அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்–82-தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது-இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை .
எண்பத்திரண்டாம் பாட்டு -அவதாரிகை –
அரங்கன் செய்ய தாளிணைகள் பேர்வின்றி யின்று பெறுத்தும் -என்று கீழ்ச் சொன்ன
பேற்றுக்கு உடலாக தமக்கு பண்ணின உபதேசத்தை அனுசந்தித்து –
வித்தராய் -எம்பெருமானார் என்ன தார்மிகரோ -என்கிறார் .
தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது வெந்தீ வினையால்
உருவற்ற ஞானத் துழல்கின்ற வென்னை ஒரு பொழுதில்
பொருவற்ற கேள்வியனாக்கி நின்றான் என்ன புண்ணியனோ !
தெரிவுற்ற கீர்த்தி இராமானுசன் என்னும் சீர் முகிலே – – 82- –
வியாக்யானம் –
சத் அசத் விவேகத்தில் ஊற்றத்தை  உடைத்தாய் இருக்கும் ஜ்ஞானத்தை சேரப் பெறாதே -அதிக்ரூரமான கர்மத்தாலே ஒரு வஸ்து பூதமாய் கொண்டு -வடிவு பட்டு இராத
ஜ்ஞானத்தைப் பற்றி -ஒன்றிலும் ஒரு நிலை யற்றுத் தட்டித் திரிகிற என்னை –
சிரகாலம் கூடி யன்றிக்கே –
ஒரு ஷணகாலத்திலே-உபமான ரஹீதமான -ச்ருதத்தை உடை யேனாம் படிபண்ணி -ஒரு படி திருவடிகள் பூமியிலே  நற்றரித்து தரித்து நின்றார் .
திக்குற்ற கீர்த்தி – -26 -என்கிறபடியே .
விசேஷஜ்ஞ்ஞர் அவிசேஷஜ்ஞ்ஞர் என்னும் விபாகம் அற எல்லார்க்கும் பிரகாசித்து
இருந்துள்ள குணவத்தா பிரதையை வுடையராய்-குணம் திகழ் கொண்டல் – 60- என்னும்படியே
பரம உதாரரான எம்பெருமானார் என்ன தார்மிகரோ !
உருவற்ற ஞாலத்து -என்று பாடமான போது –
உரு வென்று அழகாய் -அதாவது நன்மையாய் –
அது அறுகை யாவது -இன்றிகே ஒழிகையாய்-நன்மை என்பது ஓன்று இல்லாத  ஜகத்திலே -என்கை ..
அப்போது தெரிவுற்ற ஞானம் -இத்யாதிக்கு -சத் அசத் விவேகத்தில் ஊற்றம் உடைய ஞானத்தை
ப்ராபிக்கப் பெறாதே -பிரபல கர்மத்தாலே -ஒரு நன்மை இன்றிக்கே -ஹேயமாய் இருந்துள்ள ஜகத்திலே –
ஈண்டு பல் யோனிகள் தோர் உழல்வோம் -31 -என்கிற படியே -நானாவித யோநிகளில் ஜநிப்பது-மரிப்பதாய் -தட்டித் திரிகிற -என்னை என்று பொருளாக கடவது .
தெரிவு-விவேகம்
உறுதல்-ஊற்றம்
அன்றிக்கே
தெரிவுற்ற ஞானம் -என்று பிரகாச யுக்தமான ஜ்ஞானம் என்றாய்
தத்த்வஸ்த்தியை யதா தர்சனம் பண்ணுகைக்கு உறுப்பான –விசத ஜ்ஞானம் –என்னவுமாம் –
தெரிவுற்ற   கீர்த்தி -பிரகாச யுக்தமான கீர்த்தி
சீர் முகில் -சீரிய முகில் -அழகிய முகில் என்னவுமாம் .
தர்ம ஸ்தாபனம் வேத -பிரவார்த்தாச்சார்யார் –ஒரு பொழுதிலே மாற்றி -வாதி கேசரி மணவாள ஜீயர் -பெரியவாச்சான் பிள்ளை -உலக்கை கொழுந்து -முசலை கிலேசயம் -எழுத வைத்து -பன்னீராயிரப்படி எழுத வைக்கும் சக்தி-வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திரு அவதாரம் மன்னார் கோயில் -அம்பா சமுத்திரம் பக்கம் -இங்கே தான் குலசேகர ஆழ்வார் திருவரசும் உள்ளது
-நின்றான் -நிலை பெற்று முகம் மலர்ந்து -நம்மை -அவனுக்கு அன்னம் ஆக்கிய பின்பு/புண்ணியம் ஈஸ்வர திரு முக மலர்த்தி -அமுதனார் திருந்தக் கண்டு மகிழ்ந்த ரெங்கன் -இதையே புண்ணியன் என்கிறார் இங்கு /நீசனான என்னை -ஷணப் பொழுதில் -கடாக்ஷம் வீக்ஷணத்தாலே அனைத்தையும் அருளி -நல்ல தெளிவுற்ற ஞானம்-சரம உபாயம் ஆச்சார்ய நிஷ்டை அன்றோ – -நிகர் அற்றவனாக்கி -திருத்தி -இப்படி நான்கும் -பொருவற்ற கேள்வியனாக்கி அருளிய புண்ணியன் /
பூண்ட நாள் சேர்க்க கடலை யுட்கொண்டு திரு மேனி நன்நிறம் ஒத்து உயிர் அளிப்பான் தீர்த்த காரராய் எங்கும் திரிந்து ஞான ஹரதத்தைப் பூரித்துத் தீங்கின்றி வாழ நிதி சொரிந்து -கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து வெளுத்து ஒளித்து கண்டு உக்காந்து பர ஸம்ருத்தியே பேறான அன்பு கூரும் அடியவர் -உறையில் இடாதவர் -புயல் கை அருள் மாரி-குணம் திகழ் கொண்டால் -போல்வாரை மேகம் என்னும் -ஆச்சார்ய ஹிருதயம் -155-சூர்ணிகை
————————————————————————–
பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகைஅரங்கன் செய்ய தாள் இணைகள் பேர்வின்றி இன்று பெறுத்தும் இராமானுச –என்று
கீழ் பிரஸ்த்துதமான பரம புருஷார்த்தத்துக்கு உறுப்பாக சம்சார ப்ரவ்ருத்திகளிலே மண்டி இருந்து
சம்யஜ்ஞ்ஞானத்தை பெற மாட்டாதே -அதி குரூரமான துஷ் கர்மத்தாலே தேகாத்மா அபிமானியாய் கொண்டு –
ஒன்றிலும் ஒரு நிலை இன்றிக்கே தட்டித் திரிகிற என்னை -ஆண்டுகள் நாள் திங்கள் -என்றால் போல் சிர காலம்
கூடி இன்றி அன்றிக்கே-1- ஒரு ஷண மாத்ரத்திலே-2- தானே நிஸ் சம்சயமாக -3-தத்வ ஹித புருஷார்த்தங்களை-தத் யாதாம்யத்தளவும் உபதேசித்து –4-உபமான ரஹீதமான ஸ்ருதயத்தை உடை யேனாம் படி பண்ணி-5-சர்வ விஷயமாக வர்ஷிக்கும் வர்ஷூ கவலாஹகம் என்னலாம் படி -பரம உதாரரான எம்பெருமானார்-என்ன தார்மிகரோ என்று அனுசந்தித்து வித்தார் ஆகிறார்

வியாக்யானம் -தெரிவுற்ற ஞானம் தெரியப் பெறாது -தெரிவு -விவேகம் -அதாவது -ஆத்மா அநாத்மா விஷயமாய்இருந்துள்ள புத்தி விசேஷம் -ஆத்மா வஸ்து உபாதேயம் என்றும் அநாத்மாவான அசித் வஸ்து த்யாஜ்யம்-என்றும் விவேகிக்கை என்றபடி –உற்ற ஞானம் -அதிலே ஊற்றத்தை உடைத்தாய் இருக்கிற ஞானம் –

உறுதல் -ஊற்றம்  -அஸ்தி ப்ரஹ்மேதி சேத்வேத -என்று ஸ்ருதியும் சொல்லிற்று  இறே -1-அமாநித்வ-2- மடம்பித்வ-3- மஹிம்சா 4-ஷாந்தி –5-ரார்ஜவம் -6-ஆசார்யோபாசனம்-7- ஸௌசம்  (சுத்தி )-8-ஸ்தைர்யம்-9- ஆத்மாவி நிக்ராஹ் -10-இந்திரியார்தேஷூ வைராக்கியம் -11-மநோஹன்கார ஏவச  12- -ஜன்ம ம்ர்த்யு  ஜரா வியாதி துக்க தோஷ அநுதர்சனம் -13–அசக்திர 14-னபிஷ்வங்க புத்திர தாரா க்ர்ஹாதி ஷூ-15- நித்யம் ஸ சம சித்தத்வம்-16- இஷ்டா நிஷ்டோப பத்தி ஷூ–17-மயிச அநந்ய யோகே  ந பக்தி ரவ்யபிசாரிணீ-18-விவிக்த தேச -தனியாக இருந்து / அரதி -கூட்டம் சேர ஆசை இல்லாமல் -19- அத்யாத்மஜ்ஞான நிஷ்டத்வம் 20-தத்வ ஞானார்த்த சிந்தனம்–ஆக -20-ஸ்ரீ கீதையில் காட்டி –ஏதத் ஞான மிதிப்ரோக்த மஜ்ஞ்ஞானம் யததொன்யதா -என்றும் சாவித்யாயா விமுக்தே -என்கிறபடியேசத் அசத் விவேசன விஷயக பரிபூர்ண ஞானம் என்றபடி -அன்றிக்கே தெரிவுற்ற ஞானம் என்றது –பிரகாசோபா யுக்த ஞானம் என்றதாய்   தத்வஸ்த்தியை யதா தர்சனம் பண்ணுக்கைக்கு உறுப்பானஞானம் என்னவுமாம் –தெரிவு -பிரகாசம் –உறுதல் -பொருந்துதல் –செறிய பெறாதே -பிராபிக்க பெறாதே –

வெந்தீ வினையால் -அநாதி காலம் பிடித்து இவ்வளவாக நித்ய சம்சாரியாய் போந்த நான் தீரக் கழியச் செய்த
அக்ருத்ய கர்த்தவ்யங்களால்-வெம் -தீ -என்கிற மீமிசையால் அதினுடைய அதி க்ரௌர்யம் தோற்றுகிறது –
உருவற்ற ஞானத்து -உரு மாய்ந்து கிடக்கிற ஞானத்தோடு -ஞானத்தோட சத்தை எல்லாம் போயிற்று
என்றபடி -அஞ்ஞானம் அதோன்யதுக்தம் -என்கையாலே இவ் விஷயங்களை அவஹாகிக்கிற ஞானம் எல்லாம்

உருவற்ற ஞானம் இத்தனை இறே -உரு -வடிவாகையாலும்/அர்த்தேனைவ விசெஷோஹி நிராகாரத்யாதியாம் -என்கையாலே அதுக்கு வடிவு விஷயம் ஆகையாலும்/சந்தம் -என்கையாலே அவ விஷயாந்தரமும் ஸ்ரீ ய பதி யாகையாலே   ததரிக்த விஷயங்களை அவகாஹிக்கிற-ஞானம் எல்லாம் –உருவற்ற ஞானம் -என்னக் குறை இல்லை இறே-உழல்கின்ற என்னை -பக்தி பிரபத்தி முதலான-ஹிதங்களிலே ஊன்றி இலேன் ஆகிலும் ஒரு நிஷ்டை இன்றிக்கே கொண்டிப் பசு போலே ச்வைரசம்சாரயாய் தட்டித்-திரிகிற அடியேனை –உருவற்ற ஞாலத்து என்றபாடம் ஆனபோது –உரு -என்று அழகாய் -நன்மையாய் –அறுகையாவது-இன்றிக்கே ஒழிகை -நன்மை எனபது ஒன்றும் இல்லாத ஜகத்திலே-ஈண்டு பல் யோநிகள் தோறும் உழல்வோம்  -என்றபடியே –

நாநா வித யோநிகளில் ஜனிப்பது மரிப்பது தட்டித் திரிகிற என்னை -என்று பொருளாக கடவது
ஒரு பொழுதில் -சமித் பரணிஸ் ஸ்ரோத்ரியம் பிரம நிஷ்டம்    தஸ்மை ஸ வித்வா நுபசன்னாய  சம்யக்ப்ரசாக்த
சித்தாய சமான் விதாய ஏகாஷரம் புருஷம்   வேத சத்யம் ப்ரோவாசதாம் தத்வதோ பிரம வித்யாம் -என்றும் —கூப்பின்ன கை -நம் பூர்வார் -சமித்துக்களை கொண்டு போவது மட்டும் இல்லை –
தத்வித்தி பிரணிபாதென பரிப்ரச்நேன சேவையா -உபதேஷ்யந்தி தேஜ்ஞானம் ஜ்ஞானி நச்தஸ்  வதர்சின
சம்வத்சரம் ததர்தம்வா மாசத்ரயமதா பிவா பரிஷ்ய விவிதோ பறை க்ருபயா நிச்ப்ர்ஹோவதேத் -என்றும்
1-சத்புத்திஸ்சா2-துசேவிசமுசித3-  சரிதஸ் 4-தத்வபோதா  பிலாஷீ -5-சூஸ்ருஷூ 6-ச்த்யக்தமான -7-பிரணிபாதன
8-பரப்ரச்னகால பிரதீஷ-9-சாந்தோ-10- தாந்தோ -11-ந சூயஸ்-12- சரண முபகதஸ் 13-சாஸ்திர விஸ்வாச சாலீ சிஷ்ய ப்ராப்த
14-பரிஷாம்க்ர்த-15- விதபிமதம் தத்வாஸ் சிஷின்ய -என்றும் -15  லக்ஷணங்கள் -பஹூ பிரகாரமாக சிஷ்யனுடைய மனசை பரிஷித்தே உபதேசிக்க-
வேணும் என்று சாஸ்திரம் சொல்லா நிற்கச் செய்தேயும் –உபதேசத்துக்காக தான் திருக்கோட்டியூர் நம்பி  சன்னதிக்கு
பதினெட்டு தரம் எழுந்து அருளி நிற்க்கச் செய்தேயும் -அவற்றை எல்லாம் -தம்முடைய ஔதார்யத்தாலெ காற்கடை-கொண்டு என்னை கடாஷித்த அந்த ஷணத்தில் தானே –
பொருவற்ற கேள்வியனாக்கி -சாச்த்ரார்த்தை உட் கொண்டு உபமான ரஹீதமான ஸ்ருதத்தை உடையனாம் படி
பண்ணி அருளி –பொரு -உபமானம் -தாஸ்மான் நியாச மேஷாம் தபஸாம் த்ரிக்த மாஹூ -என்றும்
சத் கர்ம நிரச்தாஸ் சூத்த சாங்க்ய யோக விதஸ்ததா–நார்ஹந்தி சரணச்தச்ய  கலாம் கோடி தமீமாபி -என்றும்
தேனே தேனா ப்யதே தத் தத் நியாசே நைவ மகா முனே -என்றும் சொல்லுகிறபடியே –சர்வோத்தமையான ப்ரபத்தியை உபதேசித்து –
பிரபன்னனாம் படி பண்ணி அருளி என்றபடி -நின்றான் -அபிஷிச்யச லங்காயாம்  ராஜ சேந்த்ரம்  விபீஷணம்
க்ர்த்கர்தாச்ய    ததா ராமோ விஜுவரம் பிரமுமோதஹா-என்றல் போலே க்ர்த்கர்தராய் இந்த பூமியிலே
தனிக் கோல் செலுத்திக் கொண்டு  எழுந்து அருளி இருந்தார் -அவ்வளவும் -நாதி ஸ்வ ஸித்த மனா -என்னும்படி
இருந்தார் காணும் –தெரிவுற்ற கீர்த்தி இராமானுசன் என்னும் சீர் முகிலே -திக்குற்ற கீர்த்தி என்கிறபடியே
விசேஷ்ஜ்ஞ்ஞர் அவிசேஷஜ்ஞ்ஞர் என்னும் விபாகம் அற எல்லார்க்கும் பிரகாசியா நின்றுள்ள -குணவத்தா
பிரதையை உடையவராய் –குணம் திகழ் கொண்டல் –என்கிறபடியே என்றும் ஒக்க பரம உதாரரான எம்பெருமானார் –
தெரிவுற்ற கீர்த்தி -பிரகாச யுக்தையான கீர்த்தி –சீர் முகில் -சீரிய  முகில் -முகிலுக்கு சீர்மை யாவது
ஜல ஸ்தல விபாகம் அற வர்ஷிக்கை –என்ன புண்ணியனோ -என்ன தார்மிகரோ -யத் த்வத் ப்ரியம் ததிஹ புண்யம் -என்கிறபடி சர்வேஸ்வரன் முக மலர்திக்காக -அவரை இப்படி திருத்தி அங்குத்தைக்கு ஆளாம்படி பண்ணி யருளினார்-என்றது ஆய்த்து –
————————————————————————–

அமுது விருந்து –

அவதாரிகை
இன்று பெறுத்தும் என்று கீழ்க் கூறிய பேற்றினுக்கு உடலாகத் தமக்கு பண்ணின உபதேசத்தை
நினைவு கூர்ந்து -ஈடுபாட்டுடன் எம்பெருமானார் என்ன தார்மிகரோ-என்கிறார் –
பத உரை –
தெரிவுற்ற -விவேகத்தில் ஊன்றி நின்ற
ஞானம் -அறிவை
செறியப் பெறாது -அடையப் பெறாது
வெம் தீ வினையால்-மிக கொடிய பாவத்தினால்
உரு அற்ற -உருப்படாத
ஞானத்து -அறிவை உடையவனாய்
உழல்கின்ற என்னை -ஒன்றிலும் நிலை கொள்ளாமல் தடுமாறுகின்ற என்னை
ஒரு பொழுதில் -ஒரே வேளையில்
பொருவற்ற -ஒப்பற்றதான
கேள்வியன் -கேள்வி ஞானத்தை உடையவனாக
ஆக்கி-பண்ணி
நின்றான் -செய்ய வேண்டியதை செய்து முடித்து விட்டதாக கால் பாவி நின்றார்
தெரிவுற்ற -உலகத்தினர் அனைவருக்கும் தெரிந்து உள்ள –
கீர்த்தி -புகழை உடைய
என்னும்-என்று வள்ளன்மையினால் சொல்லப்படும்
சீர் முகில்-சீர்மை வாய்ந்த மேகம்
இராமானுசன் -எம்பெருமானார்
என்ன புண்ணியனோ  -என்ன தருமம் செய்கிறவரோ –
வியாக்யானம் –
தெரிவுற்ற ஞானம் —உழல்கின்ற என்னை
தெரிவு -நல்லதையும் அல்லாத்தையும் பகுத்து காணும் உணர்வு –
அதனில் ஊற்றம் பெற்றஞானம் தெரிவுற்ற ஞானம் –
உறுதல்-ஊற்றம் பெறுதல்
செறிதல் -சேர்த்தல்-அடைதல்-
தெரிவுற்ற ஞானத்தை நான் அடைய முடிய வில்லை
-நேர்மாறாக உருவற்ற ஞானமே என்னை வந்து அடைந்தது .
ஞானத்திற்கு உருவற்றமை யாவது -அறிவுக்கு புலனாகும் பொருள்களில்
அந்தர்யாமியா எழுந்து அருளி -இருக்கும் இறைவன் அளவும் அவ் அறிவு சென்று முழு வடிவம் பெறாது
அரை குறையாய் உருப்பட்டு யாகாது இருத்தல்
நல்லதும் கொள்ளத்தக்கதுமான பிரம்மத்தைப் பற்றும் அளவும் -அறிவு வளர்ச்சி வுறின்
அவ்வறிவு முழு வடிவம் பெற்று -உருப்படியாய் நிலை குலையாமல் -அஃது உடையானை உய்விக்கும் .
இத்தகைய அறிவு இதுகாறும் எனக்கு கிடைக்காமல் போயிற்றே -என்னும் குறைபாடு தோன்ற –
தெரிவுற்ற   ஞானம் செறியப் பெறாது -என்றார் .
உய்யச் செய்யும் அறிவு இல்லாததோடு -உழலச் செய்யும் அறிவே என்னிடம் குடி இருந்தது -என்கிறார் .
உருவற்ற ஞானத்து உழல்கின்ற என்னை -என்று —
உருப்படியான ஞானம் இல்லை -உருவற்ற ஞானமே இருந்தது என்றார் –
நல்லதை பற்றிய அறிவு என்னிடம் இல்லை -அல்லதை பற்றிய அறிவே என்னிடம் இருந்தது என்கிறார் –
அல்லதும் தள்ளத்தக்கதுமான பொருளைப் பற்றியதாக அறிவு இருப்பின் -அது முன்னம் -இனிய பொருளைப் பற்றியதாக தோன்றி -கன்மத்திற்கு ஏற்ப -பின்னர் இன்னாப் பொருளாக மாறுபடும் –
அப்பொருளைவிட்டு -வேறு பொருளை நாடி -அலையும் -நாடிய பொருளுக்கும் -இதே நிலை தான்
ஆதலின் -மற்று ஒன்றை தேடா நிற்கும் -இங்கனம் அவ்வறிவு ஒன்றிலும் -நிலை நில்லாது –
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -முதல் திருவந்தாதி -67 –  என்றபடி
பிரம்மத்தை பற்றியது ஆகாமையாலே முழுமை பெறாது சிதைந்து உருவற்றதாகி விடுகிறது .
இத்தகைய ஞானத்தை உடையவனாய் இருத்தலினால் ஒன்றிலும் கால் பாவி நிற்க மாட்டாது
தட்டித் தடுமாறி உழன்ற்றதாகக் கூறுகிறார் .
இனி –தெரிவு உற்ற ஞானம் -என்பதற்கு
தெளிவை -பிரகாசத்தை -அடைந்த ஞானம் என்று உரைத்தலுமாம் -அப்பொழுது தத்துவத்தை
உள்ளபடி காணும் தெள்ளிய அறிவு செறியப் பெறாது -என்றது ஆயிற்று –
ஞானம் முழுமை பெறாது சிதைந்து உருவற்றுப் போவதற்கு ஹேது –வெந்தீ வினை -என்க –
பாபம் ப்ரஜ்ஞாம் நாசயதி -பாபம் அறிவை நாசம் ஆக்குகிறது -என்றபடி –வெந்தீ வினை
ஞானத்தை உருப்பட ஒட்டாமல் -உருவற்றதாகி விடுகிறது என்க –வெம் தீவினை –வெம்மையும்
தீமையும் சேர்ந்து வினைக் கொடுமையின் மிகுதியைக் காண்பிக்கின்றன –
ஒரு பொழுதில் –
நெடும் காலம் கூடிச் செய்ய வேண்டிய பணியை மறு பொழுதுக்கு கூட வைத்துக் கொள்ளாது –
அந்த ஷணத்திலே செய்து நிறைவு கொண்டாரே -என்று வியக்கிறார் .
பொருவற்ற கேள்வியன் –
சாஸ்திரத்தின் மிகச் சீரிய உட் பொருளை  என் நெஞ்சிலும் பதியுமாறு பரப்பற சாரமாக ஒரு நொடியில்
உபதேசித்து -என்னை ஒப்பற்ற கேள்வி ஞானம் உடையவனாகச் செய்து அருளினார் -என்றபடி –
ஒப்பற்றமை கேள்விக்கு சரம பர்வதத்தை பற்றினமையா -என்க
ஆக்கி நின்றான் –
என்னைக் கேள்வி யறிவு உடையவனாக்கிய பின்னரே –கால் பரவி தரித்து இருந்தார் –
முன்னர்க் கால் பாவித் தரித்து நிற்க கிலாது -என்னைக் கேள்வியன் ஆக்குவதிலேயே
கண்ணும் கருத்துமாய் இருந்தார் -என்று கருத்து .
அதனால் அமுதனாரை பொருவற்ற கேள்வியன் ஆக்குவதை எம்பெருமானார் தம் பேறாகக் கருதினமை-
புலனாகின்றது –
என்ன புண்ணியனோ –
தம்மிடம் யாதொரு பயனையும் எதிர்பாராது –தம் பேறாக -கேள்வி அறிவை தமக்கு உபகரித்த
எம்பெருமானார் உடைய வள்ளன்மையை கண்டு -இது என்ன தருமம் புரியும் -இயல்போ
என்று ஈடுபட்டு பேசுகிறார் .
தெரிவுற்ற கீர்த்தி –
இன்னாருக்கு தெரிவுற்ற என்னாமையாலே -பூமி எங்கும் உள்ள பண்டிதர் பாமரர் என்கிற
வேறுபாடு இன்றி -எல்லோருக்கும் தெரிந்த கீர்த்தி -என்க –திக்குற்ற கீர்த்தி – 26- என்றார் கீழும்
இராமானுசன் என்னும் சீர் முகில்
சீர் முகில் -என்னும் இராமானுசன் -என்று மாறுக
சீர் -இங்கே வள்ளன்மை குணம்
வள்ளன்மை உடைய முகிலாக சொல்லப் படுபவர் இராமானுசன் -என்க
குணம் திகழ் கொண்டல் – 60- என்று கீழும் முகிலாக எம்பெருமானார் கூறப் பட்டுள்ளமை காண்க .
சீரிய முகில் -சீர் முகில் -சீர் -அழகாகவுமாம் .
இரண்டாம் அடியில் உருவற்ற ஞாலத்து -என்றும் பாடம் உண்டு –
அப்பொழுது –உரு -என்பது அழகைச் சொல்கிறது .
ஞாலத்திற்கு -உலகத்திற்கு அழகாவது நன்மை வுடைமை –
ஆக –உருவற்ற ஞாலத்து -என்பதற்கு -நன்மை என்பது ஒன்றும் இல்லாத உலகத்திலே
என்னும் பொருள் ஆகிறது .
இத்தகைய ஞாலத்தில் உழலுவதாவது -ஈண்டு பல் யோனிகள் தோறு உழல்வோம்   – 38- என்றபடி .
பல வகைப் பட்ட பிறவிகள் எடுப்பதும் மடிவதுமாக தட்டித் தடுமாறுகை — வெந்தீ வினை இங்கனம் தட்டுத்-தடுமாறுகைக்கு ஹேது -என்று அறிக –
ஆக பகுத்துணர்வில் ஊற்றம் கொண்ட ஞானத்தை அடையப் பெறாது -மிக கொடிய கர்மத்தினால்-நன்மையின்மையால் கைவிடத் தக்க உலகிலே பிறப்பதும் இறப்பதும் ஆக உலகின்ற என்னை-என்றது ஆயிற்று .
————————————————————————–
அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது –

சீர் முகில் என்னும் இராமனுசன்–ஒவ்தார்யம்-சத்து அசத்து என்று விவேகம் இன்றி-அநாதி கால கர்மம்-தீ வினை- வெம் தீ வினை- உருவற்ற ஞானம் ஞாலம்-இரண்டு பாடம்/..ஞானத்தால் தான் வஸ்து என்று உருவத்தை அறிகிறோம்–அந்தர்யாமி- உருவம் கொடுத்து நியமிகிறவன் அவன் என்று அறிந்த ஞானம்/தாமரையாள் கேள்வன் ஒருவனையே  நோக்கும் உணர்வு வேணும்..//ஒரே வினாடியில்-பொறு அற்ற கேள்வியன்-ஞானத்தில் ஒப்புமை இல்லாத படி- தத்வ யாதாத்மிக ஞானம் பெற்றதால்-

நின்றான்-தரையில் கால் பாவாமல் தவித்தார் ஸ்வாமி இதற்க்கு முன்//அமுதனாரை ஆக்கிய பின்பு தான் நின்றார்//என்ன புண்ணியனோ//-தர்ம சிந்தனை–அரங்கன் மகம் மலர்ந்தால் புண்யம்-அமுதனாரை ஆக்கிய பின்பு மலர்ந்ததாம் அரங்கன் திரு முகம்-அதனால் புண்ணியன் –பரவி உள்ள கீர்த்தி-/தமக்கு பண்ணின உபதேசத்தை அனுசந்தித்து வித்தராய் எம்பெருமானார் என்ன தார்மிகரோ என்கிறார்

 தெரி வுற்ற -சத் அசத் விவேகத்தில் ஊற்றத்தை உடைத்தாய் இருக்கும் ஞானத்தை சேர பெறாத -நல்லதும் தீயத்தும் விவேகிக்க நீர்மையால் அருள் செய்தான்
– நானோ -அதி குரூரமான கர்மத்திளாலே ஒரு வஸ்து பூதமாய் கொண்டு
 வடிவு பட்டு இராத ஞானத்தை பற்றி ஒன்றிலும் ஒரு நிலை அற்று தட்டி திரிகிற என்னை
-அந்தர்யாமியாய் அவன் இருப்பதை உணராமல், விஷயாந்தர அனுபவங்கள் ஒவ் ஒன்றிலும் திரிந்து–இருந்த என்னை-
சில  காலம் கூடி அன்றிக்கே-ஒரு ஷணகாலத்திலேயே
உபமான ரஹீதமான ஸ் குருதத்தை உடை யேனாம்படி பண்ணி–
 ஒரு கடாஷத்தாலே எல்லா உபதேசமும் கேட்ட ஆழ்வான் ஆண்டான் போல என்னையும் ஆக்கி அருள -ஒருபடி திருவடிகள் பூமியிலே  கால்  தரித்து தரித்து நின்றார்
/திக்குற்ற  கீர்த்தி–என்கிற படியே-விசேஷ ஜ்ஞார் அவிசேஷஜ்ஞர்  என்னும் விபாகம் அற
 எல்லோருக்கும் பிரகாசித்து இருந்துள்ள குணவத்தா பிரதியை உடையராய்
 -குணம் திகள் கொண்டல்-என்னும் படி பரமோதாரரான எம்பெருமானார் என்ன தார்மிகரோ–
  /தாழ்ந்தவன்-நீசன் என்னை போல யாரும் இல்லை என்று இருந்தேன்
 /ஒரு பொழுதில்/ பொருவற்ற-ஒப்புமை இல்லாதானாம் படி  /
சரம பர்வத நிலை /சரண கதி உயர்ந்த விஷயம்/கலி யுகம்-சீர் முகில்- அழகும்  வள்ளல் தனம் இரண்டும்/
உருவற்ற ஞாலத்து-பாதாம்-அழகாய் அதாவது நன்மையாய்-அது அறுகையாவது-இன்றிக்கே ஒழிகையாய்
-நன்மை எனபது ஓன்று இல்லாத ஜகத்தில் என்கை–
இருள் தரும் மா ஞாலம் – அது தெளி விசும்பு திரு நாடு-
அப் பொழுது தெரிவுற்ற ஞானம் இத்யாதிக்கு -சத்  அசத் விவேகத்தில் ஊற்றம் உடைய ஞானத்தை பிராபிக்க பெறாதே
 பிரபல கர்மத்தாலே ஒரு நன்மை இன்றிக்கே ஹெயமாய் இருந்துள்ள  ஜகத்திலே
ஈண்டு பல் யோனிகள் தொரு உழல்வோம் -என்கிற படி நானாவித யோனிகளில்
 ஜனிப்பது மறிப்பது தட்டி திரிகிற என்னை என்று பொருளாக கடவது
/தெரிவு -விவேகம் /உறுத்தல்-ஊற்றம்
/அன்றிக்கே
 தெரிவுற்ற ஞானம்-பிரகாச யுக்தமான ஞானம் ஒன்றாய் தத்வ ச்தியை யதா தர்சனம் பன்னுகைக்கு உறுப்பான
விசத ஞானம் என்னும் படி/தெரிவுற்றகீர்த்தி-பிரகாச யுக்தியான கீர்த்தி//சீர் முகில்-அழகிய முகில்/

ஒரே வினாடியில் நிஸ் சந்தேகமாக -யாதாத்மயம் அளவு உபதேசித்து -// தெரி உற்ற ஞானம்-விவேக ஞானம்-ஆத்மா நித்யம்- உத்தேசம்- பரமாத்மா உத்தேசம்/உளன் என்று அறிபவன் ஆஸ்திகன் இலன் என்று நினைப்பவன் நாஸ்திகன்–பிரமம் அஸ்தி  வேத -வாக்கியம்//ஆத்மா  குணம் கீதை –20 -அருளினாரே-அமாநித்வம் /அதம்பித்வம் -டம்பம் /அஹிம்சை/ஷாந்தி/ஆர்ஜவம் /ஆச்சர்ய உபாசனம்/சௌஜம் சுத்தி  மனசு வாக்கு உடல் /தைர்யம் -வேதம் விரோதமாக இருப்பது கூடாது/மனசை அடக்குதல்/இந்த்ரிய வைராக்கியம் -விரதன் தன்மை/ அகங்காரம்-தேகத்தில் ஆத்மா புது பண்ணுதல்/ஜன்ம மிர்துயு –தோஷ அனுசந்தானம் நித்யம்/அம்  கண் மா ஞாலம் விட்டு விலக /பற்று அற்ற தன்மை/புத்திர தாரம் க்ருஹம்/நித்யம் சம ஆனந்தம் துக்கம் /இஷ்டம் அநிஷ்டம் ஏற்பட/பக்தி அநந்ய அவ விவசார பக்தி /தனிமை யாக தேசம் -கூட்டம் த்யானம் கெடுக்கும்-அடியார் கூட்டம் வேணும் /உயர்ந்த சிந்தனை /இவை தான் ஞானம் என்கிறான் கீதச்சர்யன்-14 th அத்யாயம்/முக்தி அடைய இவை வேண்டும்/ஒளி விடும் ஞானம் -தெரிவு-விவேகம்/ஒளி இரண்டும்//உய்ய செய்யும்  ஞானம் இல்லை உழல செய்யும் ஞானம் பெற்றோம்/வெம் தீ வினையால்-அக்ருத கரணதிகளாலே-மீ மிசை நியாயம்-இரட்டிப்பு வெம் தீ வினை-அதி க்ரூரம்//வுருவற்ற -உருப்படாத -உரு மாய்ந்து கிடக்கும் ஞானம்-ஞானத்தின் சத்தை எல்லாம் போக //வுரு-வடிவு/ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு//ரூபத்தோடு தான் குழந்தை கிரஹிக்கும்/வுருவத்தை – நாம ரூபம் -கொடுத்தவன் அவன் தானே//பகவான் அளவும்-நின்றனர் இருந்திலர்-கிடந்திலர் பாசுரம் போல- அவர் அவர் –விதி வழி அடைய நின்றனர்- இந்த ஞானம் இன்றி -கொண்டி பசு போல-கர்ம ஞான பக்தி யோகம் இன்றி தட்டி திரிகிற //கூப்பின கை உடன் சிஷ்யன் -தத்வம் அறிய ஆசை– கைங்கர்யம் பண்ணி கொண்டு -பரிஷை பண்ணி -செய் நன்றி மறவாமல்-சாஸ்திரம் சொன்னதையும்/ராமன்- ஜுரம் நீங்கி விபீஷணன் ராஜ்ஜியம் கொடுத்த பின்பு -இருந்தது போல//செய்த வேள்வியர்-தனி கோல் செலுத்தி கொண்டு -இருந்தார் இதை பண்ணிய பின்பு/

/நிற்க மாட்டாமல் நான் தடுத்து இருந்தேன் இது வரை//எல்லாரும் பிரகாசித்து கொண்டு இருக்கும்/குணம் திகள் கொண்டல் குணமே தீர்த்தமாக கொண்ட மேகம்/சீர் முகில்- ஜல ஸ்தல விபாகம் இன்றி வர்ஷித்தல்-என்ன புண்ணியனோ-பெருமாளுக்கு முக மலர்ச்சி ஏற்படுத்துவதே புண்ணியம் –

தாம் திரு கோஷ்டியூர் நம்பி சந்நித்திக்கு 18 தடவை சென்றதையும்-எல்லாம் கால் கடை கொண்டு-ஒரு ஷணத்திலே அருளினார்-உபாமானம் இன்றி எல்லாம் கேட்டவன்-அறிந்தவன்  என்று சொல்லலாம் படி-உயர்ந்த விஷயம் உபதேசித்தார்..பிர பத்தி உபதேசம்/சரம பர்வ நிஷ்ட்டையும் அருளி-நின்றார்-சத்தை பெற்றார்-

————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: