அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்–86-பற்றா மனிசரைப் பற்றி அப் பற்று – இத்யாதி ..

 பெரிய ஜீயர் அருளிய உரை .
எண்பத்தாறாம் பாட்டு -அவதாரிகை
இராமானுசனைத் தொழும் பெரியோர் பாதம் அல்லால் என் தன் ஆர் உயிர்க்கு
யாதொன்றும் பற்று இல்லை -என்ற அநந்தரம் –முன்பு அப்ராப்த விஷயங்களை
பற்றி இருப்பாரை பந்துக்களாக நினைத்து -அவர்கள் அளவிலே தாம் ப்ராவண்யராய்
-போந்த படிகளை யனிசந்தித்து -இனி அது செய்யேன் –
எம்பெருமானாரை சிந்திக்கும் மனச்சு உடையார் ஆரேனும் ஆகிலும் அவர்கள்
என்னை யாள உரியவர் என்கிறார் .
பற்றா மனிசரைப் பற்றி அப் பற்று விடாதவரே
உற்றார் என உழன்றோடி நையேன் இனி ஒள்ளியநூல்
கற்றார் பரவும் இராமானுசனைக் கருதும் உள்ளம்
பெற்றார் யவர் அவர் எம்மை நின்றாளும் பெரியவரே – – 86- – –
வியாக்யானம் –
ஒன்றுக்கும் பற்றாத சூத்திர மனுஷ்யரை ஆஸ்ரயித்து அந்த ஆஸ்ரயணம்  விடாதே
நிற்கிறவர்களையே பந்துக்கள் என்று -அனுசந்தித்து -அவர்கள் பின்னே திரிந்து -உழன்று –
அவர்கள் விஷயமான ப்ராவண்யத்தாலே -அவர்கள் முகத்திலே விழிக்க பெறுவது -எப்போது-என்று ஓடி -அவர்கள் உடைய சம்ச்லேஷ விச்லேஷங்களில் உண்டான ஹர்ஷ  சோகங்களாலே -இனி சிதிலன் ஆகேன் –
தத்வ ஹித புருஷார்த்தங்களை சூவ்யக்தமாக பிரகாசிக்கும் சாஸ்த்ரங்களை
அதிகரித்து இருக்குமவர்கள் -தங்கள் கல்விக்கு பிரயோஜனம் இது என்று –
பிரேமத்தாலே அடைவு கெட ஸ்தோத்ரம் பண்ணா நின்றுள்ள
எம்பெருமானாரை அனுசந்திக்கையே யாத்ரையாய் இருக்கும் மனசை நிதி பெற்றால் போலே-லபித்தது இருக்குமவர்கள் -யாவர் சிலர் –
அவர்கள் குல சரண கோத்ரங்கள்  ஏதேனுமாக வமையும் –
அவர்கள் நம்மை இவ்வாத்மா உள்ளளவும் ஒருபடிப்பட அடிமை கொள்ளும் மகானுபாவர் .அதவா –
பற்றா மனிசர் -இத்யாதிக்கு
சூத்திர மனுஷ்யரை ஆஸ்ரயித்து -அந்த ஆஸ்ரயணம் விடாதே
அவர்களையே உத்தாரகராக அனுசந்தித்து -உழன்று -ஓடி -நையேன் -என்னவுமாம் ஓடினேன் ஓடி –வாடினேன் வாடி -முன்னம் -நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -கலியன்
நான் கண்டு கொண்டேன் ராமானுசா என்னும் நாமம் -என்கிறார் -உள்ளம் உடையார் இல்லாமல் பெற்றார் -நிதி பெற்றால் போலே -ஸ்வ பாவிகம் இல்லாமல் –
மனம் பெற்றார் -சம்பாதித்தார் இல்லை -அவர் கிருபையால் பெற்றமை தோன்ற –
இத தாய் ராமானுசன்-பட்டர் /ஏய்ந்த பெரும் கீர்த்தி-அனந்தாழ்வான் –அனுசந்திப்பதே கால ஷேபம்–குலம் தாங்கு -எவரேலும் அவர் கண்டீர்-அவர் எம்மை நின்று ஆளும் பரமரே /எங்கே இருந்தாலும் எப்படிப் பட்டவர்கள் ஆகிலும் ராமானுசரே என்று இருப்பார் என் ஸ்வாமி -அவர்கள் நம்மை இவ் ஆத்மா உள்ள அளவும்–நம்மை- அனைவரையும் எம்மை என்று நம்மையும் சேர்த்து கொள்கிறார்-
————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை-

அவதாரிகை -இராமானுசனை தொழும் பெரியோர் பாதம் அல்லால் என் தன் ஆர் உயிர்க்கு யாதொன்றும் பற்று
இல்லையே -என்று தம்முடைய நிஷ்டையை சொன்னார் -இப்பாட்டிலே –முற் காலம் எல்லாம் அப்ராப்த விஷயங்களை
தங்களுக்கு அபாஸ்ர்யமாக பற்றிக் கொண்டு -போந்து அவர்களை பந்துக்களாக நினைத்து -அவர்கள் அளவில்
தாயே தந்தை என்னும் தாரமே கிளை மக்கள் என்கிற படியே தாம் அதி மாத்ரா ப்ரவனராய் போந்த படிகளை அனுசந்தித்து

பீத பீதராய் அப்படி செய்யக் கடவேன் அல்லேன் -தத்வ ஹித புருஷார்த்தங்களை உள்ளபடி அறியக் கடவரான பெரியோர்களாலே ஸ்துத்திக்கப் படுகிற எம்பெருமானாரை சிந்திக்கும் மனசை -நிதி பெற்றால் போலே லபித்தவர்கள் ஆரேனும் ஆகிலும் அவர்களே என்னை ஆள உரியவர்கள் என்கிறார்

வியாக்யானம் -பற்றா மனிசரைப் பற்றி -பெரியேனான  பின் பிறர்க்கே உழைத்து ஏழை யானேன் -என்றும் –
பாந்தாவாபாச லோலா -என்றும் சொல்லுகிறபடியே சம்பதி சர்வச்வாப ஹாரிகளாய் ஆபதி அரஷகராய் இருக்கையாலே-ஒன்றுக்கும் பற்றாத சூத்திர மனுஷ்யரை ஸ்வரூப நாசகரமான அடிமைத் தொழில் செய்வதாக ஆஸ்ரயித்து –அப்பற்று விடாதவரே –அந்த ஆஸ்ரயணத்தை விட மாட்டாதவரே -உற்றார் என உழன்று -இப்படி ஆபாச பந்துக்கள்
ஆனவர்களை -மாதர் பித்ர் பௌத்ராதியான  சர்வ வித பந்துக்கள் என்றும் -நிர்வாகார் என்றும்-ரஷகர் என்றும் –
பிரமித்து அவர்கள் பின்னே திரிந்து -அவர்களை பார்க்கும் அளவும் நிற்கிற இடத்தில் நிற்க ஒட்டாதே
அதி மாத்ர ப்ராவண்யத்தாலே -அவர்கள் இருந்த இடம் தேடிக் கொண்டு ஓடி -அவர்கள் தன்னிலும்
தண்ணியர்   என்று அறிய மாட்டாதே -அவர்களாலே என் தனக்கு ஒரு புருஷார்த்த சித்தி உண்டு என்று
அவர்கள் க்ரஹங்களுக்கு  பல படியாலும் ஓடி -ஓடி -ஓடிபோய் என்றபடி -நையேன் இனி -எம்பெருமானார் விஷயீ-காரத்தை பெற்ற பின் இப்படி செய்து சிதிலன் ஆகேன் -அவர்களுடைய சம்ச்லேஷ விச்லேஷங்களில் உண்டான
ஹர்ஷ சோகங்களாலே- சிதிலன் ஆகேன் என்ற படி – அன்றிக்கே –பற்றா மனிசரை -இத்யாதிக்கு -சூத்திரமனுஷ்யரை ஆஸ்ரயித்து -அந்த ஆஸ்ரயணம் விடாதே அவர்களை உற்றாராக அனுசந்தித்து உழன்று ஓடி-நையேன் -என்று பொருள் ஆகவுமாம்-துரீஸ் வரத்வார பஹிர் விதர்த்திகா  துராசி காயை ரசிதொயமஞ்சலி –

என்கிறாப் போலே அவர்களுக்கு ஒரு நமஸ்காரம் என்கிறார் -காணும் -ஒள்ளிய நூல் கற்றார் பரவும் –ரிசோ யசூஷி சாம நிததைவாதர்வணா நிச  -சர்வம் அஷ்டாந்தராஸ் த்த்யம் யச் சாந்யதபி வான்மயம்-என்றும் ஸ்வ ஞானம் ப்ரபாகஞ்ஞானம் ப்ராப்யஞானம் முமுஷூபி -ஜ்ஞானத் த்ரயம் உபாதேயம் ஏதத்அநயம் ந கிஞ்சன -என்றும் -சுடர் மிகு சுருதி -என்றும் -சொல்லுகிறபடி -சகல வேத சங்க்ரஹமாய்     தத்வ ஹித புருஷார்த்தங்களை உள்ளபடி பிரகாசிப்பதுமான ரகஸ்ய த்ரயத்தை -ஸ்வ ஆசார்யரான எம்பெருமானார்  உடைய பிரசாதத்தாலே பெற்று -அதுக்கு ஆந்தர ப்ரமேயமாய் -தத் யாதாம்ய ரூபமாய்-சார தமமாய் இருந்துள்ள அர்த்தம் -ஆச்சார்யா தேவோ பவ -தேவ மிவ ஆச்சார்யா முபாசீதே -என்றும் யஸ்ய தேவே பரா பக்திர்  யதே தேவே ததா குரவ் -என்றும் -தேவ வத்ச்யாதுபாச்ய -என்றும் –

தஸ்மின் ராமானுஜார்யே குருரிதி சப்தம்பாதி நாந்யத்ரா-என்கையாலே எம்பெருமானாரே என்று-தெளிந்து நிலை பெற்று இருக்குமவர்கள் -தம் தாமுடைய கல்விக்கு பிரயோஜனம்  இதுவே என்று-பிரேமத்தால் அடைவு கெட ஸ்தோத்ரம் பண்ணா நின்று உள்ள –இராமானுசனை -எம்பெருமானாரை –
கருதும் உள்ளம் பெற்றவர் யவர் -ராமானுசைய சரணவ் சரணம் பிரபத்யே -என்றும் -சரணமேமி ராமானுஜம் –
என்றும் -ராமானுச முனிவன் வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் -என்றும் -இதத்தாய் ராமானுசன் -என்றும் –
சொல்லுகிறபடியே அனுசந்திக்கையே யாத்ரையாய் இருக்கும் திரு உள்ளத்தை உடையவர் -எக்குற்றவாளர்
எது பிறப்பு எது இயல்வாக நின்றோர் -என்கிறபடியே உருவற்ற ஞானத்தையும் -தண்ணி யாக ஜென்மத்தையும்
நிஷித்த வியாபாரத்தையும் உடையார் ஆகிலும் -அவர் எம்மை நின்று ஆளும் பெரியவரே -அப்படிப் பட்ட குற்றத்தையும்
இயல்பையும் பிறப்பையும் உடையவர்களே நமக்கு சேஷிகளாய் –  நம்மை யாவதாத்மா பாவியாக அடி பேராதே
ஒருப்படி நின்று யதேஷ்ட விநியோக அர்ஹராம் படி –ஆளா நின்று உள்ள மகாத்மாக்கள் -யவரேலும் அவர் கண்டீர் –

அவர் நின்றாளும் பெரியவரே -என்று நம் ஆழ்வாரும் அருளிச் செய்தார் இறே -ஸ்வப சோபி மஹீ பால விஷ்ணு பக்தோத் விஜாதிக -ந சூத்ரா பகவத் பக்தாவிப்ரா பாகவதாஸ் ஸ்மர்த்தா -பக்திரஷ்ட விதாஹ்யேஷா யஸ்மின் மிலேச்சேபி வர்த்ததே சவிப்ரேந்த்ரோ முநிஸ் ஸ்ரீ மான்    சயதிஸ்-சை பண்டித -தஸ்மை தேயம் ததோராக்யம் சைபூஜ்யோ யதாஹ்யஹம் -ஸ்வ பசோபி ஹரேர் நாம யஸ்ய வாசி -சக்ர்தப்ய வசாத்வி நிர்க்கதச்செத்   குலதைவவம் மம தஸ்ய பாத தூளி -அனுவ்ரஜாம் யஹம் நித்யம் பூய யேத் யன்க்ரி-ரேணுபி  -தாஸ் சர்வாஸ் சிரசா தேவ பிரதி கிரகணாதி   வைச்வயம் -என்ன கடவது இறே –

————————————————————————–

அமுது விருந்து

அவதாரிகை
இராமானுசனை தொழும் பெரியோர் பாதம் அல்லால் வேறு எதுவும் பற்று இல்லாத
நிலை எனக்கு இன்றையது -முன்போ –வேறு விஷயங்களில் ஈடுபட்டு
ஒன்றுக்கும் உதவ மாட்டாத அற்ப மனிசர்களை அண்டி -அந்நிலையை விட மாட்டாது –
அவர்களை உறவினராக நினைத்து -அவர்கள் மிக பரிவு கொண்டு இருந்த நிலை .
இனி
அந்நிலை எனக்கு மீ ளாது -எம்பெருமானார் இடம் ஈடுபடும் உள்ளம் படைத்தவர்
எவராயினும் -அவர் -மேல் உள்ள காலம் எல்லாம் -என்னை ஆள்வதற்கு –
உரிய பெரியவர் ஆவார் -என்கிறார் –
பத உரை –
பற்றா -ஒன்றுக்கும் பற்றாத -எதனுக்கும் திறமை அற்ற
மனிசரை-அற்ப மனிதர்களை
பற்றி -அண்டி நின்று
அப் பற்று -அவ்வண்டி நிற்றலை
விடாது -விட்டு விடாமல்
அவரே -அவர்களையே
உற்றார் என -உறவினர் என்று கருதி
உழன்று -அலைந்து கஷ்டப் பட்டு
ஓடி -அவர்களைக் காண வேண்டும் என்று ஓடி
இனி நையேன் -இனி மேல் நிலை குலைந்து போக மாட்டேன்
ஒள்ளிய -உண்மையை புலப்படுத்துவதான
நூல் கற்றார் -சாஸ்த்ரங்களை கற்று அறிந்தவர்கள்
பரவும் -துதிக்கும்
இராமானுசனை -எம்பெருமானாரை
கருதும் உள்ளம் -இடைவிடாது நினைக்கும் மனத்தை
பெற்றார் -பெற்றவர்கள்
யவர் –எவர்களோ
அவர் -அவர்கள்
எம்மை-எங்களை
நின்று -நிலையாக என்றும் இருந்து
ஆளும் -ஆட் கொள்ளும்
பெரியவர் -பெருமை உடையவர் ஆவார் .
வியாக்யானம் –
பற்றா மனிசரை –ஓடி நையேன் இனி —
முன்பு நான் பற்றி நின்றது -ஒன்றுக்கும் பற்றாத மனிசரை –
துயரில் மலியும் மனிசர் -திருவாய் மொழி – 3-10 6- – என்றபடி தாங்கள் துயரத்திலே அழுந்து கின்றவர்கள்
தங்களை அண்டினவர்களை துயரை எவ்வகையிலே துடைக்க வல்லவர் ஆவார்கள் என்னும் கருத்துடன்
மனிசர் -என்கிறார் .
இனி பற்றா மனிசர் -என்பதற்கு எம்பெருமானையோ -எம்பெருமானாரையோ -பற்றா மனிசர்
என்னலுமாம் .-இப்பொழுது பற்றினவராய் இருப்பின் அவரைப் பற்றுவதற்கு பயன் உண்டு –
பற்றாமையால் -என் சவிப்பார் மனிசரே -திரு வாய் மொழி – 3-5 5- – என்றபடி உண்மையில் மனிசர்
ஆகாத அன்னாரைப் பற்றுதற்கு பயன் ஏது-என்று கருத்து ஆகிறது .
இனி நம்மைப் பற்றுகிறவர்கள் இடம்
கண்டதோடு பட்டதல்லால் காதல் மற்று யாதுமில்லை -திரு வாய் மொழி – 9-1 1- – என்றபடி
பற்று -காதல்-இல்லா மனிசர் -என்று உரைப்பினுமாம் .
உலக நிலையைப் பற்றிய சான்றோர் உபதேசத்தாலும் -தமது லோக அனுபவத்தாலும் –
இப் பற்றினுடைய விட மாட்டாத திண்மை தோற்ற -அப்பற்று விடாது -என்கிறார் .
அவரே உற்றார் -பற்றப்பட்ட அப் பற்றா மனிசரே உறவாளர்
இனி
அப்பற்று விடாதவரே உற்றார் என -என்பதற்கு
பற்றா மனிசரைப் பற்றிய அப் பற்றை விடாமல் இருப்பவர்களை உற்றாராக நினைத்து
என்ற பொருள் கூறலுமாம் -பற்றா மனிசரை உறவாக கொண்டமை முந்தின பொருளிலும்
அவரைப் பற்றினவர்களை உறவாக கொண்டமை பிந்தின பொருளிலும் தோன்றும் .
உற்றார் என உழன்று –
உறவினர் என்று அவர்கள் பின்னே திரிந்து உழன்று
உற்றாருக்காக உழன்று -என்னாமல் –உற்றார் என உழன்று -என்றது
உற்றார் எனபது உழல்கின்ற எனது நினைப்பே அன்றி
உண்மையில் அவர் உற்றார் அல்லர் எனபது பட நின்றது .
ஓடி
அவர்கள் திறத்து பேரன்பினால் முகத்திலே விளிக்கப் பருவத்து எப்போதோ என்று ஓடி
இனி நையேன்
அவர்களோடு கூடி நிற்கில் களிப்பின் மிகுதியாலும்
பிரிந்திடில் பிரிவாற்றாமையாலும்
உருக் குலைந்து போக மாட்டேன் -..இது காறும் நைந்தது போதும் .இனி மேல் உழன்று ஓடி
நிலை குலையும் நிலையே எனக்கு ஏற்படாது -என்கிறார் .
ஒள்ளிய நூல் கற்றோர் பரவும் இராமானுசனை
பக்தியோடு முறைப்படி ஆசார்யனிடம் கற்று -உணர்ந்தமையின் -நூல் ஒள்ளிய நூல் ஆயிற்று .
எவனுக்கு தேவன் இடத்திலும் -ஆசார்யன் இடத்திலும் பரபக்தி உள்ளதோ -அவனுக்கு
சொன்னவைகளும் சொல்லப் படாதவைகளுமான பொருள்கள் எல்லாம் பிரகாசிக்கும் .-என்னும்
பிரமாணம் காண்க .
ஒள்ளிய -பிரகாசித்த –
நூல் பிரகாசித்தல் ஆவது -அதன் பொருள் தெளிவாக  தெரியும்படி இருத்தல் –
நூல்களின் பொருள்கள் தத்த்வமும் -ஹிதமும் -புருஷார்த்தமும் ஆகும் .
அவைகள் உள்ளபடியே தெளிவாக தெரிதலால் கற்றார் தமது கல்விக்கு கருத்து பொருளாம்
எல்லை நிலமான புருஷார்த்தம் இதுவே எனக் கருதி -ஆச்சார்யர் ஆகிய எம்பெருமானாரை

பரிவுடன் பரவுகின்றனர் -என்க .

கருதும் உள்ளம் பெற்றார் –
எம்பெருமானாரை இடைவிடாது தம் கருத்திலே இருத்தும் பாக்கியம் படைத்தவர்கள் -என்றபடி .
கருதும் உள்ளம் -ஓர் இடத்தில் செவ்வையாய் -நின்றவா நில்லாத உள்ளம்-எம்பெருமானாரையே
கருதும் உள்ளம் ஆயிற்று .தவம் புரிபவன் வாயு பஷணம்பண்ணிக்கிறான் என்றால் –
காற்றையே சாப்பிடுகிறான் -என்று பொருள் படுவது போலே –இராமானுசனை கருதும்
உள்ளம் பெற்றார் -என்பதற்கு –இராமானுசனையே கருதும் உள்ளம் பெற்றார் –என்று பொருள் கொள்க .
உள்ளம் உடையார் -என்னாது பெற்றார் -என்றார் .
புதையல் பெறுதல் போலே இது பெறாப் பேறு-என்று தோற்றற்கு-
யவர் அவர் எம்மை நின்றாளும்
பரமனை பயிலும் திருவுடையர் எவரேனும்   அவர் கண்டீர் எம்மை ஆளும் பரமர் -திரு வாய் மொழி – 3- 7-1
என்றுநம் ஆழ்வார் திருவாய் மலர்ந்தது போலே –கருதும் உள்ளம் பெற்றார் யவர் அவர் எம்மை யாளும் பெரியவர் –
என்கிறார் .குலம் முதலியன எப்படி இருப்பினும் அமையும் எனபது கருத்து ..
எம்மை ஆளும் பெரியவர்
இறைவனைப் போலே எல்லாரையும் ஆளூம் பரமனே இராமல் -சர்ம பர்வத்தின் எல்லை நிலத்தின்
கண் உள்ள என் போன்றோரை ஆளும் பெரியவராய் உள்ளனர் -என்றவாறு .
நின்று -நிலை நின்று -நிரந்தரமாக
பாகவத சேஷத்வம் நிலை நிற்கும் ஆத்மா தர்மம் ஆதலின் -ஆத்மா உள்ள அளவும்
ஒருபடிப்பட ஆளுவர் -என்றபடி .ஆலித்தல்-அடிமை கொள்ளுதல் ..
இறைவன் சேதனரை ஆளுவது -ஒருகால் தரு துயரம் தடாததும் -ஒரு கால் சிந்தையினோடு
கரணங்கள் யாவும்  சிதைந்து அந்தம் -லயம்-உரைச் செய்வதும் -மற்றொரு கால்
காயம் கழித்து தன் தாளிணைக் கீழ் வாழ்ச்சியை அளிப்பதுமாய் -பல படிப் பட்டு இருக்கும் .
பெரியவர் ஆளுவதோ என்றும் அடிமை இன்பம் ஒன்றையே தருவதாய் இருத்தலின்
ஒருபடிப் பட்டு இருக்கும் -என்க .
அற்ப மனிசரைப் பற்றிநாரை உற்றார் எனக் கொண்டு உழன்று ஓடி நைந்து போன -என்னை –
எம்பெருமானாரைப் பற்றிய பெரியவர் -நாம் பையல் எனக் கொண்டு -தாமாகவே
முன் போல் உழன்று ஓடி நைய விடாது ஆள்கின்றனர் .
என்னே என் நிலை அடியோடு மாறின படி -என்கிறார் .
அற்ப மனிசரைப் பற்றி அவரை உற்றாரஎன உழன்று ஓடி நைந்தேன் –
இது நானாக தேடிக் கொண்ட கேடு
இன்று பெரியவர் என்னை அபிமானித்து அங்கன் நைய விடாது ஆள்கின்றனர் .
இது ஹேது எதுவும் இன்றி எனக்கு கிடைத்த பேரும் பேறு -என்ற  வியந்து பேசுகிறார் .
————————————————————————–
அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்ப்பித்தது

முன்பு அப்ராப்த விஷயங்களை பற்றி இருப்பாரை பந்துகளாக நினைத்து-அவர்கள் அளவிலே தாம் ப்ரவணராய் போந்த படிகளை அனுசந்தித்து ,இனி அது செய்யேன்/எம்பெருமானாரை சிந்திக்கும் மனசு உடையார் ஆரேனும் ஆகிலும் என்னை ஆள  உரியவர் என்கிறார்/..பற்றா-காதல் செய்யாத ஆபாச பந்துகள் .-/அடியார்க்கு அடியான் இப் பொழுது பற்றினார்

முன்போ-/ பற்றா  மனிசரை பற்றி-அப் பற்று விடாதவரே உற்றார் என உகந்து-இது வேற – ஓடி-ஓடி வேற போனேன்-நைந்து இருந்தார் /

/ஒள்ளிய நூல்- ரகஸ்ய  த்ரயம்-பரவும்-அடைவு கெட கொண்டாடும்

–கருதும் உள்ளம் பெற்றார்-ஞானம் இருக்க வேண்டும்  என்பது இல்லை-மனசு இருந்தாலே போதும்-அவர்கள் என்னை ஆளும் பரமரே//கொண்ட பெண்டிர்- ஆழ்வார்-அநு கூலம்  உடன் இருப்பவருடன் வாழலாம்/பணம் காசு கொடுத்து கொண்ட பெண்டிர்/எல்லா உறவுமாக கொண்ட பெண்டிர்/குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை

/அப்ராப்த விஷயங்களைபற்றியவர்  த்யாஜ்யம்-ஆபாச பந்து உத்தேச்யம் //ஒன்றுக்கும் பற்றாத -துயரில் மலியும் மனிசர்/சூத்திர மனுஷ்யரை ஆச்ரயித்து –அந்த ஆச்ரண்யம் விடாதே நிற்கிறவர்களையே பந்துக்கள் என்று அநு சந்தித்து/கொண்டாடும் குலம் புனைவம் தமர் உற்றால் மனை ஒழிய உயிர் மாய்தல்-பொருள் இருந்தால் வருவார்கள்//உற்றார் என உழன்று-பிரமித்து போனான்-/,அவர்கள் பின்னே திரிந்து உழன்று ,அவர்கள் விஷயமான ப்ராவண்யத்தாலே-அவர்கள் முகத்தில் விழிக்க பெறுவது,எபொழுது என்று ஓடி–அவர்கள் உடைய சம்ச்லேஷ விச்லேஷங்களில் உண்டான ஹர்ஷா சோஹங்களாலே இனி சிதிலன் ஆகேன்

–..தத்வ ஹித புருஷ்ஹார்த்தங்களை–மூன்று படி-பல்லவிதம்-மொட்டு போல பகவான் தத்வம் உபாயம் புருஷார்த்தம்/பாகவதர் -புஷ்பிதம் /ஆச்சர்யரே பழுத்தால் போல– சுவ்யக்தமாக பிரகாசிப்பிக்கும் சாஸ்த்ரங்களை அதிகரித்து இருக்கும்-ரகஸ்ய த்ரயம் ஓர் ஆண் வழியாக பெற்று-அவர்கள்-தங்கள் கல்விக்கு பிரயோஜனம் இது என்று பிரேமத்தாலே அடைவு கெட ஸ்தோத்ரம் பண்ணா நின்று உள்ள-பரவும்- எம்பெருமானாரை -ஒருவரையே-அநு சந்திக்கையே யாத்ரை யாய் இருக்கும்-கருதும்–பரவ தெரியா விடிலும்-துருவனை கன்னம் பாஞ்ச சந்யத்தாலே தடவி ஸ்தோத்ரம் பண்ண வைத்தாரே– மனசை நிதி பெற்றால் போலே லபித்தது இருக்கும்

அவர்கள்யவர்- யாவர் சிலர்—கருதும்  உள்ளம் உடையார் இல்லை பெற்றார் நிதி போல-மரக்கலம் கரை சேர்ந்தால் போல– சிலர் அவர்கள் குல சரண கோத்ரங்கள் ஏதானுமாக-யாராகவாய் இருப்பினும் – அமையும்..அவர்கள் நம்மை இவ் ஆத்மா உள்ள அளவும்-நம்மை- அனைவரையும் எம்மை என்று நம்மையும் சேர்த்து கொள்கிறார்-ஒரு படி பட அடிமை கொள்ளும் மகானுபாவர்–ஆளும்––நிற்கும்-ஆத்மா உள் அளவும் ஒரு படி பட ஆள்வார்கள்-தரு துயரம் தடாயேல்-பந்தமும் மோஷமும் அவன் தருவான்-

,/ஸ்வாமி -முற்றும் துறந்தவர் –மருமான் தாசரதி விட வில்லை/திரு குருகை பிரான் பிள்ளானை புத்திரன்/கோவில் அண்ணன் ஆண்டாள் சகோதரி /

கழிய மிக்கதோர் காதல்-பிரிய பிரிய காதல் பெருக ஆழ்வாருக்கு /ஈரும் வெம் ஆவி –நைந்து பிரிவால்–பற்றா மனிசர் –பற்று விடாதே -அந்த ஆஸ்ராயணம் விடாமல் என்றும் கொள்ளலாம்/தாயே தந்தை என்னும் தாரமே கிளை மக்கள் என்னும் ..-நோயே  பட்டு ஒழிந்தேன்– ஏவ காரம் ஒருவரே போதும்-அபயம் -சேர்ந்து இருந்தால்/பிரிந்தால் பயம்/

/பிறக்கே உழைத்து ஏழை  ஆனேன்-ஆத்மா ஞானம் இன்றி–/பழுதே பல பகலும் போயின /ஓட்டை ஓடத்துடன் ஒழுகல் ஓடம் போல தேவதாந்தர பஜனம்//நக்க பிரானோடு அங்கு உய்ய கொண்டது நாராயணன் அருளே // அம்மனை மீர் ஆசை இல்லை விடுமினோ-அஞ்சலி- கும்பிடு போட்டு விலகனும்/

/சர்வம் அஷ்டாஷரம் -எட்டு எழுத்தும் /சுடர் மிகு சுருதி/ரகஸ்ய த்ரயமே ஒள்ளிய நூல்/ஆந்தர-ததீய சேஷத்வம் -ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம்./தேவு மற்று வேறு அறியேன் /இத தாய் ராமானுசன்-பட்டர் /ஏய்ந்த பெரும் கீர்த்தி-அனந்தாழ்வான் –அனுசந்திப்பதே கால ஷேபம்–குலம் தாங்கு -எவரேலும் அவர் கண்டீர்-அவர் எம்மை நின்று ஆளும் பரமரே /மிலேச்சனாய் இருந்தாலும் பக்தனே முனி ரிஷி பண்டிதன் -தொழுமினீர் கொள்மின் கொடுமின்-குக்கரில் பிறப்பர் ஏலும் –தொண்டர் அடி பொடி ஆழ்வார் போல..

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: