அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்–83-சீர் கொண்டு பேரறம் செய்து நல்வீடு செறிதும் -இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை .
எண்பத்து மூன்றாம் பாட்டு -அவதாரிகை –
பொருவற்ற கேள்வியனாக்கி -நின்றேன் -என்ன
உம்முடைய ச்ருதத்துக்கு வ்யாவ்ருத்தி எது -எல்லார்க்கும் ஒவ்வாதோ சரணாகதி -என்ன -நான் பிரபத்தி பண்ணி பரமபதம் பெறுவார் கோடியில் அன்று –
தேவரீர் திருவடிகள் ஆகிற மோஷத்தை -தேவரீர் ஔதார்யத்தாலெ பெருமவன் –
என்கிறார் —
சீர் கொண்டு பேரறம் செய்து நல்வீடு செறிதும் என்னும்
பார்கொண்ட மேன்மையர் கூட்டனல்லேன் உன் பத யுகமாம்
ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய
கார் கொண்ட வண்மை இராமானுச ! இது கண்டு கொள்ளே – – 83- –
வியாக்யானம் –
சமதமதாதிகள் -ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்கள் ருசி விச்வாசங்கள் -ஆகிய
ஸ்வபாவ விசேஷங்களை வுடையராய் –
பரம தர்மம் ஆகிற ப்ரபத்தியை பண்ணி –
ஆத்மா அனுபவம் மாத்ரமான கைவல்யம் போல் அன்றிக்கே –
பரம புருஷார்த்த லஷண மோஷத்தை ப்ராப்பிப்போம் என்னும்
பூமி எங்கும் வ்யாப்தமான பிரபாவத்தை உடைய பகவத் பிரபன்னருடைய
திரளுக்கு உட்பட்டவன் அல்லேன் –
தேவரீருடைய திருவடிகள் இரண்டும் ஆகிற
சர்வ விலஷணமான மோஷத்தை –
அநாயாசேன ப்ராபிப்பேன் -அதுக்கு ஹேது –
சர்வ விஷயமாக சர்வ காலத்திலும் உபகரிக்கையாலே –
மேகத்தை ஜெயித்து இருக்கும் தேவரீருடைய ஔ தார்யம் .
இது நான் சொல்ல வேணுமோ ?
அனுஷ்டனத்தால் கண்டு கொள்ள மாட்டீரோ ?
நல் வீடு பெறுதும்-என்றும் பாடம் சொல்லுவார்கள் –
பார் கொண்ட மென்மை -விசேஷஜ்ஞ்ஞாரோடு அவிசேஷஜ்ஞ்ஞாரோடு வாசி யற பூமியில்
உள்ளார் எல்லாராலும் கைக் கொள்ளப் பட்ட உத்கர்ஷம் என்னவுமாம் .
ஏர் கொண்ட வீட்டில் -என்ற பாடமான போது  –
தேவரீர் திருவடிகள் இரண்டுமாகிற விலஷண மோஷத்திலே-அநாயாசேன சேர்வன் -என்றபடி –
ஏர் -அழகு
கொள்கை -உடைத்தாகை
திருவடிகளை மோஷமாக சொல்லிகிறது -ஆனந்தாவஹத்வத்தாலே –
முக்திர் மோஷோ மகா நந்த -என்னக் கடவது இறே –
பெருமாளை பற்றி -பிரயோஜனாந்தரங்கள் கை வலயம் இல்லாமல் அவனையே பற்றுவது பிரதம பர்வ நிஷ்டை
ஆச்சார்யன் பற்றி அவனை அடையாமல் ஆச்சார்யர்
திருவடிகளில் -சரம பர்வ நிலை
நல் வீடு –பிரதம பர்வம் —சீர் கொண்ட பேர் அறம் செய்ய வேண்டும் -ஆனால் இங்கே
ஏரார் இடை -ஏர் கொண்ட வீடு -சரம பர்வ -எளிதினில் எய்துவேன் -உம் வண்மை பிரத்யக்ஷம் -கண்ணாடியில் கண்டு கொள்ளும்
இருப்பிடம் –வைகுந்தம் -அனைவரும் உம் திரு உள்ளம் -உம்மை உம்மால் பெற்றால் -வேறே என்ன
வேண்டும் –
நிர்ப்பயம் நிர்ப்பரம்–இங்கே தானே -சபரி பாத மூலம் -அடைவேன் -உன் பாதம் பெற்று கொடுத்த என் ஆச்சார்யர் திருவடிகள் -மதங்கரை அடைந்தாள்
இவரே இங்கேயே எளிதில் கொடுக்க -வேறே வேண்டுமோ
————————————————————————–
பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை -கீழ்ப் பாட்டில் இவர் தம்முடைய ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக -பொருவற்ற கேள்வியனாக்கி நின்றான் –
என்று சொன்னவாறே -அத்தைக் கேட்டருளி -உபமான ரஹீதமான ஸ்ருதத்தை உடையனாம்படி பண்ணி யருளினார்
என்று நீர் நம்மை ச்லாகித்தீர் -உம்மை ஒருவரையோ நாம் அப்படி பண்ணினது -ஒரு நாடாக அப்படி பண்ணி பரம பத்தில்
கொண்டு போகைக்கு பக்த கங்கனராய் அன்றோ நாம் அவதரித்தது -ஆகையாலே உமக்கும் உம்மை ஒழிந்தாருக்கும்
 தன்னிலே வ்யாவ்ருத்தி ஏது என்று -எம்பெருமானாருக்கு திரு உள்ளமாக –இவர் அவர் திரு முக மண்டலத்தைப்
பார்த்து நான் என்னை ஒழிந்தார் எல்லாரையும் போலே பகவத் சரணா கதியைப் பண்ணி பரம பதத்தை பிராப்பிப்போம்
என்று இருந்தேன் அல்லேன் காணும் –தேவரீர் திருவடிகளாகிற மோஷத்தை தேவரீர் ஔதார்யத்தாலே கிருபை
பண்ணப் பெறக் கடவேன் -என்று நேரே விண்ணப்பம் செய்கிறார்
வியாக்யானம் -சீர் கொண்டு -சாந்தோதாந்த -இத்யாதிகள் சொல்லப்படுகிற சம தம தாதிகள் என்றும் –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் -என்றும் -என் நான் செய்கேன் யாரே களை கண்-என்னை என் செய்கின்றாய் -என்றும் சொல்லப்படுகிற ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்கள் என்ன –
பிரியோஹி ஜ்ஞானி நோத்யர்த்தமஹம் -என்றும் ரஷிஷ்ய தீதி விஸ்வாச -என்றும் சொல்லப்படுகிற
ருசி விச்வாசங்கள் என்ன -இது தொடக்கமான அதிகாரி விசேஷ ஸ்வ பாவங்களை உடையவராய் –
கொள்கை -உடைத்தாகை -பேர் அறம் செய்து -நியாச மேஷாம் தபஸா மதி ரிக்த மாஹூ -என்றும் –
சர்வ குஹ்ய தமம் பூத -என்றும் சொல்லுகிறபடியே பரம குஹ்ய தமமாய் -பரம தர்மமாய் -ஸ்வ ரூப-அனுரூபமான ப்ரபத்தியை பண்ணி -அதாகிறது -ந்யச்யத்வத் பாத பத்மேவாத நிஜபரம் நிர்ப்பரோ நிரபயோச்மி

என்கிறபடியே ஆத்மா ஆத்மீயங்கள் உடைய ரஷண பரத்தை-அவன் பக்கலிலே பொகட்டு-ஸ்த நந்த  பிரஜையோபாதி நிர்ப்பரராய் இருக்கை -பலத்துக்கு-ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமும்  வேண்டுவது -என்று பிள்ளையும் அருளிச் செய்தார் இறே-பேர் -பெருமை

அறம் -தர்மம் –நல் வீடு செறிதும் என்னும் -வீடு -மோஷம் -ப்ராப்ய ஸ்தானம் -அதாவது -ஸ்வாத் மா நு பூதிரிதி யாகில
முக்திருக்தா -என்கிறபடியே கைவல்யமும் மோஷம் யாகையாலே -தத் வ்யாவ்ர்த்யர்த்தமாக -நல்வீடு -என்று அத்தை
விசேஷிக்கிறார் -வீட்டுக்கு நன்மையாவது -ஸ்வ ஆத்ம மாத்திர அனுபவமான கைவல்யம்போலே அல்பமாயும்
ஸ்வார்த்தமாயும் இருக்கை யன்றிக்கே -நலம் அந்தமில்லதோர்   நாடு – என்கிறபடியே அபரிமித ஆனந்த ரூபமாய் –
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -என்கிறபடியே பகவத் ஏக போகமாய் இருக்கை -செறிதும் என்னும் -இப்படிப் பட்ட
பரம புருஷார்த்த லஷணமான மோஷத்தை ப்ராபிப்போம் என்னும் —நல் வீடு பெறுதும் -என்றும் பாடம் சொல்வார்கள் – –
ஆகிலும் அர்த்த பேதம் இல்லை -யோகிநாம் மிர்தம் ஸ்தானம் -என்றும் யத்வை பஸ்யந்தி சூரய -என்று ஸ்வ ஆத்ம
அனுபவரூப கைவல்ய மோஷத்தையும் -பகவத் ப்ராப்தி ரூபா பரம புருஷார்த்த லஷண மோஷத்தையும் -ஸ்தான
பரம -சப்தங்களாலே பசித்து கீதாசார்யனும் அருளிச் செய்தான் இறே –பார் கொண்ட மேன்மையர் -பூமி எங்கும் ஒக்க-வ்யாப்தமான பிரபாவத்தை உடையவர் -என்னுதல் – விசேஷஞ்ஞாரோடு அவிvஷஞ்ஞாரோடு வாசி அற பூமியில் உள்ள

எல்லாராலும் கைக் கொள்ளப்பட்ட உத்கர்ஷத்தை உடையவர் என்னுதல் -கொள்கை -வ்யாபிக்கையும் ச்வீகரிக்கையும் – கூட்டன் அல்லேன் -இப்படி பட்ட பகவத் பிரபன்னருடைய   கோஷ்டியிலே உள்பட்டவரில் ஒருவனாய்-இருக்கிறவன் அல்லேன் -ஆகில் உம்முடைய படி எங்கனே என்ன சொல்லுகிறார் –உன் பத யுமாம் ஏர் கொண்ட வீட்டை-தேவரீர் திருவடிகள் இரண்டும் ஆகிற விலஷண மோஷத்தை  -குருரேவ பராயணம் -குருரேவ பராகதி –பாத மூலம் கமிஷ்யாமி யாநகம் பர்யசாரிஷம் -நித்யம் யதீய சரணவ்  சரணம் மதீயம் -என்றும்-சொல்லுகிறபடியே -சர்வ பிரகார லஷணமான மோஷத்தை –ஏர் -அழகு -எளிதினில் எய்துவன் -வருத்தம் அற ப்ராபிப்பேன் -உன்பத யுகமாம் ஏர் கொண்ட வீட்டில் -என்ற பாடமானபோது-தேவரீர் திருவடிகள் இரண்டும் ஆகிற விலஷண மோஷத்தில் என்றபடி -இவர் இப் பெறாப்பேறு பெற்ற-பின்பு -பகவல் லாபத்தையும் ஒரு பொருளாக நினைக்க மாட்டார் காணும் -திருவடிகளை-மோஷமாக சொன்னது ஆனந்த அவஹத்வத்தாலே -இப்படி சொன்னால் உமக்கு இந்த ப்ராப்யம் எத்தாலே-அத்தை சொல்லி காணீர் என்ன -உன்னுடைய கார் கொண்ட வண்மை –அதுவும் அவனது இன்னருளே -என்றபடி-தேவரீர் ஔதார்யமே அதுக்கு சாதனம் என்கிறார் –கார் கொண்டவண்மை – -நீரே உம்மை அருள வேணும் –
விசேஷணத்தாலே மேகத்தில் நின்றும்-கிருபைக்கு உண்டான வ்யாவ்ர்த்தியை சொல்லுகிறார் – மேகமானது நாலு மாசம் வர்ஷிக்க கடவதாய் -அப்போதும் அபேஷித்த இடங்களில் வர்ஷியாதே -சமுத்ரத்திலும் பர்வதத்திலும் அரண்ய பிரதேசத்திலும்-வர்ஷிக்கும் -இவருடைய  ஒவ்தார்யம்அப்படி இன்றிக்கே — கொள்ள குறைவற்று இலங்கி கொழுந்து-விட்டு ஓங்கி இருப்பதாகையாலே -சர்வ காலத்திலும் -சர்வர்க்கும் -சர்வ பலங்களையும் -கொடுத்துக்-கொண்டு இருந்து -மகா வ்ர்ஷம் போல் இருக்கிற மகா மேகத்தை பராஜிதமாக்கி -என்னை ஸ்வா தீனமாக-எழுதிக் கொண்டது -என்றபடி -இப்படிப் பட்ட தேவரீர் உடைய பரம கிருபா பூர்வகமாக இந்த ஒவ்தார்யம்-ஒன்றுமே அந்த பலத்துக்கு பிராபகம் என்றபடி —இராமானுச -எம்பெருமானாரே –இது கண்டு கொள்ளே -இது-தான் சொல்ல வேணுமோ -கை இலங்கு நெல்லிக் கனி போல் இருக்கிற இவ் அர்த்தத்தை தேவரீர் கண்டு கொள்ள-மாட்டீரோ -அடியேன் சொல்ல கேட்டருள வேணும் என்னும் ஒரு நிர்பந்தம் உண்டோ –

ஸூ லபம் ஸ்வ குரும் த்யக்த்வா துர்லபம் உபாசதே பத்தம் த்யக்த்வா தனம் மூடோ குப்தமன்வேஷ  தேஷி தவ்-என்னக் கடவது இறே –
————————————————————————–
அமுது விருந்து
அவதாரிகை –
பொருவற்ற கேள்வி -என்று உமது கேள்வி அறிவை சிறப்பிப்பான் என் –
ஏனையோரும் கேள்வி அறிவு பெற்றிலரோ என்ன –
ஏனையோர் கேள்வி அறிவு பிரதம பர்வத்தை பற்றியதாதலின் -பகவானிடம் பிரபத்தி பண்ணி
பரம பதத்தை அடைவராய்-நின்றனர் அவர் –
நானோ சரம பர்வத்தின் எல்லை நிலையான ஆசார்யராகிய தேவரீரைப் பற்றிய கேள்வி
அறிவு உடையவனாக ஆக்கப்பட்டமையின் –
அவர் கூட்டத்தில் சேராது -தேவரீர் திருவடிகளையே பரம பதமாய் கொண்டு –
அதனை தேவரீர் வள்ளன்மையால் பெறுமவனாய் உள்ளேன் –
இது என் கேள்வி யறிவினுடைய பொருவற்றமை -என்கிறார்
பத உரை –
இராமானுசா -எம்பெருமானாரே –
சீர் கொண்டு -சமம் தமம்முதலிய நன்மைகள் உடையவர்களாய் கொண்டு
பேர் அறம் -பெரிய தர்மமாகிற ப்ரபத்தியை
செய்து -பண்ணிக் கொண்டு
நல் வீடு -நல்ல மோஷத்தை
செறிது என்னும் -சேருவோம் என்னும்
பார் கொண்ட -பூமியை தனக்குள் கொண்ட
மேன்மையர் -பிரபாவம் வாய்ந்த பகவத் பிரபன்னர்களுடைய
கூட்டன் அல்லேன் -கூட்டத்தில் சேர்ந்தவன் அல்லேன்
உன் பத யுகமாம் -தேவரீருடைய திருவடி இணையாகிற
ஏர் கொண்ட -அழகு – வீறுடைமை-வாய்ந்த
வீட்டை -மோஷத்தை
எளிதினில் -சுலபமாக
எய்துவன் -அடைவேன்
அதுக்கு ஹேது
உன்னுடைய -தேவரீருடைய
கார் கொண்ட -மேகத்தை வென்ற
வண்மை -வள்ளல் தன்மையாம்
இது -இவ் விஷயத்தை
கண்டு கொள் -தேவரீர் கண்டு கொள்ள வேணும் –
நான் சொல்ல வேணுமோ -என்றுகருத்து .
வியாக்யானம் –
சீர்கொண்டு –கூட்டன் அல்லேன்
நல் வீடு செறிதலுக்காக செய்யும் பேரறம் என்பது இங்கு  பிரபத்தியை -என்று உணர்க .
பக்தி யோகமும் நல் வீடு செறிதலுக்கு கைக் கொள்ளப் படுவதாயினும் -அதனை
பேரறம் ஆகாது என்று விலக்குக
ந்யாசம்-எனப்படும் பிரபத்தியே -தனக்கு மேல் இல்லாத அதிரிக்தமான தபசாக ஓதப்படுதலின்
பிரபத்யே பேரறம் ஆகும்  -என்க ..மேலும் எம்பெருமானார் கோஷ்டியில் பக்தி மார்க்கத்தைக்
கைக் கொண்டு நல் வீடு செறிதும் என்று இருப்பார் எவருமே இலர் ஆதலின் -அவர்கள் கூட்டத்தில்
சேர்ந்தவன் அல்லேன் -என்று தம்மை அமுதனார் சொல்லிக் கொள்வது பொருந்தாது .
எம்பெருமானார் தாமும் பிரபத்தி செய்து -மற்றவர்களையும் அதனை கைக் கொள்ளுமாறு
செய்தலின் அந்த பிரபத்தியினாலே நல் வீடு செறிதும் என்று இருப்பார் பலர் உண்டு .
அந்தக் கோஷ்டியில் தான் சேர்ந்தவன் அல்லேன் என்பது நன்கு பொருந்துகிறது .
பேரறமாகிய பிரபத்தி -மாமேகம் சரணம் வ்ரஜ –என்  ஒருவனையே உபாயமாகப் பற்று -என்றபடி –
கண்ணனையே உபாயமாய் வரிப்பதாக அமைந்து இருத்தலின் -தான் உபாயமாக மாட்டாது –
ஆதலின் அதனைச் செய்வதற்கு வேறு எதனையும் அங்கமாகக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை .
ஆயின் சீர் கொண்டு பேரறம் செய்து -என்று அமுதனார் கூறுவதன் கருத்து யாதோ -எனின் –
பிரபத்தி செய்வோருக்கு சில நல்லியல்புகள் தாமே அமைந்து இருக்கும் .அச் சீரிய இயல்புகளை
உடையவர் களாய்-பேரறம் செய்கிறார்கள் -என்கிறார் அமுதனார் என்று கொள்க .
அவ்வியல்புகளாவன-
-சமம் தமம் முதலியனவும் –
-அகிஞ்சந்ய -வேறு வழி இல்லாமை -அநந்ய கதித்வம் -வேறு புகல் இல்லாமை -களும் –ருசி-பேற்றினில் வேட்கை -விஸ்வாசம் -பேரு தப்பாது -என்ற துணிபு போன்றவைகளும் –
சமம்-மனத்தை அடக்குதல் தமம் -வெளி இந்திரியங்களை அடக்குதல் –மாறிக் கொள்வதும் உண்டு .
இவ் இயல்புகள் பிரபத்தி செய்வதற்கு உறுப்பாக வந்தவைகள் அல்ல -பிரபத்தி செய்வோரிடம்
நேரிடும் இயல்புகள் என்றுணர்க –
இனி –சீர் கொண்டு -என்பதற்கு மற்ற உபாயங்களை கை கொண்டோரினும் சீர்மை உடையவராய்
கொண்டு -என்று பொருள் உரைத்தலுமாம் .
நார்ஹந்தி சரணஸ் தஸ்ய கலாம் கோடி தமீமபி -பிரபத்தி செய்தவனுடைய சீர்மையில்
கோடியில் ஒரு பங்கு கூடப் பெற மற்ற உபாயங்களை கைக் கொண்டவர்கள் தகுதி அற்றவர்கள் –
என்பது காண்க –-பார் கொண்ட மேன்மையர் –என்னும் இடத்தில் -உலகு எங்கும் பரவின பிரபாவம்
பேசப்படுகிறது .இங்கே உபாயாந்தரங்களை கைக் கொண்டவர்களினும் பிரபத்தி செய்வோருடைய
சீர்மை செப்பப் படுகிறது .
பிரபத்தி செய்த பிறகு -பேற்றுக்கு செய்ய வேண்டியது யாதொன்றும் இல்லாமையினால்
நல் வீடு பெறப் போகின்றோம் என்று -அதனை எதிர் நோக்கி நிற்கின்றனர் -பேரறம் செய்தோர் –
அவர்கள் எதிர்பார்ப்பது -நல்ல வீட்டை –
புல்லிய வீட்டை அன்று .
புல்லிய வீடு-கைவல்யம் எனப்படும் மோஷம் ஆகும் .
சிறிய மின்மினி பூச்சி போலே மிளிரும் அணுவான தன் ஆத்மா ஸ்வரூபத்தை
தேக சம்பந்தம் அறவே நீங்கின ஜீவாத்மா தானே அனுபவித்து -அவ்வளவோடு
பிரம்ம அனுபவத்தை இழந்து நிற்றல் கைவல்யம்  எனப்படும் .
பிரம்ம அனுபவத்தையும் அதன் விளைவான கைங்கர்யத்தையும் கோரி பிரபத்தி செய்பவர்கள்
ஆதலின் -நல் வீடு செறிதும் -என்று இருக்கிறார்கள் .நல் வீடு -என்று கைவல்யத்தை விலக்குவதனால்
கைவல்யத்துக்கும் மோஷம் வீடு -என்னும் வழக்கு உண்டு என்று தெரிகிறது –
ஸ்வ ஆத்மா அநுபூதி ரீதி யாகில முக்தி ருக்தா -தன் ஆத்மாவைத் தானே அனுபவித்தல்
என்னும் யாதொரு முக்தி கூறப் பட்டதோ -என்று ஆழ்வான் கைவல்யத்தை முதி என்னும் சொல்லால்
வழங்குதல் காண்க

-நல் வீடு பெறுதும் -என்றும் பாடம் உண்டு

பார் கொண்ட மேன்மையர் கூட்டன் அல்லன் –
பாரினை யடங்கக் கொண்ட மேன்மை-பூமி எங்கும் பரவின மேன்மை -என்றபடி –
இனி பாரில் உள்ள மேலோர் கீழோர் அனைவரும் கைக் கொண்ட மேன்மை என்னலுமாம் –
இத்தகைய பேரறம் செய்வோர் மேன்மை பாரடங்க பரவி இருப்பினும் அன்றி –
பாரில் உள்ளோர் அனைவரும் கைக் கொண்டு இருப்பினும் –
அம் மேன்மையில் மயங்கி -நான் அவர்கள் கூடத்தில் சேர்ந்து விட வில்லை -என்று தமது
உறுதிப்பாட்டினை காண்பிக்கிறார் .பேரறம் செய்து நல் வீட்டினை எதிர் பார்க்கின்றனர் அவர்கள் .
நானோ யாதொன்றும் செய்யாது -அந் நல் வீட்டினும் வீறுடைய பரம விலஷணமான வீட்டினை
எளிதில் அடைபவனாய் உள்ளேன் .நான் அவர்கள் கூட்டத்தில் எங்கனம் சேருவேன் ?-என்கிறார் மேல் ..
உன் பத யுகமாம் ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன்
தேவரீருடைய திருவடிகள் இரண்டுமே கீழ்ச் சொன்ன நல் வீட்டிலும் விலஷணமான மோஷமாக அடியேனுக்கு
அமைந்து உள்ளன -முக்திர் மோஷோ மகா நந்த -என்னும் நிகண்டுவின் படி பேரின்பமே மோஷம் ஆதலால்
தாஸ்ய மகா ரசத்தை தருதல் பற்றி -பேரின்பம் தரும் வைகுண்டத்தை மோஷம் என்பது போலே
தமக்கு பேரின்பம் விளைவிக்கும் திருவடிகளை மோசமாகவே கூறினார் .
ஏர் –அழகு இங்கே வீறுடைமை-
ஏர் கொண்ட வீட்டில் என்பதும் ஓர் பாடம் -அப்பொழுது தேவரீர் திருவடிகள் இரண்டுமாகிற
வீறுடைய வீட்டில் எளிதில் சேர்வேன் -என்று பொருள் ஆகிறது .
ஆச்சார்ய அபிமானத்தில் ஒதுங்கினவர்-பகவான் இடம் பிரபத்தி பண்ணினவர்கள் போலே
பகவானது தாளிணைக் கீழே வாழ்ச்சியை ஒரு பேறாக மதிக்காது -ஆசார்யர் பொன்னடியை
மேவி நிற்பதையே தாம் பெரும் பேறாக மதிப்பவர் ஆதலின் எம்பெருமானார் பத யுகத்தை
ஏர் கொண்ட வீடு -என்கிறார் .
சபரி எந்த ஆசார்யருக்கு நான் பணிவிடை புரிந்தேனோ அவன் திருவடி வாரத்துக்கு தான்
போவதாக மோஷம் அடையும் போது சக்கரவர்த்தி திருமகனை நோக்கிக் கூறியதை
இங்கு நினைவு கூர்க-இம்மையிலும் மறுமையிலும் ஆசார்யன் திருவடிகளே சரணம்
–உபாயமும் உபயமும் –என்றார் ஆள வந்தாரும்
திரு மழிசைப் பிரான் -பகவானை  ஏத்துமவர்களை விட ஆச்சார்ய அபிமான நிஷ்ட்டர் சீரியர் என்பதனை –
மாறாய தானவனை -என்னும் பாசுரத்தில் -நான் முகன் திருவந்தாதி -18 – அருளிச் செய்தார் .
வேறாக ஏத்தி இருப்பார் பெரியாழ்வார் போல்வார் -சாத்தி இருப்பார் ஆண்டாள் போல்வார் -என்பது
அவ்விடத்தில் வியாக்யானம் .
பழுதாக ஓன்று அறிந்தேன் -நான் முகன் திருவந்தாதி -89 – என்னும் பாசுரத்தில் ஆசார்யனைப் பற்றினவன்
விண் திறந்து வீற்று இருப்பார் மிக்கு -என்று வீறு கொண்ட பேற்றினை பெறுதல் அந்த
திரு மழிசைப் பிரானாலேயே அருளிச் செய்யப் பட்டு இருப்பதும் இங்கு அறியத் தக்கது .
ஆசார்யனை தானே பற்றுகிறவனுக்கும்
ஆசார்யனாலே நம்முடையவன் என்று அபிமானப் படுகிறவனுக்கும்
பேற்றிலே எத்தகைய வேறு பாடும் இல்லை என்று உணர்க .
யாதொரு முயற்சி இன்றி ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவதற்கு ஹேது என் -என்ன
விடை இறுக்கிறார்
உன்னுடைய கார் கொண்ட வண்மை
தேவரீர் வள்ளல் தனத்தினால் வழங்க -நான் அதனை அடைய எளிதாய் முடிந்தது என்கிறார் .
எம்பெருமானாருடைய வண்மை கார் கொண்டது -அதாவது மேகத்தை வென்றது –
சிலருக்கு சில காலத்திலே மழை பொழிவது கார்
எல்லாருக்கும் எல்லாகாலத்திலும் பயன் படுவது வண்மை
ஆதலின் காரை வென்றது வண்மை
இது கண்டு கொள்
தேவரீர் வழங்க நான் பெற்றமை -வழங்கின தேவரீருக்கு தெரியாதோ –
ஏற்ற என்   வாயாலே சொல்லிக் கேட்க வேணுமா என்கிறார் .
நான் கேள்வியினால் பிரபத்தி செய்து பகவானை அடைவார்கள் கூட்டத்தில் சேர்ந்திலேன்
பொருவற்ற கேள்வியினால் ஆசார்யனுடைய அபிமானத்திற்கு பாத்ரமாகி எம்பெருமானார்
திருவடிகளையே பெரும் பேறாக பெறுமவன் ஆனேன் -என்பது கருத்து .
————————————————————————–
அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜளிபித்தது

கேட்டீர் பொருவற்ற கேள்வியன் என்று எப்படி சொல்லலாம்../பங்குனி உத்தரம் தேவரீர் அனுஷ்டித்த கோஷ்டியில்-நம் பெருமாள் திருவடி பற்றி  பிர பத்தி பண்ணி மோஷம் பெறாமல்-தேவரீர்  திருவடிகள் ஆகிற மோஷத்தை-தேவரீர் ஒவ்தார்யத்தாலே பெருமவன்  நான் என்கிறார் //இவ் வார்த்தை  கொண்டு—இரு கரையர் -என்று  ஆண்டான் ஆழ்வான் இருவரையும் பரிகசிப்பார் -வடுக நம்பி/

/அறம் -என்பது கர்ம பக்தி/பேர் அறம்- பிர பத்தி/சீர்-சம தம ஆதிகள் -ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்கள் ருசி விச்வாசங்கள் -ஆகியவை சீர் கொண்டு- சம தம/களைவாய் துன்பம் களையாது ஒழியாய் களை கண் மற்று இலேன்/.. என் நான் செய்கின்றேன்   யாரே களை கண்என்னை என் செய்கின்றாய்/-ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் /-பேற்றுக்கு துவரிக்கையும் பேறு தப்பாது என்று துணிந்து இருக்கையும்

–ஸ்வபாவ விசேஷம் /நல் வீடு- கைவல்யம் போல் அன்றிக்கே பரம புருஷார்த்த லஷண மோஷம்-அதிகாரி விசேஷ ச்வாபம்–எதுவும் தம் இடம் இல்லை என்கிறார்//சர்வ குக்ய தமம் -பிர பத்தி -நிஷ் பரம் நிஷ் பயம்-ரஷணபரத்தை-ஆத்மா ஆத்மீயங்களை என்னையும் என் உடைமையையும் – பிரஜை போல – -பால் குடிக்கும் குழந்தை போல இருக்கை-எப் பொழுது குடிக்கணும் தெரியாது நீயே ரஷி என்று சொல்லி விட்டு-

அனுபவ ஜனித ப்ரீதி கார்ய கைங்கர்யம் – //அவர்கள்-பகவத் பிரபன்னர்கள்-அனுஷ்டித்து பெற்றார்கள்-அடியேன் சர்வ விலஷண்மான மோஷத்தை-ஏர் கொண்ட வீடு-வகுத்த இடம்- பெற்றேன் உமது ஒவ்தார்யத்தாலே/-அனாயாசனமாக -இதற்க்கு ஹேது-சர்வ விஷயமாக சர்வ காலத்திலும் உபகரிக்கையாலே

மேகத்தை ஜெயித்து இருக்கும் தேவரீர் உடைய ஒவ்தார்யம்–இதை நான் சொல்ல வேண்டுமோ –அனுஷ்டானத்தால் கண்டு கொள்ள மாட்டீரோ ..நல் வீடு பெறுதும்-பாட தேதம்//கூட்டன் அல்லன்-எதை கழிக்கிறார்–மாம் -தேவதாந்த்ரங்கள் கழித்து  விட்டது //ஏகம்-தர்மாந்தரங்கள்-?– கர்ம ஞானபக்தி -இல்லை சர்வ தரமான் பரித் யஜ்ய சொல்லி விட்டான்/நீ பற்றினாய்  என்ற எண்ணம் விடனும் என்கிறான் இதில்/பார் கொண்ட மேன்மையர் கூட்டம்- பிர பத்தி-உபதேசித்து அனுஷ்டித்து காட்டியது இது தானே

-அதனால்- பக்தி யோக நிஷ்டர்களை தள்ள வில்லை/திருத்த பட்டவர் கோஷ்டியில் இவர் தனிமை என்கிறார்/பிரபத்தி  கோஷ்ட்டி தான் இதில் சொல்கிறார்/

/ பத யுகம் -இரட்டை திருவடிகள் //மேகத்தை வென்ற-கார் கொண்ட ஒவ்தார்யம்/சர்வ காலத்திலும் சர்வருக்கும் சர்வ இடத்திலும் கிருபை  பொழிவதால் மேகத்தை விட ஸ்வாமிக்கு வாசி

/பார் கொண்ட மேன்மை– அனைவரும் பிர பத்தி மார்க்கம்/.ஏர் கொண்ட வீட்டில்- சேர்வன் –  ஏர் கொண்ட வீட்டை – அடைவன்-இரண்டும் பாடம்/ஏர் கொண்ட வீட்டை- அழகை கொண்ட மோட்ஷம்-

திரு வடி–முகத்திற் மோஷம் -அபார ஆனந்தம்  கொடுக்கும் இடம் சாஸ்திரம்–அதனால் இவையே மோட்ஷம் என்கிறார்-முந்தின பாசுரத்தில் அமுதனார்-என்ன புண்ணியனோ-நிகர் இல்லை-அகங்கரிகிறார் இல்லை அவர் பெருமை கூற வந்தாரே-ச்லாகித்தார்  /உம்மை மட்டுமா திருத்தினேன்-மாறு உளதோ இம் மண்ணின் மிசையே–ஜகம் எல்லாம் சரண் அடைந்து அரங்கனை சேர்க்க-பக்த கங்கணம் கொண்டே அவதரித்தேன்-சரா சரங்களை வைகுந்தததுக்கு ஏத்த -நீர் உமக்கு மட்டும் என்கிறீரே

-முக்தியோ சிலரது சொத்தாக இல்லையே-என்று கேட்ட சுவாமி இடம்-நேர் முகமாக திரு முகத்தை பார்த்து–தாழ்ந்தவன்  நான் தானே -சரம பர்வம்- பெற கடவேன்-என்று வண்மையால்-கிருபையை எடுத்து வாரி வழங்கும் வண்மை –

பலத்துக்கு ஆத்ம ஞானமும் அப்ரேதிஷேதமும்-விலக்காமை – வேணும் என்பர் பெரிய வாச்சான் பிள்ளை–நல் வீடு-பிராப்ய ஸ்தானம்-வீட்டுக்கு நன்மை ஆவது-கைவல்யம் போல அல்பம் ச்வார்தம் இல்லை நலம் அந்தம் இல்லாதோர் நாடு-அபரிமித  ஆனந்த ரூபமாய்-பகவத் ஏக போக ரூபமாய் இருக்கும்-தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே-அசித் பிறர்க்கு என்றே இருக்கும்-சித் தனக்கும் அவனுக்கும்-ஈஸ்வரன் தனக்கே ஆக இருப்பன்//நல் வீடு பெறிதும் பாடம்//ஸ்தான பரம சப்தம்-யோகிகளுக்கு இரண்டையும் கீதை   யில் அருளினார் ../பூமியில் உள்ள எல்லோரும் கொள்ளும் படி பிர பத்தி மேன்மை படைத்தது/குரு ரேவா பராயணம் சபரி வார்த்தை குருவே அடைய தக்க கதி

/இங்கும் அங்கும் ஆச்சர்ய திருவடிகளே -எல்லா படிகளாலும் விலஷணம்/வீட்டை வீட்டில் -இரண்டும் பாடம்-பெறாப் பேறு  பெற்ற பின் பகவான் லாப  மோஷம் கூட மதிக்க மாட்டார்/இதுதான் நலம் அந்தமில்லா நாடு ஆனந்தம் கொடுப்பதால் /

அதுவும் அவனது இன் அருளே /வண்மை யால் அடைந்தேன்..மேகம் நாலு மாதம் தான்  வர்ஷிக்கும் -மால்யவானில் சுக்ரீவன் இருந்தனே-வேண்டிய இடத்தில் இன்றி காடு கடல் மலை/கொள்ள குறை வற்று இலங்கி கொழுந்து விட்டு எங்கும்

யாவருக்கும் எப் பொழுதும் கொடுத்து கொண்டு இருக்கும்/மேகம் விட உயர்வு ஸ்வாமிக்கு /இத்தால் என்னை எழுதி கொண்டார்/மாறாய  தானவனை  -வேறாக ஏத்தி  இருப்பாரை -பெரி ஆழ்வாரை -பரியனாகி வந்த அவுணன் -என்று பாடி-ஆண்டாளுக்கு ஏற்றம்-பாட்டு முழுவதிலும் பாகவத சேஷத்வம் காட்டுகிறார்– நம்மை நம் பையல் என்று ஒதுங்குவது மூன்றாம் நிலை-பெருமாளை பற்றும் பொழுது  பர கத ச்வீகாரம் ஏற்றம் ஈஸ்வரன்  திரு உள்ளத்தில் மகிழ்வானாம்

/ஆச்சர்ய அபிமானம்–ஆசார்யாராய் நாமே பற்றுதல்  இரண்டினாலும் வேறு பாடு இல்லை என்று காட்டுகிறார்/கை இலங்கு நெல்லி கனி போல இருக்கும் இருப்பை பார்த்தே சுவாமி தெரிந்து கொள்ளலாம்..பொருவற்ற கேள்வியன்-கேள்வியால் பிரபத்தி பண்ணி பரம புருஷார்த்த மோஷம் பெற்றேன் அல்லேன்/உன் ஒவ்தார்யத்தால் உன் அபிமானத்தில் ஒதுங்கி உன் திருவடி அடைந்தேன் –என்கிறார்/உணர்வினில் நிறுத்தினேன் அதுவும் அவனின் இன் அருளே -போலே-

——————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: