அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்–84-கண்டு கொண்டேன் எம் இராமானுசன் தன்னை-இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை –
எண்பத்து நாலாம் பாட்டு -அவதாரிகை
மேல் பெரும் அம்சம் கிடக்கச் செய்தே இதுக்கு முன்பு தான் பெற்றவை தனக்கு
ஒரு அவதி உண்டோ -என்கிறார் –
கண்டு கொண்டேன் எம் இராமானுசன் தன்னை  காண்டலுமே
தொண்டு கொண்டேன் அவன் தொண்டர் பொற்றாளில் என் தொல்லை வெந்நோய்
விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்தின்
றுண்டு கொண்டேன் இன்னுமுற்றனவோ தில் உலப்பில்லையே – -84 – –
வியாக்யானம் –
இவர் நம்மோடு சஜாதீயர் அல்லர் –
நம்மை உத்தரிப்பிக்க வந்தவர் என்று
அஸ்மத் ஸ்வாமியான எம்பெருமானாரை உள்ளபடி கண்டு கொண்டேன் .(ஜென்ம கர்மம் மே திவ்யம்  யோ வேத்தி தத்வதக -உண்மையாக )
இப்படி தர்சித்த அளவிலே -அவர் தம் அளவிலே -நின்று விடாதே
அவர்க்கு அநந்யார்ஹர் ஆனவர்களுடைய அழகிய திருவடிகளிலே அடிமைப்பட்டேன் –
என்னுடைய அநாதியாய் -அதிக்ரூரமான கர்மங்களை நீக்கிக் கொண்டேன் –
அவருடைய குண பூரமாகிற சமுத்ரத்தைப் பெரு விடாயர் மடுவிலே வாய் மடுத்து
பருகுமா போலே பெரிய அபிநிவேசத்தொடே இன்று புசித்து கொண்டேன்-(வெள்ள வாரியை குடிக்க வேண்டுமே -புசித்தல் என்றது -எல்லை -தெரியாது -த்ரவ்யமா கடின பொருளா தெரியாதே -குணங்களை எப்படி என்று அறியேன் என்பதற்கு த்ருஷ்டாந்தம் இந்த சொல் -பெற்ற பாக்யம் ஒன்றே அறிவேன் என்றவாறு )
இன்னமும் நான் பெற்றவற்றை சொல்லில் அதுக்கொரு முடிவு இல்லை
காண்டலுமே -என்றது கண்ட அளவிலே என்றபடி
தொண்டு கொண்டேன் -என்று ஒரு முழுச் சொல்லு -அடிமையைக் கைக் கொண்டேன் என்னுதல்
விள்ளுதல்-நீங்குதல்
வாரி -சமுத்ரம்
உலப்பு -முடிவு–
நான்கு விஷயங்கள் -கண்டு -தொண்டு பட்டு -வினைகள் கழிந்து -கல்யாண குணங்கள் பருகி -நான்கு படிகள் -அறம் பொருள் இன்பம் வீடு இல்லை -இந்த நான்கும் -குண அனுபவமே புருஷார்த்தம் –
சேஷவா –விஷ்வக் சேனரோ —
வெள்ள வாரி -பாலே போல் சீர் –பருக்கள் கூடிய சமுத்திரம் -அர்ச்சை – அருளி செயல்- சமைத்த மடு-அதிலே தேங்கின மடு போல அர்ச்சா அவதாரம்–அருளி செயல் – சாய் கரம்-/கொட்டிண்டே  இருக்கும்
————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –

அவதாரிகை -கீழ்ப் பாட்டிலே பிரதம பர்வ கோஷ்டியிலே அந்வயியாதே இருக்கிற என்னை சரம பர்வ மான
எம்பெருமானார் திருவடிகளை பரம ப்ராப்யமாக இவர் அத்யவசித்து இருக்கிறார் என்று லோகத்தார் எல்லாரும்
அறியும் படி  பண்ணி யருளினார் என்று சொல்லி -இதிலே -எனக்கு வகுத்த சேஷியான எம்பெருமானாரை
கண்ணாரக் கண்டு -அந்த காட்சி கொழுந்து விட்டு ஓடிப் படர்ந்து –ததீய பர்யந்தமாக வளருகையாலே-
அவர்கள் திருவடிகளில் அடிமைப் பட்டு அதி குரூரமான துஷ் கர்மங்களை கட்டடங்க விடுவித்துக் கொண்டு –
அவருடையகல்யாண குணாம்ர்தத்தை    வாயார அள்ளிக் கொண்டு பருகா நின்ற நான் -இன்னமும் பெற்றவற்றை
சொல்லப் புக்கால் –மேல் பெற வேண்டுமவற்றுக்கு ஒரு தொகை இன்றிக்கே இருக்கச் செய்தே இவை தன்னை
ஒரு வாசகம் இட்டு என்னால் சொல்லித் தலைக் கட்டப் போகாது என்கிறார் –
வியாக்யானம் -கண்டு கொண்டேன் -காஷாய ஸோபி கமநீய சிகா நிவேசம் தண்டத்ரய  யோஜ்வலகரம்
விமலோபவீதம் -உத்யத்தி நேச நிப முல்லச தூர்த்த்வ புண்டரம் ரூபம் தவாஸ்து  யதிராஜ திரிசோர் மம அக்ரே –பத்மம் என திகழும்– தமிழ் பாசுரம் போலே -என்று
பிரார்த்தித்து பெற வேண்டிய  வடிவு அழகை ஆகஸ்மிகமாக கண்ணாரக் கண்டு கொண்டேன் –-கண்டோம் கண்டோம்-கண்டோம் கண்ணுக்கு இனியன  கண்டோம் -திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணி நிறமும்

கண்டேன் -இத்யாதிப் படியே-மயர்வற  மதிநலம் அருளப் பெற்றவர்கள்த-தீயரைக் கண்டால் போலே சாஷாத் கரித்தது என்றபடி-

நீர் தாம் கண்ட பிரகாரம் எது என்னில் – என் இராமானுசன் தன்னை -கலவ் ராமானுஜஸ் ச்ம்ர்த -என்றும்
சேஷோவா   சைன்ய நாதோவா ஸ்ரீ பதிர் வேதி சாத்விகை விதர்க்காய  மகா ப்ராஜ்ஜை எதிராஜாயா -என்று
சொல்லுகையாலே இவர் நம்முடைய கோடியிலே ஒருவர் அல்லர் –என்னை சம்சாரத்தில் நின்றும் உத்தரிக்கைக்காக
பரம பதத்தில் நின்றும் -நான் இருந்த இடம் தேடி -வந்தவர் என்று அத்யவசித்துக் கொண்டு -அஸ்மத் ஸ்வாமியான
எம்பெருமானாரை உள்ளபடி கண்டேன் என்றபடிகாண்டலுமே தொண்டு கொண்டேன் அவர் தொண்டர் பொற்றாளில் –
இப்படி தர்சித்த அளவிலே -அந்த ப்ரீதியானது மேன்மேலும் பெருகி வந்து தம்மளவில் சுவறிப் போகாதே –
அவருக்கு அனந்யார்ஹரான ததீயரைத் தொடர்ந்து -அவர்களுடைய ஸ்ப்ருஹணீயமான திருவடிகளில்  எல்லா
அடிமைகளும் செய்வதாக அடிமைப் பட்டேன் –காண்டலுமே -என்றது -கண்ட அளவிலே -என்றபடி –
தொண்டு கொண்டேன் -என்றது –தொண்டு பட்டேன் என்று ஒரு முழுச் சொல்லு -அடிமையை கொண்டேன் என்னுதல்
த்வத் தாஸ தாஸ கண நா சரமாவதவ் யஸ் த்வத் தாசதைகர சதா விரதாமமச்து -என்று ஜீயரும் அபேஷித்து
அருளினார் இறே –என் தொல்லை வெந்நோய் விண்டு கொண்டேன் -இப்படி தாச்யத்திலே அந்வயிக்கவே
அநாதி கால ஆர்ஜிதங்களாய்-சர்வேஸ்வரனுடைய– ஷிபாமி -ந ஷமாமி -க்கு உடலாய் அதி க்ரூரங்களான
கர்மங்களினுடைய பலமான என்னுடைய ஆத்யாத்மிகாதி துக்கங்களை எல்லாம் கட்டடங்க விடுவித்துக் கொண்டேன்

விள்ளுதல் -நீங்குதல் –

அவன் சீர் வெள்ள வாரியை -அந்த எம்பெருமானாருடைய கல்யாண குணங்கள் ஆகிற மகா சமுத்ரத்தை
பிரவஹியா நிற்கிற சமுத்ரத்தை -என்றபடி -அவருடைய கல்யாண குணங்கள் அசங்க்யேயங்கள் ஆகையாலே
அவற்றுக்கு நிஸ் சலமாய் கொண்டு பரித்ர்சயமானமான சமுத்ரத்தை போலியாக சொல்ல ஒண்ணாது என்று கரை
புரண்டு பிரவஹியா நிற்கிற சமுத்ரத்தை போலியாக சொல்கிறார் -(அபூத உவமை அக்காரக்கனி போலே -சக்கரை விதையாக வைத்து வளர்ந்த மரத்தில் கனி போலே )-விஷயம் அனுபூதமாய் இருக்கிறாப் போலே
இதுவும் அனுபூதமாய் காணும் இருப்பது -அன்றிக்கே -அவருடைய கல்யாண குண பூரமாகிற சமுத்ரத்தை-என்னுதல் -வாரி -சமுத்ரம் –வாய் மடுத்து இன்று உண்டு கொண்டேன் -ஆதித்ய கிரணங்களாலே தப்தனாய் –
த்ர்ஷார்த்தனானவன் மடுவிலே புக்கு வாய் மடுத்து அந் நீரை பருகுமா போலே அமுதனாரும் இவருடைய
விஷயீ காரத்தை பெரும் அளவும் சம்சாரிக்க துக்க தாபதப்தர் ஆகையால் அந்த விடாய் எல்லாம் தீரும்படி
இவருடைய விஷயீ காரத்தை பெற்று -இவர் தம் அருகே சென்று அந்த கல்யாண குணாம்ர்த்தத்தை பெரிய
அபிநிவேசத்தொடே வாய் மடுத்து அனுபவித்து களித்தேன் என்கிறார் -ஷீராதி ரஸ்ய பதார்த்தங்கள் நமக்கு
ரசித்து இருக்கிறாப் போலே காணும் -பாலேய் போல் சீர்- என்னும்படியான அவருடைய கல்யாண குணங்கள்
இவருக்கு ரசிக்கிறபடி -வாய் மடுத்து உண்கையாவது -வாயைத் திறந்து அவற்றுக்கு வாசகமான சப்த ராசியை இட்டு
அவை தன்னையே ஸ்துதிக்கை-(இதுதானே இந்த இராமானுச நூற்றந்தாதி பிரபந்தம் )
இன்னம் உற்றன -இவ்வளவும் சொல்லிப் போந்த இவை   அன்றிக்கே
இன்னமும் அவர் தம்மாலே நான் பெற்ற பேற்றை -ஓதில் –சொல்லப் புக்கால் -உலப்பு இல்லை -முடிவு இல்லை –
நான் பெற்றவற்றுக்கு ஒரு தொகை இல்லாமையாலே கணக்கிட்டு சொல்ல மாட்டிற்று   இலேன் என்கிறார் –
உலப்பு -முடிவு –
————————————————————————–

அமுது விருந்து

அவதாரிகை-
எம்பெருமானார் வள்ளன்மையாலே இனிமேல் பெற வேண்டியவை
ஒரு புறம் இருக்க -இதற்கு முன்பு பெற்றவை தாம் -ஒரு கணக்கில் அடங்குமோ –
என்கிறார் .
பத உரை –
எம் இராமானுசன் தன்னை -எங்கள் ஸ்வாமியான எம்பெருமானாரை
கண்டு கொண்டேன் -உள்ள படி கண்டு கொண்டேன்
காண்டலுமே -கண்ட வுடனேயே
அவன் தொண்டர் பொன் தாளில் -அவருடைய அடியார்களின் விரும்பத் தக்க திருவடிகளில்
தொண்டு கண்டேன் -அடிமை பட்டேன்
என் தொல்லை வெந்நோய் -என்னுடைய பண்டைய கொடிய கர்மங்களை
விண்டு கொண்டேன் -நீக்கிக் கொண்டேன்
அவன் சீர் வெள்ள வாரியை -அவருடைய குண பிரவாஹம் ஆகிய சமுத்ரத்தை
வாய் மடுத்து -கையினால் அன்றி வாயை மடுத்து
விடாயர் விடாய் தீர  மடுவிலே வாய் மடுத்து பருகுவது போலே
இன்று உண்டு கொண்டேன் -இப்பொழுது அனுபவித்துக் கொண்டேன்
இன்னம் -இன்னமும்
உற்றன -நான் பெற்றவைகளை
ஓதில் -சொன்னால்
உலப்பு இல்லை -முடிவே இல்லை
வியாக்யானம் –
கண்டு கொண்டேன் எம்மிராமானுசன் தன்னை
இவர் நம்மைப் போன்ற சாதாரண மனிதர் அல்லர் -நம்மை உய்விப்பதற்காக விண்ணின் தலை
பரம பதத்தில் -நின்றும் மண்ணின் தலத்து உதித்தவர் என்று உள்ளபடி கண்டு கொண்டேன் -என்றபடி .
காண்டலுமே –தொண்டர் பொற்றாளில்-
கண்ட மாத்திரத்திலே -அவர் அளவோடு நில்லாது அவர்க்கு ஆட்பட்டாருடைய
அழகிய திருவடிகளில் அடிமைப் பட்டு விட்டேன் -என்கிறார் .
என் தொல்லை விண்டு கொண்டேன் –
எனது அநாதியான கொடிய பாபங்கள் நீங்கப் பெற்றேன் .
நோய் -நோய்க்கு காரணமாக கர்மத்தைக் கூறுகிறது .உபசார வழக்கு .
விள்ளுதல்-நீங்குதல்
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே யொழிந்த வினையாயின எல்லாம் -திருவாய் மொழி -10 4-9 – – என்று
நம் ஆழ்வாருக்கு பிரதம பர்வத்தில் ஏற்பட்ட அனுபவம் இங்கு நினைவிற்கு வருகிறது .
அவன் சீர் —உண்டு கொண்டேன்
சீர் -குணம் அது வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து கடலாய் தோற்றுகிறது –
விடாய் தீர அக்குணக் கடலையே வாய் மடுத்து உண்டு கொண்டேன் என்கிறார் .சீர்க் கடலை உட் பொதிந்த சிந்தனையேன் -என்று நம் ஆழ்வார் திரு மால் குணக் கடலை- உண்டதாகக் கூறினார் ..
வாய் மடுத்து உண்டு கொண்டேன்
அடியேன் வாய் மடுத்து பருகிக் களித்தேனே -திருவாய் மொழி -2 -3 -9 -என்றுநம் ஆழ்வாரும் –
உடலுருகி வாய் திறந்து மடுத்துன்னை நிறைத்துக் கொண்டேன் -பெரியாழ்வார் திரு மொழி -5 -4 -4 -என்று
அருளிச் செய்து இருப்பது இங்கு நினைவு கூரத் தக்கது .
இன்னம் -உலப்பு இல்லையே
இனி மேலும் நான் பெற்றவைகளை சொல்லிக் கொண்டே போனால்
ஒரு முடிவே இல்லை -என்கிறார் .
————————————————————————–
அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது

இன்னும் பெற்றவற்றை சொல்லி முடிக்க முடியாது –உலப்பு-முடிவு….சில சொல்லி அருளுகிறார்..கண்டு கொண்டேன் ஸ்வாமியை– சொரூப  ஸ்வாபம் அறிந்தேன்–இவர் நம்மோடு சஜாதியர் அல்லர் – நம்மை உத்தரிப்பிக்க வந்தவர் என்று

அஸ்மத் ஸ்வாமியான எம்பெருமானாரை உள்ளபடி கண்டு கொண்டேன்..கண்டதும் -உடனே-அவன் தொண்டர் இடம் அடிமை பட்டேன்- ஸ்வாமி ஆனந்தம்– இதுவே என்று—-இப்படி தர்சித்த அளவிலே அவர் தம் அளவிலே நின்று விடாதே

அவர்க்கு அனந்யார்ஹரானவர்கள் உடைய அழகிய திருவடிகளிலே அடிமை பட்டேன்..பாகவதர் ஸ்ரீ பாத துள்ளி பட்டதும்-ஞான யோகம் ச்ரேஷ்டர் -ஜடா பரதர்/கர்ம யோக ச்ரேஷ்டர் -ஜனகன்-பக்தி யோக ச்ரேஷ்டர் -பிரகலாதன்- என்பர்//

/என் உடைய அநாதியாய் அதி க்ரூருமான கர்மங்களை நீக்கி கொண்டேன்/ஞான மார்க்கம் விட பக்தி சிறந்தது-ஸ்ரீ பாகவதத்திலும் ஸ்ரீ பாத தூளி  மகாத்மயம் உண்டு /அவர் உடைய குண பூரமாகிற சமுத்ரத்தை பெரு  விடாயர் மடுவிலே வாய் மடுத்து பருகுமா போல-பெரிய அபிநிவேசதொடே இன்று புஜித்தி கொண்டேன்/குணா கரம்- குணா சாகரம்- மனசால் வாங்கி வாயால் பாடி இந்த பிர பந்தம் அருளி இருக்கிறார்/

சமுத்திர ஜலம் வெளியில் வருமா -கடல் தீர்த்தம் -உப்பு கடல் குடிக்க முடியாது- திரு பாற்  கடல் எங்கு தெரியாது-கடல்-குணத்தை தாண்ட முடியாது-இது பார்க்கிற இடத்தில் இருக்கும் ஓடியும் வரும்-கடல் விட பிரபாவம் என்கிறார்..இன்னமும்  நான் பெற்றவற்றை சொல்லில் சொல்லில் அதுக்கு ஒரு முடிவு இல்லை /

/காண்டலுமே– கண்ட அளவிலே /விள்ளுதல்-நீங்குதல்/வாரி-சமுத்ரம் /வாய் மடுத்து-பாத்ரம் கொண்டு இல்லை/பசு மாட்டின் மடி பாலை கண்ணன் பருகுவது போல

அர்ச்சை – அருளி செயல்- சமைத்த மடு-அதிலே தேங்கின மடு போல அர்ச்சா அவதாரம்–அருளி செயல் – சாய் கரம்-/கொட்டிண்டே  இருக்கும்-உண்மையாக அவதார ரகசியம் அறிந்தவன்-உள்ள படி யாதாத்மா ஞானமே மோஷ ஹேது/தொண்டர்-உன்னை ஒழிய மற்றை தெய்வம் அறியா வடுக நம்பி நிலை போல அவருக்கே அற்று தீர்ந்தவர்/சரம பர்வ நிஷ்ட்டையில் இருப்பவர்கள் //அதி க்ரூருமான வினை-பாகவத அபசாரம்

/விண்டு -நீக்கி /சீர் வெள்ள வாரி-சீர் வாரி- சாய் கரம் –கங்கை என்னும் வெள்ளம் போல சீர் என்கிற வெள்ளம் வாரி பருகினேன்

/திவத்திலும் பசு நிரை  உவத்தி-கன்று குட்டிகளுக்கு குடிக்க கற்று தருவான்-கர்ம பக்தி யோகம் இல்லை அதனால் விடாயர் வாய் மடுத்தால் போல/ இன்று -கண்ட அன்றே/வெள்ள வாரியை உண்டாரா

நெய் உண்ணோம் பால் உண்ணோம்-குடிப்போம்-த்ரவமா கடினமா தெரியாது-கண்ணன் பிறந்த பின்பு பார்த்து அறியாதவர்கள்/குணம் தலையில் விழுந்தது என்று தான் தெரியும்-அதனால் வெள்ளம் உண்டு என்கிறார் ../தொண்டு கொண்டேன்-தொண்டு பட்டேன்

/அடிமையை கை கொள்ளுதல் /உலப்பிலானை எல்லா உலகும் உடைய ஒரு மூர்த்தி உலப்பு-எல்லை/ஐஸ்வர்யம் த்யாஜ்யம் தோஷ தரிசனம்  கண்டு பகவத் அனுபவம் போகலாம்-பாகவத நிஷ்ட்டை போக பகவன் இடம் தோஷம் இல்லை கடினம்/ ஸ்வாமி கண்டதும்-ஆசை பெருகி-கொழுந்து விட்டு ஓடி படர்ந்து ததீய பர்யந்தமாக வளர்ந்து–கர்ம தொலைய- இருக்கும் பொழுது கல்யாண குணங்களை அனுபவிக்க முடியாது/கர்மா தடுக்கும்–இவை நீங்க ஆழ்வான் ஆண்டான் திருவடிகளை பற்றி-ஸ்வாமி -கல்யாண குண  கடல் அம்ர்ததை-பருகி-/கண்டு கொண்டு-ரூபம் காஷாய சோபி -திரு மேனி ஒளி வரும்-கமநீய சிகாநிவேசம்-சிகை-தண்ட திரைய -உஜ்வல விமல உபவீதம் -பூணல் பிரம தேஜஸ் கொடுக்க/உதயத்து  தினேச ஊர்த்வ புண்டரம் உதய  சூர்யன் போல ஒளி

/ஒரே நாள் கல்யாண புஷ்கரணி வெட்கி  ஓடி போவார் -முட்டாக்கு போட்டு கொண்டு..திரு மண் காப்பு சாத்தி கொண்டு உத்சவம் நாள் முழுவதும்./பற்பம் என திகழ்..எதிராசர் வடி அழகு கண்ட எனக்கு  இல்லை எனக்கு எதிர்-தீர்த்தம் ஆடி வரும் ஸ்வாமி யை பார்த்து எம்பார் அருளியது/பல்லவம்-மொட்டு போல விரல்கள்/பாவனமாகிய துவர் ஆடை பதிந்த  மருங்கு-இடை அழகு/முப்புரி  நூலோடு முன் கையில் ஏந்திய முக்கோல் தன் அழகும்/முன்னவர் தந்திடு  மொழி கள் நிறைந்திடும் முறுவல் நிலா அழகும்//காரி சுதன் கழல்  சூடி -கன சிகை முடியும்-.

.கண்டு கொண்டேன்-எப்படி எதனால் விசேஷணம்  ஒன்றும் இல்லை-கண்டோம் கண்டோம்  கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்-ஸ்ரீ வைஷ்ணவ சமுகம் கண்டார் ஆழ்வார்/திரு கண்டேன் பொன் மேனி கண்டேன் ..ஆழி கண்டேன்-ததீயரை கண்டாரை போல சாஷாத்கரித்து ..முதலில் கண்டு கொண்டதுக்கும்  கல்யாண குணங்களும் தெரிந்த பின் கண்டு கொண்டதுக்கும் வாசி

/அர்ஜுனன் முதலிலும் சோகம்-விஸ்வ ரூபம் தரிசனம் ஆன பின்பும் சோகம்-முதலில் என்ன பண்ண வேண்டும் என்று தெரியாமல் பின்பு ஒன்றும்  பண்ண வேண்டியது இல்லை என்று/உணர்ந்து கொண்டது -மனசால் வைபவம் தெரிந்து

-சேமம் குருகையோ-தெரியாமல்-ஆய் ஜகனாதாச்சர்யர் ஸ்வாமி-மா முனிகள்/இருவரும் மாறனா ராமானுஜரா திரு மாலா / இவரையும் -ஸ்ரீ பதியா சேஷனா சேன நாதனா -உபய விபூதியும்  கொண்டவர் என்பதால்//உள்ளபடி தெரிந்து கொள்வது-கடைத்தேற வந்தவர் ஸ்வாமி என்று // –கண்டேன் கமல மலர் பாதம் காண்டலுமே விண்டே ஒழிந்தன  வினை ஆயின எல்லாம்—ஆழ்வார் //தரிசித்த அளவிலே ப்ரீதி பெருகி வந்து -ததீயர் தொடர்ந்து -கைங்கர்யம் பெற்றேன்..

தாச தாச தாச கணான -சரம பர்வ நிலை-அநாதி கால ஆர்ஜித -சேர்த்து வைத்து இருக்கிற கர்மா-பிரளயம் வந்தாலும் அழியாத -கர்மா பலனும் கிருபை பலனும் அனுபவித்தே தீர்க்கவேண்டும்/கிருபை கர்மா அன்யோன்ய ஆச்ரயம்/திருவடி சம்பந்தம் கிருபை தூண்ட கர்மா விலகும்/ந ததாமி-தான் கர்மா /நானும் வேண்டாம் நீயும் வேண்டாம் தன் அடையே  போகும்/ஷிபாமி-பல நீ காட்டி படுப்பாயோ-அகத்த நீ வைத்த மாய ஐம் புலன்கள்/ததாமி -கர்மா  யோகம் ஞானம் பக்தி உள்ளவர்களுக்கு/ஸ்வாமி அனைவருக்கும் கொடுப்பார்/கல்யாண குணங்கள் ஆகிய சமுத்ரத்தை -போலியாக -கரை புரண்டு வெள்ளம் இட்டு ஓடி-எண்ணில் அடங்காதவை என்பதால் -அபூத வுவமை-அக்கார கனி-போல சக்கரை பழம்-இல்லை-சக்கரை விதை மரமாக வளர்ந்து பழம் பெற்றால் போல/ரூபம் குணம் -இரண்டு கால்  மாடு -என்று சொல்லுவது போல

/பரி பூரணமான கடல்/ கல்யாண  குணம் நிறைந்த -போய் சேர்ந்த கடல்/சீர் கடலை உள் பொதிந்த சிந்தையேன்//அடியேன் வாய் மடுத்து பருகி களித்தேன்// உடல் உருகி வாய் மடுத்து உன்னை நிறைத்து கொண்டேன்-பெரி ஆழ்வார் //சாம்சார துக்கம் கொதிப்பில் விடாய் தீரும் படி விஷயீ  காரம் பெற்று அருகில் சென்று/பால் தேன் கன்னல் அமுதம் போல பல ரசமாய் கலந்து ஒழிந்தோம்- பாலேய் போல் சீர்-உண்டு கொண்டது சொல் இட்டு பாடுதல்-–சப்த ராசி கொண்டு- ராமானுஜ நூற்று அந்தாதி அருளியது ./பெற்றபேற்றுக்கு  கணக்கு இல்லை-

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: