அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்–80-நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் -இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை .
எண்பதாம் பாட்டு -அவதாரிகை –
இவ்விஷயத்தை ஆஸ்ரயிக்க இசையாத சம்சாரிகள் நிலையைக் கண்டு இழவு பட்டார் கீழ் .-உம்முடைய நிஷ்டை தான் இருக்கும் படி என் -என்ன –
இவ்விஷயமே உத்தேச்யம் என்று இருப்பாரை உத்தேச்யம் என்று இருக்கும் அவர்களுக்கே-ஒழிவில் காலத்தில் -திரு வாய் மொழி – 3- 3-1 – படியே நான் அடிமை செய்வேன் -என்கிறார் —
நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்ப
வல்லார் திறத்தை மறவாதவர்கள் யவர் அவர்க்கே
எல்லா விடத்திலும் என்றும் எப்போதிலும் எத் தொழும்பும்
சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே – -80 – –
வியாக்யானம் –
நல்லார் நவில் குருகூர் நகரான் -திரு விருத்தம் -100 என்னுமா போலே சத்துக்கள் அடங்கலும்-இருந்த இடங்களிலே ப்ரேம பரவசராய் ஏத்தும் படியான எம்பெருமானாருடைய திரு நாமத்தை –
ந சேத் ராம்னுஜே-த்யேஷாசதுரா சதுரஷரீ காமவஸ்த்தாம் பிரபத்யன்னே ஜன்தவோ ஹந்தமாத்ருசா -ஆழ்வான் முத்தகம் — என்கிறபடியே -தங்களுக்கு தஞ்சமாக விஸ்வசித்து இருக்கிற-வல்லவர்களுடைய பிரகாரத்தை அனுவரத அனுசந்தானம் பண்ணி இருக்குமவர்கள் யாவர் சிலர் –
அவர்களுக்கே -சர்வ தேசத்திலும் -சர்வ காலத்திலும் -சர்வ அவச்தைகளிலும் – சர்வ சேஷ வ்ருத்திகளும் -வாக்காலும் மனச்சாலும் காயத்தாலும் -தனக்கேயாக -திருவாய் மொழி -2 9-4 – – என்கிறபடியே-ப்ருதக்ரசம்  அறச் செய்வன் .
வல்லார் திறத்தை மதியாதவர்கள் -என்று பாடமான போது
மதித்தல் -அளவிடுதலாய் -அவர்கள் படியை பரிச்சேதியாதவர்கள் -என்று பொருளாக கடவது –
நம்புதல் -விஸ்வசித்தல்-விரும்புதலுமாம்
திறம் -பிரகாரம்
தொழும்பு -அடிமை
சொல் -கருமம் -என்கிற வற்றால் தத் தத் கரணங்களான வாக் காயங்களை லஷிக்கிறது
சோர்வு -பிரிவு–
சோர்வு -ஆயாசம் -பிரிவில்லாமல் கைங்கர்யம் செய்ய -சேர ஒட்டாமல் பிரகிருதி பண்ணுமே –சததம் கீர்த்தயந்த –பக்திக்கு -பிரியாது ஆடச்செய்ய -ஈன துழாயானை வழுவா வகை அறிந்து வைகல் தொழ வேண்டுமே –
நல்லார் நவில் குருகூர் -அற்ற பற்றர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கம் -நல்லார் வாழ் நளிர் அரங்கம் —
சர்வ தேச -சர்வ அவத்தைகளிலும் -சர்வ காலத்திலும் –சர்வ சேஷ விருத்தியும் –முக்கரணங்களால் சோர்வின்றி -சர்வரும் அறியும் படி கைங்கர்யம் செய்ய –
அஹம் சர்வம் கரிஷ்யாமி –சித்ர கூடம் -கடல் கரையில் -கங்கை மந்தாகினி கோதாவரி ஆற்றங்கரைகளிலும்-கைங்கர்யம் –
நல்லார் -நம்மாழ்வார் -பவிஷ்யத்கார-ஆச்சார்யர் -கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் -பொலிக பொலிக பொலிக –கலியும் கெடும் கண்டு கொண்மின் -/ தீர்த்தவாரி உத்சவம் ஆனபின்பு இன்றும் எழுந்து அருளி -மாறன் அடி பணிந்து உய்ந்தவர் -/ மேவினேன் அவன் பொன்னடி மெய்மையே -எம்பெருமானாரை அடைந்தேன் -என்கிறார் மதுரகவி ஆழ்வாரும் -ஆழ்வான் ஆண்டான் -ஆழ்வார் சொல் கேட்டே ஆச்ரயித்தார்கள் -/ பாகவத நாரத புராணம் -அநந்தம் பிரதம யுகம் –கலவ் ராமானுஜ -/அர்வாஞ்சோ–கூர நாத -ஞான அனுஷ்டான பிரகாரம் -ராமானுஜ நாமம் சொல்லி கைங்கர்யம் செய்வதே உபாதேயம்/ வார்த்தா மாலை பொக்கிஷம் -அனுபவிக்க அனுபவிக்க -கைங்கர்யம் பெருகும் –/ நமக்கு அமுதனார் போல்வார் –மறவாதவர்கள் எவர் -மதியாதவர்கள் -விடாமல் உள்ள சத்துக்களுக்கே கைங்கர்யம் –அவர்களுக்கே குடிக்குடி ஆடச்செய்யும் நல்ல கோட்ப்பாடு -சொல்லால் மனத்தால் கருமத்தினால் -ஒவ் ஒன்றினாலும் எல்லா காலத்திலும் -தேசத்திலும் -அவஸ்தைகளிலும் —ஒன்பதை சொல்லவே பொறுமை இல்லையே நமக்கு —சோர்வின்றியே கைங்கர்யம் செய்ய வேண்டுமே -பண்ணப் பண்ண ஆர்வம் மிக்கு ஆரோக்யம் கிட்டும் –
————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை

அவதாரிகை –கீழ்ப் பாட்டில் எம்பெருமானார் துர்மத நிரசனம் பண்ணியும் -பிரமாணிகமாக வேத மார்க்க
பிரதிஷ்டாபநம் பண்ணியும் இருக்கச் செய்தே அஜ்ஞான பிரசுரமான இந்த பூ லோகத்திலே இருந்துள்ள
சேதனர் அவரை ஆஸ்ரயிக்க இசையாதே -வேறொரு ரஷகாந்தரம் உண்டோ என்று தேடித் தடுமாறி திரிந்து –
அவசன்னராய் விட்டாட்கள் என்று அவர்கள் படியை சொல்லி -இதிலே -அவர்களை போல் அன்றி -அவர்களைக்
காட்டில் அத்யந்த  விலஷணராய் எம்பெருமானார் திரு நாமத்தையே விஸ்வசித்து இருக்கும் மகாத்மாக்கள் இடத்தில்
பக்த ச்நேகராய் -ஒருக்காலும் அவர்களை விஸ்மரியாதே  இருக்குமவர்கள்யாவர் சிலர் -அந்த ததீயர்க்கே
1-சர்வ தேச -2-சர்வ கால–3-சர்வ அவச்தைகளிலும் -4–சர்வ வித கைங்கர்யங்களையும் -5–சர்வ கரணங்களாலும்-
-6-சர்வரும் அறியும்படி -பண்ணக் கடவேன் என்று தம்முடைய நிஷ்டையை சொல்லுகிறார்
வியாக்யானம்நல்லார் பரவும் இராமானுசன் -நல்லார் நவில் குருகூர் நகரான் -என்று திரு நகரியிலே வசிக்கும் சத்துக்களாலே
விரும்பப்படும் -1-நம்   ஆழ்வாரைப் போலே  -கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்று அவர் தம்மாலும் –
மேவினேன் அவன் பொன்னடி -என்று அவர்க்கு அந்தரங்கரான ஸ்ரீ 2-மதுரகவிகளாலும் -அவர் தம்முடைய
பிரசாதத்தாலே பவிஷ்யாதசார்யா விக்ரகத்தை பெற்று தத் ஆராதனா முகேன-3- ஸ்ரீ மன் நாத முநிகளாலும் –
ஆ முதல்வன் -என்று தத் வம்ச்யரான-4- ஆள வந்தாராலும் விரும்பப்பட்ட்ட –எம்பெருமானாருடைய

இவர்கள் எல்லாரும் இப்புடைகளாலே எம்பெருமானார் உடைய வைபவத்தை முந்துற முன்னம்-இந்நானிலத்தே வந்து நாட்டினான் -என்று வெளி இட்ட பின்பு -அத்தைக் கண்டு -தெளிந்து இறே ஆழ்வான் ஆண்டான்-தொடக்கமானவர் அவர் தம்மை பரவத் தொடங்கினது -அநந்தம் பிரதமம் ரூபம் லஷ்மணஸ் துதப்புரம் -பல பத்ரஸ்-த்ர்தீயஸ்து கலவ் ராமானுஜஸ் ஸ்மர்த்த   -என்று நாரத புராண உக்த வசனத்தை சத்துக்கள் வாசித்துக் கொண்டு-போருவர்கள் இறே -அர்வாஞ் சோயத் பத சரசி  ஜத்வந்த்வ மாஸ்ரித்ய பூர்வே மூர்த்த்னா யச்யாந்வயமுபகதா தேசிகா-முக்த்திமாபு  சோயம் ராமானுஜ முநிரபி -என்கிறபடி சத்துக்கள் அடங்கலும் இருந்த இடங்களிலே பிரேம பரவசராய் கொண்டு-ஏத்தும்படியான எம்பெருமானார் உடைய -திரு நாமம் நம்ப வல்லார் திறத்தே -நசேத் ராமானுஜேத் ஏஷா சதுராசதுரஷரீ-காம வஸ்த்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ர்சா-என்றும் –ராமானுஜ திவாகர –என்றும் –ராமானுஜ பதாம் போஜ-சமாசரயண சாலி ந -என்றும் –ராமானுஜ பதச்சாயா -என்றும் -தஸ்மை ராமானுஜார்யாய நமம் பரம யோகினே  -என்றும் –ராமானுஜார்யம் நமதேத்யவாதீத் -என்றும் -தஸ்மின் ராமானுஜார்யே -என்றும் -ராமானுஜ்ச்ய சரணமஸ்து-என்றும்-ராமானுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்த்னா -என்று சதுரஷரியான ராமானுஜா என்கிற திரு நாமத்தினுடைய-வ்யதிரேகத்தில்தரியாமையை ஏறிட்டு  கொண்டு  -அத்தையே தங்களுக்கு தஞ்சமாக விஸ்வசித்து த்ரட அத்யாவச்ய யுக்தராய் இருக்கும் –ஆழ்வான் ஆண்டான் எம்பார் முதலிய முதலிகளுடைய பிரகாரத்தை-நம்புதல் -விஸ்வசித்தல்-திறம் -பிரகாரம்

பரிக்ராஹ்யம் பூர்வாசார்யர்கள் உடைய வசனமும் அனுஷ்டானமும் என்று இப்படி பிரமாண-சகஸ்ரத்தாலே பிரதிபாதிக்கப்பட்ட -சிஷ்டர் உடைய ஞான அனுஷ்டான பிரகாரத்தை -என்றபடி –
மறவாதவர்கள் யவர் –  ச்வாத்யாயன் மாப்ரமத -ஆசார்யபிரியம் தனம் ஆஹர்த்த்ய பிரஜாதந்தும்-அவ்யவத் சேத் ஸீ-சத்யான்ன பிரமதி தவ்யம் தர்மான்ன பிரமதி தவ்யம் -என்கிறபடியே
விச்வாச்ய மாந்த்யத்தாலே  அதை மறந்து போகை அன்றிகே அனவரதம் அனுசந்தித்து கொண்டு இருக்கிறவர்கள்-
சிலர் –எம்பெருமானாருடைய திரு நாமத்தை -நெஞ்சே சொல்லுவோம்  அவன் நாமங்களே -என்கிறபடியே
முதல் அடியில் தாம் அனுசந்தித்தும் -இராமானுசன் என்று சொல்லுமினோ -என்று லோகத்தார்க்கு
எல்லாம் உபதேசித்தும் –சயம் தரு கீர்த்தி இராமானுச முனி தாளினை மேல் உயர்ந்த குணத்து திருவரங்கத்து

அமுது ஓங்கும் அன்பால் இயம்பும் கலித் துறை அந்தாதி ஓத -என்கிறபடியே -பிரபன்னர்க்களுக்கு எல்லாம் நித்ய அபிஜப்யமாம் படி கிரந்தீகரித்தும் போருகைக்கு உறுப்பான–இவ் வதிகாரம் உண்டாகும்படி -கரும் தறையான என்னைத் திருத்தி அருளின ஆழ்வான் -போல்வர் என்றபடி –

நம்ப வல்லார் திறத்தை மதியாதவர்கள் என்ற பாடமான போது -மதித்தல் –விடுதலாய் -அவர்கள் படியை
பரிச்சேதியாதவர்கள் என்று பொருளாக கடவது -அவர்க்கே -அவர்களுக்கு முக மலர்த்தி உண்டு என்றும்
எனக்கு உஜ்ஜீவனம் உண்டு என்றும் இருவருக்கும் கூட பொதுவாக பண்ணுகை  தவிர்ந்து -தனக்கே யாக
எனைக் கொள்ளும் ஈதே -என்கிறபடி அவர்கள் முக மலர்த்தியே புருஷார்த்தம் என்று அத்யவசித்து நின்று –
அவர்க்கே -என்ற அவதாரணத்தாலே -இவ் வர்த்தம் தோற்றுகிறது -இறே -எல்லா இடத்திலும் என்றும் எப்போதும் –
சர்வேஷூ தேச காலேஷூ சர்வாவச்தாஸ் வாவிச்யுர்மம-என்று சொல்லுகிற படியே பிரதம நிஷ்டர் விஷயத்திலே
ஈடுபட்டால் போலே -தஸ்மாத் பக்த பக்தாச்ச பூஜ நீயா விசேஷத – மத்பக்தைஸ்சஹசம்வாச – என்றும்
தஸ்மை தேயம் ததொக்ராஹ்யம் சச பூஜ்யோயதாஹ்யஹம் -என்றும் -அவன் தான் அருளிச் செய்தான் ஆகையாலே
சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும் -எல்லா இடத்திலும் -சர்வ தேசங்களிலும் -இடம் -தேசம் -என்றும் -காலோப
லஷிதமாய் இருந்துள்ள -சகல அவச்தைகளிலும் என்றபடி -எப்போதிலும் -சர்வ காலங்களிலும் –
சொல்லால் மனத்தினால் கருமத்தினால் -இம் மூன்றிலும் -மனோ வாக் காயங்கள் மூன்றிலும் -சொல்லால் கருமத்தினால் –
என்கிற இவற்றால்  தத்  காரணங்களான வாக் காயங்களை லஷிக்கிறது -எத் தொழும்பும் -சர்வ பிரகார தாஸ்யமும்
தொழும்பு -அடிமை -எப்பேர்பட்ட என்ற படி -சோர் வின்றியே – வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்று
பிரார்த்தித்தபடியே அவிச்சின்னமாக -சோர்வு -பிரிவு செய்வன் -செய்யக் கடவன் -அம் மூன்றிலும் வைத்துக் கொண்டு
ஒவ் ஒன்றிலும் தானே சர்வ கரணங்களாலும் சர்வ வித கைங்கர்யங்களையும் பண்ணக் கடவேன் என்கிறார் –
வாசா யதீந்திர மனசா வபுஷா ச யுஷ்மத் பாதாரவிந்த யுகளம் பஜதாம் குருணாம்-கூராதி நாத குருகேச முகாத்யு பும்ஸாம்
பாதாநுசிந்தன பரஸ் சத்தம்   பவேயம் -என்று ஜீயரும் பிரார்த்தித்து அருளினார் இறே -நன்றும் திரு வுடையோம்
நானிலத்தில் எவ் உயிர்க்கும் ஒன்றும் குறை இல்லை ஓதினோம் -குன்றம் எடுத்தான் அடி சேர் ராமானுசன் தன்
பிடித்தார் பிடித்தாரைப் பற்றி -என்னும்படியா ஸ்வ அத்யாவச்யத்தை வெளி இட்டு அருளினார் ஆய்த்து
————————————————————————–
அமுது விருந்து –
அவதாரிகை –
எம்பெருமானாரைத் தெய்வமாக பற்றி உய்வுறாதவர்களும்-சொன்னாலும் -அதனுக்கு இசையாதவர்க்களுமான
சம்சாரிகள் நிலையைக் கண்டு தாம் இழவு பட்டார் கீழே –
சம்சாரிகள் நிலை கிடக்கட்டும் -உம்முடைய நிலை எவ்வாறு உள்ளது -?என்பாரைநோக்கி-எம்பெருமானாரைத் தெய்வமாகப் பற்றும் அளவில் நின்றேன் அல்லேன் –
அவரையே தெய்வமாகப் பற்றி இருப்பாரைத் தமக்கு உரிய தெய்வமாக கருதிக் கொண்டு
இருக்கும் அவர்களுக்கே ஒழிவில் காலம் எல்லாம் வழுவிலா அடிமை செய்யும் நிலை வாய்க்கப் பெற்றேன்
என்கிறார் இதனில் .
பத உரை
நல்லார் -நல்லவர்கள்
பரவும் -ஏத்தும்
இராமானுசன் -எம்பெருமானார் உடைய
திரு நாமம் -திரு நாமத்தை
நம்ப வல்லார் -தஞ்சமாக -நம்பிக் கொண்டு இருக்கிற திறமை வாய்ந்தவர்களுடைய
திறத்தை-நன்மையை
மறவாதவர்கள் -மறந்து போகாமல் என்றும் நினைந்த வண்ணமாய் இருப்பவர்கள்
யவர்-யாவர்களோ
அவர்க்கே -அவர்களுக்காகவே
எல்லா இடத்திலும் -சர்வ தேசங்களிலும்
என்றும் -சர்வ காலங்களிலும்
எப்போதிலும் -சர்வ அவஸ்தை -நிலை -களிலும்
எத் தொழும்பும் -எல்லா அடிமைகளும்
சொல்லால்-வாக்கினாலும்
மனத்தால்-நெஞ்சினாலும்
கருமத்தினால்-சரீரத்தாலும்
சோர்வு இன்றி -தனித்து இன்புறும் நிலை இல்லாமல்
செய்வன்-செய்வேன்
வியாக்யானம் –
நல்லார் பரவும் இராமானுசன் –
நல்லார் நவில் குருகூர் நகரான் -திரு விருத்தம் -100 என்று நம் ஆழ்வார் தம்மைப் பற்றிக் கூறிக் கொள்கிறார் .
அதனை எம்பெருமானார் திறத்திலும் அனுசந்திக்கிறார் அமுதனார் .
நல்லவர்கள் அனைவரும் எந்த தேசத்தில் இருப்பினும் -எந்தக் காலத்தில் இருப்பினும் –
அன்பிற்கு வசப்பட்டு -எம்பெருமானாரை   ஏத்துகின்றனராம்- தற் காலத்தில் அன்றி –
முற் காலத்தில் இருந்த முனிவரும் .
ஆழ்வாரும் முறையே -கலவ் கச்சித் பவிஷ்யதி -என்றும் -கலி காலத்தில் ஒருவர் -எம்பெருமானார் –
பிறக்கப் போகிறார் -என்றும் -கலியும் கெடும் கண்டு கொண்மின் -திருவாய் மொழி -5 2-1 – – என்று
இவர் பெருமையை உணர்ந்து ஏத்திப் பேசி இருப்பது காண்க .
திரு நாமம் நம்ப வல்லார் திறத்தை மறவாதவர்கள் யவர்
எம்பெருமானார் திரு நாமத்தில் நம்பிக்கை கொள்ளும் அளவில் அறிவில் தெளிவும் –
அதனில் நிலை நிற்கும் ஆற்றலும் –வாய்ந்தவர்கள் -ஆழ்வான் போல்வார்கள் .
நசேத் ராமானுஜெத்யேஷா சதுரா சதுரஷரீ
காமவஸ்த்தாம் பிரபத்யன்னே ஜன்தவோ ஹந்த மாத்ருசா -என்று –
ராமானுஜ -என்னும் இந்தத் திறமை வாய்ந்த நான்கு அஷரங்கள் கொண்ட மந்த்ரம்
இல்லை எனில் -என்னைப் போன்ற பிராணிகள் அந்தோ எந்த நிலையை அடைந்து இருக்கும் -என்று
ஆழ்வான் இந்த திரு நாமத்தின் சீர்மையை -நன்கு உணர்ந்து அதன் பால் மகா விசுவாசம் கொண்டு
பேசி இருப்பது -காண்க .சதுரஷரியான திரு நாமங்கள் இரண்டு வகை –
அவை பிரதம பர்வமான நாராயண நாமமும் -சரம பர்வமான ராமானுஜ நாமமும் .ஆகும் .அவற்றில் நாராயணா என்னும் சதுரஷரியினின்றும்-சிறப்புடைமையின் வேறு பாட்டைக்
காண்பிப்பதற்காக –ராமானுஜ -என்னும் சதுரஷரிக்கு -சதுரா -என்னும் அடைமொழி இடப்பட்டு இருக்கிறது .
வீட்டின்பத்தையும் சம்சார பந்தத்தையும் -தருவது நாராயண சதுரஷரீ .
வீட்டின்பமொன்றினையே தர வல்லது ராமானுஜ சதுரஷரி –
இதனால் இது சாதுர்யம் வாய்ந்தது -என்க –
சதுரஷரி என்றமையின் ராமானுஜ மந்த்ரம் ஏற்றம் தோற்றுகிறது –
நாராயண மந்த்ரம் போலே ராமானுஜ மந்த்ரமும் பிரபன்னர்கள்-அவர்களிலும் -சரம பர்வ நிஷ்டர்கள்-
அனுசந்திக்க வேண்டிய மந்த்ரம் என்று நல்லார்கள் சொல்லா நிற்பர்கள்.
நம்புதல்-விஸ்வாசம் கொள்ளுதல் -விரும்புதலுமாம் .
நம்ப வல்லார் திறத்தை மறவாதவர் -எவராயினும் சரி -அவர்களுக்கே நான் எல்லா அடிமையும்
செய்வேன் என்கிறார் .
குலம் கோத்ரம் பற்றி ஆராய வேண்டியதில்லை –
ராமானுஜ மகா மந்த்ரத்தில் மகா விஸ்வாசம் கொண்டு இருப்பவர்களுடைய
பிரகாரத்தை மறவாது -என்றும் அனுசந்திதுக் கொண்டு இருப்பவர்களே இருந்தால் போதும் .
அவர்க்கே எல்லா அடிமையும் செய்வேன் என்கிறார் .
உனக்கே நாமாட் செய்வோம் -எனபது போலே அவர்க்கே செய்வேன் என்கிறார் .
நம் ஆழ்வார் -திருமால் திருப்பேர் வல்லாரடிக் கண்ணி சூடிய மாறன் -திரு விருத்தம் – 100- என்று தம்மை
சொல்லிக் கொள்கிறார் .இவரோ இராமானுசன் திரு நாமம் நம்ப வல்லாரை மறவாதவர்க்கு
அடிமை செய்பவன் நான் -என்று மேலும் ஒரு படி விஞ்சி தம்மை சொல்லிக் கொள்கிறார் .எல்லா இடத்திலும் —சோர்வு இன்றியே
நம் ஆழ்வார் ஒழிவில் காலம் எல்லாம் ….அடிமை செய்ய வேண்டும் நாம் -என்று
பகவத் விஷயத்தில் கூறியதை   –இவர் இராமானுசர் அடியார் திறத்து கூறுகிறார் .
எப்போதிலும் –
சர்வ அவச்தைகளிலும் என்றபடி .
கீழ் சர்வ தேச சர்வ காலங்கள் சொல்லப்படவே இங்கு சர்வ அவஸ்தை -எல்லா நிலை கள்-சொல்லப்படுகின்றன -எந்த நிலையில் இருக்கும் போதும் -என்றது ஆயிற்று –
சொல் என்பதும் கருமம் என்பதும் அவற்றுக்கு காரணங்களான வாக்கினையும் உடலினையும்
ஆகு பெயராகக் குறிக்கின்றன –
சோர்வின்றி செய்வன் –
சோர்வு -பிரிவு
அடிமை செய்வதில் பிரிதல் ஆவது -அடிமை இன்பத்தை தன்னது என தான் வேறு படுத்தி
தனித்து அனுபவித்தல் .அங்கன் இன்றித் -தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -என்றபடி
கொள்ளுகிறவர் இன்பம் தவிர தான் தன் இன்பத்தை கருதாது அடிமை செய்தல்
சோர்வின்றி செய்வதாம் .
————————————————————————–
அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது 

சர்வ கால  சர்வ தேச சர்வ அவஸ்தையிலும் சர்வ வித கைங்கர்யம்

-ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு  இலா அடிமை செய்ய வேண்டும்-என்று ஆழ்வார் பாரித்தது போல..சென்றால் குடையாம் போல பல படிகளிலும் –ஸ்வாமி திருவடிகளில் அமுதனார்-/வாயால் வாசிக அடிமை செய்தான் மொய்ம்பால் -அமுதனார்

–வாக்காலும் மனசாலும் கருமத்தினாலும் -ஸ்வாமி பண்ணியது போல -பாரிக்கிறார்/செய்வன் சோர்வு இன்றியே-அதனால் வரும் ஆனந்தம் ஸ்வாமிக்கு தான்/அடியார்கள் உடன்  சேர்ந்து கூடி இருந்து குளிர/நல்லார் பரவும்-ஆழ்வான் ஆண்டான்/ ஆழ்வார் /திவ்ய தேச பெருமாள் போன்ற நல்லார்கள்/நம்பி  மறவாமல் இருக்கும்  இவர்களின் திறத்தை –//சம்சாரிகள் நிலையை கண்டு இழவு பட்டார் கீழ்

/இவ் விஷயமே உத்தேசம் என்று இருப்பாரை உத்தேச்யம் என்று இருக்கும் அவர்களுக்கே-ஒழிவில் காலத்தில் படியே நான் அடிமை செய்வேன் என்கிறார்//நல்லார் நவில் குருகூர் நகரான்-திரு விருத்தம் -100/-ஆச்சா ர்யர்களே உத்தேசம் என்று இருப்பவர்கள்-ராம ராம என்று அயோதியை வாசிகள் புலம்புவது போல ஆழ்வார் ஆழ்வார் என்று சொல்வார்களாம் குருகூர்  வாசிகள்-/பரவும்-இருந்த இடத்திலே பிரேம பரவசராய் ஏத்தும் படியான எம்பெருமானார் உடைய திரு நாமத்தை-/கும்பிடு நட்டம் இட்டு ஆடி–/ந சேத ராமானுஜேத் ஏஷா சதுரா சதுர் அஷரீ காமவச்த்தாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹன்தம் ஆத்ருசா-ஆழ்வான்

//தஞ்சமாக விச்வசித்து இருக்க வல்லவர்கள்-அநவரத அனுசந்தானம் பண்ணி இருக்கும் அவர்கள்/யவர்-அதிகாரி பார்க்காமல்–அவர்கள் ஆனந்ததுக்கே கைங்கர்யம்-/தனக்கே யாக எனை கொள்ளும் ஈதே–ப்ருதக் ரசமற செய்வன் /மதியாதவர்கள் -பாட பேதம்-அளவிடுதலாய்–அவர்கள் படியை பரிசேதியாதவர்கள் என்றும் பொருள்-சொல்-வாக்கு கருமம்-உடல்/சோர்வு-பிரிவு

தொழும்பு-அடிமை

திறம்-பிரகாரம்

நம்புதல்- விச்வசித்தல், விரும்புதல் /

/சர்வ கால சர்வ அவஸ்தை சர்வ தேச சர்வ வித சர்வ கரணங்கள் சர்வரும் அறியும் படி கைங்கர்யம் பண்ண/அர்ச்சை  விக்ரகம் ஏறி அருள பட்ட மாசி விசாகம்-வைகாசி விசாகம் போல சிறப்பு/விஞ்சி நம் சடகோபனை பாடினீரோ-சடகோபர்  அந்தாதி–இம்மை என்னும் பெரும் நோயை பொறுக்கும் சடகோபன்/கலியும் கெடும் கண்டு கொண்மின்/மேவினேன் அவன் பொன் அடி மெய்மையே-மாறன் பொன் அடி ராமானுஜர்//-1-உடையவர் /மேல் எழுத்து நடத்தி காட்டி-கும்பையூர் கொண்டிக்கு 2-திரு வேம்கடத்தான் மோஷம் அருளிய ஐதிக்யம்/சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமும்/அருளாள பெருமாள் எம்பெருமானார்-யாதாவ பிரகாசர் சொபனத்தில் 3-தேவ பெருமாள் வெளி இட்டார்/-4-செல்ல பிள்ளை இடர்ந்து எடுக்கும் வைபவம் கொடுத்து மடியில் அமர்ந்து செல்ல பிள்ளை/நான்கு பெருமாளும் எம்பெருமானார் வைபவம் எடுத்து உரைத்த நல்லவர்கள் கோஷ்டி-5-அழகர் ஸ்வாமி சம்பந்தம்-பெரிய நம்பி வம்சத்தவர் ஒதுங்கி இருக்க கூப்பிட்டு -திரு முடி சம்பந்தம் உண்டே-தசரதன் தகப்பனாராக வரித்தால் போல/கிடாம்பி ஆச்சான்-அகதிம் அநாதன்-ஸ்வாமி திருவவதரித்த பின்பு யாரும் அநாதி இல்லை/வைஷ்ணவ நம்பி பேர் பெற்றானே-6- திரு குறுங்குடி நம்பி ஆசனம் அமர்ந்து-நல்லார்கள்-பரவும் ராமானுசன்/1- நாத முனிகள்-காள மேகம் ஆழ்வார்–மலை நாத முனிகள்-2- ஆள  வந்தார் காட்டு ஆறு/குழம்பிலே நீர் தேங்கினால் குருவி குடித்து போகும் ஏரியில் தேங்கினால் உலகமே வாழ்ந்து போகும்/ஆ முதல்வன்-காட்டி கொடுத்தாரே/எம்பெருமானார் -3–திரு கோஷ்டியூர் நம்பி அளித்த திரு நாமம்/4-பெரிய நம்பியும்  ஸ்வாமி கோஷ்டி சூழ எழுந்து அருளி வர -ஆள வந்தார் என்று நினைத்து சேவிக்க -காணாதது போலே ஸ்வாமி எழுந்து அருளின ஐதிக்யம்/இந்த அர்த்தம் நம் ஆள வந்தார் சொல்ல நாம் கேட்டு இருக்கிறோம்/-திரு கோஷ்டியூர் நம்பி-4- திருமாலை ஆண்டான் இடம் சாதித்தது//-5-திருவரங்க பெருமாள் அரையர் –சரம தசையில் திருவடி பிடித்து அருள -திருமங்கை ஆழ்வார் வாள் கொண்ட மந்த்ரம் பெற்றால் போலே சர்வமும் கொள்ள வந்தீரோ -சரம உபாயம் அருளிச் செய்தார்  /ஆண்டானும் ஆழ்வானும் ஸ்வாமி   வைபவம் தெரிந்து வந்து பரவ தொடங்கினார்கள் //சோமாசி ஆண்டானுக்கு பிள்ளான்-ஸ்ரீ பாஷ்யம் மோஷம் தராது ஸ்வாமி தான் அருளுவார்/பட்டர்-ராமானுஜர் திருவடி நிழலே தாரகம்-நஞ்சீயர்/பிள்ளை பிள்ளை ஆழ்வான்-கூரத் ஆழ்வான் திருத்திய வைபவம்-எள்ளும் தண்ணீரும் கொடுத்து வாக்கும் மனசும் தானமாக வாங்கி கொண்டு மாற்றினார்-மனசை திரும்பி கொடுத்து வாக்காலும் கருமத்தாலும் -ராஜா செய்ய மாட்டன் ராமானுஜ செய்வார்/ மிளகு ஆழ்வான்-மடத்தில் நிறுத்தி  அனுக்ரகம் வாங்கி கொடுத்தார் ஆண்டான் //ராமானுஜ திவாகரன்-சுருதி சமர்த்தி ஜுரம் நீக்கி /எதி பதிம் பிரணாமி மூர்த்நா -காம குரோதம் நீக்குபவர்-திரு நாமம் விச்வசித்து இருக்கும் நல்லவர்கள்/மேலையார்கள் செய்வன /கலை  இலங்கு மொழியார்கள் கண்ண புரம்/பூர்வாச்சார்யர்கள் வசனமே-/மறவாதர்கள் எவர்–அனவரதம் அனுசந்தித்து கொண்டே -நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே-.தாமும் அனுசந்தித்தும் உபதேசித்திதும்-ஜப்தவ்யம் குரு பரம்பரையும் துவயமும்//-இந்த அதிகாரம் உண்டாகும் படி கரும்  தரையாகி இருந்த என்னை/நம்ம வல்ல திறத்தை மதியாதவர்கள்- வாக்கும் மனசுக்கும் எட்டாதவர்கள்-/ஆக -அசித் பிறர்க்கே ஆக இருக்கும்/சித் தனக்கும் அவனுக்கும்-ஈஸ்வரன் தனக்கே -முதல் படி..-தனக்கே ஆக இன்றி அவனுக்கே ஆக இருக்க வேண்டும்/தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே வண்டும்../உனக்கே அற்று தீர்ந்தோம் எழுப்பி சொல்கிறாள் ஆண்டாள்-மற்றை நம் காமங்கள் மாற்று –அவர்க்கே- ஏவ காரத்தில் தோன்றுகிறது ..-எல்லா தேச கால அவஸ்தை களிலும் கைங்கர்யம் பண்ண–குருஷ்வ -தனக்காகா -மாம் அனு சரண் –பரண சாலை கட்டும் பொழுது/-அவனாலும் சொரூப நாசம் அழிந்தாலும் கை கூப்பி அஞ்சலி பண்ணி நிறம் பெற செய்தான் லஷ்மணன்/ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு இலா அடிமை-பரதன் லஷ்மணன் இருவர் பண்ணிய கைங்கர்யம்  ஆழ்வார்–விளக்காய் கோலமாய் –இருக்க பாரித்தார் பிரதம பர்வத்தில்-ஈடு பட்டால் போல -சரம பர்வத்தில்-மத் பக்த பக்தாச பூஜிப்பாய் -பகவானே அருளியது //கொள்மின் கொடுமின் -ஞானம் கொடுத்து கொள்ளனும்//என்றும் சகல அவஸ்தை மலை கடல் போல எங்கு இருந்தாலும்-,தொழும்பும்-சர்வ பிரகாரம்-விளக்கு போல ,தனித்தும் இல்லை என் ஆனந்த்துக்கும் இல்லை/வழு இலா அடிமை – களை அற்ற -தடை அற்ற -கைங்கர்யம்-மூன்றிலும் -மனசாலே வாக்கு காயம்- செய்யும் செயல்களையும்-முடியானிலே கரணங்கள்  அவையாக கேட்டது போல ,/வாசாம் -விம்சதி ஸ்லோகம் போல-.நன்று திரு உடையோம் நானிலத்தில் எவ் உயிர் க்கும்  ஒன்றும் குறை இல்லை–-ஓதினோம் குன்ற எடுத்த பிரான் அடி சேர் ராமனுஜன் தாள் –குன்றம் எடுத்த பிரான் அடி சேர வென்றி தரும் இப் பத்தும்- துக்கம் வர்ஷத்தை இவர் ரஷித்து –தாள் பிடித்தார் பிடித்தாரை பற்றி-என்னும் படி-பிள்ளை உறங்கா வல்லி தாசர் இயல் சாத்து பாசுரம்-நன்றும் திரு வுடையோம் நானிலத்தில் எவ் உயிர்க்கும்-ஒன்றும் குறை இல்லை ஓதினோம் –குன்றம்-எடுத்தான் அடி சேர்- ராமானுசன் தாள்-பிடித்தார் பிடித்தாரைப் பற்றி-

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்    திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: