அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்–81-சோர்வின்றி வுன்தன் துணை அடிக்கீழ் -இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை .
எண்பத்தோராம் பாட்டு -அவதாரிகை
எம்பெருமானார் திருவடிகளில் சம்பந்தி சம்பந்திகளுக்கே சர்வ சேஷ வ்ருத்திகளும்
பண்ணுவேன் என்றார் கீழே .
இந்நிலைக்கு -முன்பு இசையாத தமக்கு இந்த ருசி உண்டாயிற்று -எம்பெருமானார் பிரசாதத்தாலே
ஆகையாலே -தமக்கு அவர் செய்த உபகாரத்தை -அவர் தம்மைக் குறித்து விண்ணப்பம் செய்து -தேவரீர் உடைய கிருபைக்கு ஒப்பு இல்லை என்கிறார் .
சோர்வின்றி வுன்தன் துணை அடிக்கீழ் தொண்டு பட்டவர் பால்
சார்வின்றி நின்ற வெனக்கு அரங்கன் செய்ய தாளிணைகள்
பேர்வின்றி யின்று பெறுத்தும் இராமானுச இனி யுன்
சீரொன்றிய கருணைக்கு இல்லைமாறு தெரிவுறிலே – – 81- –
வியாக்யானம்
வேறொரு விஷயத்தில் மனச்சு பிரிவின்றிக்கே தேவரீருடைய சேர்த்தி அழகை உடைத்தான
திருவடிகளின் கீழே நிழலும் அடி தாறும் போலே சேஷமாய் இருக்குமவர்கள் -பக்கல்-ஒரு
பொருத்தம் இன்றிக்கே நின்ற எனக்கு –
அவர்களுக்கே அனந்யார்ஹசேஷம்    என்னும் நினைவை பிறப்பிக்கையாலே –
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -அமலனாதி பிரான் – 1-என்றும்
அடியார்க்கு ஆட்படுத்தாய் -திருப் பள்ளி எழுச்சி – 10- என்றும்
சொல்லுகிறபடியே தாமுகந்தாரை ஸ்வகீயர் அளவிலே சேர்க்கும் ஸ்வபாவராய்
பாகவத சேஷத்வ நிஷ்டர்க்கு ஒழிய தம் திருவடிகளை விட்டுப் பேராத நிலை இல்லையாம்படி -இருக்கும் -பெரிய பெருமாளுடைய திரு மேனி நிறத்துக்கு -பரபாகமான சிவப்பையும்
சேர்த்தி அழகையும் உடைய திருவடிகளை ஒரு காலமும் விட்டு நீங்காத படியாக இன்று
பெறுவித்து அருளினவரே !
இப்படியான பின்பு தேவரீர் உடைய கௌரவ யுக்தையாய் இருந்துள்ள க்ருபைக்கு
ஆராயும் அளவில் ஓர் ஒப்பு இல்லை .
அதவா –
சோர்வின்றி -இத்யாதிக்கு
அரங்கன் செய்ய தாளிணைகள் பேர்வின்றி -உன் தன் துணை அடிக்கீழ் தொண்டு பட்டவர் பால்
சார்வின்றி நின்ற வெனக்கு -இன்று பெறுத்தும் இராமானுச -என்று அந்வயித்து –
பகவத் சேஷத்வத்துக்கு இசைகையாலே பெரிய பெருமாள் திருவடிகளை விடாமல் உறைக்கப் பற்றி –
(அதனாலேயே ) துர்மானத்தாலே பாகவத சேஷத்வத்துக்கு இசையாமல் -தேவரீர் திருவடிகளுக்கு சேஷமாய் இருப்பார் பக்கல்
சேராமல் நின்ற வெனக்கு -அத்தை இன்று லபிப்பித்து அருளின தேவரீர் கிருபைக்கு ஒப்பு இல்லை
என்னவுமாம் .
பேர்தல்-நீங்குதல்
சீர்-கனம்-அழகாகவுமாம் –
ஒன்றுதல்-கூடுதல்
மாறு-ஒப்பு
தெரிவுறுதல் -ஆராய்தல்–
பிடித்தார் பிடித்தாரை பற்றி குறை இல்லாமல் இருப்போம் –
அரங்கன் திருவடி பிடித்த செருக்கால் -இருந்தேன் -அடியார் அடியாரை பிடிக்காதவரை அரங்கன் விரும்பானே –
இப்பொழுதோ -ஆழ்வான் திருவடி சம்பந்தம் பெற்ற பின் அரங்கன் விரும்பி மேல் விழுகிறான் —பாகவதர் திருவடிகளை பெற்று கொடுத்தீர் -அரங்கன் திருவடிகளை பெற்று கொடுத்தீர் -சிர் ஒன்றிய கருணைக்கு ஒப்பு இல்லை -இப்படி அருளிய ஸ்வாமியின் இன்னருளுக்கு எதுவுமே ஒப்பு இல்லையே –ஆட் கொண்ட வல்லி சீயர் ஐதீகம் –பாகவத சேஷத்வம் அறியாமல் பாண்டே பல காலும் போயின என்று அழுதேன் -சோர்வின்றி -மனம் வாக் காயம் ஒருப்பட்டு –பதச்சாயை -தண்டம் பவித்ரம் -போல்வார் இடம் -பொருந்தப் பண்ணின கிருபை -விரகு அறிந்து ஸ்வாமி அருளினார் –அரங்கன் திருவடிகளை ஆச்சார்ய முகேன -இதுவே –மருந்து கிடைக்கவே –பக்த பக்த திருவடிகள் விருந்து பெற்றேன் என்றபடி-சுக்ரீவன் -இளைய பெருமாள் அருளால் -பெருமாள் உதவியது போலே / நாயகனாய் –வாசல் காப்பான் கோயில் காப்பான் காலிலே விழுந்தாள் போலே -நீ நேசக் கதவம் நீக்கு –ந சம்சய தத் பக்த பரிசரியா–
————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –

அவதாரிகை -கீழ்ப் பாட்டில் சர்வோத்தமரான எம்பெருமானார் உடைய சம்பந்தி சம்பந்திகளுக்கே
சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும் சர்வ கரணங்களாலும்    சர்வ வித கைங்கர்யங்களும்
செய்யக் கடவேன் என்று அவர்கள் பக்கலிலே தமக்கு உண்டான ஊற்றத்தை சொல்லி -இதிலே –
எம்பெருமானார் திரு முக மண்டலத்தைப் பார்த்து இவ்வளவும் தேவரீருக்கு சேஷ பூதராய்
இருக்கிறவர்கள் திறத்திலே அடிமை தொழில் செய்ய இசையாத என்னை -தாம் உகந்தாரை
தமக்கு அந்தபுர பரிகரமாக்குகிறவர்கள் விஷயத்தில்    அடிமை படுத்துகைக்கு உத்தேசிக்கலாய்
தன் அடியார்க்கு அடிமை படாதே இருக்கிறவர்களுக்கு அந்த திருவடிகளை கொடுக்க இசையாது
இருக்கிற பெரிய பெருமாளுடைய திருவடிகளில்–(பாகவத சேஷத்வத்தால் அரங்கனுக்கு கைங்கர்யம் -காரண கார்ய பாவம் -) -சே ர்த்து அருளின தேவரீர் உடைய பரம
கிருபைக்கு ஒப்பு இல்லை என்கிறார் –
வியாக்யானம் -சோர் வின்றி உன் தன் துணை அடிக் கீழ்– மயிசா நன்ய யோகே நபக்திரவ்யபிசாரிணி  –
என்று கீதாசார்யன் அருளிச் செய்தபடியே -வேறு ஒரு விஷயத்திலும் மனசு பிரிந்து போகை அன்றிக்கே –
க்ர்த்வாமர்த்ய மயீம் த நு ம் மக் நா நுத்தர தேலோகா ந் காரருன்யாஸ் சாஸ்த்ரபாணினா-என்று

சர்வோத்தரரான தேவரீர் உடைய சேர்த்தி அழகை உடைத்தான    திருவடிகளின் கீழே

தொண்டு பட்டவர்பால் -நிழலும் அடி தாறும் போலே சேஷமாய் இருக்குமவர் பக்கல் -யுஷ்மத் பாதாரவிந்த யுகளம்
பஜதாம் குருணாம் -கூராதி நாத குருகேச முகாத்யு பும்ஸாம் -என்று சொல்லப்பட்ட மகத்துக்கள் விஷயத்தில்
என்றபடி –சார்வின்றி நின்ற -சேருதல் இன்றிக்கே இருக்கிற -எனக்கு -அநாதி காலமே தொடக்கி எம்பெருமானாரை
ஆஸ்ரயிக்கும் அளவும் -தஸ்மாத் மத் பக்த பக்தாஸ் பூஜ நீயா விசேஷத -என்கிற வர்த்தத்தை அறியாதே
ந நமேயம் -என்று பிரதி கூலனாய் போந்த அடியேனுக்கு -அரங்கன் செய்ய தாள் இணைகள் -ஜீவன ஹேதுவாய்
 போக்யமுமாயும் இருக்கிற சோற்றிலே -ரோகோல் பணத்தாலே அருசி பிறந்தவனுக்கு விரகனான வைத்தியன் கையில்-( பாகவத சேஷத்வம் -அன்னம் -/அஹங்காரம் துர் அபிமானம் அஜீரண வியாதி-/ தாயார் ராமானுஜர் -/ பிள்ளை -அமுதனார் /-வைத்தியர் -அரங்கன் /-மருந்து -பாகவத சேஷத்வம் இல்லாதவனுக்கு உதவோம் அடியார்க்கு அடியாரை பின் தொடர்ந்து அருளுவேன் போன்ற -என்று  உள்ள ஸ்ரீ ஸூக்தி என்றவாறு )
காட்டிக் கொடுக்கும் மாதாவைப் போலே -மமமத் பக்த பக்தேஷூ   ப்ரீதிரப்யதி காவபெத் -என்றும் -அடியார்க்கு
என்னை ஆட்படுத்த விமலன் -என்றும் -உன் அடியார்க்கு ஆட் படுத்தாய் -என்றும் சொல்லுகிற படி -ஸ்வ ஆஸ்ரிதர்
பக்கல் அதி வ்யாமுக்த்தராய் -தாம் உகந்தாரை தம் அடியார்க்கு –ஏழாட்காலும் அடிமைப்படுத்தும் பரிமாற்றம்-அறியும் விரகராய்செடியார் வினைகள் தீர் மருந்தே -என்றும் -மருந்தே நங்கள் போக   மகிழ்ச்சிக்கு -என்றும்
சொல்லுகிறபடியே -பகவத் சேஷத்வத்துக்கும் பாகவத சேஷத்வத்துக்கும் இசையாது ஒழிகை யாகிற துஷ் கர்மங்கள் அடங்கலும் நசிக்கும்படி கடாஷித்து அருளும் பெரிய பெருமாளுடைய திரு மேனி நிறத்துக்கு பரபாகமாய் சிவப்பையும் சேர்த்தி-அழகையும் உடைய திருவடிகளை -காட்டிக் கொடுத்த வற்றை
பேர்வின்றி -ஒருக்காலும் விட்டு நீங்காத படியாக- பேர்தல் -நீங்குதல் -இன்று பெறுத்தும் -இப்போது
நிழலும் அடி தாறும் போலே சேஷ பூதனாய் இருக்கிற இந்த மகா பலத்தை பெறுவித்து -பலிப்பித்து
அருளின –இராமானுச -எம்பெருமானாரே –இனி உன் சீர் ஒன்றிய கருணைக்கு -உபாயே நது யச்சக்யம்
நதசக்யம் ப்ராக்ரமை -என்னும்படி -விரகாலே -த்வத் தாஸ தாஸ கண ந சரமாதவ்ய ஸ்தத் தாஸைத கா சதா
விரதாமமாஸ்து -என்று அத்யந்த ப்ரார்த்தநீயமான சரம பார்வை நிஷ்டர்க்கு ஊற்றுவாயான பிரதம பர்வத்தில்
நிற்கும்படி    திருத்தி அருளிய பின்பு -இப்படி கிரிஷி பண்ணி அருளின தேவரீர் உடைய மகா ப்ரபாபவதியாய்
இருக்கிற கிருபைக்கு –சீர் -அழகும் மகத்வமும் -ஒன்றுதல்-கூடுதல் -தெரிவுறில்-ஆராய்ந்து பார்க்கும் அளவில்
தெரிதல்-ஆராய்தல் மாறு -இல்லை ஒப்பு இல்லை -சித்திர் பவதி வா நேதி சம்சயோச்யுத சேவி நாம்  –
என்கையாலே -தென் அரங்கர் சீர் அருளும் இது தனக்குஒப்பாக மாட்டாது என்று காணும் இவருடைய
திரு உள்ளத்தில் ஓடுகிறது -ந சம்சயஸ்துதத் பக்த பரிசர்யாரதாத்மனாம் -என்று சொல்லுகையாலே
இவ்வர்த்தம் சம்ப்ரதிபன்னம் இறே –மாறு -ஒப்பு -அன்றிக்கே —அரங்கன் செய்ய தாள் இணைகள் -பேர்வின்றி –
சோர் வின்றி -வுன் தன் துணை அடிக் கீழ்    தொண்டு பட்டவர் பால் சர்வின்றி நின்ற எனக்கு -இன்று பெறுத்து
இராமானுச -உன் சீர் ஒன்றிய கருணைக்குதெரிவுறில் -மாறு இல்லை -என்று அந்வயித்து-பகவத் சேஷத்வத்துக்கு
இசைகையாலே -பெரிய பெருமாள் உடைய திருவடிகளில் சக்தனாய் -அந்த கர்வத்தாலே ததீயர் உடைய
ப்ரபாபவத்தை அறியப் பெறாதே  -தேவரீர் திருவடிகளுக்கு சேஷமாய் இருப்பவர் பக்கல் சேராது ஒழிந்த எனக்கு
அத்தை இன்று லபித்தது அருளின தேவரீர் உடைய அப்ரதிம பிரபாவதியான கிருபைக்கு –ஆராய்ந்து பார்க்கில் –
ஒருவரும் சத்ர்சர் இல்லை என்று பொருள் சொல்லவுமாம் –
————————————————————————–

அமுது விருந்து

அவதாரிகை –
எம்பெருமானார் அடியார் அடியார் கட்கே -எல்லா அடிமைகளும் செய்வேன் என்றார் கீழே –இதனில் இந்நிலை ஏற்படுவதற்கு முன்பு ஏனைய சம்சாரிகள் போலே -இவ் விஷயத்தில்
இசைவில்லாமல் இருந்த தமக்கு -எம்பெருமானார் அருளாலே -ருசி உண்டாகியதை
நினைத்து அவர் புரிந்த உபகாரத்தை -நேரே அவரைநோக்கி –
விண்ணப்பித்து -தேவரீர்கருனைக்கு ஒப்பு இல்லை -என்கிறார் .
பத உரை –
சோர்வின்றி -பிரிவில்லாமல்
உன் தன் -தேவரீர் உடைய-வகுத்த சேஷி திட அத்யாவசாயத்துக்காக உன் தன் -சம்பந்தம் போக்யதை இரண்டும் உண்டே –
துணை அடிக் கீழ் -ஒன்றுக்கு ஓன்று அழகு உடைமையின் துணையாக அமைந்த திருவடிகளின் கீழே –
தொண்டு பட்டவர் பால் -அடிமை பட்டவர்கள் இடத்தில்
சார்வு இன்றி நின்ற எனக்கு -பொருந்துதல் இன்றி நின்றவனான எனக்கு
அரங்கன் -பெரிய பெருமாளுடைய
செய்ய -சிவந்த
தாளிணைகள் -அழகினில் இணைந்த திருவடிகளை
பேர்வு இன்றி -நீங்குதல் இல்லாமல் –
இன்று -இக்காலத்தில்
பெறுத்தும் -பெறும்படி செய்யும்
இராமானுச -எம்பெருமானாரே
இனி -அரங்கன் திருவடிகளைப் பெறுவித்த பிறகு
உன் -தேவரீருடைய
சீர் ஒன்றிய -மகத்துவம் பொருந்திய
கருணைக்கு -கிருபைக்கு
தெரிவு உறில் -ஆராயப் புகில்
மாறு-ஒப்பு
இல்லை -கிடையாது –
வியாக்யானம் –
சோர்வின்றி –எனக்கு
இதனால் தனது பழைய நிலையினை நினைக்கிறார்
உன் தன் -என்று வகுத்த ஆச்சார்ய சம்பந்தமும் –
துணையடி -என்று போக்யதையும் -திருவடிகளுக்கு காட்டப் பட்டன –
திருவடிக் கீழ்த் தொண்டு என்னவே -நிழலும் அடி தாறும் -பாத ரேகை -பாதுகை -போலே-அடிமைப் பட்டமை புலனாகிறது .
பாத ரேகையும் பாதுகையும் அடிகளின் கீழ் இருப்பதையே இயல்பாக கொண்டு –
பயன் வேறின்றி –
மற்று ஒன்றுக்கு உபயோகப் படாதது போலே –
எம்பெருமானார் திருவடிக் கீழ்
இருத்தல் என்னும் வாழ்ச்சியே தம் இயல்பாகக் கொண்டு
அதனைத்தவிர வேறு பயன் இன்றி
மற்று ஒன்றுக்கு ஆளாகாதவர்கள் -எம்பெருமானார் அடியார்கள் -என்க .
இத்தகைய அடியார்கள் ஆதலின் -வேறொரு விஷயத்தில் நெஞ்சை செலுத்தாமல் –
மனப்பூர்வமாய் ப்ரீதி உடன் தொண்டினைச் செய்வது தோன்ற –சோர்வின்றி தொண்டு பட்டவர் –
என்கிறார் –சோர்வு -பிரிவு -அது இங்கே மனத்தின் பிரிவைச் சொல்கிறது .
மனத்திற்கு பிரிவாவது வேறு விஷயத்தில் அதனை செலுத்துதல் –
மனப் பூர்வமான ப்ரீதியினாலே விளைந்தமை தோற்ற -தொண்டு செய்பவர் -என்னாது -தொண்டு பட்டவர் -என்கிறார் .ப்ரீதி காரிதமான கைங்கர்யம் உடையவர்கள் -என்றபடி -தொண்டு பட்டமையே அவர்களுக்கு நிரூபகம் .குல கோத்ராதிகள் அல்ல –
அத்தகையோர்களை சார்ந்து இருக்கும் தற்கால நிலை முன்பு இல்லையே என்று பழைய நிலையை
நினைத்து –சார்வின்றி நின்ற எனக்கு -என்கிறார் .
சார்தல் -பொருந்துதல் -சார்ந்த இரு வல் வினைகள் -திருவாய்மொழி -1 5-10 – – எனபது காண்க .
இங்கனம் பாகவத சேஷத்வத்தின் சுவை யறியாது கீழ் நாள்கள் எல்லாம் வாளா இருந்து ஒழிந்த
எனக்கு –எல்லா விடத்திலும் -எத் தொழும்பும் -அந்தப் பாகவதர்களுக்கே செய்யும் நிலை
ஏற்படும் படியாக பிறர்க்கு அன்றி -அந்த பாகவத்ர்க்கே உரிமை பட்டது –
இவ் ஆத்மா -என்னும் உணர்வை உண்டு பண்ணி யருளினார் எம்பெருமானார் .
அதன் பயனாக பெரிய பெருமாளுடைய அழகிய அடிகளை அடியேன் விட்டு நீங்காதபடி-பெற முடிந்தது என்கிறார் மேற் பகுதியினாலே –
அரங்கன் –பெறுத்தும் இராமானுச
பெரிய பெருமாள் இடம் குறிக் கொள்ளத்  தக்க இயல்புகள் உண்டு –
தமக்கு எவரிடம் ப்ரீதி உள்ளதோ அவரைத் தம் அடியார்க்கு ஆட்படும்படி செய்தல் அவற்றுள்-ஓர் இயல்பாகும் ..
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்று திருப் பாண் ஆழ்வாரும்
அடியார்க்கு ஆட படுத்தாய் -என்று தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும்
அருளிச் செய்து இருப்பது காண்க –
பாகவத சேஷத்வத்திலே ஊன்றி இருப்பவர்களுக்கே தம் திருவடிகளை விட்டுப் பிரியாத நிலையையும் –
மற்றவர்களுக்கு தம் திருவடிகளை விட்டு பிரியாத நிலை இல்லை -என்னலாம் படியான நிலையையும் –
விளைவித்தாலும் -அவனிடம் காணும் இயல்புகளே –
இந்த இயல்புகள் என் திறத்து இன்று புலப்படா நிற்கின்றன –
அடியார்க்கு அரங்கனால் ஆட்படுத்தப் பட்டேன் –
அரங்கன் செய்ய தாளிணைகள் என்னை விட்டு பிரியாது பேர்வின்றி நின்றன .
இங்கனம் அடியார்க்கு ஆட்படுதலும் –
பேர்வின்றி அரங்கன் தாளிணைகளைப் பெறுதலும் –
இன்று எனக்கு பாகவத சேஷத்வத்திலே  விருப்பம் உண்டாம்படி திருப்பத்தை ஏற்படுத்தின-எம்பெருமானார் திருவருளால் கிடைத்த பேறுகள்-என்கிறார் .
பாகவதர்க்கே உரிமைப் பட்டது ஆத்மா -என்று எம்பெருமானார் உண்டு பண்ணின உணர்வு-அடியாராகிய ஆழ்வானுக்கு அரங்கனால் ஆட்படுத்தப் பட்டு -அரங்கன் தாளிணைகளை-பேர்வில்லாமல்-பெறும்படி செய்வதனால் -உரம் பெற்று நின்றது -என்க .
பாகவத சேஷத்வத்தை உணர்த்தி -அருளினதாக கூறாது –
அவ் உணர்வில்  நிற்பார் பேர்வின்றி பெரும் அரங்கன் தாளிணைகளை பெறுவித்ததாக-கூறுவதனால் அவ் உணர்வு உரம் பெற்று மிளிருவது காண்க –
அரங்கன் செய்ய தாளிணைகள் –
தாளிணைகள் சிவந்தன –
அரங்கன் பச்சை பசும் தேவன்
இந்நிறச் சேர்த்தியின் அழகை அனுபவிக்கிறார் .
இனி யுன் –தெரிவுறல் –
இனி -இங்கனம் அரங்கன் செய்ய தாளிணைகள் பெறுவித்த பிறகு
சீர் ஒன்றிய கருணை -மகிமை பொருந்திய கருணை
சீர் -மகிமை -ஒன்றுதல்-பொருந்துதல்
உன் கருணை -அரங்கன் கருணை அன்று -உன் கருணை சீர் ஒன்றியது
அரங்கன் கருணை சீர் ஒன்றாதது -ஸ்வா தந்த்ர்யம் கலந்து இருத்தலின் -அது சீர் ஒன்றாதது
அக் கலப்பு இல்லாமையின் இது சீர் ஒன்றியது –
ஒன்றவே அரங்கன் கருணையும் -ஒரு கால் ஸ்வா தந்த்ர்யத்தால் பயன் இன்றி போவதாய் இருத்தலின் –
என்றும் பயன் குன்றாத எம்பெருமானார் கருணைக்கு ஒப்பாகாது என்கிறார் .
மாறு -ஒப்பு
இது வெறும் புகழ் உரை அன்று -ஆராய்ந்து பார்த்தால் இவ் உண்மை புலப்படும் என்னும்-கருத்துடன் –தெரிவுறில்-என்கிறார் –தெரிவுறில் -ஆராயின் –
இனி-
பாகவத சேஷத்வத்தின் பயனாக அரங்கன் செய்ய தாளிணைகள் பெறுவித்ததாக கூறாமல்
நேரே பாகவத சேஷத்வத்தையே பெறுவித்ததாக உரை கூறலுமாம் –
அப்பொழுது அரங்கன் செய்ய தாளிணைகள் பேர்வின்றி -சோர்வின்றி உன் தன் துணை அடிக்கீழ்
தொண்டு பட்டவர் பால் சார்வு இன்றி நின்ற எனக்கு இன்று பெறுத்தும் இராமானுச -என்று
கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளல் வேண்டும் ..பாகவத சேஷத்வத்துக்கு இசையாது
பகவானுக்கு சேஷப் பட்டு இருத்தலை மட்டும் இசைகையாலே -அரங்கன் செய்ய தாளிணைகளை
நீங்காது பற்றித் தேவரீர் திருவடிகளின் கீழே சோர்வின்றி தொண்டு பட்டவர்கள் இடம் –செருக்கினால்-
பொருந்தாமல் -பாகவத சேஷத்வத்துக்கு புறம்பாய் நின்ற எனக்கு –
இன்று அந்தப் பாகவத சேஷத்வத்தை பெறும்படி -அதாவது தொண்டர் பட்டவர் பால் சார்வு
ஏற்படும்படி செய்த எம்பெருமானாரே -என்று பொருள் கொள்க –
முந்தின பொருளில் நேரே -பாகவத சேஷத்வம் பேசப்படுவதில்லை –
அதன் பயனாக தாளிணைகள் பேர்வின்றி பெருத்தாலே பேசப் பட்டுள்ளது .
பிந்தின பொருளில் அது நேரே கூறப்படினும் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ள
வேண்டிய இடர்ப்பாடு உள்ளது ..
————————————————————————–
அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது

விதி வாய்கின்றது -ஆழ்வார் பகவான் கிருபை/மதுரகவி ஆழ்வார்- அருள் கொண்டு –மிக்கதே ஆழ்வார் அருள் மிக்கது என்கிறார்// பாகவத சேஷத்வம் தெரியாமல் திரிந்த என்னை -ஸ்வாமி -அரங்கன் அடி சேர்த்தார்-

அடியார்க்கு ஆட் படுத்துவான் அரங்கன்/இருவர் அருளும் பெற்றேன்-/உன் சீர் ஒன்றிய கருணைக்கு -ஆராய்ந்து பார்த்தால் மாறு இல்லை/உன் அடியார் பக்கல் சார்வின்றி நின்ற எனக்கு-தம் முன் இருந்த பிரகாரம் -அரங்கனின் செய்ய தாள் இணைகள் -இன்று பெறுத்தினையே–/எம்பெருமானாரின் சம்பந்த சம்பந்திகளுக்கே சர்வ சேஷ வ்ருதிகளும் பண்ணுவேன் என்றார் கீழ்

..இன் நிலைக்கு முன்பு இசையாத தமக்கு தமக்கு இந்த ருசி உண்டாயிற்று எம்பெருமானார் பிரசாசத்தாலே-ஆகையாலே தமக்கு அவர் செய்த உபகாரத்தை அவர் தம்மை குறித்து விண்ணப்பம் செய்து-தேவரீர் உடைய க்ருபைக்கு ஒப்பு இல்லை என்கிறார்-வேறு ஒரு விஷயத்தில் மனசு பிரிவு இன்றிக்கே-தேவரீர் உடைய சேர்த்தி அழகை உடைத்தான திருவடிகளின் கீழே நிழலும் அடிதாரும் போலே-சேஷமாய் இருக்கும் அவர்கள் பக்கல் ஒரு பொருத்தம் இன்றிக்கே நின்ற எனக்கு-உபாயம் உபேயமாக//அவர்களுக்கே என்று அனந்யார்ஹா சேஷம் என்னும்/தொண்டு செய்பவர் இல்லை தொண்டு பட்டவர்–திணிக்க பட்டு இல்லை ப்ரீதி கார்யம்/ தொண்டு படுதலே ஆண்டான் எம்பார் போல்வாருக்கு சொரூப நிரூபக தர்மம்/-சுந்தர பாண்டியன் பிடித்தவர் போல்/

பட்டு விட்டால் விலக முடியாது செய்தால் விலகலாம்/தொண்டு பட்டவர்கள்/ சார்ந்த இரு வல் வினைகள்/ சார்வின்றி -அவர்களுக்கே-அனந்யார்ஹா சேஷம் என்னும் நினைவை பிறப்பிக்கை யாலே-–அதன் பயனாக –அரங்கன் செய்ததாக செய்தது நிறம் பெற்றது–அடியார்க்கு என்னை ஆட் படுத்த விமலன் /அடியார்க்கு ஆட் படுத்தாய் /–தாம் உகந்தாரை ததீயர்  அளவிலே சேர்க்கும் ச்வாபராய்-பாகவத சேஷத்வ நிஷ்டர்க்கு ஒழிய தம் திருவடிகளை விட்டு பேராத நிலை இல்லையாம்    படி-இருக்கும் பெரிய பெருமாள் உடைய —அடியார்  அடியார்க்கு அருள் தருவான்–திரி தந்தாகிலும் தேவ பிரான் கரிய கோல திரு உரு காண்பான் நான்-பெரிய பெருமாள் உடைய  திரு மேனி நிறத்துக்கு பரபாகமான சிவப்பையும் சேர்த்தி அழகையும் உடைய திருவடிகளை-ஒரு காலமும் விட்டு நீங்காத படி யாக இன்று பெறுவித்து அருளினவரே !-அரங்கன் செய்ய தாள் இணைகளே -பாகவத அடியார்கள்-–அனந்த் ஆழ்வானை   – அருளாள பெருமாள் எம்பெருமானார் திருவடி சேர்த்தார்-அமுதனாரை கூரத் ஆழ்வான் இடம் சேர்த்தது ஸ்வாமி தனி சிறப்பு

பட்டரை எம்பார் இடம் -/உன் சீர் ஒன்றிய கருணைக்கு -ஆராய்ந்து பார்த்தல்- வேறு ஒப்பு ஒன்றும் இல்லை-அதவா–வேறு ஒரு நிர்வாகம்-அரங்கன் செய்ய தாள் பேர் இன்றி-விடாமல் பற்றி- அதனாலே – துர்மானத்தாலே -அடியார் பக்கல் சாரேன் – இருந்தேன்-இன்று சேஷத்வம் அருளினாய் .-இன்று பெருத்தினாய் /./பிள்ளாய் பேய் பெண்ணே பாகவத சேஷத்வ மகிமை -அறிந்தும் மறந்து இருந்தவள்-ஆட் கொண்ட வல்லி ஜீயர்- நம் பிள்ளை-ஐதீகம்–ஆள வந்தார் சரம நிலையில் பெரிய பெருமாளை சேவிக்காமலே எம்பெருமானார் காஞ்சி திரும்ப/-ஆத்மா குணம் ஆச்சர்ய சம்பந்தம் விளை விக்கும்  அதுவே பாதகம் என்றால் , பெரிய பெருமாளை-சேவிக்க வில்லை- கூரத் ஆழ்வானும்..-சீர்-கணம் ச்வாதந்த்ரம் இல்லாத குணம்-/பேர்தல்-நீங்குதல்/ஒன்றுதல்-கூடுதல்,மாறு-ஒப்பு /தெரி வுறுதல் -ஆராய்தல்

மறப்பற என்னுள் மன்னினான் தன்னை/அவ் விவசார பக்தி -சோர்வின்றி-/உன் தன் துணை அடி கீழ்-வகுத்த விஷயம் என்ற திட அத்யாவசியம் தோன்ற உன் தன்-போக்யமாகவும் இருக்கும்-சர்வதோரகாரகர் எம்பெருமானார் ஒருவரே-/சார்வு- நெருக்கம் கூட இல்லை அடிமை தொண்டு கிட்டே போக மாட்டேன்-நம் பிள்ளை நம் ஜீயர்- பகவத் விஷயம் அறியாத லஜ்ஜை  இன்றி சஜாதிய மனுஷ்யர் என்று நம் பிள்ளை இடம்-கால ஷேபம் கெட லஜ்ஜை கொண்டவர் –என் சிஷ்யர் உன்னை சேவித்து சொல்வார் -யாருக்கும் தெரியாமல் சொல்ல சொல்லி –பயிலும் சுடர் ஒளி கால ஷேபம் வந்ததும் மனம் திருந்தி சேவிக்க -கால ஷேபம் நிறுத்தின ஐதிக்யம்-–எம்மை ஆளும் பரமரே- கேட்டதும் சேவிக்க கால ஷேபம் நிறுத்தினார் நம்பிள்ளை//இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏற்றம் அறிந்து  உகந்து இருக்கையும் -வரவே வராது இந்த நிலை-மா முனிகள்-சாஸ்திரம் சம்ப்ராயதமும் தனி தனியாக வைப்பார் ஸ்வாமி-/கத்ய த்ரயம் அந்தரங்கருக்கு மட்டும்/ஸ்ரீ பாஷ்யம் கடைசியில் மோட்ஷம் போக பாகவத அபசாரம் இருந்தால் விரோதி என்று அருளினார்/ கூரத் ஆழ்வான் கண் போனது யாராவது ஸ்ரீ வைஷ்ணவர் திரு மண் கோணலாக இருந்தது என்று நினைத்து இருப்பேன் என்றார்/தஸ்மாத் மத் பக்த பக்தாக -அடியார் அடியாரை என்னை போல பூஜிக்க வேண்டும் என்கிறான்/ஜீவன ஹேது போக்யமுமாய் இருக்கிற சோற்றால் அஜீரணம் அருசி

-ஒவ்ஷதம் கொடுத்து போக்க வைத்தியன் –விரகன்-அவராலே தான் இந்த வியாதி–கையில் காட்டி கொடுக்கும்– மாதாவை போல–பாகவத சேஷத்வம் தான் இந்த அன்னம்//அரங்கன் தான் வைத்தியன்/அடியார்க்கு ஆட் படாவிடில் என் திருவடி இல்லை என்பான்/ஆஸ்ரிதர் பக்கல் ப்ரீதி அதிகம் -அடியார்க்கு என்னை ஆட் படுத்திய விமலன்/தாம் உகந்தாரை எழ ஆட் கால் அடிமை படுத்தும் விரகன்-மருந்தே என் போக மகிழ்ச்சிக்கு //சேஷத்வ காஷ்ட்டை/சீர் ஒப்பு இல்லை /அச்சுதன் திருவடி பற்றிவனுக்கு-சித்திர் பவதிவா நேதி- தென் அரங்கன் திரு அருளும் ஈடு இல்லை-இது மொட்டு போல  /இந்த சம்சயம் இல்லை பக்த பக்தன் அடி பற்றிவனுக்கு/-இது  மொட்டு ,புஷ்பிதம் ஆகி பழம் ஆனது போல //உற்றதும்  உன் அடியார்க்கு அடிமை –நின் திரு எட்டு எழுத்தும் கற்ற  பின் -மற்று எல்லா பேசினும்/-கலியன்-இப் படியான பின்பு தேவரீர் உடைய கௌரவ  யுக்தியே இருந்துள்ள க்ருபைக்கு ஆராயும் அளவில் ஓர் ஒப்பு இல்லை-

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: