திரு மேனி-சூசிப்பித்து காட்டினார்
/மறை தேர்ந்து -ஆராய்ந்து-சொல்லும் விடு ஸ்ருதியாம் ஸ்ருதியோடு அருமறை கலை மொழியாளர்கள்-
 பேசுவதே சாஸ்திரம்- தான் தோன்றியாக சொல்ல கூடாது என்று மறையை ஆராய்ந்தார்
–அவன் அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்-போல/மறைத்து மறைத்து சொல்லும் ஆழ்ந்து அறிய வேண்டும் படி.

வேதார்தம் அருளும் பொழுது இதிகாசம் துணை வேணும்-கீதை பொருள் தெளிந்திட கீதா பாஷ்யமும் அருளினாரே/புரிதல்-கொடுத்தல்-ஈதல்- காலை நல் ஞான துறையில் படிந்து -ஆழ்வார்//சர்வருக்கும் உபதேசித்து போந்தார்/ உய்ய கொண்டாரை -சரம ஸ்லோகம் அர்த்தம் கேட்டு கொண்டும் -உடையவர் அருளி செய்த வார்த்தையை ச்மரிப்பது ..தத்வ நிர்ணயம் செய்யும் பொழுது  -பக்தி நிஷ்டராய் இருக்கையால்-அர்த்தம் அழகாய் இருந்தது ருசி பிறக்க வில்லை /வித்வான் என்பதால் அர்த்தத்துக்கு இசைந் தாய்–பகவத் பிரசாதம் இல்லை என்பதால் இப்படி அருளினீர்-என்றாரே எம்பெருமானார் அங்கு-

கருவிலே திரு விலாதார்/காவலில் புலனை வைத்து -நாவலிட்டு -கலி தீண்டாது எம தமருக்கு விஷயம் ஆகாது-பிரபு-மது சூதனன் பிரகரர்கள்- -காதில் தன் தமர் களுக்கு அருளியது..நமனும் தன் தூதுவரை கூவி-செவிக்கு இறைஞ்சியும் சாதுவராய் போவீர்/பொலிக பொலிக பொலிக –கலியும் ஒன்றும் இன்றிக்கே தன் அடியார்க்கு அருள் புரிந்தான் –

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: